Tuesday, January 8, 2013

புதிய கல்வி ஆண்டில் ஆசிரியர் காலி பணி இடங்கள் பதவி உயர்வு, நேரடி நியமனம்

புதிய கல்வி ஆண்டில் ஏற்படும் ஆசிரியர் காலி பணி இடங்களை சிறப்பு பதவி உயர்வு, நேரடி நியமனம் மூலம் நிரப்ப பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. 2013,14ம் கல்வி ஆண்டில் பட்டதாரி ஆசிரியர்கள், சிறுபான்மை மொழி, இடைநிலை ஆசிரியர் மற்றும் சிறப்பாசிரியர்களின் காலி பணி இடங்கள் உருவாகின்றன. இவற்றை நிரப்ப பதவி உயர்வு மூலமாகவும், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து தேர்வாளர் பட்டியல் பெற்று நேரடி நியமனம் மூலமாகவும் நிரப்பப்பட உள்ளன.

இதற்காக உத்தேச பணியிட மதிப்பு பட்டியலை அரசின் பார்வைக்கு அனுப்புவதற்காக அந்தந்த மாவட்டங்களில் ஏற்படும் காலி பணி இடங்கள் குறித்த முழுவிவரங்களை வரும் 21ம் தேதிக்குள் தயாரித்து இணை இயக்குனருக்கு அனுப்ப வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். விவரங்கள் சரியாக இருக்க வேண்டும் எனவும் தவறாக இருந்தால் அதற்கான பொறுப்பை முதன்மைக் கல்வி அலுவலரே ஏற்க நேரிடும் எனவும், சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகளை பொருத்தவரை சம்பந்தப்பட்ட மாநகராட்சி கல்வி அலுவலர்கள் விவரங்களை சமர்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

காலி பணி இடவிவரத்தை 1.1.2013ல் உள்ளவாறு ஆசிரியரின்றி காலியாக உள்ள பணி இட விவரம் (வயது முதிர்வு ஓய்வு நீங்கலாக) படிவம் ஒன்றிலும், 1.6.2012க்கு பின்னர் ஓய்வு பெற்று மற்றும் 31.5.2013 முடிய மறு நியமன அடிப்படையில் பணிபுரிந்து ஓய்வு பெறுபவர்கள் சார்பில் விவரம் படிவம் இரண்டிலும் தயாரித்து அனுப்ப வேண்டும் எனவும் பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) இதர பட்டதாரி ஆசிரியர்கள் (பாட வாரியாக) சிறுபான்மை மொழிப்பாட ஆசிரியர்கள் இடைநிலை ஆசிரியர் மற்றும் இதர சிறப்பாசிரியர்கள் பணியிடங்களுக்கு தனித்தனியாக விவரத்தை அனுப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர் காலிப் பணி இடங்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு பள்ளியிலும் பயிலும் மாணாக்கர்களின் எண்ணிக்கையின் அடிப்படை யில் அப்பள்ளியில் ஏற்கனவே பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கையை பாடவாரியாக கணக்கிட்டு காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணி இடங் களை எந்த பாட ஆசிரியர்களைக் கொண்டு நிரப்பினால் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் மேம்படும் என்பதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பள்ளியிலும் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை பட்டதாரி ஆசிரியர்களைக் கொண்டு பாடவாரியாக நிரப்பிட உரிய கருத்துருக்களை தொகுத்து அனுப்ப வேண்டும்.
போட்டித்தேர்வின் மூலம் 12 DEOகள் மற்றும் 12 AEEOகள் நேரடி நியமனம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் அறிவிப்பு!...

நேரடி தேர்வு மூலமாக விரைவில் 12 உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகளும், 12 மாவட்ட கல்வி அதிகாரிகளும் நியமிக்கப்பட உள்ளனர். தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலமாக உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகளாக (ஏ.இ.இ.ஓ.) பணி அமர்த்தப்படுகிறார்கள்.ஏ.இ.இ.ஓ. பணி காலி இடங்களில் 40 சதவீத இடங்கள் நேரடி தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன. இதற்கான போட்டி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது.

அந்த வகையில், நடப்பு கல்வி ஆண்டில் 12 ஏ.இ.இ.ஓ. பணி இடங்கள் நேரடி தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிட உள்ளது. 
இதே போல், மாவட்ட கல்வி அதிகாரி நியமனத்தை பொறுத்தவரையில் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்தும் (75 சதவீதம்) நேரடி நியமனம் (25 சதவீதம்) மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. பதவி உயர்வில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 40 சதவீதமும், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 35 சதவீதமும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. 
 பள்ளி கல்வித்துறையில் காலியாக இருந்த 75 டி.இ.ஓ. காலி இடங்களில் பதவி உயர்வு மூலமாக 53 இடங்கள் நேற்று முன்தினம் நிரப்பப்பட்டன. இதன்மூலம் 53 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது. 12 டி.இ.ஓ. பணி இடங்களை நேரடிதேர்வு மூலமாக நிரப்ப முடிவு செய்துள்ளனர். டி.இ.ஓ. தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.இ.ஓ.) நடத்துகிறது. கடந்த சில ஆண்டுகளாக டி.இ.ஓ. பதவிகளுக்கு நேரடி தேர்வு ஏதும் நடத்தப்படவில்லை. இந்த நிலையில், 12 டி.இ.ஓ. காலி இடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. விரைவில் அறிவிப்பு வெளியிட உள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் சிறப்பு பி.எட் ஆசிரியர்களுக்கு பணி நியமனம் கோரி வழக்கு

சிறப்பு பிஎட் பட்டதாரிகள் சங்க மாநில தலைவர் வடிவேல் முருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,''மனநலம் பாதித்த, பார்வையற்ற, கேட்கும் திறனற்ற, போலியோ தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி கற்பிக்கும் தகுதி உடைய சிறப்பு பிஎட் பட்டதாரிகள் ஏராளமானோர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பாடம் கற்பிக்க சிறப்பு பாடம் படித்த ஆசிரியர்கள் இல்லை. பொது பிஎட் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. சிறப்பு பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கவில்லை. 

பொது பிரிவு ஆசிரியர் பணியிடங்களில் சிறப்பு பிஎட் முடித்தவர்களை நியமிக்கலாம் என மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதை பின்பற்றி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் குறைந்த பட்சம் 2 பணியிடத்தை உருவாக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

2010 கணக்கெடுப்பில் 93,289 மாற்றுத் திறனாளிகள் கல்வி நிலையம் சென் று வருகின்றனர். இவர்களுக்கு பாடம் கற்பிக்க சிறப்பு ஆசிரியர்கள் இல்லை. எனவே, சிறப்பு பிஎட் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தை உருவாக்கி, அதில் எங்களை நியமிக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி ராமசுப்பிரமணி, பதில் அளிக்க உயர் கல்வி செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
பொங்கல் பரிசு அறிவிப்பு வரவில்லை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றம்- Dinamalar

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் பரிசுக்கான அறிவிப்பு வராததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசாக 3,500 ரூபாயும், ஏ, பி பிரிவு ஊழியர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசாக 1,500 ரூபாயும் வழங்க வேண்டும்.

கடந்த ஆண்டை பொறுத்தவரை ஜனவரி மாதம் 2ம் தேதி பொங்கல் பரிசுக்கான அரசு உத்தரவு வெளியிடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு இதுவரை பொங்கல் பரிசுக்கான அரசு ஆணை வெளியிடவில்லை. இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே, உடனடியாக பொங்கல் பரிசுக்கான அரசாணையை அரசு வெளியிட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் ராஜ மார்த்தாண்டம், செயலாளர் சரவணன், பொருளாளர் ஆறுமுகதாஸ், கல்வி மாவட்ட செயலாளர் சாம்ராஜ், அகஸ்டின் ராஜன், செல்வ சுந்தர்ராஜ், மாநில தணிக்கையாளர் பாபு ஆகியோர் தெரிவித்தனர்.
விரைவில் மாணவர்களுக்கு விலையில்லா புவியியல் வரைபடம் (Atlas)

தமிழ்நாட்டு பாடநூல் கழகத்தின் மூலமாக தமிழ் மற்றும் ஆங்கில வழி புவியியல் வரைபடம் வழங்கப்பட இருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிகின்றன. 09.01.2013 முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகிக்கப்பட்டு அது முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் மூலமாக பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எளிய அறிவியல் சோதனைகள் - 19.01.2013 அன்று நடைபெறும் குறு வள மைய பயிற்சி கட்டகம்

+2 பொதுத்தேர்வு மார்ச் 2013 தனித்தேர்வர்களிடமிருந்து ஆன்-லைன் விண்ணப்பங்களை வரவேற்று அரசு தேர்வுத்துறை வழங்கியுள்ள வழிக்காட்டு நெறிமுறைகள்

+2 பொதுத்தேர்வு - மார்ச் 2013 அரசுத் தேர்வுத்துறை இயக்ககத்தால் வெளியிடப்பட்டுள்ள கால அட்டவணை

"ஓய்வூதியம் கொடுங்க; இல்லை உயிரை விட அனுமதிங்க!' ஜனாதிபதிக்கு கடிதம் - Dinamalar

 " எங்களுக்கு மூன்று ஆண்டுகளாக ஓய்வூதியம் கொடுக்கப்படவில்லை. இதனால், வறுமையில் வாடுகிறோம். வரும், 25ம் தேதிக்குள், ஓய்வூதியம் வழங்குங்கள்; இல்லையெனில், எங்கள் உயிரை போக்கிக் கொள்வதற்கு, அனுமதி கொடுங்கள்' என, மகாராஷ்டிராவைச் சேர்ந்த, 164 பேர், ஜனாதிபதிக்கு, உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



மகாராஷ்டிரா மாநிலம், யாவத்மால் மாவட்டத்தை சேர்ந்த சிலர், மத்திய அரசின் திட்டத்தில், முதியோர், மாற்றுத் திறனாளி, விதவை ஆகியோருக்கான, ஓய்வூதியங்களை பெற்று வந்தனர்.மூன்று ஆண்டுகளாக, இவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை; பல்வேறு தரப்பினரை அணுகியும், பலன் கிடைக்கவில்லை. இதையடுத்து, ஓய்வூதியம் கிடைக்காத, 164 பேர், நேற்று, யவத்மாலில் உள்ள, வருவாய் துறை அலுவலகத்துக்கு வந்தனர். அங்கிருந்த தாசில்தாரிடம், தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி, ஜனாதிபதிக்கு எழுதிய, கையொப்பமிட்ட மனுவை அளித்தனர்; அதில் கூறப்பட்டிருந்ததாவது:


குடியரசு தினத்தில் தற்கொலை :

மூன்று ஆண்டுகளாக, எங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை. இதனால், பட்டினியில் வாடுகிறோம். எங்களுக்கு, வேறு வாழ்வாதாரம் எதுவும் இல்லை. எனவே, வரும், 25ம் தேதிக்குள், ஓய்வூதியம் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லையெனில், அதற்கு அடுத்த நாள்; அதாவது, குடியரசு தினத்தில், ஒட்டு மொத்தமாக தற்கொலை செய்து கொள்வதற்கு, எங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில், தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, யவத்மால் கலெக்டர், அஸ்வின் முட்கால் கூறியதாவது: சம்பந்தபட்ட பகுதிகளில், போலியான தகவல்களை கொடுத்து, ஓய்வூதியம் பெறுவதாக புகார் வந்தது. இதையடுத்து, ஒரு சிலருக்கு, ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அஸ்வின் முட்கால் கூறினார்.

PFRDA Bill மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - தற்போதைய நிலை குறித்த ஒரு பார்வை

காப்பீட்டுத் துறைக்கு சமமாக ஓய்வூதிய நிதியிலும் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பது மற்றும் ஓய்வூதிய மசோதாவில் திருத்தங்கள் கொண்டு வருவதென்ற மத்திய அமைச்சரவை முடிவுகள் மத்திய அரசு ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர் 4 அன்று மத்திய அமைச்சரவை ஓய்வூதிய நிதி நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க அதிகார (PFRDA) மசோதா 2011ல் அலுவலக ரீதியான திருத்தங்கள் உருவாக்குவதற்கான ஒப்புதல் அளித்தது,  அந்த முடிவென்பது, நிதித்துறை நிலைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது என்பது அதன் துவக்கத்திலேயே பட்டவர்த்தனமாக தெரிந்தது.  அத்தகைய நடவடிக்கைகள் ஓய்வூதியத்திற்கு பங்களிப்பவர் நலனுக்கு உகந்தது போல் தெரிந்தாலும், உண்மையில் அது அவ்வாறு இல்லை என்பதால், தொழிலாளர்களுக்கான அமைப்புகள், தொழிற்சங்கங்கள் ஆகியவை / அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் டிசம்பர் 12ல் இத்தகைய சீரமைப்பு என்ற பெயரிலான நடவடிக்கைகளை எதிர்த்து தேசிய அளவிலான ஒரு வேலை நிறுத்தத்திற்கு செல்ல முடிவெடுத்தனர்.

மத்திய அரசு, மற்றும் மத்திய பொதுத்துறை ஊழியர்களுக்குமான ஓய்வூதியத் திட்டத்தில் “சீர்திருத்தம்” கொண்டு வர வேண்டும் என்ற நோக்கம் விரைவு படுத்தப்பட்டிருக்கும் அந்த நிலையில்தான் இந்த ஓய்வூதிய நிதி நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க மசோதாவின் தோற்றமே உருவெடுத்தது.  அதைத் தொடர்ந்து இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.  இராணுவ சேவையில் உள்ளவர்களை தவிர்த்து, 2004ம் ஆண்டு ஜனவரி 1 முதல் பணியிலமரும் அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் இந்த திட்டம் கட்டாயமாக்கப் பட்டுள்ளது.  இந்த புதிய ஓய்வூதிய திட்டம் முன்பிருந்த “வரையறுக்கப்பட்ட பயனுள்ள திட்டம்” என்ற நிலையிலிருந்து “வரையறுக்கப்பட்ட பங்களிப்பு திட்டமாக” சாராம்சத்தில் மாற்றப்பட்டுள்ளது.

இந்த திட்டம் 2005 மார்ச்-ல் மக்களவையில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் முக்கியமான பிரிவு, 2003ல் உருவாக்கப்பட்ட இந்த “ஓய்வூதிய நிதி நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க மசோதாவிற்கு” சட்ட பூர்வ அந்தஸ்து வழங்கியது.  ஆனால் 14வது மக்களவை முடிவடைந்ததை தொடர்ந்து இந்த மசோதாவும் காலாவதியானது.  இந்த புதிய ஓய்வூதிய திட்டம் மட்டும், எந்த வித ஒழுங்குபடுத்தும் அமைப்பு இல்லா நிலையிலும், தொடர்ந்து இருந்து வந்தது. கிட்டத்தட்ட 27 மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் இந்த திட்டத்தை ஏற்றுக் கொண்டது.  விதிவிலக்காக, இடது சாரிகள் ஆண்ட மேற்கு வங்கம், திரிபுரா, மற்றும் கேரளா மாநில அரசுகள் மட்டும் இந்த திட்டத்தை ஏற்காமல், ஏற்கனவே இருந்துவந்த “வரையறுக்கப்பட்ட பலன்களுடைய திட்டத்தையே” தொடர்ந்து அமுல்படுத்தி வருகின்றனர்.

2009 ம் ஆண்டு சூலை துவங்கி, மத்திய அரசில் 2ம் முறை ஆட்சியில் உள்ள ஐக்கிய முற்போக்கு அணி இந்த திட்டத்தை சுய தொழில் செய்பவர்களுக்கும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் நீடித்தது.  2010 மத்திய நிதி நிலை அறிக்கையில் சுவாவாலம்பன் திட்டம் என்ற இந்த கூட்டு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

2011ம் ஆண்டு மார்ச் 24ம் நாள் மத்திய அரசு இந்த ஓய்வூதிய மசோதாவை மறுபடியும் மக்களவையில் அறிமுகப்படுத்தியது.  அது பின்னர் நிதிக்கான நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.  அந்த ஆண்டு ஆகஸ்ட் திங்களிலேயே அந்த குழு தனது அறிக்கைகளை சமர்ப்பித்தது.  அந்நிய நேரடி முதலீடு 49 சதத்தை அனுமதிக்கும் மத்திய அமைச்சரவையின் அக்டோபர் 4ம் தேதிய திட்டத்தையே இந்த குழுவின் சிபாரிசும் எதிரொலித்தது.  ஐக்கிய முற்போக்கு கூட்டணி இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்திய "பெருமையை" பெற்றிருந்தாலும் உண்மையில் 2003-ல் ஆட்சியில் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான் ஆகஸ்ட் 2003-ல் இந்த பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு பணியில் சேரும் புதிய நியமனதாரர்களுக்கு அமுல்படுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

தற்போது இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் 37.45 லட்சம் சந்தாதார்களும், ரூ 20-535 கோடி சந்தாவையும் அடிப்படை நிதியாகவும் கொண்டுள்ளது.    “நாங்கள் ஓய்வூதிய திட்டத்தில் அந்நிய முதலீட்டை முற்றாக எதிர்க்கிறோம்.  இப்போது இந்த அந்நிய முதலீட்டை அனுமதித்தோமானால், இந்த நிதியை கையாளுகிறவர்கள் அவர்கள் விரும்பிய தொழிலில் முதலீடு செய்வார்கள்.  இவ்வாறு இந்த நேரடி அந்நிய முதலீடு எதிர்மறையாகிவிடும்.  இந்த ஓய்வூதிய நிதி நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப் பட்டபோது, ஓய்வூதியத்திற்கான நிதி தேவை அதிகமாகிக் கொண்டுவரும் இந்த பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அவசியம் என்று மத்திய அரசால் கூறப்பட்டது- என்று மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் திரு கே.கே.என்.குட்டி தெரிவித்தார்”.  ஓய்வூதியத்திற்கான நிதியை இவ்வாறு புதிய பணியாளர்கள் வழங்குகிறார்கள். 

தொழிலாளர்கள் எதிர்ப்பு

இந்த பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான முக்கிய காரணம் ஓய்வூதியத்திற்கான நிதி நெருக்கடி அதிகமாகி வருவதுதான் என்று சொல்லப்பட்டது.  “ஓய்வூதிய நிதியின் பெரும் பகுதி பங்கு ராணுவ சேவையில் உள்ளவர்களைத்தான் சென்றடைகிறது. ஆனால் அவர்களுக்குத்தான் இந்த திட்டத்திலிருந்து விலக்களிக்கப் பட்டுள்ளது” என்றார் கே.கே.என்.குட்டி.

வரும் 34 ஆண்டுகளில் இந்த பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் நிதி தற்போதைய ரூ 14,284 கோடியிலிருந்து ரூ 57,088 கோடி ரூபாயாக இருக்கும் என்று பெங்களுரை சேர்ந்த பொருளாதார மாற்றத்திற்கான கொள்கை மையத்திலுள்ள கே.காயத்திரியின் ஆய்வறிக்கையை சுட்டிக்காட்டி அவர் கூறுகிறார்.  2004-05ம் ஆண்டிற்கான மத்திய அரசின் ஓய்வூதிய செலவினம் தேசிய உள்நாட்டு உற்பத்தியில் 0.51 சதமானமே.  அதில் 0.26 சதமானம் ராணுவ சேவையில் உள்ளவர்களுக்கு செல்கிறது.

தற்போதுள்ள பணியாளர்கள் இந்த திட்டத்தில் இல்லாவிட்டாலும், அரசு எந்த நேரத்திலும் ஒரு ஒப்பந்தம் மூலமாக அனைவரையும் இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்திற்குள் கொண்டுவர சுதந்திரமுள்ளது என்கிறார் திரு குட்டி.  இந்த ஓய்வூதிய நிதி நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக திட்ட மசோதா, இந்த திட்டம் மூலம், சந்தை சார்ந்த நன்மையே? கிடைக்கும் என்பதுடன், வேறு எந்த விதமான நேரடியான, மறைமுகமாக எந்த பலன் குறித்தும் உறுதி சொல்லவில்லை.  இது சந்தை சார்ந்த ஏற்றத்தாழ்வுகள் சந்தாதாரர்களை அதிர்ச்சிக்கு  தள்ளிவிடுகிறது.

