RESOURCES

Thursday, November 8, 2012



       TODAY'S  FLASH NEWS 

  
1.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் 2010-11-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பட்டதாரி காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட 36 பட்டதாரி பணிநாடுநர்களுக்கு 15.11.2012 முற்பகல் 11.00 மணிக்கு ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகம், எழிலகம் இணைப்பு சேப்பாக்கம் சென்னை-5 என்ற முகவரியில் ஆணையர் தலைமையில் பணிநியமனத்திற்கான கலந்தாய்வு நடைபெறும்.
2.பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலை நாட்களில் பிற பணியாக செல்வது குறித்து பள்ளி கல்வி இயக்குனர் அறிவுரை வழங்கியுள்ளார்.

3.திருமணமான மாணவர்களை பள்ளியில் கல்வி தொடர அனுமதி மறுக்க கூடாது.- பள்ளி கல்வி இயக்குனர்.

4.அனைத்து மாணவர்களும் காலை இறை வணக்கத்தின் போதே தீபாவளி பண்டிகைக்கான உறுதிமொழி எடுக்க வேண்டும்-DSE Director

5.2012-13 ஆம் கல்வியாண்டில் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து உதவி தொடக்க கல்வி அலுவலர் பதவிக்கு பணியிட மாற்றம் பெற தகுதி வாய்ந்தோர் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

6.டி.இ.டி., தேர்வில் தேறியவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவங்கியது,டிசம்பர் இறுதிக்குள், 19 ஆயிரம் பேரும், பணி நியமனம் செய்யப்படுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது

       டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, 32 மாவட்டங்களிலும், நேற்று துவங்கியது. 
இம்மாதம், 2ம் தேதி வெளியான, டி.இ.டி., தேர்வு முடிவில், 19 ஆயிரத்து 246 பேர், தேர்ச்சி பெற்றனர். இவர்களில், 10 ஆயிரத்து 397 பேர், இடைநிலை ஆசிரியருக்கான முதல் தாள் தேர்வில், தேர்ச்சி பெற்றவர்கள். மீதமுள்ள, 8,849 பேர், பட்டதாரி ஆசிரியருக்கான, இரண்டாம் தாள் தேர்வில், தேர்ச்சி பெற்றவர்கள். இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நேற்று, சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவங்கியது.

இன்றும், தொடர்ந்து நடக்கிறது. சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, எழும்பூர், மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இரு நாளும் சேர்த்து, 417 பேர், பங்கேற்கின்றனர். 10 குழுக்களைச் சேர்ந்த அலுவலர்கள், சான்றிதழ்களை சரிபார்க்கின்றனர். வரும், 8, 9ம் தேதிகளில், முதல் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

இதில், சென்னை மாவட்டத்தில், 572 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பணிகள் முடிந்த பின், இறுதி தேர்வுப் பட்டியலில், எத்தனை பேர் இடம்பெற்றுள்ளனர் என்ற விவரம் தெரியவரும். உரிய சான்றிதழ் இல்லாத தேர்வர்கள், தேர்வுப் பட்டியலில் இருந்து நீக்கப்படுவர். இம்மாத இறுதிக்குள், இறுதி தேர்வுப் பட்டியல் அடங்கிய கோப்புகளை, கல்வித்துறைக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் அனுப்பும். அதன்பின், சம்பந்தபட்ட ஆசிரியர்களுக்கு, பணி நியமன கலந்தாய்வு நடக்கும். டிசம்பர் இறுதிக்குள், 19 ஆயிரம் பேரும், பணி நியமனம் செய்யப்படுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. - Dinamalar.

No comments:

Post a Comment