Monday, January 14, 2013

INDUCTION TRAINING FOR NEW TET BT ASST. ON 19.01.2013 AND 20.01.2013
Dept. of Treasuries and Accounts -Counselling for Junior Assistants-TNPSC Group IV Services

தொலைதூர கல்வி வழியாக பொறியியல் படிப்புக்கு அனுமதி.

         பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகளை தொலைதூர கல்வி முறையில் படிப்பதற்கு விரைவில் அனுமதி வழங்கப்பட உள்ளது.
 
       இப்படிப்புக்கு மாணவர்கள் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப் படிப்பு அல்லது பட்டயப் படிப்பு கல்லூரியில் பயின்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 5 வருட பணி அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே தொலைதூர கல்வி முறையில் பயில முடியும்.தொலைதூர கல்வி முறையில் பயிற்றுவிக்கப்பட்டாலும் பயிற்சிகளுக்குநேரடியாக வரவேண்டும். மேலும் இறுதியில் தேசிய தகுதித் தேர்வும் நடத்தப்படும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமத்தின் தலைவர் மண்தா தெரிவித்துள்ளார்.
 
குரூப்-4 ல் தேர்வான தட்டச்சகர்களுக்கு விரைவில் பணி ஆணை வழங்கப்படும் TNPSC அறிவிப்பு!

            குரூப்-4 ல் தட்டச்சர் பணிக்காக தேர்வாகி கலந்தாய்வு முடிவடைந்து ஓரு மாதம் ஆன நிலையில் இன்னமும் அவர்களுக்கு  பணி ஆணை வழங்கப்படவில்லை இது பற்றி TNPSC நேற்று விடுத்த அறிவிப்பு:
     தேர்வான  தட்டச்சகர்களுக்கு விரைவில் பணி ஆணை வழங்கப்படும்,காலிப்பணி இடம் பற்றிய மறு ஆய்வு நடைப்பெற்று வருவதால் விரைவில் அவர்கள் அணைவரும் பணியில் சேர ஆணை வழங்கப்படும் என TNPSC தலைவர் அறிவித்தார்.
 
பள்ளி, கல்லூரிகள் முன் போலீஸாரின் சுவரொட்டிகள்: மாணவியருக்கு அறிவுரை

பள்ளி செல்லும் மாணவியர் செய்ய வேண்டிய, செய்யக் கூடாதவை குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகளை போலீஸார் தென் கிழக்குத் தில்லியில் உள்ள கல்லூரிகள், பள்ளிகளின் முன்பாக ஒட்டியுள்ளனர்.தில்லியில் கடந்த மாதம்,
ஓடும் பஸ்ஸில் 23 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸார் இத்தகைய விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த சுவரொட்டிகளில் மாணவியருக்கு போலீஸார் தெரிவித்துள்ள அறிவுரை வாசகங்கள் விவரம்:

பள்ளி முடிந்ததும் நேரமாக வீட்டுக்குச் செல்லுங்கள், முன்பின் தெரியாத நபர்கள் பேச்சுக் கொடுத்தால் அதைத் தவிர்த்து விடுங்கள். உணவுப் பொருள்கள், குளிர்பானங்கள், பரிசுப் பொருள்கள் கொடுத்தால் அதை வாங்கக்கூடாது.முன்பின் தெரியாத நபர்களின் வாகனத்தில் ஏறிச் செல்ல வேண்டாம். வீட்டு முகவரி, தொலைபேசி எண்கள் எழுதப்பட்ட காகிதத்தைப் பையில் வைத்திருங்கள். வெளியே நண்பரின் இருப்பிடங்களுக்குச் செல்வதாக இருந்தால் பெற்றோரிடம் தகவல் தெரிவியுங்கள்.கேலி, கிண்டல் செய்யும் நபர்களாக இருந்தாலும், சந்தேகப்படும்படியான நபர்களாக இருந்தாலும் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தயக்கமின்றி தகவல் தெரிவியுங்கள்.ஆசிரியர் அனுமதி இல்லாமல் பள்ளி வளாகத்தை விட்டுச் செல்லாதீர்கள்'' என அந்த சுவரொட்டியில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment