Monday, December 31, 2012


12, 10-ம்வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு

     12ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 1ந்தேதி தொடங்கி 27ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



   பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 27ந்தேதி தொடங்கி ஏப்ரல் 12-ந் தேதி நடைபெறும்.
SSLC PUBLIC EXAM 2013 DATES

27.03.2013 - Tamil Paper 1
28.03.2013 - Tamil Paper 2
01.04.2013 - English Paper 1
02.04.2013 - English Paper 2
05.04.2013 - Maths
08.04.2013 -Science
12.04.2013 - Social Science





      பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு நடத்தப்படும் பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பன்னிரெண்டாம் வகுப்பிற்கு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வை 8லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதஉள்ளனர். பத்தாம்‌ வகுப்பிற்கான தேர்வு மார்ச் 27-ம் தேதி துவங்கி ஏப்ரல் மாதம் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது இத்தேர்வை 10லட்சம் பேர் எழுத உள்ளனர் என அரசு அறிவித்துள்ளது.  






CENTRAL TEACHER ELIGIBILITY TEST (CTET) - NOV 2012 RESULTS

பள்ளிக் கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் தலைமையில் 08.01.2013 அன்று அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கும் பணி இலக்குகள் மற்றும் பணி சார்ந்த செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது

தமிழக அரசின் நலத்திட்டங்களை முன்னிறுத்தி "அரசுப் பள்ளிகளில் பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் பள்ளிகளில் சேர்க்க மற்றும் சேர்க்கையை அதிகப்படுத்த" - தமிழகம் முழுவதும் சேர்க்கை மற்றும் விழிப்புணர்வு முகாம், பேரணி மற்றும் விழா நடத்த தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவு.

பள்ளி மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு விரைவில் தேர்வு முடிவு வெளியாகும்

         பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த தேசிய திறனாய்வு தேர்வில் மொத்தம் 465 பேர் தேர்வு எழுதினர்.

      அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படும். இதில், தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு அரசு சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்படும். மாணவர்களின் கல்வி தரத்தை பொறுத்து, உயர்கல்வி வரை இந்த உதவி தொகை வழங்கப்படும்.

நடப்பாண்டுக்கான, மாணவர்கள் தேர்வுக்காக மாநிலம் முழுவதும் தேசிய திறனாய்வு தேர்வு நடந்தது. கடந்தாண்டு, ஏழாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பள்ளி வாரியாக தேர்வு செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் தேர்வு நடந்தது.

மொத்தம் 540 பேர் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். ஆண்கள் பள்ளியில், பதிவு செய்த 240 பேரில், 205 பேர் தேர்வு எழுதினர். பெண்கள் பள்ளியில், பதிவு செய்த 271 பேரில், 260 பேர் தேர்வு எழுதினர். மாணவர்களுக்கு, பாடம் மற்றும் பொது அறிவு சார்ந்த வினாக்கள் கேட்கப்பட்டன. இதில், வெற்றி பெறும் மாணவர்கள் குறித்த விபரம் அரசு சார்பில் வெளியிடப்படும்.

மாவட்ட கல்வி அலுவலர் (பொ) பாலசுப்பிரமணியம் கூறுகையில், "மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்காக, தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இன்று (நேற்று) நடந்த தேர்வில், மொத்தம் 465 பேர் தேர்வு எழுதினர். 45 பேர் தேர்வுக்கு வரவில்லை. இத்தேர்வில், தேர்ச்சி பெறும் அனைத்து மாணவர்களுக்கும், அரசு சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்படும். விரைவில், இத்தேர்வு முடிவு வெளியாகும்,&'&' என்றார்.

நேர்முக தேர்வு நடத்தியவர்களின் பெயரை வெளியிட முடியாது - உச்சநீதிமன்றம் உத்தரவு.

      அரசுப் பணிகளுக்கு ஆட்களை தேர்ந்தெடுக்கும் போது, நேர்முகத் தேர்வு நடத்தும் குழுவில் இடம் பெறும் நபர்களின் பெயர்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியிட முடியாது" என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
         பீகார் மாநிலத்தில், போலீஸ் துறையின், தடயவியல் பிரிவுக்காக ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். "இந்த ஆட்கள் தேர்வின் போது, நேர்முகத் தேர்வு நடத்தியவர்களின் பெயர் விவரங்களை தெரிவிக்க வேண்டும்" என, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பீகார் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில், மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், பீகார் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம், இந்த தகவலை தெரிவிக்க மறுத்துவிட்டது. இதை எதிர்த்து, பாட்னா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்ட போது, "நேர்முகத் தேர்வு நடத்தியவர்களின் பெயர்களை, வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்" என, ஐகோர்ட் உத்தரவிட்டது.

இதையடுத்து, பீகார் மாநில அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஸ்வதேந்தர் குமார், எஸ்.ஜே.முகோபத்யாயா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், பிறப்பித்த உத்தரவு:

அரசுப் பணிகளுக்காக நேர்முகத் தேர்வு நடத்துவோரின் பெயர்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், கோர முடியாது. அவ்வாறு பெயர்களை வெளியிட்டால், அந்த நேர்முகத் தேர்வுக் குழுவில் உள்ளவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது, அடிப்படை உரிமைகளை தெரிந்து கொள்வதற்கான, ஒரு வழிமுறை என்றாலும், அதற்கும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. சில வரையறைகள் உள்ளன. இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், பாட்னா ஐகோர்ட் பிறப்பித்த தீர்ப்பை, தள்ளுபடி செய்தனர்.
 
அரசு கல்லூரி துப்புரவு பணி தனியார் வசம் ஒப்படைப்பு

     அரசு கல்லூரிகளில், தூய்மை பணி மேற்கொள்ள, தனியார்களை பயன்படுத்த அரசு முடிவு எடுத்துள்ளது. முதல் கட்டமாக, சென்னை கல்லூரிகளில், இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
      அரசு கல்லூரிகளில், 10 ஆண்டுகளாக, அடிப்படை பணியாளர்கள் நியமிக்கப்படாததால், துப்புரவு செய்ய ஆளில்லாமல், கல்லூரி வளாகங்களில் குப்பைகள் அதிகமாக கிடக்கிறது. காலியாக உள்ள துப்புரவு பணியாளர் பணியிடங்களை, அந்தந்த கல்லூரிகளே நிரப்பிக் கொள்ள அரசு உத்தரவிட்டது.

மேலும், கல்லூரியின் தேவைக்கேற்ப, துப்புரவு பணியாளர்களை நியமித்து கொள்ளலாம் என அறிவுறுத்தியது. கல்லூரி நிதி, பெற்றோர் - ஆசிரியர் கழக நிதியிலிருந்து, இவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது. இதனால், கல்லூரி நிதி முழுவதும், பெரும்பாலும் பணியாளர் சம்பளத்திற்கே செலவானது.

பல கல்லூரிகள், புதிதாக யாரையும் நியமிக்காமல், இருக்கும் பணியாளர்களை கொண்டே, துப்புரவு பணிகளை மேற்கொண்டன.சில கல்லூரிகளில் நியமிக்கப்பட்டவர்களுக்கு, தினசரி சம்பளம் என்பதால், ஒரு நாள் விட்டு ஒரு நாள், பணிக்கு வர ஆரம்பித்தனர். இதனால், தூய்மை பணியில் சுணக்கம் ஏற்பட்டது.

இதுகுறித்து "தினமலர்" நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, தனியார் மூலம், தூய்மை பணியை மேற்கொள்ள அரசு முடிவெடுத்துள்ளது. டெண்டர் மூலமாக, தனியார் நிறுவனம் ஒன்றிற்கு, தூய்மை பணியை அரசு கொடுத்துள்ளது. இதற்காக, ஒரு கல்லூரிக்கு, மாதம் ஒன்றுக்கு, 22 ஆயிரம் ரூபாயை அரசு ஒதுக்குகிறது.

முதல் கட்டமாக, சென்னையில் உள்ள பாரதி, காயிதே மில்லத், நந்தனம், அம்பேத்கர், ராணிமேரி மற்றும் மாநில கல்லூரி, அரசு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், லேடி விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றில், துப்புரவு பணிகளை, தனியார் மேற்கொள்ள உள்ளனர்.

வளாகத் தூய்மை, கழிவறை தூய்மை பணி, தோட்டப்பணிகள் உள்ளிட்ட அடிப்படை பணிகளை மேற்கொள்ள, ஒரு கல்லூரிக்கு, ஐந்து பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கல்லூரிகளில் ஏற்கனவே பணியிலிருக்கும், துப்புரவு பணியாளர்களோடு இணைந்து, இவர்கள் பணியை மேற்கொள்வர்.

இத்திட்டத்தில், போதிய பயன் கிடைக்கும் பட்சத்தில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு கல்லூரிகளிலும், தூய்மை பணிகள் தனியாருக்கு ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.

இதுகுறித்து, கல்லூரி கல்வி இயக்குனர், செந்தமிழ் செல்வி கூறுகையில், "தூய்மை பணிகளை மேற்கொள்ளும், தனியார் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டு, விவரங்கள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன; நிதி அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதத்திற்குள், இத்திட்டம் அமல்படுத்தப்படும்,&'&' என்றார்.

Upper Primary CRC 05.01.2012 - Art and Craft Module

ஆசிரியர் கல்வி பாடத்திட்டத்தில் மறுஆய்வு தேவை

      நாடு முழுவதும் ஆசிரியர் கல்வி பாடத் திட்டத்தில் மறுஆய்வு தேவை என்று தேசிய திறந்தநிலைப் பள்ளிக் கல்வி நிறுவனத்தின் தலைவர் சிதான்சு எஸ்.ஜெனா கூறினார்.

      தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழா  சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 2010-11, 2011-12 ஆகிய கல்வியாண்டுகளில் பயின்ற மொத்தம் 1 லட்சத்து 20 ஆயிரத்து 481 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

இந்த விழாவுக்குத் தலைமையேற்று சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்குப் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் ஆளுநர் கே.ரோசய்யா வழங்கினார்.

விழாவில் சிதான்சு எஸ்.ஜெனா ஆற்றிய உரை:

மாணவர்களை நல்ல குடிமக்களாக மாற்றுவதற்கு நெறி சார்ந்த கல்வி மிகவும் அவசியம். மனித உரிமைகள், நல்லிணக்கமாக வாழ்வது, அமைதியை விரும்புவது, ஜனநாயக மரபுகள், பிறருக்காக உதவுவது ஆகிய பண்புகளை மாணவர்களிடம் ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும். அதற்கேற்ற வகையில், ஆசிரியர் கல்வியில் உரிய மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்.

இப்போதைய கல்விமுறை தேர்வு, வேலைவாய்ப்பு போன்றவற்றிடம் முழுமையாக சரணடைந்துள்ளது. மனித பண்புகளுக்கோ, மற்றவர்களை மதிப்பதற்கோ கல்வி முறை முக்கியத்துவம் வழங்குவதில்லை. நம்மைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பாக முழுமையான புரிதலையோ, அறிவையோ இன்றைய கல்வி முறை வழங்கவில்லை.

மாணவர்களிடம் போட்டி மனப்பான்மையைத்தான் கல்வி நிறுவனங்கள் வளர்க்கின்றன. இணைந்து செயல்படுவது என்ற பண்பு மாணவர்களிடம் மறைந்துவருகிறது.

மாணவர்கள் பல சாதனைகளைப் புரிந்தாலும் அவர்களிடம் மனிதநேயம் குறைந்துவருகிறது.

எனவே, மனித மதிப்பீடுகள், நெறிசார்ந்த கல்வியைப் பாடத்திட்டத்தில் சேர்ப்பது மிகுந்த அவசியமாகிறது. இயற்கையை ரசிக்கவும், மனித உறவுகளை மதிக்கவும், கலைகளைப் படைக்கவும், பிறருக்காக இரங்கும் மனப்பான்மையையும் மாணவர்களிடம் வளர்க்கும் வகையில் ஆசிரியர் கல்வி இருக்க வேண்டும்.

கல்வி சார்ந்த சில குறிப்புகளையோ, ஆய்வுகளையோ மட்டும் ஆசிரியர்களுக்கு பயிற்சியாக வழங்காமல் உலகமயமாக்கல், அமைதி, ஊடகம், கலாசாரம், ஜனநாயகம் குறித்து ஆசிரியர்களுக்கு அவ்வப்போது பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர் ஒவ்வொருவரிடத்திலும் உள்ள தனித்தன்மையை அறிந்து அதனை ஊக்குவிக்க வேண்டும். கற்பித்தலுக்கான புதிய வழிமுறைகளையும், சூழல்களையும் ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும் என்றார் சிதான்சு எஸ்.ஜெனா.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் பி.பழனியப்பன், துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன், உயர் கல்வித் துறைச் செயலாளர் அபூர்வ வர்மா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

My GREETINGS TO U

HAPPY NEW YEAR-2013

WISH YOU ALL VERY VERY HAPPY NEW YEAR-2013


SSLC TIME TABLE


பத்தாம் வகுப்புக் கால அட்டவணை

27.03.2013-தமிழ் முதல் தாள்
28.03.2013-தமிழ் இரண்டாம் தாள்
01.04.2013-ஆங்கிலம் முதல் தாள்
02.04.2013-ஆங்கிலம்  இரண்டாம் தாள்
05.04.2013-கணிதம்
08.04.2013-அறிவியல்
12.04.2013-சமூக அறிவியல்

பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 1 இல் துவங்கி 27 இல் முடிகிறது

ENGLISH TEACHER


I LIKE THIS PICTURE VERY MUCH AND I HOPE YOU TOO WILL
THIS PICTURE WILL HELP ENGLISH TEACHER TO TEACH ACTION WORDS VERBS AND TENSE
TO COPY THIS JUST RIGHT CLICK AND DO SAVE IMAGE AS SELECT A LOCATION SAVE AND TAKE A PRINT OUT OF THIS AND USE THIS PICTURES AS FLASH CARDS  AND CONSTRUCT  AS MANY ACTIVITIES AS YOU CAN IN YOUR CLASS


+2 New Business Mathematics Study Material


+2 New Vocational subjects Question Papers


வெளிவராத தமிழ் அகராதி: டி.என்.பி.எஸ்.சி தேர்வர்களுக்கு சிக்கல்


        கடந்த 2000ம் ஆண்டுக்கு பின், தமிழ் ஆட்சிமொழி அகராதி வெளி வராததால், அரசுத் துறை தேர்வு எழுதுவோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, தமிழாசிரியர் கழகத்தினர் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மாநில நிர்வாகி இளங்கோவன் கூறுகையில், "கடந்த 1957 முதல் 2000ம் ஆண்டு வரை, 6 தமிழ் அகராதிகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்பிறகு 12 ஆண்டுகளாக புதிய அகராதி வெளிவரவில்லை. தற்போது நடத்தப்படும் டி.என்.பி.எஸ்.சி., உட்பட அரசு துறை தேர்வுகளில், தமிழ் அகராதிகளில் இருந்து, கேட்கும் சில கேள்விகளுக்கு, விடை காண முடியவில்லை.
சமீபத்தில், சென்னையில் நடந்த கலெக்டர்கள் மாநாட்டில் கூட, ஈரோடு பகுதியில் பேசப்படும்,"ஈமு" எனும் வார்த்தைக்கு யாராலும், விளக்க மளிக்க முடியவில்லை. காரணம், பழைய தமிழ் அகராதிகளில் "ஈமு" என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் சொல் இல்லை.
ஒவ்வொரு ஆண்டும், அந்தந்த வட்டாரத்தில் புதுப்புது தமிழ் வார்த்தைகள் பிறக்கின்றன. இவற்றிக்கு, தமிழில் சரியான வார்த்தையை கண்டுபிடிக்க முடியாமல், தமிழாசிரியர்கள், அரசு அதிகாரிகள் திணறுகின்றனர்.
தமிழ் வளர்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழ் அகராதி புத்தகங்களை பொது மக்கள் படிக்க முடியாத நிலையில், ஆசிரியர் அரசு துறையை சார்ந்தவர்கள் படிக்க, சம்பந்தப்பட்ட துறையிடம் அனுமதி கடிதம் பெறுதல் என்ற கட்டாய உத்தரவை தளர்த்த வேண்டும். குறிப்பிட்ட ஆண்டு இடைவெளிக்குள் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், தமிழ் அகராதிகளை வெளியிட வேண்டும்,&'&' என்றார்.
 
தேசிய விரி​வு​ரை​யா​ளர் தகு​தித் தேர்வு:​ நாடு முழு​வ​தும் 7.8 லட்​சம் பேர் பங்​கேற்பு

பல்​க​லைக்​க​ழக மானி​யக் குழு (யு.ஜி.சி.)​சார்​பில் தேசிய விரி​வு​ரை​யா​ளர் தகு​தித் தேர்வு சென்னை உள்​பட நாடு முழு​வ​தும் இன்று (டிசம்​பர் 30) நடை​பெ​று​கி​றது.​மொத்​தம் 77 மையங்​க​ளில் நடை​பெ​றும் இந்​தத் தேர்வை 7.8 லட்​சம் பேர் எழு​து​கின்​ற​னர்.​இந்​தத் தேர்​வில் விரி​வு​ரை​யா​ளர் தகுதி பெற புதிய விதி​மு​றை
​கள் அமல்​ப​டுத்​தப்​பட்​டுள்​ளன.​சென்​னை​யில் 10 தேர்வு மையங்​க​ளில் 12,500 பேர் இந்​தத் தேர்வை எழுத உள்​ள​னர்.​முதல் தாள் காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை​யி​லும்,​இரண்​டாம் தாள் காலை 10.45 மணி முதல் 12 மணி வரை​யி​லும்,​மூன்​றாம் தாள் பிற்​ப​கல் 1.30 மணி முதல் மாலை 4 மணி வரை​யி​லும் நடை​பெ​றும்.​முதல் தாளில் 60 கேள்​வி​க​ளும் (100 மதிப்​பெண்)​,​இரண்​டாம் தாளில் 50 கேள்​வி​க​ளும் (100 மதிப்​பெண்)​,​மூன்​றாம் தாளில் 75 கேள்​வி​க​ளும் (150 மதிப்​பெண்)​இடம்​பெ​றும்.​முதல் தாளில் 50 கேள்​வி​க​ளுக்​கும்,​மீத​முள்ள 2 தாள்​க​ளில் அனைத்து கேள்​வி​க​ளுக்​கும் கட்​டா​யம் விடை​ய​ளிக்க வேண்​டும்.​பொதுப்​பி​ரி​வி​ன​ருக்கு 40 சத​வீத மதிப்​பெண்​ணும்,​இதர பிற்​ப​டுத்​தப்​பட்​ட​வர்கள்,​எஸ்.சி.,​எஸ்.டி.​பிரி​வி​ன​ருக்கு 35 சத​வீத மதிப்​பெண்​ணும் தேர்ச்சி மதிப்​பெண்​ணாக நிர்​ண​யம் செய்​யப்​பட்​டுள்​ளது.​மூன்​றாம் தாளுக்கு மட்​டும் 75 (50 சத​வீ​தம்)​தேர்ச்சி மதிப்​பெண்​ணாக நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.​இதில் இதர பிற்​ப​டுத்​தப்​பட்​டோ​ருக்கு தேர்ச்சி மதிப்​பெண்​ணாக 68 மதிப்​பெண்​ணும் (45 சத​வீ​தம்)​,​எஸ்.சி.,​எஸ்.டி.​பிரி​வி​ன​ருக்கு 60 மதிப்​பெண்​ணும் (40 சத​வீ​தம்)​நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.​புதிய விதி​மு​றை​கள்:​இந்​தத் தேர்​வில் விரி​வு​ரை​யா​ள​ரா​கத் தகு​தி​பெற புதிய விதி​மு​றை​க​ளை​யும் பல்​க​லைக்​க​ழக மானி​யக் குழு அமல்​ப​டுத்​தி​யுள்​ளது.​அதன்​படி,​தேர்ச்சி பெற்​ற​வர்​க​ளைக் கொண்டு பாட​வா​ரி​யாக தகு​திப் பட்​டி​யல் தயா​ரிக்​கப்​ப​டும்.​அனைத்​துப் பாடங்​க​ளி​லும் தேர்ச்சி பெற்​ற​வர்​களி​லி​ருந்து முதல் 15 சத​வீ​தம் பேர் மட்​டுமே விரி​வு​யு​ரை​யா​ளர் தகுதி பெற்​ற​வர்​க​ளாக அறி​விக்​கப்​ப​டு​வார்​கள்.​இளம் ஆராய்ச்​சி​யா​ள​ருக்​கான உத​வித் தொகை வழங்க இவர்​களி​லி​ருந்து தனி​யான தகு​திப் பட்​டி​யல் தயா​ரிக்​கப்​ப​டும் என்று பல்​க​லைக்​க​ழக மானி​யக் குழு அறி​வித்​துள்​ளது.​கடந்த தேர்​வில் தேர்ச்சி விதி​மு​றை​களை மாற்​றி​ய​தைத் தொடர்ந்து தேர்வு முடி​வு​களை வெளி​யி​டு​வ​தில் பல்​வேறு பிரச்​னை​கள் எழுந்​தன.​இதைத் தொடர்ந்து,​புதிய விதி​மு​றை​கள் இப்​போது அறி​விக்​கப்​பட்​டுள்​ளன.
இரண்டு மாதங்களுக்கு புதிய ரேஷன் அட்டைகள் கிடையாது: உணவுத் துறை அமைச்சர் அறிவிப்பு

தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் அட்டைகள் மேலும் ஓராண்டு காலத்துக்கு நீட்டிக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் ஜனவரி 1-ம் தேதி நடைபெற இருப்பதால், புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி இரண்டு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவித்துள்ளார்.
"ரேஷன் அட்டையில் உள்தாள் ஒட்டும் பணி ஜனவரி 1-ல் தொடக்கம்'

ரேஷன் அட்டைகளை புதுப்பிக்கும் வகையில், அவற்றில் உள்தாள்களை ஒட்டும் பணி ஜனவரி 1-ம் தேதி தொடங்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை சிறப்பு ஆய்வுக் கூட்டத்தை அமைச்சர் நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் அவர் கூறியது: தமிழகத்தில் விலையில்லாத அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ், 1.84 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 33 ஆயிரத்து 474 ரேஷன் கடைகள் மூலம் அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்துக்கான ஒதுக்கீட்டின்படி அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் வரும் 5-ம் தேதிக்குள் நகர்வு செய்யப்பட்டு இருப்பு வைக்க வேண்டும்.

அட்டைதாரர்களுக்குத் தேவையான துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், சர்க்கரை, கோதுமை ஆகியவற்றை மானிய விலையில் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. 21 ஆயிரத்து 700 மெட்ரிக் டன் பாமாயில் சென்னை துறைமுகத்துக்கு மூன்று கப்பல்கள் மூலமும், தூத்துக்குடி துறைமுகத்துக்கு ஒரு கப்பல் மூலம் 8 ஆயிரம் மெட்ரிக் டன் பாமாயிலும் கொண்டு வரப்படுகிறது.

உள்தாள் ஒட்டும் பணி: இப்போது நடைமுறையிலுள்ள ரேஷன் அட்டைகள் 2013-ம் ஆண்டு முழுவதும் செல்லுபடியாகும் வகையில் அவற்றின் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஜனவரி 1-ம் தேதி முதல் ரேஷன் அட்டைகளில் உள்தாள் ஒட்டும் பணி நடைபெறவுள்ளது. இதன்படி, குடும்பத் தலைவர் அல்லது 18 வயதுக்கு மேற்பட்ட குடும்ப அட்டையில் பெயர் உள்ள உறுப்பினர்களில் ஒருவர் ரேஷன் கடைக்குச் சென்று உள்தாளை பெற்றுக் கொள்ள வேண்டும். ரேஷன் கடைகளில் பராமரிக்கப்படும் பதிவேட்டில் கையெழுத்திடுவது கட்டாயமாகும்.

கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஏற்பாடு:
ரேஷன் அட்டைதாரர்கள் கூட்ட நெரிசல் இன்றி புதுப்பித்தல் பணியை மேற்கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, சுழற்சி முறையில் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரேஷன் அட்டைகளைப் புதுப்பிக்க கடைகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
திங்கள் முதல் வெள்ளி வரை சுழற்சி முறையில் தங்கள் ரேஷன் அட்டைகளைப் புதுப்பிக்க கடைகளுக்கு வர முடியாதவர்கள், அந்த வாரத்தில் சனிக்கிழமை கடைக்கு வந்து அட்டைகளைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் எம்.பி.நிர்மலா, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் பி.எம்.பஷீர் அஹமது, நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் எம்.சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்:
ரேஷன் கடைகளில் தரமான பொருள்களை விநியோகம் செய்ய மண்டல அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

இது குறித்து தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அவர் பேசுகையில், பொது விநியோகத் திட்ட கிடங்குகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தையும் இருப்பு வைத்து, உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையாளரின் ஒதுக்கீட்டின்படி கடைகளுக்கு அனுப்ப வேண்டும்.

இதை உறுதி செய்யவும், கடைகளில் அனைத்துப் பொருள்களும் இருப்பு வைத்திருப்பது, பொருள்களின் தரம் குறித்த புகார்கள், கடைகளில் தரமற்ற பொருள்கள் காணப்பட்டால் அவற்றை விநியோகம் செய்யாமல் கிடங்குகளுக்கு அனுப்பி தரமான பொருள்களை பெறுதல் ஆகிய பணிகளைக் கண்காணிக்கும் பொருட்டு, மண்டல அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
கூட்டுறவு சங்க உதவியாளர் நேர்முகத்தேர்வு ஒத்திவைப்பு

கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முகத்தேர்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் காலியாக இருந்த 3589 உதவியாளர் பணியிடங்களுக்கு கடந்த 9ம் தேதி எழுத்து தேர்வு நடந்தது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு டிசம்பர் 28 முதல் ஜனவரி 1ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி 28ம்தேதி நேர்முகத்தேர்வு நடந்தது. நேற்று நேர்முகத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.

 இதனையடுத்து தேர்வுக்கு வந்தவர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் பலத்த மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை இருப்பதாக விண்ணப்பதாரர்கள் கூறியிருந்தனர். இதன் அடிப்படையிலும், சான்றிதழ் சரிபார்ப்பதற்கு போதிய இடமில்லாத காரணத்தினாலும், நேர்முகத்தேர்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

TNPSC C.S.S.E-II - Exam Result Published

72 பள்ளிகளில் ரூ.2.58 கோடியில் அடிப்படை வசதி

திருப்பூரில், 2.58 கோடி ரூபாய் செலவில், 72 மாநகராட்சி பள்ளிகளில், அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து, சீரமைக்க மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சியில் உள்ள ப
ள்ளிகளில், குடிநீர், கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தன. மேல்நிலைத் தொட்டி அமைத்து தண்ணீர் வசதியும், கழிப்பிடம் அமைத்துக் கொடுக்கும்படி, தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஒவ்வொரு மண்டலத்தில் உள்ள மாநகராட்சி பள்ளிகளை சீரமைத்து, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க, மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன்படி முதல் மண்டலத்தில் உள்ள 12 மாநகராட்சி பள்ளிகளில் 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், இரண்டாவது மண்டலத்தில் 32 பள்ளிகளில் 65 லட்சம் ரூபாய் செலவிலும், மூன்றாவது மண்டலத்தில் 17 பள்ளிகளில் 62.40 லட்சம் ரூபாய்; நான்காவது மண்டலத்தில் 66 லட்சம் ரூபாய் செலவில் தண்ணீர் மற்றும் கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

நான்கு மண்டலத்திலும் சேர்த்து, மொத்தம் 72 பள்ளிகளுக்கு, 2.58 கோடி ரூபாய் செலவில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான தொகையை கல்வி நிதியிலிருந்து செலவிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
தமிழ் இணைய மாநாட்டில் சிறுவர்களுக்கான பொது அறிவு சிடி

சிதம்பரத்தில் நடைபெறும் உலகத் தமிழ் இணைய மாநாட்டு கண்காட்சியில் சிறுவர்களுக்கான பொது அறிவு, பஞ்சதந்திரக் கதைகள் உள்ளிட்ட பல தலைப்புகளில் சிடி மற்றும் டிவிடிக்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கண்காட்சியில் 20 அரங்குகள் இடம்பெற்றுள்ளன.

தமிழ் எழுத்துருக்கள் மல்டி மீடிய சிடி, குழந்தைகளுக்கான சிடி, பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களுக்கான சிடிக்கள், மொபைல் மற்றும் மடிகணினிகளில் தமிழைப் பயன்படுத்தும் மென்பொருள்கள் அச்சு வடிவமைப்பு, முன்னணி பத்திரிகை நிறுவனங்களுக்குத் தேவையான மென்பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. 

தமிழ் யூனிகோடு எழுத்துருக்கள், தமிழ் 99 விசைப்படகுகள், விக்கிபீடியா இணைய பக்க வடிவமைப்புகள், கைபேடு மற்றும் ஆண்ட்ராய்டு போன்ற பல கணினி கருவிகளில் மென்பொருள்கள் காட்சியில் இடம் பெற்றிருந்தன. முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை சமச்சீர் கல்வி டிவிடி, ஸ்போக்கன் இங்கிலீஷ், இலக்கணம், பொது அறிவு, பஞ்சதந்திரக் கதைகள் உள்ளிட்ட பல தலைப்புகளில் சிடி மற்றும் டிவிடிக்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. 

பிளஸ் 2 மாணவர்களுக்கான ஒரு மதிப்பெண் வினா வங்கி, லேர்ன் சப்ஜெக்ட் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வுக்கான சிறப்பு சிடிக்கள், கணி திறன் அறிய ஒளிப்பியார்டுகளில் ஏதுவான சிடிக்களும் 20 சதவீத தள்ளுபடி விலையில் கண்காட்சியில் விற்பனை செய்தனர். இதுதவிர குழந்தைகள், நர்சரி பாடல்கள், நல்லொழுக்கக் கதைகள், மகாத்மா காந்தி, விவேகானந்தர் போன்றவர்களின் வரலாற்று நூல்கள் அதிகளவில் இடம் பெற்றிருந்தன.

தினமலர் நாளிதழ் சார்பில் கண்காட்சியில் இணையதளம் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் கல்வி தொடர்பான செய்திகள், மத்திய, மாநில அரசுகளின் அறிவிப்புகள் உள்ளிட்ட பல கல்வித் தகவல்களை "கல்வி மலர்" இணையதளம் வழங்குகிறது. 

மாநில மற்றும் மத்திய, நிகர்நிலை பல்கலைக்கழங்கள், தொழிற்கல்வி நிறுவனங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் பற்றி விரிவான விவரங்கள் இந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பொறியியல், மருத்துவம், கால்நடை, கலை அறிவியியல், சட்டம் உட்பட அனைத்துத் துறை சார்ந்த விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. 

வெளிநாட்டு கல்வி நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் முன்பாக ஆராய வேண்டிய விவரங்கள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் அது தொடர்பான ஆலோசனைகள் இந்த இணைய தள அரங்கில் மாணவர்கள் பார்த்து தெரிந்து கொண்டனர். இதுதவிர நாட்டு நடப்புகள், உடனுக்குடன் செய்தி, தேர்வு முடிவுகள் மற்ற இணைய தளத்திற்கு முன்னோடியாக செயல்பட்டு வருவதை பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது. 

மேலும், தமிழ் இணைய கல்விக் கழகம், விஷூவல் மீடியா, டெக்லாஜிசிஸ் உட்பட பல மென்பொருள் நிறுவனங்கள் கண்காட்சியில் குறைந்த விலையில் விற்பனை செய்தது பொதுமக்களுக்கு பயன் உள்ளதாக இருந்தது.
10ம் வகுப்பு மாணவர் விவரம்: ஜனவரி 23 வரை காலக்கெடு- Dinamalar

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் குறித்த விவரங்களை, இணையதளம் வழியாகப் பதிவு செய்வதற்கான காலக்கெடு, வரும், 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்க உள்ளது. பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் குறித்த விவரங்கள், குறுந்தகடில் பதிவு செய்யப்பட்டு, கல்வி மாவட்ட வாரியாக, தேர்வுத்துறை இயக்குனரகத்திற்கு அனுப்பப்படுவது வழக்கம். 

இம்முறை, "மாணவ, மாணவியர் விவரங்களை, இணையதளம் வழியாக, ஜனவரி 4ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்" என, தேர்வுத்துறை உத்தரவிட்டது. 

"மின்வெட்டு பிரச்னையால், இணையதளத்தில் மாணவ, மாணவியரின் பெயர்களைப் பதிவு செய்வதில் சிக்கல் உள்ளது" என, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, இணையதளத்தில் பதிவு செய்வதற்கான காலக்கெடுவை, ஜனவரி 23ம் தேதி வரை நீட்டித்து, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
இணையதளங்களால் மழுங்கடிக்கப்படும் இளைய தலைமுறையினர்

"இணையதள தொழில்நுட்ப வசதி காரணமாக, இன்றைய இளைய தலைமுறையினரின் மூளை, மழுங்கடிக்கப்படுகிறது. எந்த ஒரு விஷயத்தையும், அறிந்து கொள்வதற்கு, அவர்களின் கைகள், "கூகுளை" தான், நாடுகின்றன. இதனால், இன்றைய தலைமுறையினர், சிந்திக்கும் ஆற்றல் அற்றவர்களாக மாறி வருகின்றனர்," என, பிரபல பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர், இணையதளங்களுக்கு அடிமையாகிப் போனவர்களின், செவிட்டில் அறைவது போல், கூறியுள்ளார்.

பிரபல பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர், டிரேவர் பெய்லீஸ். பேட்டரி, மின்சாரம் இல்லாமல், கைகளால் சுற்றி ரேடியோவை இயக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர். "டெய்லி மெயில்" என்ற ஆங்கில பத்திரிகைக்கு, அவர் அளித்துள்ள பேட்டி:

இன்றைய இளைய தலைமுறையினரின் போக்கு, எனக்கு மிகவும் கவலை அளிக்கிறது. எந்த ஒரு விஷயத்தையும், இணையதளம் மூலமாகவே, அறிய முயற்சிக்கின்றனர். "இது எப்படி சாத்தியம்; அது என்ன; இதை எப்படி செய்யலாம்" என்பது போன்ற, பல்வேறு கேள்விகளுக்கு, இன்றைய இளைஞர்கள், உடனடியாக, "கூகுள்" இணையதளத்தை தான், நாடுகின்றனர்.

ஒரு விஷயத்தை எப்படி செய்யலாம் என்பது பற்றி, அவர்கள் சிந்திப்பதும் இல்லை; கற்பனை செய்து பார்ப்பதும் இல்லை. இதனால், அவர்களின் மூளை, மழுங்கடிக்கப்பட்டு வறட்சியாகி வருகிறது. அனுபவ ரீதியாகவோ, செயல்முறை சார்ந்தோ, எந்த விஷயத்தையும் அவர்கள் செய்வது இல்லை. 

இணையதளங்களால், தாங்களாக, சொந்தமாக எதையும் செய்ய முடியாதவர்களாக மாறி வருகின்றனர். இது, அபாயகரமான போக்கு. இணையதளங்கள், மொபைல் போன், கம்ப்யூட்டர் ஆகியவற்றின் உதவி இல்லாமல், அவர்களால் எதையும் செய்ய முடிவது இல்லை. முழுக்க முழுக்க, அவர்கள், இவற்றை சார்ந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அவற்றுக்கு அடிமையாகி வருகின்றனர்.

எனவே, பள்ளிகளில், குழந்தைகளுக்கான, கற்பித்தல் முறையில் மாற்றம் வேண்டும். குறிப்பாக, செயல்வழி கற்றல் நடைமுறைகளை அமல்படுத்த வேண்டும். சில மாதிரி பொருட்களை கொடுத்து, "ஒரு பாலத்தை, எப்படி கட்டுவது; இந்த கட்டடத்தை எப்படி வடிவமைப்பது" என, குழந்தைகளை செய்யும்படி கூற வேண்டும்.

எதிர்கால தலைமுறை, ஆரோக்கியமான, ஆற்றல் உள்ள தலைமுறையாக வளர்வதற்கு, இது தான் சிறந்த தீர்வாக அமையும்.இவ்வாறு, டிரேவர் பெய்லீஸ் கூறினார்.

Saturday, December 29, 2012

புவியியல் பாடங்களுக்காக

 நாமும் இதுபோன்றப் பயனுடைய வீடியோக்களைப் பதிவிறக்கம் செய்து தமிழில் மொழிபெயர்த்து வகுப்பறையில் பயன்படுத்தலாம்


பெருவெடிப்பு கொள்கை



பூமியின் உள்ளடுக்குகள்


அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு

முக்கிய குறிப்புக்கள்:

2011-12ம் கல்வியாண்டிற்கு தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு  நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 31-12-2012 திங்கட்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி  அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

* முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான கலந்தாய்வினை ஆசிரியர் தேர்வு வாரிய வரிசை எண்ணின் அடிப்படையில் நடத்தப்படும்.  

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப்பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான  கலந்தாய்வு முதலிலும்,இதன்பின்னர் இந்த கலந்தாய்வில் சொந்த மாவட்டங்களில் போதுமான காலிப்பணியிடங்கள் இல்லாததால் பணியிடம் கிடைக்கப் பெறாதவர்களும் மற்றும் வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கான  கலந்தாய்வும் அன்றே தொடர்ந்து  அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடத்தப்படும். 
* தங்கள் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்கள் அனைவரும் அவர்களுடைய ஆசிரியர் தேர்வுவாரிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு,  கல்விச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் தவறாமல் கலந்து கொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 

* ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி கணினியை பயன்படுத்தி ஒரே நேரத்தில் அனைத்து பாடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும். 


* நியமன ஆணை பெறும் ஆசிரியர்கள் அனைவரும் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும்.

Friday, December 28, 2012

தமிழகத்தின் புதிய தலைமை செயலராக ஷீலா பாலகிருஷ்ணன் நியமனம்

     ஷீலா பாலகிருஷ்ணன், தமிழக அரசின் புதிய தலைமை செயலராக நியமிக்கபடுகிறார். தற்பொழுதைய தலைமை செயலரான தேபேந்திரநாத் சாரங்கி ஓய்வு பெறுவதை அடுத்து ஷீலா பாலகிருஷனன் நியமிக்கப்படுகிறார்.    கேரளாவை சேர்ந்த ஷீலா பாலகிருஷனன் 1976-ஆம் ஆண்டு ஐ.ஏ.ஸ் பணியில் சேர்ந்தார். முன்னதாக இவர் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலராக இருந்தார்.

                                                        starlinex.gif - 1500 Bytes

இளநிலை உதவியாளர்/ தட்டச்சர் பதவியுயர்வு வழங்க தேர்ந்தோர் பட்டியல் 15.03.1999, 15.03.2000 மற்றும் 15.03.2001 நாளின்படி வெளியிடப்பட்டுள்ள பட்டியல் - முன்னுரிமையினை சரிசெய்தல் விவரங்கள் கோரி பள்ளிக்கல்வி இயக்ககம் உத்தரவு மற்றும் முன்னுரிமைப்பட்டியல்

தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான 05.01.2013 அன்று நடைபெறும் குறுவள மைய பயிற்சியான "கலை மற்றும் கைவினைப் பொருட்கள்" பயிற்சி கையேடு

starlinex.gif - 1500 Bytes
ஜனவரி 10க்குள் முதுகலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு?

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு வரும், ஜனவரி 10ம் தேதிக்குள், நடத்தப்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக தகுதியான தேர்வர்களைப் பற்றிய விவரங்களை, கல்வித்துறைக்கு அனுப்பும் பணியை, டி.ஆர்.பி., ஆரம்பித்துள்ளது.

சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட, 2,308 முதுகலை ஆசிரியர்களின் சான்றிதழ்கள், மீண்டும் ஒருமுறை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. 24ம் தேதி நிலவரப்படி, தகுதியற்ற, 18 பேர், தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதை, டி.ஆர்.பி., வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. இவர்கள் அனைவரும், தேர்வுப் பட்டியலில் இருந்து, நீக்கப்பட்டுள்ளனர். 

தேர்வு செய்யப்பட்ட 2,308 பேரின் சான்றிதழ்களும் சரிபார்த்த பின், மொத்தம் எத்தனை பேர், தகுதியற்றவர்கள் என்ற விவரம் தெரியவரும். இதற்கிடையே, தகுதியான தேர்வர்களைப் பற்றிய விவரங்களை, கல்வித்துறைக்கு அனுப்பும் பணியை, டி.ஆர்.பி., ஆரம்பித்துள்ளது. 

அனைவரது விவரங்களும், கல்வித்துறைக்கு வந்துசேர, மேலும் ஓரிரு நாட்கள் பிடிக்கும் எனவும், அதன்பின், ஜன.,10க்குள், "ஆன்-லைன்" கலந்தாய்வு வழியில், பணி நியமனம் செய்ய, நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
starlinex.gif - 1500 Bytes
ஆசிரியர்கள் நீண்ட விடுப்பில் செல்லும் போது, அரசு பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க கோரிக்கை

அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள், நீண்ட விடுப்பில் செல்லும் போது, அந்தப் பணியிடங்களில் மாற்று ஆசிரியர்களை நியமிக்காமல், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் கோரியுள்ளனர்.

துவக்கப் பள்ளிகளில், ஆசிரியர்கள், மகப்பேறு மற்றும் மருத்துவ விடுப்பு போன்ற, நீண்ட கால விடுப்பில் செல்லும் போது, அப்பணியிடங்களில், வேறு பள்ளிகளிலிருந்து, மாற்று ஆசிரியர்கள் வந்து, வகுப்புகளை நடத்துகின்றனர். இதனால், இரு பள்ளிகளிலும் முழுமையாக வகுப்புகள் நடத்த முடியாமல், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. 

கடந்த, 1997க்கு முன், நீண்ட கால விடுப்பு பணியிடங்களில் பணியாற்ற, தற்காலிக ஆசிரியர்கள் இருந்தனர். இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படாமல் வகுப்புகள் நடந்தன. தற்போதும், அதுபோன்று, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் முறையை, அரசு மேற்கொள்ள, துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். 

அரசு பள்ளிகளில் தற்போது, காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இப்போதே, மாவட்ட வாரியாக தற்காலிக ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டால், விடுமுறை பணியிடங்களில், வகுப்புகள் பாதிக்கப்படாமல் இருக்க வசதியாக இருக்கும். இதுகுறித்து, பல பள்ளிகளின் மேலாண்மைக் குழுச் சிறப்புக் கூட்டங்களில், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
starlinex.gif - 1500 Bytes

ஜனவரி 3,4 தேதிகளில் வி.ஏ.ஓ. கலந்தாய்வு

சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர்த்து, இதர, 30 மாவட்டங்களில், 1,870 வி.ஏ.ஓ.,க்களை பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, ஜனவரி, 3,4 தேதிகளில், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்கிறது. கலந்தாய்வுக்கு வருபவர்கள், உரிய அசல் சான்றிதழ்களுடன் வர வேண்டும் என, தேர்வாணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

வி.ஏ.ஓ., காலி பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு, கடந்த செப்டம்பர், 30ல் நடந்தது; 10 லட்சம் பேர், தேர்வை எழுதினர். இதன் முடிவுகள், நவம்பர், 30ல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, 1,870 வி.ஏ.ஓ.,க்களை, பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, ஜனவரி, 3,4 தேதிகளில் நடக்கும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. 

தேர்வு பெற்றவர்களுக்கு, விரைவு தபால் வழியாக, தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன என்றும், தேர்வாணையம் தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக, காலி பணியிடங்கள் எண்ணிக்கை குறித்த விவரங்கள், தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன. 

அதன்படி, சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களில், காலி பணியிடங்கள் இல்லை. இதர, 30 மாவட்டங்களில், 1,870 வி.ஏ.ஓ.,க்களும், பணி நியமனம் செய்யப்படுகின்றனர். ஆசிரியர் காலி இடங்களைப்போல், வி.ஏ.ஓ.,க்கள் இடங்களும், வட மாவட்டங்களில் தான், அதிகளவில் காலியாக உள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 123, கடலூரில் 88, கிருஷ்ணகிரியில் 73, திருவள்ளூரில் 100, திருவண்ணாமலையில் 115, வேலூரில் 112, விழுப்புரத்தில் 167 பணியிடங்கள் காலியாக உள்ளன.
                         starlinex.gif - 1500 Bytes
பள்ளி நேரத்தை மாற்றியமைப்பது குறித்து ஆலோசனை

சென்னை உட்பட மாநிலத்தின் மற்ற நகரங்களில், பள்ளி, கல்லூரி நேரங்களை மாற்றி அமைப்பது குறித்து, கல்வித்துறை மற்றும் கல்லூரி கல்வித்துறையிடம், நேற்று முதற்கட்ட ஆலோசனையை, போக்குவரத்து துறை நடத்தியது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் உள்ளிட்ட, மாநிலத்தின் மற்ற நகரங்களிலும், நாள்தோறும் வாகன விபத்துகளில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பலியாகி வருகின்றனர். விபத்துகளை தவிர்க்கும் வகையில், அப்பகுதிகளில், பள்ளி, கல்லூரி நேரங்களை மாற்றி அமைப்பது குறித்து ஆலோசித்து, விரைவில் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என, கல்வித்துறை மற்றும் கல்லூரி கல்வித்துறையிடம், கடந்தாண்டு போக்குவரத்து துறை வலியுறுத்தியது. 

சமீபத்தில், சென்னை பெருங்குடியில் நடந்த விபத்தில், பள்ளி, கல்லூரியை சேர்ந்த, நான்கு மாணவர்கள் பலியாயினர். இந்த சம்பவம் தொடர்பாக, சென்னை ஐகோர்ட், தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. "பள்ளி, கல்லூரி துவங்கும் நேரம் மற்றும் முடியும் நேரத்தில், போதிய அளவிற்கு, பேருந்துகள் இயக்கப்படாததால், மாணவர்கள், படிக்கட்டுகளில் தொங்கி, பயணம் செய்கின்றனர்" என்ற குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன், நேற்று முதல் கட்ட ஆலோசனையை, போக்குவரத்து துறை நடத்தி உள்ளது. இதில், "விபத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பதை தடுக்க, பள்ளி, கல்லூரி துவங்கும் நேரம் மற்றும் முடியும் நேரத்தை மாற்றியாக வேண்டும்" என, போக்குவரத்து துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். 

டில்லி உள்ளிட்ட, பல்வேறு நகரங்களில், காலை, 7:00 மணிக்கே, கல்வி நிறுவனங்கள் இயங்க ஆரம்பித்து விடுகின்றன. இதனால், பேருந்துகளில் நெருக்கடி இல்லாமல், மாணவர்கள் பயணிக்க முடிகிறது. இந்த முறையால், விபத்துகளும் நடப்பதில்லை. 

இதேபோன்று, சென்னை உள்ளிட்ட மாநகராட்சி, நகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில், பள்ளி, கல்லூரி துவங்கும் மற்றும் முடியும் நேரத்தை, விரைவில் மாற்றுவது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. 

இதுகுறித்து, பள்ளி கல்வித்துறை மற்றும் கல்லூரி கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன், போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள், ஜனவரி முதல் வாரத்தில், மீண்டும், விரிவாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
starlinex.gif - 1500 Bytes
பிளஸ் 2: முதல்வரின் தகுதி பரிசுத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் முதல்வரின் தகுதி பரிசுத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
click here to download the Press Release 


இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழை ஒரு பாடமாகக் கொண்டு பயின்று தொடர்ந்து கல்வி பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த முதல் ஆயிரம் மாணவர்கள் மற்றும் முதல் ஆயிரம் மாணவிகளுக்கு முதல்வரின் தகுதி பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.

பிளஸ் 2 படிப்பைத் தொடர்ந்து அல்லது ஓராண்டு இடைவெளிக்குப் பின்னர் மேல்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் ரூ.3 ஆயிரம் வீதம் ஐந்தாண்டுகளுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும். மாணவர்கள், 1069 மதிப்பெண்களும், மாணவிகள் 1082 மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். 2011-12-ம் கல்வியாண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் முதல்வரின் தகுதி பரிசுத் தொகையினைப் பெற்று தொடர்ந்து புதுப்பிக்கும் மாணவர்கள், அடுத்த நிதியாண்டு முதல் (2012-2013) ரூ.3 ஆயிரம் பெறலாம்.

நடப்பாண்டு (2012) மார்ச்சில் நடைபெற்ற பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தகுதி வாய்ந்த மாணவர்கள் மட்டும் தங்களது பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், ஜாதிச் சான்றிதழ் மற்றும் மேல்படிப்புக்கான மதிப்பெண் பட்டியல் நகல்களுடன் தங்கள் கல்லூரி அமைந்துள்ள மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருக்கு கல்லூரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

starlinex.gif - 1500 Bytes

Thursday, December 27, 2012


ஸ்மார்ட்டாகும் அரசுப் பள்ளிகள்!

கல்விதான் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம். உலகத்தை மாற்றுவதற்கு அதைப் பயன்படுத்தலாம்!' 

                                                                                               - நெல்சன் மண்டேலா-


தனியார் பள்ளிகளுக்குச் சற்றும் சளைக்காமல் பலவகையான புதுமையான தொழில்நுட்பங்களை அரசுப் பள்ளிகளிலும் அமல்படுத்தி வருகிறது தமிழக அரசு. இதற்காக கல்வித் தகவல் மேலாண்மைத் திட்டம் (Educational Management Information System)என்னும் புதிய திட்டத்தை சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது. இதன் ஒரு பகுதியாக அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் கார்டு (Smart Card) Gனப்படும் நவீன சிறப்பு அடையாள அட்டைகள் பயன்படுத்தப்படவுள்ளன.

அது என்ன ஸ்மார்ட் கார்டு? நாம் செல்போனில் பயன்படுத்தும் சிம் கார்டுகளைப்போல சிறிய அளவில் இருக்கும் இந்த ஸ்மார்ட் கார்டுகளில் எண்ணற்ற தகவல்களைப் பதிவு செய்யலாம். ஒரு மாணவரைப் பற்றிய எல்லா விவரங்களையும் உள்ளடக்கிய இந்த மின்னட்டை ஒரு சிறப்பு அடையாள அட்டையாகும்.

தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு ஸ்மார்ட் கார்டு தரப்படவுள்ளது. இதில் அந்த மாணவரின் பெயர், பிறந்த தேதி, பெற்றோர் பெயர், முகவரி, பள்ளிச் சேர்க்கை விவரம், தேர்ச்சி விவரங்கள், மாணவர்களின் ரத்த வகை போன்ற அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கும். குடும்பச் சூழ்நிலை காரணமாக அந்த மாணவர் வேறு பகுதிக்கு இடம் பெயர நேர்ந்தால், அங்கிருக்கும் அரசுப் பள்ளியில் சேர ஸ்மார்ட் கார்டில் இருக்கும் தகவல்களே போதுமானதாக இருக்கும். அரசின் நலத்திட்டங்களுக்குத் தகுதியான மாணவர்களைக் கண்டறியவும், இலவச மடிக் கணினித் (லேப்டாப்) திட்டம் போன்ற நலத் திட்டங்கள் மாணவர்களைச் சென்றடைவதை உறுதிசெய்யவும் இந்த ஸ்மார்ட் கார்டுகள் பெரிதும் உதவும்.

இந்தத் திட்டம் அனைத்து அரசுப் பள்ளிகளிலும், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் மொத்தம் 91,54,741 மாணவர்கள் பயனடைவர். கடந்த நவம்பர் மாதம் 22-ஆம் நாள் தலைமைச் செயலகத்தில் ஒரு மாணவிக்கு இந்த ஸ்மார்ட் கார்டு அட்டையை வழங்கி, முதல்வர் ஜெயலலிதா திட்டத்தைத் தொடங்கிவைத்தார். முதல்கட்டமாக திருச்சி மாவட்டத்திலுள்ள ஐந்து பள்ளிகளுக்கு இந்த அட்டைகள் வழங்கப்பட்டு, திட்டத்திற்கான வெள்ளோட்டம் நடைபெற்றது.

மாணவரின் உடல்நலம், மருத்துவ விவரங்கள் அடங்கிய ஹெல்த் கார்டு (Health Card), இந்த ஸ்மார்ட் கார்டுடன் ஒருங்கிணைக்கப்படவுள்ளது. மாணவருக்கு அவசரச் சிகிச்சை தேவைப்படும் நேரங்களில் இது பெரிதும் உதவும். இதுதவிர, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் பின்பற்றப்படும், ‘எளிமையாக்கப்பட்ட செயல்வழிக் கற்றல் முறை’ (Simplified Activity Based Learning) எனப்படும் புதிய முறையும் தற்போது அரசுப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த புதியப் திட்டங்கள் அரசுப் பள்ளிகளில் கல்வி வசதிகளைப் பெரிதும் மேம்படுத்தும் என்பது உறுதி.

Wednesday, December 26, 2012

தொடக்க/ உயர்தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான அடுத்த குறுவள மைய பயிற்சி (CRC) 05.01.2013 அன்று கலையும் கைவண்ணப் பொருட்கள் தயாரித்தல் என்ற தலைப்பில் நடைபெறுகிறது

டிச.27-ல் சென்னையில் பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்களின் மாநிலம் தழுவிய பேரணி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வருகிற டிச.27-ம் தேதி மாநிலம் தழுவிய பேரணி நடைபெறும் என தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் கி.ரத்தினக்குமார் தெரிவித்தார்.

சிதம்பரத்தில் செய்தியாளர்களிடையே இன்று அவர் தெரிவித்தது: பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதித்தேர்வு மற்றும் போட்டித்தேர்வு முறையை ரத்து செய்து, தொடர்ந்து பதிவு மூப்பு அடிப்படையிலேயே பணி நியமனம் செய்ய வேண்டும்.

2010-ம் ஆண்டில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட சுமார் 24 ஆயிரம் பிஎட் பட்டதாரிகளில் நான்கு கட்டமாக பணி நியமனம் அளித்தது போல, மீதமுள்ள சுமார் 8100 பிஎட் பட்டதாரிகளுக்கும் அப்போது அறிவிக்கப்பட்டு நிலுவையில் உள்ள அரசாணைகளை கொண்டு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற டிச.27-ம் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து மாநிலந் தழுவிய பேரணி புறப்படுகிறது. பேரணி முடிவில் தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். இப்பேரணியில் மாநிலம் முழுவதிலிமிருந்து சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர் என கி.ரத்தினக்குமார் தெரிவித்தார்.
ஆசிரியர் பணிக்கு ஆணை பெற்றவர்கள் பணியில் சேர்ந்தார்களா?

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமன உத்தரவு பெற்றவர்கள் எத்தனை பேர் பணியில் சேர்ந்தனர் என்ற விவரத்தை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

ஆசிரியர் தகுதித் தேர்வுகள் இரண்டு கட்டமாக நடந்தது. முதல் தாளில் 10621 பேரும், இரண்டாம் தாளில் 8722 பேரும் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு கடந்தமாதம் சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டது.

மொத்தம் 19000 பேருக்கு கடந்த 13ம் தேதி முதல்வர் பணி நியமன உத்தரவுகளை வழங்கினார்.

பணி நியமன உத்தரவு பெற்றவர்கள் இம்மாதம் 17ம் தேதியே பணியில் சேர வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது.

இதையடுத்து ஆசிரியர்கள் பணியில் சேர்ந்து வருகின்றனர். இந்நிலையில் சிலர் பணியில் சேர கால அவகாசம் கேட்டுள்ளனர்.

அதில் 2 பேர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர். அதனால் ஒரு மாதம் அவகாசம் கேட்டுள்ளனர். 3 பேர் எம்.எட் தேர்வுக்கு தயாராகி வருவதால் மே மாதம் வரை கால அவகாசம் கேட்டுள்ளனர். இவர்கள் தவிர மற்றவர்கள் பணியில் சேர்ந்து வருகின்றனர்.

பணி நியமனம் பெற்றவர்களில் பலர் வேறு பணியில் இருப்பதாக தெரிகிறது. அவர்கள் ஆசிரியர் பணியில் சேர்வார்களா என்ற சந்தேகம் உள்ளது.
முன் அனுமதி பெறா மல் பணியில் சேராமல் இருந்தால் 3 முறை பள்ளிக் கல்வித் துறை மூலம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். அதற்கான விளக்கம் அளிக்காமல் இருந்தால் அவர்கள் ஆசிரியர் பணியில் சேர முடியாது. சான்று சரிபார்ப்பின்போது நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சான்று சரிபார்ப்பில் கலந்து கொள்ளவில்லை.

அவர்கள் இப்போது சான்று சரிபார்ப்புக்கு வரத் தயாராக இருக்கின்றனர். ஆசிரியர் தேர்வு வாரியம் அவர்களுக்கு சான்று சரிபார்ப்பு நடத்துமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இதற்கிடையே, பணி நியமனம் பெற்று ஆசிரியர் பணியில் இதுவரை சேர்ந்துள்ளவர்கள் யார் யார் என்ற விவரத்தை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தயாரித்து அனுப்ப வேண்டும்.

மேலும், பணியில் சேராமல் உள்ளதன் காரணத்தையும் பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அந்த விவரங்கள் இன்று பள்ளிக்கல்வித்துறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல தொடக்க கல்வித்துறைக்கும் இன்று விவரங்கள் வருகின்றன.
பள்ளி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு ஆகியவற்றை அனைத்து அரசு / தனியார் தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளில் 2013 ஜனவரி மாதத்திற்குள் நடத்தி அறிக்கை சமர்பிக்க - தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலம் - 2012-13 ஆம் ஆண்டு முதல் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறும் முதல் 1000 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பைச் சார்ந்த மாணவ / மாணவியருக்கு பரிசுத் தொகை வழங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - மனிதவள மேம்பாட்டு குறியீட்டின்படி பின்தங்கிய 8 மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதும் மாணவ, மாணவியர்களுக்கு 2012-2013 ஆம் ஆண்டுக்கான சிறப்பு வழிகாட்டி வழங்குதல் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

பல்வேறு படிப்பு படித்து கொண்டு இருக்கும் போது தமிழ்நாடு அரசு பணியில் சேர்ந்தாலும், அவர்கள் பணியில் சேர்ந்த்து பின் தகுதியுள்ள விடுப்பு எடுத்து படிப்பை தொடரலாம், படிப்பை முடித்து மீண்டும் பணியில் சேரலாம் - பழைய அரசாணை


(இது தற்போது ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிப்பெற்று பணியில் சேர்ந்துள்ள புதிய ஆசிரியர்கள் தாங்கள் படித்து வந்த கல்வியை தொடர பொருந்தும் என அறியப்படுகிறது)
பள்ளி பாட புத்தகங்கள் சிடி முறையில் மாற்றத் திட்டம்

தமிழகத்தில், அடுத்த கல்வியாண்டில், பாட புத்தகங்களை சிடி வடிவில் கொண்டு வருவதற்கான, முயற்சியில், கல்வி துறையினர் இறங்கியுள்ளனர். இதற்காக, பள்ளிகள்தோறும், 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான, பாடத்தினை இ-கன்டன்ட் என்ற மின்னனு பாடப்பொருள் தயாரிக்க போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம், ஆசிரியர்களுக்கு, கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கப்பட்டு, பள்ளிகளுக்கு லேப்-டாப் வழங்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப முறையின் கீழ், "வெர்ஷன் 2020" இலக்கை அடைய, அடுத்த கல்வியாண்டில், கம்ப்யூட்டர் வழியாக, பாடம் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதற்காக, பாடங்களை சிடி வடிவில் தொகுத்து, முதல் கட்டமாக, பள்ளிகளுக்கு வழங்கப்படும். சிடிக்கள் மூலம், ஆசிரியர்கள் பாடம் நடத்துவர். இதை தொடர்ந்து, புத்தகங்களுக்கு பதில், மாணவர்களுக்கு சிடியாக வழங்கப்படும். தற்போது, மாவட்டம் வாரியாக,6 முதல், 8 வகுப்பு பாடம் தொடர்பாக, மின்னணு பாடப்பொருள் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். 

இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் கம்ப்யூட்டர் ஆர்வம் உள்ளவர்கள், 6 முதல், 8ம் வகுப்பு பாடங்களில், ஏதேனும், ஒரு பாடப்பகுதியை தேர்ந்தெடுத்து, 3டி வீடியோ முறையில், எளிமையாக புரியும் வகையில், தமிழில் விளக்க பயிற்சியுடன் வழங்கவேண்டும். இப்போட்டியில், பங்கேற்போர், வரும், ஜனவரி 18ம் தேதிக்குள், அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகத்திற்கு, முழுவிபரத்தை அனுப்ப வேண்டும் என, தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரி, ஒருவர் கூறியதாவது: முதல் கட்டமாக, 6 முதல், 8ம் வகுப்பு வரையிலான பாடங்களை தேர்வு செய்து, அதில், கடினமான பாடங்களை, எளிதில் மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், கம்ப்யூட்டர் மூலம் நடத்துவதற்காக, சிடி தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். 

இதற்காக, பாடங்கள் குறித்து, "கிராபிக்ஸ், அனிமேஷன்" போன்று பாடங்களை உருவாக்கி, மாணவர்களுக்கு, எளிதில் புரியும் வகையில், சிடி தயாரிக்கும் போட்டி நடத்த உள்ளோம். தொடர்ந்து மாநில அளவில், புத்தகங்கள் சிடி வடிவில் வெளியிடப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆசிரியர் பற்றாக்குறை: பள்ளிகளில் தொழிற்கல்வி பிரிவுகள் மூடல்

கல்வி பாடப் பிரிவுகளில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களின், 1,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால், மேல்நிலைப் பள்ளிகளில், தொழில் கல்வி பாடப் பிரிவுகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின், மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ், 1978ம் ஆண்டு, தொழில் கல்வி பாடப்பிரிவு துவங்கப்பட்டது. மாணவர்களின் தொழில்திறன் மேம்பாட்டிற்கு, பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளில் வர்த்தகம், விவசாயம், பொறியியல் உள்ளிட்ட, ஆறு பிரிவுகளின் கீழ், மின் மோட்டார் பழுது பார்த்தல், கணக்கு தணிக்கை பயிற்சி உள்ளிட்ட, 66 பாடப்பிரிவுகள் செயல்பட்டு வந்தது.

இப்பிரிவுகளில் படித்து, உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு, 4 சதவீதம் பொறியியல் கல்லூரிகளிலும், 10 சதவீதம் பட்டயப் பிரிவுகளிலும், கலை கல்லூரிகளில், 25 சதவீதமும் இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. பாடப்பிரிவுகள் துவங்கப்பட்ட போது, அகடமிக் பிரிவுகளை ஒப்பிடும் போது, தொழில்கல்வி பிரிவுகளில், 3:1 என்ற அடிப்படையில், மாணவர்கள் சேர்க்கை இருந்தது. தற்போது, 8:1 என்ற அளவிற்கு, மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. 

ஓய்வுபெறும் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதே, இந்நிலைக்கு முக்கிய காரணம். கடந்த, 1978 முதல் 1990 வரை தொழில் கல்வி பாடப்பிரிவு ஆசிரியர்கள், 5,300 பேர் நியமனம் செய்யப்பட்டனர். தற்போது, 1,000 ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். இந்த பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. சில பள்ளிகளில், இப்பணியிடங்களில் பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில், மிகவும் சொற்ப சம்பளத்திற்கு, ஆசிரியர்களை நியமித்து உள்ளனர். 

பல பள்ளிகளில், ஆசிரியர்கள் நியமிக்காமல், மாணவர்கள் சேர்க்கை இல்லை என்ற தவறான காரணங்கள் கூறி, பள்ளிகளில், இத்துறை மூடப்பட்டு வருகிறது. இதுகுறித்து, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழில் கல்வி ஆசிரியர்கள் சங்க மாநில பொது செயலர் நல்லப்பன் கூறியதாவது: 

கடந்த, 2007 ம் ஆண்டு முதல் ஆசிரியர் பணி நியமனம் செய்யவும், ஓய்வுபெற்ற ஆசிரியர்களின், காலி பணியிடங்களை நிரப்பவும், எவ்வித நடவடிக்கையும், அரசு மேற்கொள்ளவில்லை. மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில், இப்பிரிவுகள் துவக்கப்படுவதும் கிடையாது. 

மத்திய அரசு, கடந்த முறை தொழிற்கல்வி மேம்பாட்டுக்காக, 100 கோடி நிதி ஒதுக்கியது. இந்த நிதி, எப்படி பயன்படுத்தப்பட்டது என்பது புரியவில்லை. தொழில் கல்வி ஆசிரியர்களுக்கு, பல பாகுபாடுகள் காட்டப்படுகின்றன. பணி மூப்பு, தகுதிக்கு ஏற்ப, பிற ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் எவ்வித பதவி உயர்வும், எங்களுக்கு இல்லை என்பது, வேதனைக்குரியது. 

மேலும், 27 ஆண்டுகள் பணிபுரிந்தும், நடைமுறை சிக்கல் என்ற பெயரில், 400 ஆசிரியர்கள் ஓய்வூதியம், பிற உதவிகள் ஏதும் இன்றி, ஓய்வு பெற்று உள்ளனர். இதுபோன்று, தொழில் கல்வி பாடப்பிரிவில் பாகுபாடு காட்டுவது சரியல்ல. இதற்கு, அரசு, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
கல்வித்துறை அதிகாரிகள் மாற்றம் : புத்தாண்டில் வருகிறது அறிவிப்பு - Dinamalar

பள்ளி கல்வித்துறையில், இயக்குனர் நிலையில், ஏற்கனவே ஒரு பணியிடம் காலியாக உள்ள நிலையில், இம்மாத இறுதியில், மேலும் ஒரு பணியிடம் காலியாகிறது. இதனால், புத்தாண்டு பிறந்ததும், அதிகாரிகள் மட்டத்தில் மாற்றம் வரும் என, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பள்ளிக்கல்வி இயக்குனராக இருந்த மணி, ஓய்வுபெற்றதும், ஆசிரியர் கல்வி இயக்குனராக இருந்த தேவராஜன், பள்ளிக் கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டார். மத்திய இடைநிலைக் கல்வி திட்ட கூடுதல் இயக்குனர் இளங்கோவன், ஆசிரியர் கல்வி இயக்குனர் பொறுப்பை, கூடுதலாக கவனித்து வருகிறார்.

பொது நூலகத்துறை இயக்குனர் பணியிடமும், காலியாக உள்ளது. இதை, தொடக்க கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், கூடுதலாக கவனித்து வருகிறார்.

நூலகத் துறையில் அனுபவம் வாய்ந்த வரை, நூலகத் துறை இயக்குனராக நியமிக்க வேண்டும் என, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. புதிய இயக்குனர் நியமிக்கப்படும் வரை, கூடுதல் பொறுப்பு நிலையே தொடரும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

இந்நிலையில், மெட்ரிக் பள்ளி இயக்குனர் செந்தமிழ்ச் செல்வி, இம்மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார். இதனால், அதிகாரிகள் மட்டத்தில், விரைவில் மாற்றங்கள் வரும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

தேர்வுத்துறை இணை இயக்குனர் தங்கமாரி மற்றும் பள்ளிக்கல்வி இணை இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர், பதவி உயர்வு பட்டியலில் உள்ளனர். இவர்களின் பதவி உயர்வால், இரண்டு, இணை இயக்குனர் பணியிடங்கள் காலி ஏற்படும். நூலகத் துறையில், ஒரு இணை இயக்குனர் பணியிடம், ஏற்கனவே காலியாக உள்ளது. இந்தப் பதவியை, கண்ணப்பன், கூடுதலாக கவனித்து வருகிறார். 

எனவே, பணிமூப்பு பட்டியலில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூன்று பேர், இணை இயக்குனர்களாக பதவி உயர்வு செய்யப்படுவர். இந்த மாற்றங்கள் அனைத்தும், புத்தாண்டு பிறந்ததும் நடவடிக்கைக்கு வரும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாகவே பி.எட்., தேர்வு: டி.இ.டி.,யில் பங்கேற்க வாய்ப்பு

இந்தாண்டு பி.எட்., படிப்புகளுக்கான தேர்வுகளை, முன்னதாகவே நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்கள், வரும் ஜூனில் நடக்கும் டி.இ.டி., தகுதித்தேர்வில், வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்கான சூழல் உருவாகியுள்ளது.

கட்டாய கல்விச் சட்டப்படி, ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட்., முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்ய, டி.இ.டி., (ஆசிரியர் தகுதித் தேர்வு) நடத்தப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட இத்தேர்வில், பி.எட்., தேர்வு முடிவிற்காக காத்திருப்போரும் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டது. 

டி.இ.டி., தேர்வில் வெற்றி பெற்ற போதும், பி.எட்., படிப்பிற்கான சான்றுகளைப் பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தால், பிரச்னை உருவானது. இதை போக்குவதற்கு, அரசு எடுத்த முயற்சியின் முதற்கட்டமாக, இந்தாண்டு பி.எட்., படிப்போருக்கான தேர்வுகளை, முன்னதாகவே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தனியார் கல்வியியல் கல்லூரி நிர்வாகி ஒருவர் கூறுகையில், "வரும் ஏப்ரலில் தேர்வுகளை நடத்தி, ஜூன் முதல் வாரத்திற்குள் சான்றுகளை வழங்க ஏற்பாடுகள் நடக்கிறது. செய்முறைத் தேர்வுகளை, பிப்ரவரி 18ல் துவக்கும் வகையில் ஆயத்தப்படுத்த அறிவுறுத்தல் வந்துள்ளது. முந்தைய ஆண்டுகளைவிட, இரு மாதங்களுக்கு முன்னதாகவே தேர்வுகள் நடத்தப்பட உள்ளன,' என்றார்.