Wednesday, May 22, 2013

TET - 2013 EXAM ANNOUNCED.
Paper I - 17.08.2013 Time 10 am to 1 pm

Paper II - 18.08.2013 Time 10 am to 1 pm

Recruitment Post = 13,000  (SGT+BT)

Application Sales Starts From 17.06.2013 to 01.07.2013

Application Cost: Rs. 50
Examination Fees: Rs. 500  
SC/ST/Disabled Fees: Rs. 250

ஜூன்/ஜூலை 2013-ல் நடைபெறவுள்ள மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வெழுத 23.05.2013 (வியாழக்கிழமை) முதல் 27.05.2013 (திங்கட்கிழமை) நண்பகல் 12 மணிவரை www.dge.tn.nic.in என்ற ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

          ஜூன்/ஜூலை 2013-ல் நடைபெறவுள்ள மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வெழுத 23.05.2013 (வியாழக்கிழமை) முதல் 27.05.2013 (திங்கட்கிழமை) நண்பகல் 12 மணிவரைwww.dge.tn.nic.in என்ற ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
         நடைபெற்ற மார்ச் 2013, மேல்நிலைத் தேர்வில் மாணாக்கர் தாம் தேர்ச்சி பெறாத/வருகை புரியாத அனைத்துப் பாடங்களையும் (பாடங்களின் எண்ணிக்கை வரம்பின்றி), எதிர்வரும் ஜூன்/ஜூலை 2013 பருவத்தில் நடைபெறும் சிறப்பு உடனடித் தேர்வில் தேர்வெழுதலாம்.
       பள்ளி மாணாக்கராய்த் தேர்வெழுதி தேர்ச்சி பெறாதோர்/வருகை புரியாதோர், ஜூன் பருவத்தில் நடைபெறும் சிறப்பு உடனடித் தேர்வெழுத ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும், S.H வகை விண்ணப்பத்தை எக்காரணம் கொண்டும் வழங்கக்கூடாது எனப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் முறை
           பள்ளி மாணாக்கர் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் ஆன்-லைனில் விண்ணப்பித்து, அதில் கோரப்படும் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மாணவர் தமது புகைப்படத்தினை ஸ்கேன் செய்ய வேண்டும். State Bank of India சலானை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில் குறிப்பிட்டுள்ள தொகையினை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் (SBI)ன் ஏதேனும் ஒரு கிளையில் 27.05.2013 -ற்குள் செலுத்தவேண்டும். செலுத்தும் நேரம் வங்கியின் விதிகளுக்குட்பட்டது. ஆன்-லைன் விண்ணப்பத்தின் வலதுபக்கத்தில் உரிய இடத்தில் மாணாக்கர் தனது மற்றுமொரு புகைப்படத்தினை ஒட்டி “attestation” (பள்ளித் தலைமை ஆசிரியரிடம் அல்லது Gazetted Officer இடம் ) பெற வேண்டும். பின்னர்,(1) ஸ்கேன் செய்த மாணவரின் புகைப்படத்துடன் கூடிய “Confirmation copy” எனக் குறிப்பிடப்பட்ட ஆன்-லைன் விண்ணப்பம்,(2) தேர்வுக்கட்டணத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் செலுத்திய சலான் (Department Copy) இரண்டையும் இணைத்து மாணாக்கர் தாம் பயின்ற பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.பள்ளித் தலைமை ஆசியர்கள் விண்ணப்பங்களை பத்து இலக்கம் கொண்ட விண்ணப்ப எண்ணின் ஏறுவரிசையில் அடுக்கிப் மாணாக்கரின் பெயருடன் பட்டியலிட்டு, பட்டியலின் இரு நகல்களுடன் ஆன்-லைன் விண்ணப்பங்களை உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் 28.05.2013 –ற்குள் (பகல் 12 மணிக்குள்) தவறாமல் ஒப்படைக்க வேண்டும்.பள்ளிகளால் ஒப்படைக்கப்படும் ஆன்-லைன் விண்ணப்பங்களை கல்வி மாவட்டவாரியாக கட்டி, 29.05.2013 அன்று தேர்வுத் துறை தலைமை அலுவலகத்தில் முதன்மைக் கல்வி அலுவலகங்கள் ஒப்படைக்க வேண்டும்.எனவே. இப்பணியின்பால் சிறப்புக் கவனம் செலுத்திட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.
விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்:
1. மார்ச் 2013, மேல்நிலைத் தேர்வினை பள்ளி மாணாக்கராகவோ அல்லது தனித்தேர்வர்களாகவோ தேர்வெழுதியிருக்க வேண்டும்.
2. மார்ச் 2013, மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறாத/வருகை புரியாத அனைத்துப் பாடங்களையும் உடனடித் தேர்வில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக் கட்டணம் செலுத்தும் முறை:
           மார்ச் 2013 மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறாத / வருகை புரியாத ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50/-வீதம் தேர்வுக் கட்டணமும், அதனுடன் இதரக் கட்டணமாக ரூ.35/- ம் செலுத்தவேண்டும். Online மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட State Bank of India challan மூலமே தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். பதிவிறக்கம் செய்த சலானில் குறிப்பிட்டுள்ள தொகையினை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் எந்தவொரு கிளையிலும் அரசுத் தேர்வுகள் இயக்குர், சென்னை-6 என்ற பெயரில் தேர்வுத் கட்டணத் தொகையினை செலுத்தலாம். பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள பத்து இலக்க விண்ணப்ப எண்ணை தவறாமல் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே எந்தவொரு சந்தேகங்களுக்கும், தேர்வுத் துறையிடம் முறையீடு செய்யவோ அல்லது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பெறவோ முடியும். எனவே, பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தினை ஒளிநகல் (Photocopy) எடுத்து தனித்தேர்வர்கள் தங்கள் வசம் பத்திரமாக வைத்துக் கொள்ளவேண்டும்.
ஆன்/லைனில் விண்ணப்பிப்பதற்கான தேதிகள் :
            தேர்வர்கள் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் 23.05.2013 (வியாழக்கிழமை) முதல் 27.05.2013 (திங்கட்கிழமை) நண்பகல் 12 மணிவரை அனைத்து நாட்களிலும் தங்கள் விண்ணப்பத்தினை ஆன்-லைனில் பதிவு செய்யலாம். பதிவு செய்த விண்ணப்பத்தினையும், தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான SBI சலானையும் 27.05.2013 நண்பகல் 12 மணிவரை வரை மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.தேர்வுக் கட்டணத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் எந்தவொரு கிளையிலும் செலுத்தவேண்டிய இறுதி தேதி 27.05.2013( திங்கட்கிழமை). செலுத்த வேண்டிய நேரம் வங்கியின் விதிகளுக்குட்பட்டதாகும்.
ஆன்-லைனில் பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தினை சமர்ப்பித்தல்:
              அ) பள்ளிமாணாக்கர் உடனடித் தேர்விற்கான Confirmation copy எனக் குறிப்பிட்ட ஆன்-லைன் விண்ணப்பத்துடன், தேர்வுக் கட்டணம் செலுத்திய SBI சலானை இணைத்து அவர்கள் பயின்ற பள்ளித் தலைமை ஆசிரியரிடம் 27.05.2013-ற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
       ஆ) மார்ச் 2013, மேல்நிலைத் தேர்வினை தனித்தேர்வர்களாக தேர்வெழுதி தேர்ச்சி பெறாதோர் உடனடித் தேர்விற்கான Confirmation copy எனக் குறிப்பிட்ட ஆன்-லைன் விண்ணப்பத்துடன், தேர்வுக் கட்டணம் செலுத்திய SBI சலானை இணைத்து அவர்தம் வருவாய் மாவட்டத்திற்குரிய அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். தபால் மூலம் அனுப்பும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிரரகரிக்கப்படும்.
தலைமை ஆசிரியர்கள் 900 பேருக்கு இடமாறுதல் உத்தரவு

           அரசு மேல் நிலைப்பள்ளி மற்றும் நகராட்சி தலைமை ஆசிரியர்கள் பணியிடம் மாறுதலுக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில், 900 பேர் புதிய இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பள்ளி கல்வி துறையில், பல்வேறு வகையான ஆசிரியர்களுக்கு பொது பணியிடம் மாறுதல் வழங்கும் கலந்தாய்வு நிகழ்ச்சி நேற்று மாநிலம் முழுவதும் துவங்கியது.

             32 மாவட்டங்களின் முதன்மை கல்வி அலுவலகங்களில், ஆன்லைன் மூலம் நடந்தது. அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு நேற்று காலை, மாவட்டத்திற்குள்ளே பணி இட மாறுதல் பெறுவதற்கும், பிற்பகல், மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு செல்பவருக்கான கலந்தாய்வு நிகழ்ச்சி நடந்தது.

                இதில், 390 தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்திற்கு உள்ளேயும், 510 தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்தை விட்டு வெளியேயும் புதிய இடங்களை தேர்வு செய்துள்ளனர். புதிய இடத்திற்கான மாறுதல் உத்தரவு உடனடியாக வழங்கப்பட்டது.
முதுகலை ஆசிரியர் தேர்வு: 2.5 லட்சம் விண்ணப்பங்கள் தயார்

               முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்காக, 2.5 லட்சம் விண்ணப்பங்களை, டி.ஆர்.பி., அச்சடித்து, 32 மாவட்டங்களுக்கும் அனுப்பி உள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஜூலை, 21ல், வரும் 31ம் ஆசிரியர் தேர்வு வாரியம், போட்டித்தேர்வை நடத்துகிறது.

            இதற்காக, வரும், 31ம் தேதி முதல், ஜூன், 14 வரை, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், விண்ணப்பங்களை வழங்குகிறது. அதிக எண்ணிக்கையிலான இடங்களுக்கு தேர்வு நடப்பதால், இதில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரிகள் பங்கேற்கலாம் என, டி.ஆர்.பி., எதிர்பார்க்கிறது.

          முந்தைய தேர்வை, 1.5 லட்சம் பேர் எழுதினர். இந்த தேர்வுக்கு, விண்ணப்பங்கள் பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்பதற்காக, 2.5 லட்சம் விண்ணப்பங்களை அச்சடித்து, மாவட்டங்களுக்கு அனுப்பியுள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

              டி.ஆர்.பி., வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: சென்னை, கோவை, தருமபுரி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இருந்து,அதிக தேர்வர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கிறோம்.

                எனவே, இந்த மாவட்டங்களுக்கு, அதிகளவில் விண்ணப்பங்களை அனுப்பி உள்ளோம். சம்பளத்திற்கே அதிக நிதி தேர்வுக் கட்டணம், 500 ரூபாயை குறைக்கும் எண்ணம், டி.ஆர்.பி.,க்கு இல்லை. டி.ஆர்.பி.,க்கு, இந்த ஆண்டு தான் அதிகபட்சமாக ,2.25 கோடி ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

              இதில், சம்பளத்திற்கே, அதிக நிதி செலவாகிவிடுகிறது.இதர செலவுகளை எல்லாம் ஈடுகட்ட வேண்டிய நிலையில் உள்ளோம். எனவே, தேர்வுக் கட்டணத்தை குறைக்க மாட்டோம். இவ்வாறு, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ் வழி ஒதுக்கீட்டில் 120 முதுகலை பணியிடம்

      கடந்த டிசம்பரில், 2,300க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, 20 சதவீத ஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்படவில்லை.

           தற்போது இதில், பொருளியல், வணிகவியல், வரலாறு ஆகிய பாடங்களில், 120 இடங்களை நிரப்ப, வரும், 23, 24 தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

                சென்னை, சேலம், கோவை, திருச்சி, மதுரை, விழுப்புரம் மற்றும் நெல்லை ஆகிய ஏழு இடங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இதற்கு, 3,200 பேர் அழைக்கப்பட்டு உள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
புதிய பணியிடங்களை கலந்தாய்வில் சேர்க்க முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை

     ஆசிரியர் கலந்தாய்வின்போது, அரசாணை எண்.16ன் படி, புதிதாக உருவாக்கப்பட்ட பணியிடங்களையும் சேர்க்க வேண்டும், என முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

         தமிழகம் முழுவதும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, அந்தந்த மாவட்டத்துக்குள் 22ம் தேதியும், வெளி மாவட்டங்களுக்கு 23ம் தேதியும் நடக்க உள்ளது. மேல்நிலை தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை. 

         இதனால், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், மேல்நிலை தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறும்போது, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் காலி இடங்கள் ஏற்படும். தமிழகம் முழுவதும் 400க்கும் மேற்பட்ட காலி பணியிடம் உருவாக வாய்ப்புள்ளது. 

          பதவி உயர்வு மூலமாக ஏற்படும் இந்த காலிப்பணியிடங்களில், மாறுதல் பெறும்போது, பல்வேறு முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதால், தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்திய பின்னர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை நடத்திட ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து, பள்ளிக்கல்வித்துறைக்கு "பேக்ஸ்' அனுப்பியுள்ளனர்.

           மேலும், அரசாணை 16ன்படி 1591 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கலந்தாய்வின்போது, இந்த பணியிடங்களையும் சேர்க்க வேண்டும், எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

               முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் கூறும்போது: அனைத்து ஆசிரியர்களும் முழுமையாக பயனடையும் வகையில், தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு பின்னர், பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். மேலும், புதிதாக உருவாக்கப்பட்ட பணியிடங்களையும் கலந்தாய்வின்போது காட்ட வேண்டும், என தமிழக முதல்வர், கல்வித்துறை இயக்குனர் ஆகியோருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, என்றார்

இடைக்கால ஆசிரியர் நியமன முறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் - நாளிதழ் செய்தி

         தொடக்கப் பள்ளிகளில் இடைக்கால ஆசிரியர்களை நியமிப்பதில் கல்வித் தகுதி உள்ளிட்ட வரைமுறைகளை மாநில அரசுகள் பின்பற்றாதது குறித்து உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

        கல்வி உதவியாளர் நியமனம் குறித்து குஜராத் அரசு தாக்கல் செய்த முறையீட்டை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.செüஹான், தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது நீதிபதிகள் குறிப்பிட்டது:

                கல்வி உரிமை சட்டம் நடைமுறைக்கு வந்தபின்பும் இடைக்கால ஆசிரியர் நியமன முறை தொடர்வது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற ஜனரஞ்சகமான திட்டங்கள் நாட்டின் வருங்காலத்தையே பாழாக்குவதை அனுமதிக்க முடியாது. இந்திய அரசியல் சட்டத்தில் கல்வி உரிமையை அளிக்கும் 21-ஏ பிரிவு இருக்கும்போது இதுபோன்ற நடைமுறைகள் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதை எப்படி அனுமதிக்க முடியும்? முறையான கல்வித் தகுதி இல்லாதவர்களை இடைக்கால ஆசிரியர்களாக நியமிப்பதால் கல்விகற்பிக்கும் முறையையே பாழடித்துவிடுகிறோம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இடைக்கால முறையில் நியமிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.
710 ஆய்வகஉதவியாளர் பணியிடம்

          2011-2012ம் கல்வியாண்டில் RMSA மூலம் தரம் உயர்த்தப் பட்ட உயர்நிலை பள்ளிகளுக்கு 710 ஆய்வகஉதவியாளர் பணியிடம் நிரப்ப நடத்தப்பட்ட சான்றிதழ் சரிப்பார்ப்பில் கலந்து கொண்டவர்களின் விவரம் அனுப்ப பள்ளி கல்வி இணை இயக்குனர் உத்தரவு

வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் மே-25ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

          விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 25-ம் தேதி நடைபெற இருக்கிறது.
இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமலைச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

       விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெற இருக்கும் இந்த முகாமில் 10-க்கும் மேற்பட்ட பிரபல தனியார் நிறுவனங்கள் பங்கேற்க இருக்கிறது. இதில் அந்தந்த நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். இதற்கான கல்வித் தகுதி 8,10, 12, தொழிற்பயிற்சி, பட்டயம் மற்றும் பட்டம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்வு பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு சேர்வதற்கான வயது வரம்பு 25-க்குள் இருக்க வேண்டும். இம்முகாமில் கலந்து கொள்கிறவர்களின் வேலைவாய்ப்பு பதிவு எக்காரணம் கொண்டு நீக்கம் செய்யப்படமாட்டாது.

              இதில், கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் குறிப்பிட்ட நாளில் காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்திற்கு நேரில் வந்து பயனடையும்மாறு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமலைசெல்வி தெரிவித்துள்ளார்.
சட்ட படிப்புக்கு விண்ணப்பம் வினியோகம்: ஜூன் 25க்குள் தரவரிசை பட்டியல்

            சட்டப்படிப்பிற்கு, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் நேற்று துவங்கியது. விண்ணப்பங்களை, அனைத்து அரசு சட்ட கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் பெறலாம்.

           அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், மதுரை, திருச்சி, கோவை, நெல்லை ஆகிய, ஏழு இடங்களில், அரசு சட்டக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இதில், பி.ஏ., பி.எல்., ஐந்தாண்டு சட்டப் படிப்பும், பி.எல்., என்ற மூன்றாண்டு சட்டப் படிப்பும் வழங்கப்படுகிறது.

             ஐந்தாண்டு பி.ஏ., பி.எல்., சட்டப் படிப்பிற்கு, 1,052 இடங்களும், மூன்றாண்டு பி.எல்., சட்ட படிப்பிற்கு, 1,262 இடங்களும் உள்ளன. இப்படிப்புகளுக்கு, 45 சதவீதம் மேல் மதிப்பெண் எடுத்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப விலை, 500 ரூபாய்.

           சென்னையில் உள்ள சட்ட பள்ளியில் நடத்தப்படும் பி.ஏ., பி.எல்., (ஹானர்ஸ்) படிப்பில், 120 இடங்களும், பி.காம்.- பி.எல்., (ஹானர்ஸ்) படிப்பிற்கு, 60 இடங்களும், பி.எல்., (ஹானர்ஸ்) படிப்பில், 60 இடங்களும் உள்ளன. 70 சதவீதம் மேல் மதிப்பெண் எடுத்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 

            விண்ணப்ப விலை 1,000 ரூபாய். விண்ணப்பங்களை, "பதிவாளர், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் ச ட்ட பல்கலைக்கழகம், சென்னை" என்ற பெயரில் வங்கி காசோலை எடுத்து மாணவர்கள் பெறலாம். 

           ஜூன், 14ம் தேதிக்குள், மாணவர்கள், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஜூன், 25ம் தேதிக்குள், மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

           இதுகுறித்து, சட்ட பல்கலைக்கழக பதிவாளர் சங்கர் கூறியதாவது: இந்தாண்டு புதிதாக, பி.காம்., பி.எல்., (ஹானர்ஸ்) என்ற, ஐந்தாண்டு பட்டப் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளோம். இப்படிப்புக்கு மாணவர்களிடம் அதிகளவில் விண்ணப்பங்கள் வரும் என, எதிர்பார்க்கிறோம்.

               பி.ஏ., பி.எல்., படிப்புகளுக்கு, 7,000 விண்ணப்பங்களும், பி.எல்., படிப்புகளுக்கு, 8,000 விண்ணப்பங்களும் இந்தாண்டு வர வாய்ப்புள்ளது. இவ்வாறு சங்கர் கூறினார்.
ஜப்பானில் உதவித்தொகையுடன் கல்வி
          ஜப்பானில் உள்ள சிறப்பு பயிற்சி கல்லூரி, தொழில் நுட்ப கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில், உதவித்தொகையுடன் இளங்கலை படிப்புகள் வழங்கப்படுகின்றன.

          ஜப்பானில் உள்ள, கல்வி நிறுவனங்களில், வியாபாரம், ஆடை வடிவமைப்பு மற்றும் குடும்ப பொருளாதாரம், கலாசாரம் மற்றும் பொது கல்வி உள்ளிட்ட படிப்புகள், சிறப்பு பயிற்சி கல்லூரியிலும், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், மின் மற்றும் மின்னணு இன்ஜினியரிங், மெட்டீரியல் இன்ஜினியரிங், கட்டடக் கலை மற்றும் சிவில் இன்ஜினியரிங் உள்ளிட்ட படிப்புகள், தொழில் நுட்ப கல்லூரிகளிலும் வழங்கப்படுகின்றன. 

              சட்டம், அரசியல், சமூகவியல், இலக்கியம், வரலாறு, ஜப்பான் மொழி, பொருளாதாரம், வேளாண்மை, மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகள் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படுகின்றன.

            ஜப்பான் அரசின் உதவித்தொகையுடன், கல்வி கற்க விரும்பும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிளஸ் 2 தேர்ச்சி பெற்று, 1992, ஏப்ரல், 2ம் தேதிக்கு பின், 1997, ஏப்ரல் 1ம் தேதிக்கு முன் பிறந்தோர் விண்ணப்பிக்கலாம்.

              எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் விவரங்கள், அடுத்தாண்டு, பிப்ரவரி மாதத்திற்குள் தெரிவிக்கப்படும். விண்ணப்பங்களை, "ஜப்பானிய தூதரக வளாகம், 12/1, செனடோப் ரோடு, தேனாம்பேட்டை, சென்னை-18" என்ற முகவரியில் நேரடியாக பெறலாம்.
பிளஸ் 1 புத்தகத்தில் விழிப்புணர்வு வாசகம்

         மாணவியர், பாலியல் தொந்தரவுக்கு ஆளானால், உடனடியாக புகார் செய்வதற்கு வசதியாக, "சைல்டு ஹெல்ப் லைன்" என்ற தொண்டு நிறுவனம் சார்பில், கட்டணமில்லா தொலைபேசி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 


         மாணவியர், தங்களுக்கு ஏதாவது பிரச்னை எனில், 1098 என்ற எண்ணில் தொடர்புகொண்டு, புகார் அளிக்கலாம். அந்த புகார், உடனடியாக, போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

         இதுகுறித்து, மாணவியரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பிளஸ் 1 புத்தகங்களின் பின்பக்க அட்டையில், "சைல்டு ஹெல்ப் லைன்&' திட்டம் குறித்த வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
100 அரசு பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி

            நடந்து முடிந்த பிளஸ்2 தேர்வில் 100 அரசு பள்ளிகளில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் அரசு பள்ளிகளின் கல்வித் தரம் மற்றும் தேர்ச்சி வீதம் கணிசமாக உயர்ந்திருப்பதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
          இந்த ஆண்டில் மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வு நடந்தது. தேர்வு முடிவுகள் கடந்த 9ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் அரசு பள்ளிகளின் மாணவர்களின் தேர்ச்சி நிலை குறித்து தெரிந்துகொள்ள பள்ளி கல்வித்துறை சர்வே நடத்தியது. அதன்படி இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி கடந்த 3 ஆண்டுகளை விட இந்த ஆண்டு உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பள்ளிக் கல்வித் துறை நடத்திய சர்வேயில் தெரியவந்த விவரங்கள்:

* கடந்த 3 ஆண்டுகளாக கோவை, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, திருப்பூர், திருவாரூர், வேலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகள் தங்களின் தேர்ச்சி வீதத்தை அதிகரித்துக் கொண்டே வந்துள்ளன.
* கோவை, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், புதுக் கோட்டை, திருநெல்வேலி, தர்மபுரி, திருவாரூர், வேலூர், தூத்துக்குடி, விருதுநகர், விழுப்புரம், திருச்சி, திருநெல்வேலி, திருவாரூர், சிவகங்கை, சேலம், நாமக் கல், தருமபுரி, சென்னை ஆகிய 27 மாவட்டங்களில் கடந்த ஆண்டைக் காட்டிலும் தேர்ச்சி வீதம் அதிகரித்துள்ளது.
*பிளஸ் 2 தேர்வில் ஒரு பாடத்தில் மட்டும் தோல்வி அடைந்தோர் 42 சதவீதம். 2 பாடத்தில் தோல்வியுற்றோர் 35 சதவீதம்.
* இரண்டுக்கும் மேற்பட்ட பாடங்களில் 23 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர்.
* கடந்த 3 ஆண்டில் மாணவர்களின் மொத்த தேர்ச்சி வீதம் 86 சதவீதத்தில் இருந்து 88 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 1 சதவீதம் உயர்ந்துள்ளது.
* மாணவர்களைவிட மாணவியர் 7 சதவீதம் அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.
* அனைத்து வகை பள்ளிகளை பொறுத்தவரை 2011ல் 892 பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி இருந்தது. 2013ல் அது 1117 ஆக உயர்ந்துள்ளது.
* 2011ல் 35 அரசுப் பள்ளிகளில் மட்டுமே 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 2013ல் 100 அரசுப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல 2011ஐவிட எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாணவர்களின் தேர்ச்சி வீதம் கணிசமாக உயர்ந்துள்ளது.

1080 மதிப்பெண் பெற்ற அனைத்து அரசு பள்ளி மாணவருக்கும் முழு கல்வி உதவித்தொகை

              தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 1080 மதிப்பெண் பெற்ற அனைத்து அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கும் இந்த ஆண்டு தங்கள் அறக்கட்டளை சார்பில் முழு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என கோவை ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி தெரிவித்தார்.
          காரமடையை அடுத்த மருதூரில் அமைந்துள்ள அருள்மிகு அனுமந்தராயசாமி திருக் கோயிலில் வைகாசி முதல் சனிக்கிழமை விழா, 8-ஆம் ஆண்டு விழா, ஓ.ஆறுமுகசாமிக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா, சனிக்கிழமை நடைபெற்றது.

           ஸ்ரீ விஜயலட்சுமி அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி தலைமை வகித்தார். தமிழக ஒக்கலிகர் மகாஜன சங்க மாநிலத் தலைவரும், முன்னாள் டிஎஸ்பியுமான ஆர்.வெள்ளிங்கிரி, ஊர் கவுடர் சாம்ராஜ், எஸ்எம்டி நிறுவனங்களின் தலைவர் கே.கல்யாணசுந்திரம், டிஆர்எஸ் கார்டன்ஸ் நிர்வாகி சண்முகசுந்திரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

          கவிதா கல்யாணசுந்திரம், வனஜா சந்திரசேகர், விஜயலட்சுமி சண்முகசுந்திரம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர். ஸ்ரீ ஆஞ்சநேயா அறக்கட்டளை தலைவர் கனகராஜ் (எ) வீரபத்திரசாமி வரவேற்றார்.

      விழாவில் காரமடை பகுதியில் சிறப்பு மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு கல்வி நிதியுதவிகளை வழங்கி ஓ.ஆறுமுகசாமி பேசியது:

         நன்கு கல்வி கற்கும் ஏழை மாணவர்கள் உயர் கல்வி பெற கடந்த 1990 முதல் விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை சார்பில் இலவச கல்வி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 35,000 மாணவ, மாணவியருக்கு ரூ. 270 கோடி மதிப்பில் கல்வி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

         வரும் 25, 26-ஆம் தேதிகளில் கோவை கொடிசியா அரங்கில் நடைபெறும் விழாவில் பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் கல்லூரிகளில் படிக்கும் 48,000 மாணவ, மாணவியருக்கு ரூ. 84 கோடி அளவில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது என்றார்.

         நிகழ்ச்சியில் விஜயலட்சுமி அறக்கட்டளையின் மருத்துவப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி, முன்னாள் ஊராட்சித் தலைவர் கந்தசாமி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

             கடந்த பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற புஜங்கனூர் அரசு மேல்நிலைப் பள்ளி, சீளியூர் துரைசாமி கவுடர் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளி மாணவ, மாணவியருக்கு காரமடை எஸ்எம்டி குரூப் மற்றும் டிஆர்எஸ் டெவலப்பர்ஸ் நிறுவனங்களின் சார்பில் கல்வி நிதி உதவிகள் வழங்கப்பட்டன


No comments:

Post a Comment