Saturday, January 26, 2013


Professional Tax | புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பிப்ரவரி 2013 தொழில் வரி உண்டா ?
ஆறுமாத வருமான அடிப்படையில் இந்த தொழில் வரி ஏப்ரல் முதல்  செப்டம்பர் வரை மற்றும் அக்டோபர் முதல்  மார்ச் வரை மாநில அரசுக்கு செலுத்தப்படுகிறது. இது மத்திய அரசுக்கு செலுத்தும் வருமான வரியில் கழித்தம் செய்யப்படும். இவ்வரியினை மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் செலுத்த வேண்டியதில்லை ( அரசாணை 2726/(நிதி) நாள் 01.11.1994: தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியிடு நாள் :25.06.1992.).
புதிய ஆசிரியர்கள் பணி சேர்ந்து ஆறு மாதங்கள் ஆகவில்லை என்றாலும், அவர்கள் தொழில் செலுத்தும் அளவு உரிய தொகையை ஊதியமாக பெற்று இருந்தால் அவர்கள் பிப்ரவரி 2013க்கு தொழில் வரி செலுத்த வேண்டும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி 17.12.2012 அன்று நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூபாய்.24,888 மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூபாய்.15,590 சம்பளமாக கிடைக்க வாய்ப்புள்ளதால் 28.02.2013 வரை முறையே ரூ.61,819 மற்றும் ரூ.38,724 வர வாய்ப்புள்ளது. எனவே பட்டதாரி ஆசிரியர்கள் ரூ.706ம் இடைநிலை ஆசிரியர்கள் ரூ.238 செலுத்தவேண்டி இருக்கும்.
தொழில் வரி: 
அரையாண்டு வருமானம்  : 
 21 ,000   வரை                                      : இல்லை       
 21,001  முதல் 30,000 வரை      : ரூ. 94   
30,001 முதல்  45,000  வரை     : ரூ.238  
45,001  முதல் 60,000 வரை     : ரூ.469
60,001 முதல்  75,000 வரை     : ரூ.706
75,001 முதல்                                        :   ரூ. 938     

மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு - முதன்மை கல்வி அலுவலர் தகவல்
பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளது. அவர்கள் பற்றிய விபரங்களை ஜன.28க்குள் பதிய வேண்டுமென தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கூட்டம் தூத்துக்குடி விக்டோரியா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

தூத்துக்குடி கல்வி மாவட்ட அலுவலர் ரத் தினம், கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்டத்தில் உள்ள 80 அரசு பள்ளிகள், 135 தனியார் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கலந்து கொண் டனர்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயகண்ணு தலைமை வகித்து பேசுகையில், ‘அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை, குடிநீர் வசதி செய்திருக்க வேண்டும். வருகிற பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி அரசு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற தலைமை ஆசிரியர்கள் பாடுபட வேண் டும். மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப் பட உள்ளது. அவர்கள் பற் றிய விவரங் களை உடனடி யாக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இப்பணிகளை வரும் 28ம் தேதிக்குள் முடிக்க வேண் டும். பள்ளிகளில் குடியரசு தின விழா வை சிறந்த முறையில் நடத்த வேண்டும். இன்று (25ம் தேதி) தேசிய வாக் காளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதை பள்ளிகளில் பல்வேறு போட்டிகள் நடத்தி கொண் டாட வேண்டும்‘ என்றார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் குமார தாஸ், ஆபிரகாம், பள்ளி துணை ஆய்வாளர் சங்கரய்யா, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட அலுவலர் குமாரசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஒப்பந்த அடிப்படையில் 23 ஆண்டுகள் வேலை பார்த்த ஆசிரியருக்கு ஓய்வூதிய பலன்கள்: உயர்நீதிமன்றம் உத்தரவு

 ஒப்பந்த  அடிப்படையில் 23-ஆண்டு  பணியாற்றி  ஓய்வு  பெற்ற   தமிழாசிரியைக்கு ஓய்வூதிய பலன்களைத் தர உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு அருகே உள்ள குண்டூர்  தொடக்கப்பள்ளி  தமிழாசிரியை  லலிதா  1987ல் இடைநிலை பள்ளி ஆசிரியையாக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட இவர்  ஒவ்வொரு கல்வியாண்டு முடிவிலும்  பணியை புதுப்பிக்க வேண்டும் என்ற அடிப்படையில்   1991இல் வட மலை கிராம நடுநிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டார். 23 ஆண்டுகள் பணியாற்றிய அவரை பள்ளிக் கல்வித் துறை நிரந்தரம்  செய்யவில்லை.

