Madurai Kamaraj University Notification For B.Ed. Entrance Examination (2013 - 2015) 
 | |
விடைத்தாள்கள் சேதமடைந்த விவகாரம்: தபால் ஊழியர்கள் இடைநீக்கம் 
           விழுப்புரம் மாவட்டம், சத்தியமங்கலம், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் ஏற்பட்ட, விடைத்தாள் குளறுபடிகளுக்கு காரணமான, தபால் ஊழியர்கள், இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 
               தமிழகம் முழுவதும், அனைத்து புறநகர் மற்றும் கிராம பகுதியில் இருந்து பெறப்பட்ட விடைத்தாள்களை, விடைத் திருத்தும் மையங்களுக்கு அனுப்பி வைத்தது. அதில், சத்தியமங்கலத்தில் பதிவு செய்யப்பட்ட, ஒரு பார்சல் காணாமல் போன சம்பவமும், விருத்தாசலம் ரயில்வே சந்திப்பில், ஏற்பட்ட விபத்தில், 65 விடைத்தாள்கள் சேதமடைந்த சம்பவமும் நடந்துள்ளன. 
             இந்த இரண்டு சம்பவத்திற்கும், பொறுப்பான அனைத்து தபால் ஊழியர்களும், தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இனி, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடுமையான பணிகளுக்கிடையே, தபால் ஊழியர்கள் தன்னலமற்ற சேவை புரிந்து வருகின்றனர். 
                இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாது என, தபால் துறை உறுதியளித்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
 | |
ஆசிரியர் பயிற்சி: தனித் தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பம் 
           தொடக்க கல்வி பட்டயத்தேர்வு எழுதும், தனித் தேர்வர்களுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
அரசு சார்பில், மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வரும் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் (டயட்) கடந்த கல்வி ஆண்டுக்கான இறுதி தேர்வு 2012 ஜூன்-ஜூலையில் நடந்தது. தவிர, தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் தேர்வும் அப்போதே நடந்தது. 
              இதற்கு முன், ஒவ்வொரு ஆண்டும் தனித் தேர்வு எழுதுவோர், அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், தான் விண்ணப்பங்களை பெற்று அங்கேயே விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பங்களை பெறுவதில், நடைமுறை சிக்கல்களும், சிரமங்களும் இருந்தன. 
              இதைபோக்கும் வகையில், தனித் தேர்வு எழுதுவோர், tn.govt.in/dge என்ற இணையதளத்தில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பெறலாம். விண்ணப்பத்தில் 1 முதல் 4 ம் பக்கம் வரை விண்ணப்பிப்பதற்கான, அனைத்து விபரங்களும், ஐந்து, ஆறாம் பக்கத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதில் பின்பற்ற வேண்டிய அறிவுரைகளும் இடம் பெற்றிருக்கும். 
              ஏப்ரல் 18 முதல் 29 ம் தேதி வரை, இணையதளத்தில் விண்ணப்பங்களை பெறலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, ஏப்ரல் 29ம் தேதி மாலை 5 மணிக்குள் அந்தந்த மாவட்ட டயட் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்,என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 | |
பழமை வாய்ந்த புத்தகங்களை சேகரிக்க அரசு உத்தரவு 
          "கிராம நூலகத் திருவிழா" நடத்தி, பழமை வாய்ந்த புத்தகங்களை சேகரித்து, நூலகங்களில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது 
               சேகரிக்கும் புத்தகங்களை நூலகங்களில் வைக்கவும், பள்ளிக் கல்வித்துறை சம்பந்தமான அனைத்து செய்தியை கொண்டு, "கற்க கசடற" என்னும் பருவ இதழ் வெளியிடவும் நூலகங்களுக்கு, உத்தரவிடப்பட்டு உள்ளது. 
                  இதுதொடர்பான மாதிரி படைப்புகளை, கையெழுத்து பிரதியாக வெளியிட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 
 | |
செயற்கை கால் தொழிற்சாலை: அமெரிக்க மாணவர்கள் வருகை 
           ராஜஸ்தான் மாநிலத்தில் தயாரிக்கப்படும் செயற்கை கால் தொழிற்சாலையை அமெரிக்க மாணவர்கள் பார்வையிட்டனர். 
          இதுகுறித்து சமிதியின் நிறுவனர் கூறுகையில், அமெரிக்க அரசு ஆதரவு அளிக்கும் பட்சத்தில் சுமார் 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கு செயற்கை கால்களை தயாரித்து வழங்க முடியும் என கூறினார். 
 | |
அதட்டினால் வரமாட்டேன்: ஆசிரியரை மிரட்டும் மாணவி 
          காரைக்குடி அருகே நென்மேனி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 2 மாணவர்கள் மட்டுமே படிக்கும் நிலையில், ஆசிரியர் அதட்டினால் பள்ளிக்கு வரமாட்டேன், என மாணவி கோரிக்கைக்கு கட்டுப்படும் நிலையில் ஆசிரியர்கள் உள்ளனர். 
         விவசாயம் மட்டுமே பிரதான தொழில். காலத்தின் மாற்றம், இங்குள்ள பலரை, காரைக்குடிக்கு இடம் பெயர வைத்தது. இங்கு அ,ஆ., கற்றவர்கள், தங்கள் பிள்ளைகளை, ஆங்கில வழி பள்ளியில், சேர்த்து வருகின்றனர். 
          ஆரம்பத்தில் 85 மாணவர்களுடன் இயங்கிய, நென்மேனி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, தற்போது இரண்டு மாணவர்களுடன் நான்கு ஆண்டுகளாக, இயங்கி வருகிறது. கடந்த ஆண்டு வரை, நதியா, 8, அவரது அண்ணன் மணிகண்டன்,10 பயின்று வந்தனர். தற்போது மணிகண்டன் ஆறாம் வகுப்புக்காக வேறு பள்ளிக்கு சென்றுவிட்டார். 
             ஒரே மாணவருடன் இயங்க முடியாத நிலையில், இங்கு வேலை பார்க்கும், சமையல் உதவியாளர் அவரது உறவினர் பையனை, பள்ளியில் படிக்க வைப்பதற்காக வளர்த்து வருகிறார். ஒன்றாவது படிக்கும், அவனது பெயரும் மணிகண்டன். 
              புனிதா ராணி, விஜயலெட்சுமி என இரு ஆசிரியர்கள், ஒரு சமையல் உதவியாளர் உள்ளனர். இவர்களில் விஜயலெட்சுமி என்ற ஆசிரியர், சாக்கோட்டை ஒன்றியத்துக்குட்பட்ட பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தால், மாற்றுப்பணிக்காக அவ்வப்போது சென்று விடுவார். நிரந்தரமாக இருப்பது, தலைமை ஆசிரியரான புனிதாராணி மட்டுமே. 
               இந்த பள்ளியில், 3 "டிவி", ஒரு "டிவிடி" பிளேயர், மற்றும் செயல்வழி கற்றலுக்கான அனைத்து வசதியும் உண்டு. படிக்க மாணவர்கள் தான் இல்லை. வெளியூருக்கு இடம் பெயர்ந்தவர்கள் மட்டுமன்றி, இவ்வூரில் உள்ளவர்களும் தங்கள் குழந்தைகளை, இப்பள்ளியில் சேர்க்க முன்வருவதில்லை. 
             தற்போது படிக்கும்,நதியா என்ற மாணவியும், ஏம்பலை சேர்ந்தவர். தந்தை இல்லாத நிலையில், இப்பள்ளியில் பயின்று வருகிறார். அவரை ஆசிரியர் அதட்டினால், பள்ளிக்கு வருவதில்லை. வீட்டுக்கு தேடி செல்லும் போது, எனக்கு இந்த ஆசிரியரை பிடிக்கவில்லை.வேறு ஆசிரியர் வந்தால் தான் பள்ளிக்கு செல்வேன் என அடம்பிடிப்பாராம். 
. 
              இதனால், இருவரையும் அதட்ட கூட இந்த ஆசிரியர்களால் இயலவில்லை. நான்காம் வகுப்பு படித்து வரும் நதியா, ஆறாம் வகுப்புக்கு, வேறு பள்ளிக்கு சென்றால், ஒரே ஒரு மாணவர் மட்டுமே படிக்க வருவார்.நென்மேனிக்கு அருகில் உள்ள பெரிய கொட்டக்குடியில் உள்ள தொடக்கப் பள்ளியில், எட்டு மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். 
                    காலத்திற்கு ஏற்ப தொடக்கப்பள்ளி கல்வி தரத்தை மேம்படுத்தினால் மட்டுமே, மாணவர்கள் சேர்க்கையை வலுப்படுத்த முடியும். 
 | |
மதுரை காமராஜ் பல்கலை - நவம்பர் - 2012 தேர்வு முடிவு வெளியீடு 
 | |
பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் வாயிற் கூட்டம் வேலூர் மாவட்டத்தில் நாளை நடைபெறுகிறது. 
 | |
என்ஜினீயரிங் படிப்பில் சேர குறைந்தபட்சம் பொதுப்பிரிவு மாணவர்கள் 45 சதவீதமும், இடஒதுக்கீட்டு பிரிவு மாணவர்கள் 40 சதவீதமும் மார்க் பெற்றிருக்க வேண்டும் 
          அன்று புதிய உத்தரவை ஏ.ஐ.சி.டி.இ. பிறப்பித்தது. அந்த உத்தரவின்படி, பொதுப்பிரிவு மாணவர்கள் 45 சதவீதமும், இடஒதுக்கீட்டு பிரிவு மாணவர்கள் 40 சதவீதமும் மார்க் பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தமிழக அப்பீல் செய்தது. 
          இந்த அப்பீல் மனுவை தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி என்.பால்வசந்தகுமார் ஆகியோர் விசாரித்து பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:– 
             என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு தகுதியான மதிப்பெண்ணை நிர்ணயம் செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், அந்த தகுதி மதிப்பெண் என்பது ஏ.ஐ.சி.டி.இ. நிர்ணயம் செய்த மதிப்பெண்ணை விட குறைவாக இருக்க முடியாது.மேலும், 2011–2012 மற்றும் 2012–2013–ம் கல்வியாண்டுகளில் தமிழக அரசு நிர்ணயம் செய்த மதிப்பெண் அடிப்படையில், என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மாணவர்கள் தொடர்ந்து படிக்கலாம். அவர்களுக்கு யாரும் எந்த தொந்தரவும் செய்யக்கூடாது. 
             மேலும், இந்த அப்பீல் மனுவில், என்ஜினீயரிங் படிப்பில் ஏராளமான காலியிடங்கள் உள்ளன. இப்போது தகுதி மதிப்பெண்ணை அதிகரித்து ஏ.ஐ.சி.டி.இ. உத்தரவிட்டுள்ளதால், என்ஜினீயரிங் படிப்பில் காலியிடங்கள் மேலும் அதிகரிக்கலாம் என்று தமிழக அரசு கூறியுள்ளது. இதை ஏற்க முடியாது. ஏ.ஐ.சி.டி.இ. குறைந்தபட்ச மதிப்பெண்ணை நிர்ணயம் செய்தது சரி என்று தனி நீதிபதி (வி.ராமசுப்பிரமணியன்) பிறப்பித்த உத்தரவு செல்லும். தமிழக அரசு அப்பீல் மனுவை தள்ளுபடி செய்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
காரைக்குடி அருகே புதுக்குடியிருப்பு, ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மாணவர்கள், கணினி வழிக் கல்வியில் கலக்கி வருகின்றனர். புதுக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்து வகுப்புகளில், 66 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் கூலி வேலை செய்வோரின் குழந்தைகள் அதிகம். தலைமை ஆசிரியர் லாரன்ஸ் முயற்சியால், கணினி மூலம் கல்வி கற்கின்றனர். 
அவரது செலவில், பொது அறிவு, பாட சம்பந்தமான "சிடி' க்களை வாங்கி வைத்துள்ளார். ஒவ்வொரு பாடத்துக்கும் முன்பு, அது குறித்த தகவல்களை "சிடி' மூலம் மாணவர்களுக்கு கற்பிக்கிறார்; பொது அறிவு "சிடி' க்களும் காட்டப்படுகிறது. ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு, கணினியில், "மவுஸ்' கையாளுதல், கூட்டல், கழித்தல் கணக்கு போடுதல் உள்ளிட்டவை கற்றுத்தரப்படுகிறது. உணவு நேரத்திற்குப் பின், "டிவி' மூலம் "டிஸ்கவரி சேனல்' ஒளிபரப்பப்படுகிறது. மாணவர்கள் வனங்கள், வன உயிரினங்கள், கடல் வாழ் உயிரினங்களை பற்றியும் அறிந்து கொள்கின்றனர். "ஸ்போக்கன் இங்கிலீஸ்' கற்று கொடுக்கப்படுகிறது. தலைமை ஆசிரியர் கூறுகையில், ""அறிவியலின் வளர்ச்சி, நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. புத்தகப் படிப்போடு, உலகம் பற்றிய அறிவை, மாணவர்களுக்கு வளர்க்க வேண்டும். அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் கொடுக்கப்பட்ட "சிடி' க்களும் உள்ளன. மாணவர்களே "சிடி' யை போட்டு, பாடத்தை அறிந்து கொள்ள கற்றுக் கொடுக்கிறோம்,'' என்றார். 
  | 
RESOURCES
▼

No comments:
Post a Comment