Friday, November 28, 2014

Monday, November 3, 2014

Computer Instructor District Wise Seniority List:



தேசிய திறனாய்வு தேர்வு : 1.47 லட்சம் பேர் பங்கேற்பு:


பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு, இன்று, மாநிலம் முழுவதும், 350 மையங்களில் நடக்கிறது. 1.47 லட்சம் மாணவ, மாணவியர், தேர்வை எழுதுகின்றனர்.மத்திய அரசு, நாடு முழுவதும், 10ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு, போட்டித் தேர்வை நடத்தி, தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, பிளஸ் 1 முதல், பிஎச்.டி., வரை, கல்வி உதவித் தொகை வழங்குகிறது. இரண்டு கட்டங்களாக, தேர்வு நடத்தப்படுகிறது. முதல் கட்ட தேர்வு, இன்று நடக்கிறது. மத்திய அரசின் ஏஜன்சியாக, தமிழக அரசு தேர்வுத்துறை நடத்தும் இத்தேர்வில், 1 லட்சத்து 47 ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.
காலை, 9:30 மணி முதல், 11:00 மணி வரை, திறனறிதல் தேர்வும், 11:30 மணி முதல், பகல், 1:00 மணி வரை, படிப்புத் திறன் தேர்வும் நடக்கிறது. ஒவ்வொரு தேர்வும், தலா, 90 கேள்விகள், தலா, ஒரு மதிப்பெண் வீதம், 90 மதிப்பெண்களுக்கு, 'அப்ஜக்டிவ்' முறையில், கேள்வி - பதில்கள் தரப்பட்டு, சரியான விடையை தேர்வு செய்யும் முறையில், தேர்வு நடத்தப்படுகிறது.