2010 செப்டம்பர் 30ஆம் தேதி அவர் ஓய்வு பெற்றார். அவருக்கு ஊக்க ஊதியம், பிராவி டண்ட் பண்ட் , விடுமுறைக்கால சம்பளம்  உள்ளிட்ட  எந்த ஓய்வூதிய பலன்களும் தரப்படவில்லை.

அவர் பலமுறை தன்னை நிரந்தரம் செய்ய கோரி பள்ளிக் கல்வித் துறைக்கு மனு அனுப்பியும், பணியில் சேர்ந்த போது வயது வரம்பில்  9 மாதங்கள் அதிகம் இருந்ததால்  பணிநிரந்தரம் செய்ய முடியாது என்று பள்ளிக்கல்வித் துறை நிராகரித்தது.  இதையடுத்து  உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இதை நீதிபதி  அரிபரந்தாமன் விசாரித்து  அளித்த உத்தரவு  வருமாறு;  தமிழக பள்ளிக்கல்வித்துறை 1989-ல் பிறப்பித்த அரசாணையில்  இடைநிலை பள்ளி ஆசிரியர்களாக  நியமிக்கப்பட்ட பட்டதாரிகள், தமிழ்பண்டிட்டுகளின்  வயது வரம்பை தளர்த்தி  நிரந்தரம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மனுதாரர் 23 ஆண்டுகள் எந்த பலன்களையும் பெறாமல் ஓய்வு பெற்றிருப்பது கொடுமையானது. அவரது வயது வரம்பைத் தளர்த்தி நிரந்தரம் செய்திருக்க வேண்டும்.  பொதுவான காரணத்தைக் கூறி அவரது வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவந்தது சரியான நடை முறையல்ல.

இந்த நடவடிக்கை 1989இல் அரசு வெளியிட்ட அரசாணைக்கு முரணானது. எனவே, மனுதாரரை  நிரந்தரம் செய்ய முடியாது  என்ற  பள்ளிக்கல்வித்துறையின்  உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.  அவர் பணியில் சேர்ந்த நாளிலிருந்து  கணக்கிட்டு  அவரை நிரந்தரம் செய்து அவருக்குரிய  ஊக்க ஊதியம், விடுமுறை சம்பளம் பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் 2 மாதங்களில்  தரவேண்டும்.
- இவ்வாறு  கூறப்பட்டுள்ளது

முதுகலை பட்டதாரிகளுக்கு புள்ளியியல் துறையில் உதவி இயக்குநர் பணி

தமிழ்நாடு அரசு தேர்வணையம் மூலம் தமிழக புள்ளியில் துறையில் காலியாக உள்ள உதவி இயக்குநர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Director of Statics (Code: 2097)காலியிடங்கள்: 51சம்பளம்: ரூ.15,600 - 39,100வயதுவரம்பு: 18 முதல் 30 க்குள் இருத்தல் வேண்டும்.கல்வித்தகுதி: புள்ளியியல் பாடத்தில் முதுகலை படிப்பை முடித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் கணினி வழி(Computer Based) எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, மருத்துவ தகுதி அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்பவர். எழுத்துத் தேர்வு இரு தாள்களைக் கொண்டது.

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 24.02.2013தேர்வு கட்டணம்: 125விண்ணப்பக் கட்டணம்: 50கட்டணத்தை ஆன்லைன், நேரடியாக பண செலுத்தும் முறைகளில் கட்டணத்தை செலுத்தலாம்.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி: www.tnpsc.gov.inஆன்லைனில் விண்ணப்பிக்க கடைதி தேதி: 31.01.2013 இதுகுறித்து மேலும் முழு விவரங்கள் அறிய www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment