Saturday, March 29, 2014

துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்:

இடைநிலை ஆசிரியர்கள்

1. 004 - Deputy Inspectors Test-First Paper
(Relating to Secondary and Special Schools) (without books)

2. 017 - Deputy Inspector’s Test--Second Paper
(Relating to Elementary Schools) (Without Books)

3. 119 - Deputy Inspector’s Test
Educational Statistics (With Books).

4 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).

5 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With Books).

பட்டதாரி ஆசிரியர்கள்

1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).

2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With Books).

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்

1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).

2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With Books).

மாவட்டக்கல்வி அலுவலர்

1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).

2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test

(Previously the District Office Manual--Two Parts) (With Books).

Monday, March 24, 2014

7 ஆவது ஊதிய குழுவிற்காக மத்திய நிதி அமைச்சகம் புதிய இணையதளம் ஒன்றை தொடங்கி உள்ளது


7 ஆவது ஊதிய குழுவிற்காக மத்திய நிதி அமைச்சகம் புதிய இணையதளம் ஒன்றை தொடங்கி உள்ளது

http://finmin.nic.in/7cpc/index.asp

Resolution on Terms of Reference of 7th CPC (2 MB)

http://finmin.nic.in/7cpc/7cpcGazetteNotification.pdf

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: காலை 8.15 மணிக்குள் மையத்துக்குள் செல்ல வேண்டும்

            பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (26) துவங்குகிறது;அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. முறைகேடுகளை தடுக்கபறக்கும் படை குழுககளும் அமைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில்கடந்த சில நாட்களாக ஏற்படும் மின்வெட்டால்தேர்வுக்கு தயாராக முடியாமல், மாணவ - மாணவியர் அவதிப்படுகின்றனர். பிளஸ் 2 பொதுத்தேர்வுஇன்றுடன் நிறைவடைகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (26)துவங்குகிறது. 
 
           26ம் தேதி மொழி முதல் தாள், 27ல் மொழி இரண்டாம் தாள்ஏப்., 1 ஆங்கிலம் முதல் தாள், 2ல் ஆங்கிலம் இரண்டாம் தாள், 4ல் கணிதம், 7ல் அறிவியல், 9ல் சமூக அறிவியல் தேர்வுடன் நிறைவடைகிறது..இம்முறை காலை 9.15 மணிக்கு தேர்வு துவங்குகிறது. வினாத்தாள் வாசிக்கவும்விடைத்தாளில் விவரம் பூர்த்தி செய்யவும் 15நிமிடம் தரப்படும். 9.30 முதல் 12.00 மணி வரைஇரண்டரை மணி நேரம் தேர்வு எழுத மாணவர்களுக்கு அவகாசம் அளிக்கப்படும். பிளஸ்2 தேர்வில்வழங்கியதுபோல்பத்தாம் வகுப்புக்கும் கூடுதலாக 30 பக்க விடைத்தாள் வழங்கப்படுகிறது. அதன் முகப்பில், "டாப்சிலிப்'தைக்கப்பட்டுள்ளது.தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள்,துறை அலுவலர்கள்ஆசிரியர்கள் என 1,600 ஆசிரியர்கள்பொதுத்தேர்வு பணியில் ஈடுபடுகின்றனர். முறைகேடுகளை தடுக்கமாவட்ட கல்வி அலுவலர் தலைமையில்,  பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில்குடிநீர்கழிப்பிடம்,காற்றோட்ட வசதி மற்றும் போதிய வெளிச்சம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தினர்.

            ஆசிரியர்கள்தேர்வு துவங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாககாலை 8.15 மணிக்குள் மையத்துக்குள் செல்ல வேண்டும் எனவும்கட்டுக்காப்பகங்களில் இருந்துவினாத்தாள்களை மையங்களுக்கு கொண்டு செல்லுதல்விடைத்தாள்களை திரும்ப எடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில்பிளஸ் 2பொதுத்தேர்வு விதிமுறைகளையே பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலர் கரோலின் கூறுகையில், ""பொதுத்தேர்வுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் ஜரூராக நடந்து வருகின்றன. "டாப் சிலிப்தைக்கப்பட்ட விடைத்தாள்கள்தேர்வு மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன,'' என்றார். மீண்டும் மின்வெட்டு மாணவர்கள் அதிர்ச்சி: சில நாட்களாகமுன்னறிவிப்பின்றி அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. சில தருணங்களில்தொடர்ச்சியாக மூன்று மணி நேரம் மின் சப்ளை இருப்பதில்லை. மின்தடையால்தேர்வுக்கு படிக்கும் மாணவமாணவியர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். குடியிருப்பு பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களில் ஜெனரேட்டர் பயன்படுத்துவதால்அதிக இரைச்சலில்மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். கொசுக்கடிபுழுக்கம் போன்ற பாதிப்புகளால்,இரவில் தூங்க முடியாமல் தவிக்கின்றனர்.மின் உற்பத்தி குறைவு,கோடை காலம் துவங்கியதால் மின்சாதனங்கள் பயன்பாடு அதிகரிப்பு என மின் தடைக்கு காரணங்கள் சொல்லப்படுகின்றன. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எதிர்கால நலன் கருதிதேர்வு முடியும்வரை மின்வெட்டு தொடராமல் தடுக்கதமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் என மாணவர்களும்பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
* பசுநெய், தயிர் கலந்து சாப்பிட்டு வந்தால் நரைமுடி கருமையாக மாறும்.
* விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டால் பித்தத்தைக் குறைக்கலாம்.
* சுக்கு, மிளகு, திப்பிலி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.
* உப்பு நீரை வாயில் வைத்து தொண்டை வரை படும்படி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி குணமாகும்.
* முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால், இருமல் உடனே நிற்கும்.
* கோதுமை கஞ்சியை மாதவிடாய் இருக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால், உடற்சோர்வு நீங்கி பலம்பெறும்.
* தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வர ஆண்மை பெருகும், தாது விருத்தியாகும்.
* பூண்டு, வெங்காயம் அதிகம் உணவில் சேர்த்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறையும்.
* கரும்பு தோகையை எரித்து சாம்பலாக்கி வெண்ணெயுடன் கலந்து உதட்டு வெடிப்புக்குப் போட்டால் உடனே குணமாகும்.
* அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து இரவில் முகத்தில் பூசி காலையில் குளித்து வர முகப்பருக்கள் ஒழியும்.
* குடல்புண் குணமாகவும், வயிற்றுப்புழுக்கள் அழியவும் அகத்திகீரை நல்ல உணவு.
* தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினசரி ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல் பலப்படும்.
* அத்திபழம் தினந்தோறும் 5 சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி சரியாகும்.
* முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால் இருமல் உடனே நிற்கும்.
உண்மையை உணருங்கள், மற்றவருக்கும்... பகிருங்கள்....

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்.


1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue.
2. ஆறுவது சினம் / 2. Control anger.
3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity.
4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy.
5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence.
6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise learning.

8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload.
9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great.
11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and learn.
12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy.
13. அகம் சுருக்கேல் / 13. Don't shortchange.
14. கண்டொன்று சொல்லேல் / 14. Don't flip-flop.
15. ஙப் போல் வளை / 15. Bend to befriend.
16. சனி நீராடு / 16. Shower regularly.
17. ஞயம்பட உரை / 17. Sweeten your speech.
18. இடம்பட வீடு எடேல் / 18. Judiciously space your home.
19. இணக்கம் அறிந்து இணங்கு / 19. Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண் / 20. Protect your parents.
21. நன்றி மறவேல் / 21. Don't forget gratitude.
22. பருவத்தே பயிர் செய் / 22. Husbandry has its season.
23. மண் பறித்து உண்ணேல் / 23. Don't land-grab.
24. இயல்பு அலாதன செய்யேல் / 24. Desist demeaning deeds.
25. அரவம் ஆட்டேல் / 25. Don't play with snakes.
26. இலவம் பஞ்சில் துயில் / 26. Cotton bed better for comfort.
27. வஞ்சகம் பேசேல் / 27. Don't sugar-coat words.
28. அழகு அலாதன செய்யேல் / 28. Detest the disorderly.
29. இளமையில் கல் / 29. Learn when young.
30. அரனை மறவேல் / 30. Cherish charity.
31. அனந்தல் ஆடேல் / 31. Over sleeping is obnoxious.
32. கடிவது மற / 32. Constant anger is corrosive.
33. காப்பது விரதம் / 33. Saving lives superior to fasting.
34. கிழமைப்பட வாழ் / 34. Make wealth beneficial.
35. கீழ்மை அகற்று / 35. Distance from the wicked.
36. குணமது கைவிடேல் / 36. Keep all that are useful.
37. கூடிப் பிரியேல் / 37. Don't forsake friends.
38. கெடுப்பது ஒழி / 38. Abandon animosity.
39. கேள்வி முயல் / 39. Learn from the learned.
40. கைவினை கரவேல் / 40. Don't hide knowledge.
41. கொள்ளை விரும்பேல் / 41. Don't swindle.
42. கோதாட்டு ஒழி / 42. Ban all illegal games.
43. கெளவை அகற்று / 43. Don't vilify.
44. சக்கர நெறி நில் / 44. Honor your Lands Constitution.
45. சான்றோர் இனத்து இரு / 45. Associate with the noble.
46. சித்திரம் பேசேல் / 46. Stop being paradoxical.
47. சீர்மை மறவேல் / 47. Remember to be righteous.
48. சுளிக்கச் சொல்லேல் / 48. Don't hurt others feelings.
49. சூது விரும்பேல் / 49. Don't gamble.
50. செய்வன திருந்தச் செய் / 50. Action with perfection.
51. சேரிடம் அறிந்து சேர் / 51. Seek out good friends.
52. சையெனத் திரியேல் / 52. Avoid being insulted.
53. சொற் சோர்வு படேல் / 53. Don't show fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் / 54. Don't be a lazybones.
55. தக்கோன் எனத் திரி / 55. Be trustworthy.
56. தானமது விரும்பு / 56. Be kind to the unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் / 57. Serve the protector.
58. தீவினை அகற்று / 58. Don't sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் / 59. Don't attract suffering.
60. தூக்கி வினை செய் / 60. Deliberate every action.
61. தெய்வம் இகழேல் / 61. Don't defame the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் / 62. Live in unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் / 63. Don't listen to the designing.
64. தொன்மை மறவேல் / 64. Don't forget your past glory.
65. தோற்பன தொடரேல் / 65. Don't compete if sure of defeat.
66. நன்மை கடைப்பிடி / 66. Adhere to the beneficial.
67. நாடு ஒப்பன செய் / 67. Do nationally agreeables.
68. நிலையில் பிரியேல் / 68. Don't depart from good standing.
69. நீர் விளையாடேல் / 69. Don't jump into a watery grave.
70. நுண்மை நுகரேல் / 70. Don't over snack.
71. நூல் பல கல் / 71. Read variety of materials.
72. நெற்பயிர் விளைவு செய் / 72. Grow your own staple.
73. நேர்பட ஒழுகு / 73. Exhibit good manners always.
74. நைவினை நணுகேல் / 74. Don't involve in destruction.
75. நொய்ய உரையேல் / 75. Don't dabble in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் / 76. Avoid unhealthy lifestyle.
77. பழிப்பன பகரேல் / 77. Speak no vulgarity.
78. பாம்பொடு பழகேல் / 78. Keep away from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் / 79. Watch out for self incrimination.
80. பீடு பெற நில் / 80. Follow path of honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / 81. Protect your benefactor.
82. பூமி திருத்தி உண் / 82. Cultivate the land and feed.
83. பெரியாரைத் துணைக் கொள் / 83. Seek help from the old and wise.
84. பேதைமை அகற்று / 84. Eradicate ignorance.
85. பையலோடு இணங்கேல் / 85. Don't comply with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ் / 86. Protect and enhance your wealth.
87. போர்த் தொழில் புரியேல் / 87. Don't encourage war.
88. மனம் தடுமாறேல் / 88. Don't vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் / 89. Don't accommodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல் / 90. Don't over dramatize.
91. மீதூண் விரும்பேல் / 91. Don't be a glutton.
92. முனைமுகத்து நில்லேல் / 92. Don't join an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல் / 93. Don't agree with the stubborn.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் / 94. Stick with your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள் / 95. Listen to men of quality.
96. மை விழியார் மனை அகல் / 96. Dissociate from the jealous.
97. மொழிவது அற மொழி / 97. Speak with clarity.
98. மோகத்தை முனி / 98. Hate any desire for lust.
99. வல்லமை பேசேல் / 99. Don't self praise.
100. வாது முற்கூறேல் / 100. Don't gossip or spread rumor.
101. வித்தை விரும்பு / 101. Long to learn.
102. வீடு பெற நில் / 102. Work for a peaceful life.
103. உத்தமனாய் இரு / 103. Lead exemplary life.
104. ஊருடன் கூடி வாழ் / 104. Live amicably.
105. வெட்டெனப் பேசேல் / 105. Don't be harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல் / 106. Don't premeditate harm.
107. வைகறைத் துயில் எழு / 107. Be an early-riser.
108. ஒன்னாரைத் தேறேல் / 108. Never join your enemy.
109. ஓரம் சொல்லேல் / 109. Be impartial in judgement.

Tuesday, March 18, 2014

10 சதவீத அகவிலைப்படியை உடனடியாக வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை
தேர்தல் கமிஷனிடம் அனுமதி பெற்று, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, 10 சதவீத அகவிலைப்படியை, உடனடியாக வழங்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழ்நாடு தொடக்ககல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு,வலியுறுத்தி உள்ளது.

இந்த அமைப்பின், மாநில பொதுக்குழு கூட்டம், சென்னையில், நேற்று நடந்தது. இதில், ஆறு ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், 'மத்திய அரசு, ஜன., 1 முதல், 10 சதவீத அகவிலைப்படி அறிவித்து உள்ளது. ஆனால், தமிழக அரசு, இன்னும், 10 சதவீத அகவிலைப்படியை வழங்கவில்லை. தமிழக முதல்வர், தேர்தல் கமிஷனிடம் அனுமதி பெற்று, 10 சதவீத அகவிலைப்படியை, உடனடியாக வழங்க வேண்டும்' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பத்தாம் வகுப்பு பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி தொடங்கியது
தமிழகத்தில் பொதுக் கல்வி வாரியம் கடந்த 2009ஆம் ஆண்டு கொண்டு வரப் பட்டது. இதைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் சமச்சீர் கல்வி முறை நடை முறைக்கு வந்துள்ளது. பின் னர் 2011இல் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு தொடக்க நடு நிலைப் பள்ளிகளில் முப் பருவ முறையை அறிமுகம் செய்தது. இந்த ஆண்டு 9ஆம் வகுப்புக்கு முப்பருவ முறை நடைமுறைக்கு வந்தது.

அரசு ஏற்கெனவே அறி வித்தபடி வரும் கல்வி ஆண்டில் 10ஆம் வகுப்புக் கும் முப்பருவ முறை நடை முறைக்கு வர வேண்டும். அதை எதிர்பார்த்து பாட நூல் தயாரிக்கும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பத்தாம் வகுப்புக்கான புதிய பாடப் புத்தகத்தை கடந்த மாதம் வடி வமைத்தது. 5 பாடங்களும் ஒன்றாக இணைத்து 2 புத்தகங்களாக அச்சிடும் வகையில் வடிவ மைக்கப்பட்டு அரசிடம் ஒப் படைக்கப்பட்டது.
ஆனால் பத்தாம் வகுப் புக்கு முப்பருவ முறை வரு மா என்பது குறித்து இன்னும் அரசு முடிவு எடுக்காத நிலையில், பழைய பத்தாம் வகுப்பு புத்தகங்களையே அச்சிட அரசு தெரிவித்துள் ளது. அதனால் வரும் கல்வி ஆண்டில் பழைய படியே பத்தாம் வகுப்பு புத்தகங்கள் அச்சிடும் பணியை தமிழ் நாடு பாடநூல் கழகம் தொ டங்கியுள்ளது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவி யருக்கு இலவச பாடப் புத்தகங்கள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருவதால், அடுத்த கல்வி ஆண்டுக்கான கால அவ காசம் 2 மாதங்கள் தான் உள்ளன.
அதற்குள் பாடப்புத்தகம் அச்சிட வேண்டும் என்பதால் முதற்கட்டமாக 36 லட்சம் இலவசப் பாடப்புத்தகங் களை அச்சிடும் பணியில் தமிழ்நாடு பாடநூல் கழகம் ஈடுபட்டுள்ளது. சில்லறை விற்பனைக் கான புத்தகங்கள் பிறகு அச்சிடப்பட உள்ளன.
PGTRB NEWS - முதுகலை ஆசிரியர் தமிழ் ஆசிரியர் பணி நியமனம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

முதுகலை பட்டம் பெற்றபின்னர் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றார் என்ற காரணத்துக்காக, முதுகலை ஆசிரியர் தமிழ் பாடத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின் பணிநியமனம் மறுக்கப்பட்ட கனிமொழி எனும் தேர்வருக்கு உரிய கட் ஆப்மதிப்பெண் பெற்றிருப்பின் 4 வார காலத்திற்குள் பணிநியமனம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதியரசர் எஸ்.நாகமுத்து பிறப்பித்துள்ள தீர்ப்பில்: the writ petition is allowed and the impugned order of the second respondent rejecting the candidature of the petitioner is hereby set aside and the second respondent is directed to consider the petitioner for appointment as Post Graduate Assistant Teacher inTamil based on her marks secured after certificate verification, at any rate, final orders shall be passed bythe second respondent in this matter within a period of four weeks from the date of receipt of a copy of this orderஎன உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொடக்கக் கல்வி - ஆசிரியர் வருங்கால வைப்பு - ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்களுக்கு கணக்குத்தாள் வழங்குதல் சார்பாக தணிக்கை விரைவாக மேற்கொள்ள உத்தரவு

டிட்டோஜாக் - அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஜுன் மாத முதல் வாரத்தில் கூடி முடிவெடுக்கலாம் என முடிவு

இன்று 18.03.2014 சென்னையில் உள்ள ஆசிரியர் மன்ற கட்டிடத்தில் டிட்டோஜாக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து சங்கத்தை சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால், அடுத்தகட்ட முடிவுகள் குறித்து ஜுன் மாத முதல் வாரத்தில் கூடி முடிவெடுக்கலாம் என முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
மேலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 10% அகவிலைப்படியை, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று உடனடியாக வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது.

 அதேபோல் பிப்ரவரி 6ம் தேதி போராட்டத்தில் பங்குபெற்று போராட்டத்தை வெற்றி பெற செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
தகவல் : தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
MOBILE NETWORK ACCOUNT DETAILS

Friday, March 14, 2014இன்று ஆல்பர்ட் எய்ன்ஸ்டன் பிற ந்த தினம் அவர் வாழ்விலிருந்து கற்க வேண்டியவை


அ.தே.இ - எஸ்.எஸ்.எல்.சி மார்ச் 2014 - "சிறப்பு அனுமதித் திட்டத்தின்' கீழ் ஆன்-லைனில் 14.3.14 மற்றும் 15.3.14 ஆகிய இரு நாட்கள் சிறப்பு மையங்கள் மூலமாக விண்ணப்பித்தல் - புதிய சிறப்பு மையங்கள் (NODAL POINTS) அறிவிப்பு

DGE - SSLC - TAKKAL SCHEME - NODAL POINT LIST RELEASED - LIST OF NODAL POINTS CLICK HERE...

கண்டுபிடிக்கப்படாத மலேசிய விமானம் - நடந்தது, நடப்பது என்ன? முழு விபரங்கள்!

கடந்த சனிக்கிழமை (8ஆம் தேதி) அதிகாலை 12.40 மணிக்கு மலேசியன் ஏர்லைன்ஸைச் சேர்ந்த போயிங் 777-200 விமானம் MH370 கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்குக்கு புறப்பட்டது. ஆனால், 1.30 மணி அளவில் தெற்கு சீன கடல் பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது எவ்வித அபாய சமிக்ஞைகளையும் அனுப்பாமல் ரேடார்களில் இருந்து மாயமானது. விமானிகள் எந்தவித அபாய சமிக்ஞைகளையும் அனுப்பவில்லை.

ரேடாரில் இருந்து மாயமாவதற்கு சில நொடிகளுக்கு முன் விமானம் தனது பாதையில் இருந்து கோலாலம்பூருக்குத் திரும்பியிருக்கிறது. ஆனால், விமானிகள் விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு எந்தவிதத் தகவல்களையும் தெரிவிக்கவில்லை. இது ஏன் என்பது இன்னும் மர்மமாக உள்ளது. கடைசியாக மலேசிய விமானம் MH370 சிவில் ரேடாரில் இருந்து மாயமான போது இருந்த இடம் இதுதான் - 065515 வடக்கு (நில நிரைக்கோடு) and 1033443 கிழக்கு ( நில நேர்க்கோடு ).

நடப்பது என்ன? 

விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதா? நடுவானிலேயே வெடித்துச் சிதறியதா? கடலில் விழுந்ததா? தொழில்நுட்பக் கோளாறா?

இந்தக் கேள்விகளுக்கு இதுவரை விடை கண்டுபிடிக்கப்படவில்லை. தீவிரமாக கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலமாகத் தேடப்பட்டாலும் விமானத்தின் எந்த ஒரு சிறு பாகம் கூட இப்போது வரை கடலிலோ, தரையிலோ கண்டெடுக்கப்படவில்லை.

விமானம் ரேடாரில் இருந்து மறைவதற்கு சில நொடிகளுக்கு முன்னர் பாதையில் இருந்து மாறி சென்றிருப்பதால் தேடும் இடத்தின் பரப்பளவு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கும், மலேசியாவுக்கும் நடுவில் உள்ள மலாக்கா ஜலசந்தியின் வடக்குப் பகுதியில் தேடப்படுகிறது. இந்த இடம் விமானம் கடைசியாகப் பறந்த இடத்தைவிட மேற்கில் உள்ளது. ஏன் சம்பந்தம் இல்லாமல் இங்கு தேடுகிறீர்கள்? என்று மலேசிய சிவில் ஏவியேஷன் துறைத் தலைவர் அசாரூதீன் அப்துல் ரகுமானிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, "சில விஷயங்களை மட்டுமே உங்களிடம் சொல்ல முடியும். சில விஷயங்களை என்னால் உங்களிடம் சொல்ல இயலாது" என்றார்.

அப்டேட்: மலேசியாவைச் சேர்ந்த பெரிதா ஹரியன் நாளிதழுக்கு விமானப் படைத்தளபதி ராட்சலி தவுத் அளித்த பேட்டியில், மிலிட்டரியின் ரேடாரில் நள்ளிரவு 2.40 மணிக்கு MH370 விமானம் மலாக்கா ஜலசந்தியின் வடபகுதியில் இருக்கும் புலாவ் பெராக் தீவின் அருகே கடைசியாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார். சிவிலியன் ரேடாரில் இறுதியாக பதிவான இடத்துக்கும் மிலிட்டரி ரேடாரில் பதிவான இந்த இடத்துக்கும் கிட்டத்தட்ட 300 கி.மீ. வித்தியாசம் . மலேசியாவின் கோட்டா பாரு பகுதியைத் தாண்டியதும் வழிமாறிய விமானம், அதன்பின் தாழ்வாகப் பறந்து மலாக்கா ஜலசந்தியை நோக்கித் திரும்பியது தற்போது உறுதியாகியுள்ளது. ஆனால்,இந்த தகவலை நாங்கள் வெளியிடவில்லை என மலேசிய அதிகாரிகள் இன்று மறுத்துள்ளனர்.
இந்நிலையில், மலேசிய விமானத்தை தேடும் பணி அந்தமான் வரை விரிவு படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்காக இந்தியா உதவ வேண்டும் எனவும் மலேசிய அதிகாரிகள் இந்தியாவை கேட்டுக்கொண்டுள்ளது.

மலேசியன் ஏர்லைன்ஸ் MH370 விமானத்தில் இருந்த பயணிகள் பற்றிய தகவல்: 

1. சீனா/தாய்வான் - 152 + 1 குழந்தை
2. மலேசியா - 38
3. இந்தோனேசியா - 7
4. ஆஸ்திரேலியா - 6
5. இந்தியா - 5
6. அமெரிக்கா - 3 + 1 குழந்தை
7. ஃப்ரான்ஸ் - 4
8. கனடா - 2
9. நியூசிலாந்து - 2
10. உக்ரைன் - 2
11. இத்தாலி - 1
12. நெதர்லாந்து - 1
13. ஆஸ்திரியா - 1
14. ரஷ்யா - 1
தேடுதல் பணியில் ஈடுபட்டிருக்கும் நாடுகள்:

இப்போதைய நிலவரப்படி 10 நாடுகள் தெற்கு சீன கடல் பகுதியில் (South China Sea) விமானத்தைத் தேடி வருகின்றன. மலேசியா இந்தத் தேடுதல் பணியை முன்னின்று நடத்துகிறது. சீனா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, வியட்நாம், சிங்கப்பூர், ஃபிலிப்பைன்ஸ், நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மலேசியாவுடன் இணைந்து தேடுகின்றன.

மலேசியா - 14 கடற்படைக் கப்பல்கள் + 13 கோஸ்ட் கார்டு படகுகள் + 16 விமானங்கள்
வியட்நாம் - 8 கப்பல்கள் + 7 விமானங்கள்
சிங்கப்பூர் - 2 போர்க்கப்பல்கள் + 1 நீர்மூழ்கி உதவிக் கப்பல் + 1 சிகோர்ஸ்கி கடற்படை ஹெலிகாப்டர் + 1 C-130 விமானம்
ஆஸ்திரேலியா - 2 P-3C விமானங்கள் + 2 விமானப்படை கண்காணிப்பு விமானங்கள்
தாய்லாந்து - சூப்பர் லினக்ஸ் கடற்படைக் கப்பல் + 1 ரோந்துக் கப்பல்
ஃபிலிப்பைன்ஸ் - 1 ஃபோக்கர் F-27 விமானம் + 1 ஐலாண்டர் விமானம் + 2 ரோந்துக் கப்பல்கள்
இந்தோனேசியா - 4 அதிவிரைவு ரோந்துக் கப்பல்கள் + 1 கடல்பகுதி ரோந்து விமானம்
சீனா - 9 போர்க்கப்பல் + 1 பீரங்கிக் கப்பல் + 1 லேண்டிங் கிராஃப்ட் கப்பல் + 1 டெஸ்ட்ராயர் வகை போர்க்கப்பல் + 1 கமாண்டோ கேரியர் வகை கப்பல் + 50 கடற்படை வீரர்கள்
அமெரிக்கா -  தெற்கு சீன கடல் பகுதியில் ஏற்கனவே பயிற்சியில் இருந்த 2 டெஸ்ட்ராயர் வகை போர்க்கப்பல்கள் + 2 MH60 சீஹாக் ஹெலிகாப்டர்கள்

மேலும், அமெரிக்காவில் இருந்து NTSB (National Transportation Security Board) வல்லுனர்களும், போயிங் விமான நிறுவனத்தின் வல்லுனர்களும், FAA (Federal Aviation Administration) நிபுணர்களும் கோலாலம்பூருக்கு விரைந்திருக்கின்றனர். சீனா தன்னிடம் இருக்கும் 10 ஹை-ரெசல்யூஷன் சேட்டிலைட்டுகளை இந்த தேடுதல் பணிக்காக திருப்பிவிட்டிருக்கிறது,
தேடுதல் பணி - எண்ணெய் படலமும், கடல் கேபிளும்!

தேடுதல் பணியின்போது கடலில் எண்ணெய்ப் படலங்கள் மிதந்துகொண்டிருந்ததைப் பார்த்த தேடுதல் குழுவினர், அதை ஆராய்ச்சி செய்ததில் அது விமானத்தின் எரிபொருள் அல்ல என்று தெரிவித்துள்ளனர். வியட்நாம் விமானப் படையினர் தேடும்போது விமானத்தின் கதவு போன்ற ஒரு பாகம் கடலில் மிதப்பதைப் பார்த்திருந்திருக்கின்றனர், ஆனால், அது கடலில் செல்லும் கேபிளின் கேப் என்று தெரியவந்துள்ளதாக மலேசிய சிவில் ஏவியேஷன் துறையின் இயக்குனர் அசாரூதீன் அப்துல் ரகுமான் கூறியுள்ளார். எனவே, இப்போதைய நிலவரப்படி விமானத்தின் ஒரு பாகம்கூட கிடைக்கவில்லை என்பதே உண்மை.

மாயமான விமானத்தின் பைலட்டுக்கு ஆதரவு குவிகிறது!

மாயமான மலேசிய விமானத்தின் கேப்டன் பைலட்டின் பெயர் ஜஹாரி அஹமத் ஷாஹ். 33 வருடங்களாக பைலட்டாக இருக்கும் இவருக்கு 53 வயது ஆகிறது. மொத்தம் 18,365 மணி நேரங்கள் விமானம் ஓட்டிய அனுபவம் கொண்டவர். விமானம் ஓட்டுவதை தொழிலாகப் பார்க்காமல் விருப்பத்தின் பெயரால் செய்தவராம். தற்போது தான் இயக்கிய போயிங் 777 விமானத்தின் மீது பெரும் ஆர்வம் கொண்ட இவர், வீட்டில் அதே விமானத்தின் சிமுலேட்டரை அமைத்து, அதில் பயிற்சி பெற்று வந்தார் என்கின்றனர் அவருடன் வேலை பார்த்தவர்கள்.

சிமுலேட்டர் பயிற்சி பெறும் மற்ற விமானிகளுக்கு பரீட்சை வைக்க, மலேசிய சிவில் ஏவியேஷன் துறையினால் ஜஹாரி அஹமத் ஷாஹ் அங்கீகரிக்கப்பட்டவர்  என மலேசியன் ஏர்லைன்ஸில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

33 வருடங்களாக மலேசியன் ஏர்லைன்ஸில் பணியாற்றும் இவர் ஃபோக்கர் F50, ஏர்பஸ் A300 மற்றும் போயிங் 737 போன்ற பலதரப்பட்ட விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர்.

மலேசிய விமானம் மாயமானதற்கு விமானிகளின் தவறு காரணமாக இருக்கவே வாய்ப்பில்லை என்று விமானிகளிடம் தொடர்பில் இருந்தவர்கள் கூறுகின்றனர்.

தீவிரவாதிகளின் சதியா? 

