Monday, January 14, 2013

நேரடி டி.இ.ஓ. தேர்வுமுறையிலும் அதிரடி மாற்றம் டி.என்.பி.எஸ்.சி. முடிவு

குரூப்–1 தேர்வை தொடர்ந்து நேரடி டி.இ.ஓ. (மாவட்ட கல்வி அதிகாரி) தேர்வுமுறையிலும் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்துள்ளது.


உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை ஆய்வு செய்வது, ஆசிரியர்களின் பணிகளை மேற்பார்வையிடுவது, தேர்வு நடத்துதல் போன்ற பணிகளை செய்வதற்காக ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் ஒரு மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) பணியில் இருப்பார்.ஆசிரியர்களின் ஊதியம், விடுமுறை, இடமாற்றம், வருங்கால வைப்புநிதி தொடர்பான பணிகளையும் மாவட்ட கல்வி அதிகாரிகள்தான் கவனிக்கிறார்கள். எனவே, பள்ளிக்கல்வித்துறையில் டி.இ.ஓ. பதவி, முக்கிய பதவியாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 69 கல்வி மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கும் ஒரு டி.இ.ஓ. பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

டி.இ.ஓ. பதவியை பொறுத்தமட்டில், 25 சதவீத காலி இடங்கள் நேரடி போட்டித்தேர்வு மூலமாகவும், எஞ்சிய 75 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. பதவி உயர்வில், அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 40 சதவீத இடங்களும், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 35 சதவீத இடங்களும் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.நேரடி டி.இ.ஓ. காலி பணி இடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், வரலாறு என ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் குறிப்பிட்ட இடங்களை ஒதுக்குகிறார்கள். தேர்வு எழுதுவதற்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுகலை பட்டப்படிப்புடன் பி.எட். பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.

டி.இ.ஓ. பதவி என்பது அரசிதழ் பதிவு பெற்ற (கெஜட்டடு) நிர்வாக பதவி ஆகும். டி.இ.ஓ.வாக பணியில் சேருவோர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி (சி.இ.ஓ.) பள்ளிக்கல்வித்துறையில் இணை இயக்குனர், இயக்குனர் என்று படிப்படியாக பதவி உயர்வு பெறுகிறார்கள். மேலும், சிறப்பு பதவி உயர்வு மூலமாக வருவாய்த்துறை சாராத பணிப்பிரிவில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவும் பதவி உயர்வு பெறலாம்.எழுத்துத்தேர்வில் குறிப்பிட்ட பாடத்தில் இருந்து 200 வினாக்கள் கேட்கப்படும். மொத்தம் 300 மதிப்பெண். நேர்முகத்தேர்வுக்கு 40 மார்க் என்று இருந்தது. இந்த நிலையில், குரூப்–1 தேர்வில் அதிரடி மாற்றங்கள் செய்திருப்பதை போன்று நேரடி டி.இ.ஓ. தேர்விலும் ஏராளமான மாற்றங்களை கொண்டுவர டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்திருக்கிறது.

அதன்படி, டி.இ.ஓ. தேர்வில் வெறுமனே விண்ணப்பதாரர்கள் படித்த பாடங்களில் இருந்து மட்டுமின்றி பொது அறிவு, ஆளுமைத்திறன், உளவியல், நிர்வாகத்திறமை போன்றவற்றை ஆராயும் வகையில் புதிய வினாக்கள் சேர்க்கப்பட உள்ளன. புதிய தேர்வுமுறையில் பொதுஅறிவு தாளும் விருப்பப் பாட தாள் ஒன்றும் இடம்பெறக்கூடும் என்று தெரிகிறது.மேலும், குரூப்–1 தேர்வை போன்று நேர்முகத்தேர்வுக்கான மதிப்பெண்ணையும் அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. விரைவில் 12 டி.இ.ஓ. காலி பணி இடங்கள் நேரடித்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வில் புதிய தேர்வுமுறை பின்பற்றப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாணவர்களின் பன்முகத்திறன்களை வளர்த்தல் மூலம் கட்டாய கல்வியுரிமை சட்டம் 2009 சார்ந்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த தொடக்க மற்றும் பள்ளிகல்வி துறையின் கீழ் இயங்கும் அனைத்து அரசு மற்றும் நிதியுதவி தொடக்க/நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 1 முதல் 11 வகுப்பு மாணவர்களுக்கு (10 வகுப்பை தவிர்த்து) பாடல், பேச்சு, கட்டுரை,நாடகம், ஓவியம் மற்றும் வினாடிவினா போட்டிகளை பள்ளி/ வட்டாரம்/ மாவட்ட அளவில் நடத்தி பரிசுகள் வழங்க வழிக்காட்டுதல் நெறிமுறைகள் மற்றும் போட்டி தலைப்புகள் வழங்கி அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தரவு

கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி ஒப்புதல் மற்றும் புதுப்பித்தல் பெறாத பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் - விவரம் கோரியும் தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

01.01.2013ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த முதுகலை ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் / உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் - விவரம் கோரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

இதெல்லாம் நமக்கு சரிபடாதா? காலை 7.30க்கு பள்ளி என்பது தமிழக அரசின் புது ஐடியா...

காலையில் சீக்கிரம் எழுந்திருக்கும் பழக்கம் வரும்.எனவே இரவில் எந்த டி.வி சீரியலில் மாட்டாமல் குழந்தைகள் சீக்கிரம் தூங்க பழகி விடுவார்கள்.பெற்றோரும் தான். இந்த அரசு பஸ்கள் காலையில்,முக்கியமாக மதியத்தில் குழந்தைகளுக்கு மட்டுமே என்பது போல் கூட்டம் இல்லாமல் ஃப்ரீயாக செல்லலாம். கண்டக்டர்களும் பள்ளிகளுக்கு அருகில் நிறுத்தி அமைதியான முறையில் ஏற்றி வருவார்கள். இப்போ மாதிரி குழந்தைகளை கண்டாலே பஸ்ஸை நிறுத்தாமல் ஓடுவதை போல் செய்ய மாட்டார்கள். சாலைகள் இந்த நேரத்தில் கொஞ்சம் ட்ராஃபிக் குறைவாக இருக்கும் என்பதால் மாணவர்கள் சைக்கிளில் சென்று வருவதை விரும்பி சைக்கிள் உபயோகம் அதிகமாக சான்ஸ் இருக்கே.

காலையில் கஞ்சி,ஜூஸ்,பால் போன்று நல்லா இரண்டு பெரிய க்ளாஸ் கொடுத்து,காலை சாப்பாட்டை கையில் கொடுத்து விடுவதால்(சப்பாத்தி,பூரி போன்று) குழந்தைகள் ஆரோக்யமாக இருக்குமே. மதியம் 2 மணிக்கு வீட்டிற்கு வந்து முழு சாப்பாட்டை சூடாக காய்கறி,கீரைகளுடன் சாப்பிடலாம்.ப்ரைமரியில் படிக்கும் குழந்தைகள் மதியம் வீட்டில் 2 மணிநேரம் தூங்கலாம்.

பள்ளிகளில் மதிய சாப்பாட்டிற்கு பிறகு ஒரு மணிநேரம் எந்த விதத்திலும் குழந்தைகளை ஒரு பாடத்தின் மீது கவனம் செய்ய வைக்க முடியவே முடியாது. எப்படா பெல் அடிக்கும் என்ற மனநிலையில் தான் கட்டாயத்தின் பேரில் இருக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது.அந்த நேரத்தில் பெரும்பாலும் போர்டில் எழுதி போடும் வேலை தான் பெரும்பாலும் ஆசிரியர்களின் வேலையாக இருக்கும். புதியதாக பாடம் சொல்லி தருவதை மதிய நேரத்தில் அவாய்ட் செய்து விடுவர்.


இந்த நேரப்படி அம்மா வேலைக்கு போகாமலோ இல்லையென்றால் பாட்டி,தாத்தா அவர்கள் வீட்டிலோ இருக்க வேண்டும். அப்போதான் இந்த முறை நல்லாயிருக்கும்.எனவே கூட்டு குடும்பத்தின் அருமை மக்களுக்கு புரியும்.இல்லாட்டி ஏற்கனவே மாலை 4,5 மணியிலிருந்து வேலைக்கு போன அம்மாவிற்கு காத்து இருக்கும் குழந்தைகள் இப்போ மதியத்திலிருந்து காத்து கிடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். AFTER SCHOOL என்ற பள்ளிகள் அல்லது டியூஷன் செண்டர் புற்றீசல் போல் முழைத்து சம்பாதிக்க தொடங்கும். மேட்னி-ஷோக்கள் தியேட்டர்களில் கொடிக்கட்டும். டீன் - ஏஜ் குழந்தைகள் நன்கு சுத்த ஆரம்பிக்கும்.டைம் அதிகம் கிடைப்பதால் மாணவர்களின் நெட் உபயோகம் அதிகரிக்கும்.

தனியார் பள்ளிகள் மாணவர்களை மதியம் விட்டால் கூட ஆசிரியர்களை மதியம் வீட்டிற்கு விட ரொம்ப யோசிப்பார்கள். ஆசிரியர்கள் 4 மணிவரை கட்டாயம் பள்ளியில் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அவர்களுக்கும் வீடு மற்ற வேலைகள் இருக்குமென்ற கவலையே கொள்ள மாட்டார்கள்.இதில் பெரும் பாதிப்பு தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தான். தனியார் பள்ளிகளில் 90% பெண்கள் தான் ஆசிரியராக பணியில் இருக்கிறார்கள். ஆசிரியர் பணியில் ஈடுபாடு இனி வரும் காலங்களில் இந்த நேர மாற்றத்தால் இளைஞர்களுக்கு குறைந்து விட வாய்ப்பு உள்ளது.

என்ன செய்யலாம்?

3 கி.மீட்டருக்குள்ளே தான் வீடும் பள்ளியும் இருக்க வேண்டும் என்பதை அனைத்து பெற்றோரும் கட்டாயம் கடைபிடித்தாலே இந்த பிரச்சனை பெரிதும் தீரும்.சைக்கிளுக்கென்று சாலையில் தனி பாதை ஏற்படுத்தினால் இன்னும் நல்லாயிருக்கும்.சைக்கிளில் வரும் மாணவர்களுக்கு பள்ளியில் ஏதேனும் மார்க் உண்டு என்று கூறினால் சோம்பேறிகளாகி கொண்டு இருக்கும் மாணவ சமுதாயம் சைக்கிளை உபயோகப்படுத்த தொடங்கும்.தனியார் பள்ளிகள் சம்பாதிக்க வேண்டி வாங்கி வைத்திருக்கும் பேருந்துகளை தொலைவில் இருந்து வரும் குழந்தைகளுக்கு பயன் படுத்தலாம்.

என் பையன்கள் இருவரும் தாம்பரம் கேந்திரிய வித்யாலயாவில் 10 வருடம் படித்தனர். அப்போது காலை 7.30-2 மணி வரை பள்ளி நேரம்.காலை 8.30க்கு டிஃபன் ப்ரேக். டவுண் பஸ்ஸில் 3 கி.மீட்டர் சென்று வந்தார்கள். காலை கூட்டம் இருந்தாலும் மதியம் அரசு பேருந்தில் அந்த பள்ளி மாணவர்கள் மட்டுமே சந்தோஷமாக வருவார்கள். அந்த பள்ளி மாணவர்கள் மற்ற பள்ளி மாணவர்களை விட மிக சுறுசுறுப்பாய் இருப்பார்கள் இதை நான் மற்ற பள்ளி ஆசிரியர்கள் சொல்லி கேட்டு இருக்கிறேன்.நேரிலும் பார்த்து இருக்கிறேன். மதியத்திலிருந்து இரவு வரை நேரம் அதிகம் இருக்கும்.வீட்டு பாடங்கள் படிக்க செய்ய அதிக நேரம் இருக்கும்.மற்ற டியூஷ்னகளுக்கும் செல்ல நேரம் கிடைக்கும்.இந்தியாவில் இருக்கும் அனைத்து கேந்திரிய வித்யாலயாவும் இந்த நேரத்தில் தான் செயல்பட்டன. ஷில்லாங்,ஊட்டியில் இருக்கும் குழந்தைகளும் காலை குளிரில் இந்த நேரத்திற்கு பழக்கபட்டே இருக்கிறார்கள்.

நான் சிட்டியில் இருக்கும் பள்ளிகளை மட்டும் கருத்தில் கொண்டு இதை எழுதி இருக்கிறேன். கிராமத்து பள்ளிகளுக்கு இந்த டைம் சரி படுமா தெரியலை. எனினும் மதிய நேரத்தில் வீட்டிற்கு வருவதால் அவர்களுக்கும் பிரச்சனை இருக்காது என்றே நினைக்கிறேன். தூரமாய் இருக்கும் வீட்டிற்கு இருட்டும் முன்பே போகலாம் .இருட்ட ஆரம்பிக்கும் முன்பே பாடங்களை பாதியாவது படித்து முடிக்கலாம். (கரெண்ட் பிரச்சனை).பார்க்கலாம் என்ன டைம் அரசு முடிவு செய்கிறார்கள் என்று?
பத்தாம் வகுப்பு சமூகவியல் அரையாண்டுத் தேர்வு 2012-13 - விடைத்தாள்

தமிழகத்தில் அரசுப் பள்ளி களில் பணியாற்றும் ஆசிரியர் களுக்கான பதவி உயர்வு பட்டியல் விண்ணப்பங்களை பெற்று, பிப். 8 க்குள் வழங்க CEOகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

பட்டதாரி ஆசிரியரிலிருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு, தமிழ் பாடத்திற்கு 2000-01 வரை உள்ளவர்கள், ஆங்கிலத்தில் ஒரே பாடம், வெவ்வேறு பாடங்கள் எடுத்து படித்த 2003-04 வரை உள்ள ஆசிரியர்கள், கணிதம் 2003-04, இயற்பியல் 2005-06 வரை உள்ளவர்கள், வேதியியல்,
தாவரவியல், விலங்கியல் 2005-06 வரை உள்ளவர்கள், வரலாறு ஒரே பாடத்தில் பட்டம் பெற்ற 1997-98 வரை உள்ளவர்கள், வெவ்வேறு பட்டம் பெற்ற 2004-05 வரை உள்ளவர்கள், பொருளியல் ஒரே பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் 2008- 09, வெவ்வேறு பாடத்தில் பட்டம் பெற்ற 2005-06 வரை உள்ளவர்கள்,வணிகவியல் ஒரே பாடத்தில் பட்டம் பெற்ற 31.12.1992 வரை உள்ளவர்கள்,வெவ்வேறு பாடத்தில் பட்டம் பெற்ற 2009-10 வரை உள்ளவர்கள்,புவியியல் 2002-03 வரை உள்ளவர்கள், அரசியல் விஞ்ஞானம் 2002-03 வரை உள்ளவர்கள். 
 
உடற்கல்வி இயக்குனர் நிலை 1 - 2002-03 வரை உள்ளவர்கள் முதன்மை கல்வி அலுவலரிடம் விண்ணப்பம் செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு, தமிழ் மொழிப்பாடம் 31.12.1998 வரை உள்ளவர்கள், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் 31.12.12 வரை உள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் . முதுகலை ஆசிரியரிலிருந்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்களுக்கு, 31.12.12 ல் பத்து ஆண்டுகள் பணி நிறைவு பெற்றவர்கள், பதவி உயர்வு பட்டியலை 22.01.2013 க்குள் பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டும். பட்டதாரி ஆசிரியரிலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக ,முதுகலை ஆசிரியரிலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு, 2000 -2001 வரை உள்ளவர்கள்.

முதுகலையாசிரியரிலிருந்து மேல்நிலைப்பள்ளி தலைமயாசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியரில் இருந்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு 01.01.2009 வரை உள்ளவர்கள், 31.01.13க்குள் சென்னை பள்ளிக்கல்வித்துறைக்கு விண்ணப்பம் வழங்க வேண்டும். பட்டதாரியிலிருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு, இடைநிலையாசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல்கள் ,பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய தேதிகள், மாவட்டம் வாரியகாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன் விபரம்:
பிப்., 4 : நாகர்கோவில், சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம்.
பிப்.,5 : மதுரை, திண்டுக்கல், தேனி, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை.
பிப்., 6 : கரூர், அரியலூர், பெரம்பலூர்,திருச்சி, நீலகிரி, சேலம், திருப்பூர்.
பிப்., 7 : நாமக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி.
பிப்., 8 : திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை.
இதற்கு முன்னதாக, முதன்மை கல்வி அதிகாரிகள் விண்ணப்பம் பெற்று ,குறிப்பிட்ட தேதிக்குள் வழங்க வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் 14 ஆண்டுகள் தளர்த்தி அரசு உத்தரவு

தமிழ் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு பட்டியலை 1998ம் ஆண்டுக்கு முன்பாக அறிவித்து உத்தரவிட்ட நிலையில், 14 ஆண்டுகள் தளர்த்தி 2012 வரை தயாரிக்க அரசு புதிய உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், சிறுபான்மை பாட மொழி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு 1.1.2013 அடிப்படையில் தகுதி வாய்ந்தோர் பட்டியலை தயாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ் ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு 31.12.1998 வரையும், இதர பாட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு 31.12.2012 வரையும் விவரங்களை அனுப்பி வைக்க அரசு ஏற்கெனவே உத்தரவிட்டது.

பிற பாடங்களுக¢கான பதவி உயர்வு பட்டியல் மட்டும் 2012 வரை அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ் ஆசிரியர்களுக்கு மட்டும் 1998 வரை என்பதால் பிஏ (தமிழ்), பிலிட் பட்டம் பெற்று தமிழ் ஆசிரியர் பதவி உயர்வுக்கு தயாராக இருந்த இடைநிலை ஆசிரியர்கள் பலர் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் தமிழ் ஆசிரியர் பதவி உயர்வுக்கும் பிற ஆசிரியர்களை போல் 31.12.2012 வரை முன¢னுரிமை பட்டியல் தயாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் இமெயில் அனுப்பியுள்ளார். இதனால் பதவி உயர்வை எதிர்பார்த்து காத்திருந்த தமிழ் ஆசிரியர்கள் மக¤ழ்ச்சி அடைந்துள்ளனர்.
TNPSC - GROUP - I SERVICES MAIN WRITTEN EXAM RESULTS RELEASED

அரசு குழந்தைகள் காப்பகத்தில் குறையும் மாணவியர் எண்ணிக்கை

காஞ்சிபுரத்தில் உள்ள அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில், 10ம் வகுப்பு முடிக்கும் மாணவியர், தொழிற்சாலை பணிக்கு சென்று விடுவதால், மேற்படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது.

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது. இங்கு 1ம் வகுப்பு முதல் கல்லூரி வரை படிக்கும், ஆதரவற்ற மாணவியர் தங்கி படித்து வருகின்றனர். 

வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த காப்பகம், கடந்த 2005ம் ஆண்டு, அரசு கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. 300 மாணவியர் தங்கி படிக்க வேண்டிய காப்பகத்தில், 106 மாணவியர் மட்டும் படிக்கின்றனர்.

பெற்றோர், பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகள் காப்பகம் ஏற்படுத்தப்பட்டது. இங்கு படிக்கும் மாணவிக்கு, பாடப் புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடை, உணவு, சோப்பு, போன்றவை இலவசமாக வழங்கப்படுகிறது.

காஞ்சிபுரம் குழந்தைகள் காப்பகத்தில், திருவண்ணாமலை, சென்னை, சேலம், மாவட்டங்களில் இருந்தும், காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மாணவிகளும் படித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், ஒன்பதாம் வகுப்பு முதல், கல்லூரி வரை, ஆண்டுத் தேர்வை 40 மாணவியர் எழுதுகின்றனர்.

தேர்வு முடிந்த பிறகு, ஒன்றரை மாதம் விடுமுறைக்காக வீடுகளுக்கு செல்கின்றனர். அப்போது அருகில் உள்ள தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களில் வேலைக்கு சென்று, மாதம் 4,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை சம்பளம் பெறுகின்றனர். அதன்பிறகு படிக்க விரும்புவதில்லை. படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு, பணியை தொடர்கின்றனர்.

காப்பகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், மாணவியரின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தும், அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் முயற்சி தோல்வி அடைகிறது. இதனால், அரசு திட்டம் வீணாகி வருகிறது. 

இதுகுறித்து அரசு காப்பகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கூறுகையில், "வயது வந்த மாணவியர் குறிப்பிட்ட வகுப்பு வரைதான், காப்பகத்தில் தங்கி படிக்கின்றனர்.

ஆண்டுத் தேர்வின் போது, தொழிற்சாலைகளில் பணிக்கு செல்லும் மாணவியர், மாதம்தோறும் சம்பளம் பெறுவதால், திருமணத்திற்கு தயாராகி விடுகின்றனர். இதை தடுத்து நிறுத்த முடியாத நிலை ஏற்படுகிறது,&'&' என்றார்.
அங்கன்வாடி சத்துணவு திட்டத்தில் அட்சய பாத்திரம்

பள்ளி மற்றும் அங்கன்வாடிகளில் செயல்படுத்தப்பட உள்ள, புதிய சத்துணவு திட்டத்தில், பயன்பெறுபவர்களும் பங்கு கொள்ளும் வகையில், "அட்சய பாத்திரம்" என்ற சிறப்பு திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால், கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், பள்ளி மாணவர் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில், சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில், சிறிய மாற்றங்கள் அவ்வப்போது செய்யப்பட்டன. 

சத்துணவு திட்டத்தில், 2010-11ம் ஆண்டில், 54.80 லட்சம் மாணவ, மாணவியர் பயனடைந்தனர். ஆனால், அடுத்தாண்டில், பயனாளிகள் எண்ணிக்கை, 50.14 லட்சமாக குறைந்தது. இதுகுறித்து, சமூக நலத்துறையினர் ஆய்வு செய்தனர்.
 அப்போது, வீடுகளில் பெற்றோர் சமைக்கும் உணவை விட, பள்ளிகளில் வழங்கப்படும் உணவின் தரம் குறைவாக உள்ளதாக கூறி, இதை தவிர்த்து வருவது கண்டறியப்பட்டது. இதனால், பள்ளிகளில் இடை நிற்றல் அதிகரித்துள்ளதும் உணரப்பட்டது. 

இதையடுத்து, வீடுகளில் சமைக்கப்படும், புளி சாதம், லெமன் சாதம் உள்ளிட்ட கலவை உணவு வகைகளை, பள்ளிக் குழந்தைகள், அங்கன்வாடி குழந்தைகள் விரும்பி உண்பதை கருத்தில் கொண்டு, அதை சத்துணவுத் திட்டத்தில் அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டது.

சமையற் கலைஞர்கள், சென்னை சைதாப்பேட்டை மற்றும் ஸ்ரீரங்கம், அந்தநல்லூர் ஊராட்சி பள்ளியிலும், பல வகை உணவுகளை தயாரித்து காட்டினர். இவற்றை, பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் உண்டனர். தொடர்ந்து, கடந்த நவ., 2ம் தேதி சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதா, 13 வகை கலவை உணவுகள் மற்றும் நான்கு வகை முட்டை மசாலாக்கள் சத்துணவு திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள, சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, முதல்கட்டமாக, மாவட்டத்திற்கு ஒரு பகுதியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 

இத்திட்டத்தை, இம்மாதம், 17ம் தேதி, எம்.ஜி.ஆர்., பிறந்த தினத்தில் துவக்கி வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இத்திட்டத்தில், "அட்சயப் பாத்திரம்" என்ற சிறப்பு திட்டத்தையும் சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பயனாளிகளான, பள்ளி மாணவர்களும் பங்கு கொள்ளும் விதத்தில், இந்த திட்டம் செயல்படும். வீட்டில் அன்றாடம் மீதமாகும் காய்கறிகள், வீட்டில் விளையும் காய்கறிகளை தாங்களாகவே முன்வந்து, பள்ளியில் அல்லது அங்கன்வாடி மையங்களில் வைக்கப்பட்டுள்ள, பாத்திரத்தில் போட ஏற்பாடு செய்யப்படும்.

அந்த காய்கறியை, அன்றாட சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். முன்னதாக, அங்கன்வாடி மையங்களில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட இருந்தது; ஆனால் நடைபெறவில்லை. தற்போது, புதிய சத்துணவுத் திட்டத்தில், மீண்டும் "அட்சயப் பாத்திரம்" சேர்க்கப்பட்டுள்ளது. 

இதில், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் என, இரண்டிலும், இப்பாத்திரங்கள் வைக்கப்பட்டு, காய்கறிகள் பெறப்பட உள்ளது. இதுகுறித்து, சத்துணவுத் திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:
குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே, கொடுத்து, வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்தவே, சத்துணவு திட்டத்தில், "அட்சய பாத்திரம்" அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய சத்துணவு திட்டத்திற்கான, பாத்திரங்கள் வாங்க, பள்ளிகளுக்கு, 5,000 ரூபாய் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு, 2,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 

சிறப்பு திட்ட செயலாக்கத் துறையின் மூலம், மிக்சி வாங்கி தர, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள், அனைத்து சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு இவை வழங்கப்பட்டு விடும். 

சமையலர்களுக்கு பயிற்சியுடன், உணவுக்கான மெனு குறித்த, விளக்கம் அடங்கிய, சிடி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
குரூப்-1 தேர்வு முடிவு வெளியீடு: பிப்ரவரியில் நேர்காணல்

குரூப்-1 பணியிடங்களுக்கான, எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வெற்றிப் பெற்றவர்களுக்கான நேர்காணல், சென்னை, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், பிப்ரவரி, 1, 2, 4 மற்றும் 5ம் தேதிகளில் நடக்கிறது.

துணை கலெக்டர், வணிக வரித்துறை உதவி கமிஷனர் உள்ளிட்ட பதவிகளில், காலிப் பணியிடங்களை நிரப்ப, ஜூலை, 28, 29ம் தேதி, எழுத்துத் தேர்வு நடந்தது. இத்தேர்வு முடிவுகள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்- டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. 

நேர்முகத் தேர்வில் பங்கேற்பது குறித்த விவரங்கள், போட்டியாளர்களுக்கு விரைவில் அனுப்பப்படும். நேர்காணலின் போது, போட்டியாளர்கள் கொண்டு வரவேண்டிய சான்றிதழ்கள் உள்ளிட்ட விவரங்களை,www.tnpsc.gov.in இணையதளத்தில் பெறலாம்.
"உயர்கல்வி பெறுவோர் எண்ணிக்கை 25% ஆக உயர்த்த நடவடிக்கை"

"தமிழகத்தில் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கையை 25 சதவீதமாக உயர்த்த, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,' என்று உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலையின் 21வது பட்டமளிப்பு விழா, மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நேற்று நடந்தது. தமிழக கவர்னர் ரோசய்யா தலைமை வகித்து, மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார்.

விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பேசியதாவது: இளைஞர்களை அறிவுடன், ஆக்கப்பூர்வமாக சிந்திப்பவர்களாக மாற்றுவதே உயர்கல்வியின் நோக்கம். உலகளவில் ஏற்படும் போட்டிகளை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களை தயார் செய்ய வேண்டியது அரசின் கடமை. தமிழகத்தில் தற்போது உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 12 சதவீதம். இதை, 2025ம் ஆண்டுக்குள் 25 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

அரசு கலை மற்றும் அறிவியியல், பொறியியல் கல்லூரிகள் புதிதாக துவங்குவது, மாணவர்களுக்கான இலவச லேப்டாப்கள் வழங்குவது, கல்வி நிறுவனங்கள்- தொழிற்சாலைகள் இணைப்பை வலுப்படுத்துவது, அறிவியல் தொழில் நுட்பங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது போன்றவற்றில் அரசு கவனம் செலுத்துகிறது. 

உயர் கல்வியை சர்வதேச தரம் வாய்ந்ததாகவும், அறிவாற்றல் மிகுந்த தமிழ்ச் சமுதாயத்தை உருவாக்கவும் வகையிலும் இந்த அரசு செயல்படுகிறது. பட்டங்கள் பெறுவதை, சமுதாய வளர்ச்சிக்கு பாடுபடுவதற்கான அத்தாட்சி சீட்டாக நினைத்து, எதிர்கால பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில் மாணவர்களின் செயல்பாடு அமைய வேண்டும்" என்றார்.

மாநில உயர்கல்வி மன்றத் துணைத் தலைவர் சிந்தியா பாண்டியன் பேசுகையில்,  "தலைமைப் பண்பு, முடிவுகள் எடுப்பதில் பெண்களின் பங்களிப்பு அதிகளவில் தேவை. பொது வாழ்வில் பெண்களை தகுதியுள்ளவர்களாக மாற்றும் வகையில், பாடத்திட்டங்கள் மற்றும் பயிற்சிகளை பல்கலைகள் வடிவமைக்க வேண்டும்,'' என்றார்.

துணைவேந்தர் மணிமேகலை பேசுகையில், "1984ல் துவங்கப்பட்ட இப்பல்கலை, மகளிர் கல்வி மேம்பாட்டில் முனைப்புடன் செயலாற்றுகிறது. இந்தாண்டு 230 பி.எச்டி., பட்டங்கள், முதுகலையில் 3126, இளங்கலையில் 6459 என மொத்தம் 11,715 பேர் பட்டங்கள்

No comments:

Post a Comment