Monday, February 25, 2013



LET US LEARN TO MAKE A SIMPLE ROCKET




CLICK TO VIEW THE VIDEO
ரத்தாகுமா? ஆசிரியர்களுக்கான குறுவளமையப் பயிற்சி... அனைவருக்கும் கல்வி இயக்கம் அதிரடி - நாளிதழ் செய்தி

பள்ளிக்கல்வி - ஆய்வக உதவியாளர் பணியிடம் அனுமதிக்கப்படாத பள்ளிகளின் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு.

பள்ளிக்கல்வித்துறை - 2009-10 மற்றும் 2011-12 ஆம் ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட 544 உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஆய்வக உதவியாளர் பணியிடம் வழங்கப்பட்டது - விவரம் கோரி உத்தரவு.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு; மாணவ, மாணவியருக்கு பரிசு

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சியில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிக்கப்பட்டது. பொதுப்பணித்துறை சார்பில், திருப்பூர் பெம் பள்ளியில் சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சி, நேற்றும், நேற்று
முன்தினமும் நடந்தது. பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியரின் அறிவியல் படைப்புகள், கண்காட்சியில் வைக்கப்பட்டன. ஓவிய போட்டியிலும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

ஓவியப்போட்டி ஜூனியர் பிரிவில், ஜெய்வாபாய் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி துர்கா தேவி முதலிடம்; வித்யா சாகர் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி ஏழாம் வகுப்பு மாணவன் மதுசுதன் பாரிக் இரண்டாமிடம் பெற்றனர். ஜூனியர் பிரிவில், கே.எஸ்.சி., அரசு பள்ளி பிளஸ் 1 மாணவன் பாலசந்தர் முதலிடம்; செயின்ட் ஜோசப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவன் ராகேஷ் இரண்டாமிடம் பெற்றனர்.

பணிமனை மாதிரி (ஒர்க்ஷாப் மாடல்) போட்டியில், பெம் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவியர் ரோசினி, அஸ்வதி, ரக்ஷன்யா முதலிடம்; செயின்ட் ஜோசப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் கார்த்திகேயன், ஹரீஸ், இசாத் அகமது இரண்டாமிடம்; கே.எஸ்.சி., பள்ளி மாணவர்கள் மோகன், அரவிந்த், பிரகாஷ் ஆறுதல் பரிசு பெற்றனர்.

ஆலோசனை தரும் (ஐடியா பிரசன்டேசன்) போட்டியில், சுயசிந்தனை கருத்துகளை கம்ப்யூட்டர் வாயிலாக தெரிவித்த வித்யா சாகர் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி சாருலதா முதலிடம் பெற்றார்; பெம் பள்ளியை சேர்ந்த ரிதன்யா, சிவானி, ரித்திகா இரண்டாமிடம்; ஜெய்வாபாய் பள்ளி மாணவியர் திவ்யபாரதி, புவனேஸ்வரி மூன்றாமிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிக்கப்பட்டது.
ஆர்வம் இருந்தால் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ளலாம்
"நம்மை சுற்றிலும் உள்ள பொருட்களை பற்றிய ஆர்வம் இருந்தால், தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ள முடியும்," என, ரி-சாட்-1 திட்ட இயக்குனர் விஞ்ஞானி வளர்மதி பேசினார்.
கோவை கருமத்தம்பட்டியில் உள்ள ஜான்சன்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில், முதலாவது தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு, "என்கோனெட்13&' நேற்று நடந்தது. துவக்க விழாவில், பெங்களூரு இஸ்ரோ "ரி-சாட்-1&' திட்ட இயக்குனர் வளர்மதி பேசியதாவது:

விஞ்ஞானி ஆவதற்கும், தொழில்நுட்ப வல்லுனராகவும் கல்வியே உதவுகிறது. கற்றலை மாணவர்கள் சிறப்பாக மேற்கொண்டால் விரைவாக முன்னேற முடியும். அறிவியல் தொழில்நுட்பத்திலும், செயற்கை கோள்களை விண்ணில் செலுத்துவதிலும் இந்தியா வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ளது. பல சிக்கலான தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து, ராக்கெட் ஒன்றை ஏவுவது மிகவும் கடினமான பணி. நூற்றுக்கு நூறு சதவீதம் சரியாக இருந்தால் மட்டுமே ஒரு செயற்கைகோள் வெற்றி பெறும்.

இன்ஜினியரிங்,தொழில்நுட்ப கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், நம்மை சுற்றிலும் உள்ள பொருட்களை பற்றியும், அவை எவ்வாறு இயங்குகிறது என்பது பற்றியும் ஆய்வு செய்து, அவை இயங்கும் முறைகளை அறிந்தாலே தொழில்நுட்ப அறிவு உயரும். இவ்வாறு, அவர் பேசினார்.
வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு மையம் துவக்கம்

கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு மையம் துவக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் லட்சுமி பிரபா வரவேற்றார்.
தமிழக ஐ.சி.டி அகடமியின் இணைத்தலைவர் அன்புதம்பி மையத்தை துவக்கி வைத்து பேசியதாவது: அகடமி சார்பில், மாணவர்களின் வேலைவாய்ப்பு திறன் மேம்படுத்துவதற்காக கடந்த ஆண்டு 1.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இதன் மூலம் 62 அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும், 6 அரசு பொறியியல் கல்லூரிகளிலும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் தேர்வு செய்யப்படும் 5,000 மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இதற்கான சிறப்பு பயிற்சியாளர்கள் ஒப்பந்தத்தின் பேரில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இன்றைய உலகில் வேலை வாய்ப்பு போட்டிகள் என்பது தேசிய அளவில் இருக்கும். இதை மாணவர்கள் எதிர்கொள்ள தங்கள் கல்வி, மென்திறன், தனித்திறன் அனைத்தையும் மேம்படுத்திக்கொள்வது இன்றியமையாதது.

இந்த வாயப்பை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும். மென்திறன் மேம்பாடு, ஆங்கில மொழி, தகவல் தொழில்நுட்ப திறன் என்ற பிரிவுகளின் கீழ் நடப்பு ஆண்டில் 220 மணி நேரம் இப்பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் முடிவில் தகுதி தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார். ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வளர்மதி உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment