Thursday, June 15, 2017

பள்ளிக்கல்வித்துறை அறிவுப்புகள்.

பள்ளிகள்
1) 30 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும்
2) புதுமைகளை புகுத்தி சிறப்பாகச் செயல்படும் அரசு பள்ளிகளை கண்டறிந்து மாவட்டத்திற்கு 4 பள்ளிகள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு “புதுமைப் பள்ளி” விருது ரூ.1.92 கோடி செலவில் வழங்கப்படும்
3) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் அட்டைகள் ரூ.31.82 கோடி செலவில் வழங்கப்படும்.
4) 486 அரசு நடுநிலைப் பள்ளிகளில் ரூ 6.71 கோடி செலவில் கணினி வழிக் கற்றல் மையங்கள் அமைக்கப்படும்.
5) 5639 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் எரியூட்டி இயந்திரம்  ரூ. 22.56 கோடி செலவில் வழங்கப்படும்.
6) 31322 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ. 4.83 கோடி செலவில் நாளிதழ்கள் மற்றும் சிறுவர் இதழ்கள் வழங்கப்படும்.
ஆசிரியர் நலன்
7) 4084 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
8) கனவு ஆசிரியர் விருது. மாவட்டத்திற்கு 6 சிறந்த ஆசிரியர்களுக்கு ரூ10000 பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ்.
9) தொடர் நீட்டிப்பு கோரப்படும் 17000 தற்காலிக பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றம்.
10) சுயநிதிப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் பணியிடை பயிற்சி
மாணவர் நலன்
11) அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.39.25 கோடி செலவில் கற்றல் துணைக்கருவிகள் வழங்கப்படும்.
12) திறனறித் தேர்வுகளில் கலந்து கொள்ளும்  மாணவர்களுக்கு ரூ. 2.93 கோடி செலவில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்
13) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தனித்திறமையோடு விளங்கும் 100 மாணவர்களுக்கு ஆண்டு தோறும் ரூ.3 கோடி செலவில் மேலை நாடுகளுக்கு கல்வி பயணம் மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும்
14) கலை, இலக்கியம் நுண்கலை உள்ளிட்ட 150 வகைப் பிரிவுகளில் பள்ளி, ஒன்றியம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் ஒரு மாபெரும் மாணவர் கலைத்திருவிழா ரூ. 4 கோடி செலவில் நடத்தப்படும்.
15) பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் அவர்களது மேற்படிப்பைத் தொடர்வதற்கு உதவிடும் வகையில்  கல்விக்கடன்  முகாம்கள் நடத்தப்படும்
16) ஒன்றிய அளவில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் ரூ.20 கோடி செலவில் அமைக்கப்படும்
17) மேற்படிப்பு / வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளுக்கு வழிகாட்டி மையங்கள் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் ஏற்படுத்தப்படும். மேலும் கருத்தரங்குகள் ரூ. 2 கோடி செலவில் நடத்தப்படும்
மின் ஆளுமை
18) காணொளி பாடங்கள், கணினி வழித் தேர்வுகள், அலைபேசிச் செயலிகள் உள்ளடக்கிய கற்றல் மேலாண்மைத் தளம் ரூ.2 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.
19) அரசுத்தேர்வுகள் இயக்கக செயல்பாடுகள் ரூ.2 கோடி செலவில் கணினி மயமாக்கப்படும்
20)மெட்ரிகுலேசன் பள்ளிகள் தொடங்க அனுமதி/ அங்கீகாரம்/ தொடர் அங்கீகாரம் வழங்க இணையவழியில் நடவடிக்கை எடுக்கப்படும்.
நூலகம்
21) ரூ.25 கோடி செலவில் பொது நூலகங்களுக்கு புதிய நூல்களும் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு ரூ.5 கோடி செலவில் புதிய நூல்கள் வாங்கப்படும்
22) அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் ரூ.3.கோடி செலவில் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும்
23)தமிழ்ச் சங்கம் கண்ட மதுரையில் ரூ.6 கோடி செலவில் மாபெரும் நூலகம் அமைக்கப்படும்
24) தனித்தன்மை வாய்ந்த எட்டு சிறப்பு நூலகங்கள் மற்றும் காட்சிக் கூடங்கள் ரூ.8 கோடி செலவில் அமைக்கப்படும்
சிந்து சமவெளி நாகரிகம் உள்ளிட்ட பழம்பெரும் நாகரிகங்கள் – கீழடி, சிவகங்கை மாவட்டம்
தமிழிசை, நடனம் மற்றும் நுண்கலைகள் – தஞ்சாவூர்
நாட்டுப்புறக் கலைகள் -  மதுரை
தமிழ் மருத்துவம் - திருநெல்வேலி
பழங்குடியினர் பண்பாடு - நீலகிரி
கணிதம், அறிவியல் - திருச்சி
வானியல், புதுமைக் கண்டுபிடிப்புகள் - கோயம்புத்தூர்
அச்சுக்கலை – சென்னை
25) மாவட்ட மைய நூலகங்களில் போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் ரூ.72 இலட்சம் செலவில் அமைக்கப்படும்
26) 123 முழுநேர கிளை நூலகங்களில் மின்னிதழ் வசதிகளுடன் கூடிய கணினி வசதி ரூ. 1.84 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்
27) ரூ. 2. கோடி செலவில் நவீன மின் நூலகம் அமைக்கப்படும்
28) அரிய வகை நூல்கள் மற்றும் ஆவணங்களை பொதுமக்களிடமிருந்து கொடையாக பெறும்  திட்டம் தொடங்கப்படும்
29) அரிய வகை நூல்களைப் பாதுகாத்து வரும் தனியார் அமைப்புகள் நடத்தி வரும் நூலகங்களுக்கு பராமரிப்பு நிதி வழங்கப்படும்
30) நவீன அறிவியல், தொழில்நுட்ப நூல்களைத் தமிழில்  ரூ.5 கோடி செலவில் மொழி பெயர்க்கப்படும்.
31) அரசுப் பள்ளி மாணவர்கள் பயனடையும் வகையில் நடமாடும் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும்
நிர்வாகம்
32) மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் புதிய பணியிடங்கள் ரூ. 60 இலட்சம் செலவினத்தில் ஏற்படுத்தப்படும்
33) கிருஷ்ணகிரி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் புதிய மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம் அமைக்கப்படும்
34)பள்ளிக் கல்வித் துறையின் அலுவலர்களுக்கு ரூ.2.89 கோடி செலவில் புதிய வாகனங்கள்  வழங்கப்படும்
முறைசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி
35) 3 மற்றும் 5ம் வகுப்பிற்கு இணையான சமநிலைக் கல்வித் திட்டம் ரூ.13.94 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
உலகத் தமிழர் நலன்
36) உலக நாடுகளில் வாழும் தமிழ் மாணவர்களுக்கு தமிழ் கற்பித்தலுக்கு தேவையான தமிழ்ப் பாடநூல்கள் அனுப்புதல், சிறந்த தமிழாசிரியர்கள் மூலம் பயிற்சி மற்றும் இணைய வழியில் தமிழ் கற்பித்தல் ஆகியவை அறிமுகம்.
37) உலக நாடுகளில் உள்ள தமிழ் நூலகங்களுக்குப் ஒரு இலட்சம் புத்தகங்கள் கொடையாக வழங்குதல்.  முதற்கட்டமாக யாழ்ப்பாணம் பொது நுாலகத்திற்கும், மலேயாப் பல்கலைக் கழக நூலகத்திற்கும் ஒரு இலட்சம் நூல்கள் கொடை.