Sunday, March 2, 2014

தமிழ் நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் துறை தேர்வுகள் மே 2014 ஆறிவிக்கை வெளியீடு I விண்ணபிக்க கடைசி தேதி : 31.03.2014 I தேர்வு நடைபெறும் தேதி : 24.05.2014 முதல் 31.05.2014:

Current Online Registration for...
(Click to Apply Online)
NotificationCurrent Status


Departmental Examinations May 2014


Tamil English
To be opened
shortly


7–வது சம்பள கமிஷனின் யோசனைப்படி, அகவிலைப்படியில் 50 சதவீதத்தை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் இணைக்கவும் மந்திரிசபை ஒப்புதல் - தினந்தந்தி:

மத்திய மந்திரிசபை கூட்டம் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்குவது என்று மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் பெறும் அகவிலைப்படி 90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்ந்துள்ளது.


மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தும்.
80 லட்சம் பேர்
இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் ஆக மொத்தம் 80 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்.இந்த அகவிலைப்படி உயர்வு, கடந்த ஜனவரி 1–ந் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
7–வது சம்பள கமிஷனின் யோசனைப்படி, அகவிலைப்படியில் 50 சதவீதத்தை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் இணைக்கவும் மந்திரிசபை ஒப்புதல் அளித்து இருக்கிறது. இதனால் மத்திய அரசு ஊழியர்களின் மொத்த சம்பளம் சுமார் 30 சதவீதம் உயரும்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தப்பட்டு 90 சதவீதம் ஆனது. அந்த உயர்வு முன்தேதியிட்டு 2013–ம் ஆண்டு ஜூலை 1–ந் தேதி முதல் அமலுக்கு வந்தது. இப்போது அகவிலைப்படி மீண்டும் உயர்த்தப்பட்டு 100 சதவீதம் ஆகி இருக்கிறது.

6வது ஊதியக் குறைகளை நிவர்த்தி செய்ய நீதிபதி தலைமையில் குழு; அரசாணை பிறப்பித்த பிறகு ஊதிய குறைந்த ஊழியர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என உத்தரவு :

தமிழக அரசுப் பணியாளர்களின் ஆறாவது ஊதியக் குழு தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எஸ்.வெங்கடாசலமூர்த்தி தலைமையில் குழுவை ஏற்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊதியக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை மாற்றி அமைத்து, கடந்த 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ஆம் தேதி மற்றும் கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ஆம் தேதி அரசாணைகள் வெளியிடப்பட்டன. இந்த அரசாணையால் தங்களின் ஊதியம் வெகுவாக குறைந்துள்ளது. தங்களின் கிரேடுகள் மாறியுள்ளன எனக் கூறி அந்த அரசாணைகளை ரத்து செய்யுமாறு குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.
இந்த மனு, நீதிதிகள்கள் என்.பால்வசந்தகுமார், பி.தேவதாஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை வந்தது. அரசுத் தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி, அரசு சிறப்பு வழக்குரைஞர் டி.என்.ராஜகோபாலன் ஆகியோர் ஆஜரானார்கள்.
விசாரணைக்குப் பிறகு நீதிபதிள் பிறப்பித்த உத்தரவு: அரசுப் பணியாளர்களுக்கான ஊதியத்தை குறைப்பதற்கு முன் அடிப்படை விதிகள் கூட பின்பற்றவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவ்வாறு ஊதிய விகிதம் குறைக்கப்பட்டவர்களுக்கு புதிதாக ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதை கண்டிப்பாக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். 20 துறைகளில் உள்ள 52 பிரிவுகளில் உள்ள இந்த ஊதிய முரண்பாடை அரசு அகற்ற வேண்டும். அதற்கு, சத்தீஸ்கர் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.வெங்கடாசலமூர்த்தி தலைமையில் தனிநபர் ஊதியக் குறை தீர்வு குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும். இந்தக் குழுவில் தலைமைச் செயலர் அந்தஸ்தில் உள்ள ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அரசு நியமித்துக் கொள்ளலாம். புதிய ஊதிய விகிதத்தை நிர்ணயிப்பது தொடர்பாக தகுந்த விதிமுறைகளை இந்தக் குழுவுக்கு அரசு வழங்க வேண்டும்.
இந்த உத்தரவின் நகலை பெற்ற நாளிலிருந்து மூன்று வாரங்களுக்குள் இந்தக் குழுவை அரசு நியமிக்க வேண்டும். இந்தக் குழு ஆய்வு செய்து புதிய ஊதிய விகித்தை நியமிக்கும் வரை கடந்த 2011 மற்றும் 2013-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை நடமுறைப்படுத்தக் கூடாது. அரசாணை பிறப்பித்த பிறகு ஊதிய அளவு குறைந்த ஊழியர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
முழுமையாக தர ஊதிய அடிப்படையில் தேர்தல் பணிகள் அளிக்கப்பட வேண்டும்-பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு:

சம்பள அடிப்படையில் வாக்குச்சாவடி அலுவலர் பணி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. கலெக்டரிடம் கோரிக்கை தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் இள.பாபுவேலன், செயலாளர் பிளசிங் பாக்கியராஜ் ஆகியோர் நெல்லை மாவட்ட கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான மு.கருணாகரனை சந்தித்து ஒரு கோரிக்கை மனுகொடுத்தார்கள். அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:
– நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் பணிகளுக்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களாக தர ஊதியம் அடிப்படையில் தேர்தல் பணி பதவிகள் அளிக்க வேண்டும். பணி ஒதுக்கீடு கடந்த தேர்தலின் போது அதிக தர ஊதியம் ரூ.4,600 பெறும் பட்டதாரி ஆசிரியர்கள் வாக்குச் சாவடி அலுவலர் நிலை –1 ஆக பணி வழங்கப்பட்டது. ஆனால் பட்டதாரி ஆசிரியர்களை விட குறைவான தரஊதியம் ரூ.4,500 பெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கோ வாக்குச்சாவடி தலைமை அலுவலர் பணி வழங்கப்பட்டது. இதனால் தேவையற்ற குளறுபடிகள் ஏற்பட்டன. இந்த நிலை தவிர்க்கப்பட வேண்டும். முழுமையாக தர ஊதிய அடிப்படையில் தேர்தல் பணிகள் அளிக்கப்பட வேண்டும். மேலும் வாக்குச்சாவடிகளில் ஆண், பெண் ஆசிரியர்களுக்கு தேவையான வாகன வசதி, பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் செய்து தரவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment