அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு
முக்கிய குறிப்புக்கள்:
* 2011-12ம் கல்வியாண்டிற்கு தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு  நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 31-12-2012 திங்கட்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி  அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
* முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான கலந்தாய்வினை ஆசிரியர் தேர்வு வாரிய வரிசை எண்ணின் அடிப்படையில் நடத்தப்படும்.  
* ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப்பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான  கலந்தாய்வு முதலிலும்,இதன்பின்னர் இந்த கலந்தாய்வில் சொந்த மாவட்டங்களில் போதுமான காலிப்பணியிடங்கள் இல்லாததால் பணியிடம் கிடைக்கப் பெறாதவர்களும் மற்றும் வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கான  கலந்தாய்வும் அன்றே தொடர்ந்து  அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடத்தப்படும். 
* தங்கள் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்கள் அனைவரும் அவர்களுடைய ஆசிரியர் தேர்வுவாரிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு,  கல்விச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் தவறாமல் கலந்து கொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 
* ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி கணினியை பயன்படுத்தி ஒரே நேரத்தில் அனைத்து பாடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும். 
* நியமன ஆணை பெறும் ஆசிரியர்கள் அனைவரும் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும்.
No comments:
Post a Comment