Monday, November 19, 2012


 clipart graphicsஆசிரியர் தகுதி மறுதேர்வு: ஒரு வாரத்துக்குள் இறுதி தேர்வுப் பட்டியல்
ஆசிரியர் தகுதி மறுதேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதி தேர்வுப் பட்டியல், ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர் தகுதி மறுதேர்வு அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 6.56 லட்சம் பேர் பங்கேற்ற இந்தத் தேர்வில், 19,246 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நவம்பர் 6,7,8,9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த சான்றிதழ் சரிபார்ப்புகளில் உரிய தகுதியுடையவர்களின் விவரங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, இறுதித் தேர்வுப் பட்டியல் ஒரு வார காலத்துக்குள் வெளியிடப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் 20,525 பட்டதாரி ஆசிரியர்களும், 7,500 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட இருந்தனர். ஆனால், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, ஆசிரியர் தகுதி மறுதேர்வு அக்டோபர் 14ஆம் தேதி நடத்தப்பட்டது. இடைநிலை ஆசிரியர்கள் மாநில பதிவு மூப்பின் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையிலும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
 clipart graphicsபிளஸ் டூ முடிக்காமல் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

 clipart graphicsடிசம்பர் 30ம் தேதி குரூப் 1 தேர்வு

இருபத்து நான்கு காலியிடங்களை நிரப்புவதற்கான, குரூப்-1 தேர்வு, டிசம்பர் 30ம் தேதி நடக்கிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.,), துணை ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள, 24 இடங்களை நிரப்புவதற்கான, குரூப்-1 போட்டித் தேர்வு, வரும் டிசம்பர் மாதம் 30ம் தேதி நடைபெற உள்ளது.
தகுதியுள்ள பட்டதாரிகள், அரசு பணியாளர் தேர்வாணையத்தின், www.tnpsc.gov.in. என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

No comments:

Post a Comment