தீவிரவாதிகள் இந்த விமானத்தைக் கடத்தியிருக்கவோ அல்லது மூழ்கடித்திருக்கவோ கூடும் என்ற கோணத்திலும் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. விமானத்தில் பயணம் செய்த இரண்டு பேர் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்தது ஏற்கனவே தெரிந்த விஷயம்தான். இதில் ஒரு பாஸ்போர்ட் இத்தாலியையும், இன்னொரு பாஸ்போர்ட் ஆஸ்திரியாவைச் சேர்ந்தவர்களுடையது ஆகும். இந்த பாஸ்போர்ட்டுகளில் பயணித்தவர்களுடைய விமான டிக்கெட், வியாழக்கிழமை தாய்லாந்தில் வாங்கப்பட்டிருக்கிறது. இதில் ஒரு டிக்கெட் பீஜிங் வழியாக ஜெர்மனியில் உள்ள ஃப்ராங்ஃபர்ட்-க்கும், இன்னொரு டிக்கெட் டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகனுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு பாஸ்போர்ட்டுகளுடைய உண்மையான உரிமையாளர்கள் விமானத்தில் பயணிக்கவில்லை. இத்தாலியைச் சேர்ந்தவருடைய பாஸ்போர்ட் 2012ஆம் ஆண்டிலும், ஆஸ்திரியாவைச் சேர்ந்தவருடைய பாஸ்போர்ட் 2013ஆம் ஆண்டிலும் தாய்லாந்தில் திருடப்பட்டுள்ளது. இந்த இருபாஸ்போர்ட்டுகளுமே இன்டர்போலின் டேட்டாபேஸில் இருக்கிறது. எப்படி போலி பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் ஒரு பன்னாட்டு விமானத்தில் ஏறமுடிந்தது என இன்டர்போல் கேள்வி எழுப்பியுள்ளது.
திருடப்பட்டுள்ள பாஸ்போர்ட்டில் பயணித்த ஒருவர் ஈரானைச் சேர்ந்த Pouria Nour Mohammad Mehrdad என்ற 19 வயது வாலிபர். இவருடைய தாயார் ஃப்ராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் மகனுக்காக காத்திருந்திருக்கிறார். அவரிடம் விசாரித்ததை வைத்து இந்த ஈரானியர் எந்த தீவிரவாதக் குழுவையும் சேர்ந்தவர் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், புகலிடம் தேடித்தான் அவர் ஃப்ராங்க்ஃபர்ட்டுக்கு போலி பாஸ்போர்ட் மூலம் பயணித்தார் என்று சொல்லப்படுகிறது. இன்னொரு போலி பாஸ்போர்ட்டின் உண்மையான உரிமையாளர் Christian Kozel என்ற ஆஸ்திரியர் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டார். எனவே போலி பாஸ்போர்ட்டில் பயணித்த இருவரும் புகலிடம் தேடியே ஐரோப்பாவுக்கு பயணித்தது உறுதியாகியுள்ளது.

மேலும், தீவிரவாதச் செயலுக்கான எந்தவிதமான தடயங்களும், ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை!

போயிங் 777-200 - உலகின் மிக பாதுகாப்பான விமானங்களுள் ஒன்றா?!

காணாமல் போன MH370 போயிங் 777-200 விமானத்தில் கடைசியாக ஃபிப்ரவரி 23ஆம் தேதி வழக்கமான பராமரிப்புப் பணிகள் செய்யப்பட்டிருக்கிறது. அப்போது விமானத்தில் எந்தவித கோளாறும் காணப்படவில்லை என்று மலேசியன் ஏர்லைன்ஸ் க்ரூப்பின் சி.இ.ஓ அஹமத் ஜௌஹரி யாயா தெரிவித்துள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு மலேசியன் ஏர்லைன்ஸ் இந்த விமானத்தை வாங்கியுள்ளதாகவும், இதுவரை 53,465.21 மணி நேரங்கள் பறந்திருக்கிறதாகவும் அவர் கூறியுள்ளார்.

போயிங் 777-200 விமானம் சர்வதேச அளவில் மிகவும் பாதுகாப்பான விமானம் என தகவல்கள் கூறுகின்றன. கடைசியாக 2013ஆம் வருடம் சான் ஃப்ரான்சிஸ்கோவில் ஏசியானா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று ஓடுதளத்தின் அருகே விபத்துக்குள்ளாகி 3 பேர் இறந்தது மட்டுமே இதுவரை போயிங் 777 ரக விமானத்தில் ஏற்பட்ட பெரிய விபத்து ஆகும்!

தாழ்வாகப் பறந்த விமானத்தைப் பார்த்தாகச் சொல்லும் இருவர்!


இந்நிலையில், மலேசியாவைச் சேர்ந்த இருவர் வழக்கத்தைவிட வேறு ஒரு வழியில், வானத்தில் தாழ்வாகப் பறந்த விமானம் ஒன்றைப் பார்த்ததாகக் கூறியுள்ளனர்.

மலேசியாவின் கெடெரே (Ketereh) பகுதில் வசிக்கும் அலிஃப் ஃபாதி அப்துல் ஹதி என்ற ஒருவர் நள்ளிரவு 1.45 மணி அளவில்  தன் வீட்டில் இருந்து விமானங்கள் மேலே எழும்பும்போதும், தரையிறங்கும்போதும் ஒளிரவிட்டு இருக்கும் பளீரென்ற வெளிச்சம் ஒன்றைப் பார்த்ததாகத் தெரிவித்துள்ளார். அந்த வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக உயரம் குறைந்து வந்ததாகவும், வழக்கத்தைவிட மாறுவழியில் 'பச்சோக்' என்ற கடலை ஒட்டிய பகுதியை நோக்கி அந்த வெளிச்சம் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது எதுவும் தோன்றவில்லை எனவும், மாயமான விமானத்தைப் பற்றி கேள்விப்பட்டவுடன், போலீசிடம் இதைப் பற்றிக் கூற முடிவெடுத்ததாகவும் கூறியிருக்கிறார்.

இவர் இருக்கும் பகுதியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் இருக்கும் குயாலா பேசுட் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஆசித் இப்ராகிம் என்ற 55 வயது மீனவர் ஒருவரும் இரவு 1.30 மணி அளவில் ஒரு தாழ்வாகப் பறந்த விமானத்தைப் பார்த்தாராம்.  வழக்கமாக விமான விளக்குகளின் வெளிச்சம் தொலைவில் உள்ள நட்சத்திரத்தைப் போலத்தான் இருக்கும். ஆனால், தான் பார்த்த வெளிச்சம் பளீரென்று இருந்ததாகவும், மேகங்களுக்குக் கீழ் தாழ்வாகப் பறந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இவர்கள் சொல்வது MH370 விமானத்தைத்தானா என்பது விரைவில் தெரிந்துவிடும்!

விலகாத மர்மங்கள் - பதில் இல்லாத கேள்விகள்!

1. விமானத்தில் பயணித்த சில பயணிகளின் செல்ஃபோன் நேற்று வரை தொடர்ந்து ஒலித்தது குழப்பத்தை மேலும் அதிகரித்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஒரு பயணியின் QQ அக்கவுன்ட் (சீன சோஷியல் நெட்வொர்க்கிங் வலைதளம் ) திங்கள்கிழமை மதியம் வரை 'ஆக்டிவ்'-ல் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. விமானத்தில் இருந்த 19 சீனப் பயணிகளின் குடும்பங்கள் தாங்கள் விமானத்தில் பயணித்தவர்களுக்கு அலைபேசியில் அழைத்ததாகவும், ரிங்-டோன் வந்தாலும், அழைப்பை யாரும் ஏற்கவில்லை எனவும் எழுதிக்கொடுத்திருக்கின்றனர்.

ஆனால், பீஜிங்கில் இருக்கும் மலேசியன் ஏர்லைன்ஸின் பிரதிநிதி இக்னேஷியஸ் ஆங், தான் ஒரு பயணியின் தொலைபேசிக்கு ஐந்து முறை அழைத்தாகவும், ரிங்-டோன் கேட்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

2. மலேசியாவின் கோட்டா பாரு பகுதியைத் தாண்டியதும் ஏன் விமானம் வழிமாறிச் சென்றது?

3. விமானத்தில் கோளாறு என்றால் ஏன் விமானிகள் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிக்கவில்லை?

4. விமானம் பாதை மாறியதை ஏன் மலேசியன் ஏர்லைன்ஸுக்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் விமானிகள்  தெரிவிக்கவில்லை?

5. ஏன் விமானத்தில் இருந்து வரவேண்டிய அபாய சமிக்ஞை (Distress Signal) இதுவரை கிடைக்கவில்லை?

6. கடலிலோ/தரையிலோ விழுந்திருந்தால் விமானத்தின் பிளாக்பாக்ஸ் தொடர்ந்து அனுப்பும் சமிக்ஞைகள் இதுவரை பெறப்படவில்லை.

7. எப்படி சில பயணிகளின் அலைபேசி திங்கள்கிழமை மதியம் வரை இயக்கத்தில் இருந்தது? அதன்பின் எப்படி இயக்கம் நின்றது?
என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

இதற்குமுன் இதேபோன்ற ஒரு சம்பவம் உலக வரலாற்றில் நடந்துள்ளது. 2009ஆம் வருடம் ஜூன் மாதம் ஏர் ஃப்ரான்ஸ் விமானம் (எண்:447) ஒன்று ரியோ டி ஜெனிரோவில் இருந்து பாரிஸுக்குச் சென்றது. ஏர்பஸ் A300 ரக விமானமான இது கடலின் மேல் ரேடார்களின் கண்காணிப்புப் பகுதிக்கு அப்பால் பறக்கும்போது காணாமல்போனது. 6 மணிநேரங்களுக்குப் பிறகுதான் ஃப்ரான்ஸ் நாடால் இதை ஏற்றுக்கொள்ளவே முடிந்தது. ஏர்பஸ் A300 ரக விமானமும் பாதுகாப்பான விமானம்தான். இந்த விமானமும் அபாய சமிக்ஞை (Distress Signal) அனுப்பவில்லை. 17,000 சதுர கி.மீ. பரப்பளவில் இந்த விமானத்திற்காக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த விமானத்தின் பாகங்கள் ஐந்து நாள்கள் கழித்து  பிரேசிலுக்கும் ஆஃப்ரிக்காவுக்கும் நடுவில் இருக்கும் அட்லாண்டிக் கடலில் இருந்து எடுக்கப்பட்டது.  ஆனால், இந்த விமானத்தின் பிளாக்பாக்ஸும், காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டரும் 2 வருடங்கள் கழித்து கடலுக்கு அடியில் அதிக ஆழத்தில் இருந்து எடுக்கப்பட்டது. மொத்தம் 3 வருடங்கள் கழித்துதான் அந்த விமானம் கடலில் விழுந்ததற்கான மர்மம் விலகியது!

மலேசியன் ஏர்லைன்ஸ்  MH370 விமானத்தின் பிளாக்பாக்ஸும், காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டரும் கிடைக்கும் வரை இந்த கேள்விகளுக்கு விடை தெரிய வாய்ப்பில்லை!

-ர. ராஜா ராமமூர்த்தி