கடந்த 2001ம் ஆண்டு நவம்பர் 25ல், அரசு ஊழியர் கூட்டமைப்பானது, இந்த “ஓய்வூதிய நிதி நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க மசோதா” முற்றாக விலக்கிக் கொள்ள பிரதமருக்கு கடிதம் எழுதியது.  சந்தை முதலீட்டில் ஏதாவது அதிர்ச்சி ஏற்படும் பட்சத்தில், சந்தாவை வாங்குவதற்கான சக்தி இல்லாத நிலையில், ஏற்கனவே உள்ள அவரது சந்தாவிற்கான உண்மை விலை குறிப்பிடப்படாததால், அதன் மதிப்பு தற்போதுள்ள பண வீக்கத்தால், மிகவும் குறைந்துவிடும் என்கிறார்.  மேலும் கூறுகையில், இந்த சந்தாதாரர் மத்திய அரசு ஊழியர் என்பதால், இந்ததிட்டத்தின்படியே தனது முதலீட்டை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் இருப்பதால், ஒரு தவறான தேர்வில் முடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம்.

இந்தியா மற்றும் அந்நிய தனியார் முதலீட்டாளர்களின் நியாயமற்ற அப்பட்டமான, தனியார் லாபத்திற்கு பொது மக்கள் பணத்தை திருப்பிவிடும் பங்குச் சந்தையில், இந்த ஓய்வூதிய நிதி முதலீடு செய்யப்படுகிறது என்கிறது அந்த கடிதம்.  இந்த ஓய்வூதிய திட்டத்தை திணிப்பதன் மூலம், அரசு ஊழியர்களிடையே இரண்டு பிரிவினரை உருவாக்குகிறது அரசு.  அதில் ஒரு பிரிவினரை நிச்சயமாக உறுதி செய்யப்படாத சந்தை சார்ந்த விளைவுகளுக்குள் தள்ளிவிடுகிறது.  இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் கொண்டுவரப்பட்டவர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் எவ்வளவு என்று உறுதிசெய்யப்படவில்லை.  ஆனால் அதே நேரத்தில் அவர்களில் ஒரு பகுதியினரான ஏற்கனவே உள்ள பழைய ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் உறுதி செய்யப் படுவதுடன், அவர் மறைவுக்கு பிறகு அவரது சட்டப்படியான வாரிசுகளுக்கு அந்த ஓய்வூதியம் கிடைத்திட உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தால் ஓய்வு காலத்தில் அவர்களுக்கான வாழ்க்கை ஆதாரமான பணவீக்கத்தை ஈடுகட்டிவரும் பழைய ஓய்வூதிய திட்டத்தை பறித்துவிடும் என்று அவர்கள் மத்திய நிலைக் குழுவிடம் முறையிட்டனர்.

தொழில்துறையிலிருந்து நெருக்கடி

ஆனால் இந்த ஓய்வூதிய நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க திட்டத்தை உருவாக்கவும் ஓய்வூதிய சீர்திருத்திவரும் தொழில்துறை நிபுணர்களும், வர்த்தக கூட்டமைப்பும் ஆதரவு தெரிவிப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.  அரசும், தொழில்துறையினரும் முன்வைக்கும் ஒரே வாதம், தற்போதைய வரைமுறைப்படுத்தப்பட்ட ஓய்வூதிய திட்டத்தால் அரசின் நிதியில் பெரும்பங்கு மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு செலவிடப்படுகிறது என்பதுடன், இது நீடித்திருக்க சாத்தியமில்லை என்பதுடன், அதன் காரணமாக சமூக நலத்திட்டங்களை நாட்டின் எளியவர்களுக்கு கொண்டு செல்ல இயலவில்லை என்பதுதானாம்.

2006ம் ஆண்டு உண்டாக்கப்பட்ட 6வது ஊதியக் குழு, ஓய்வூதியதாரர்களுக்கான நிதி நிலையை ஆய்வு செய்து மாற்று வழிமுறைகளை உருவாக்க ஆலோசனை கூறியுள்ளது.  “இந்த புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தியதால் ஏற்கனவே உள்ள திட்டம் சிக்கலுக்குள்ளாகிறது என்பதுடன், ஓய்வூதிய திட்டத்தில் மேலும் சீரமைப்பு என்பது மேலும் பல சிக்கலை உண்டாக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது”.

ஆனால், அமைச்சரவை, நிலைக் குழுவின் யோசனையை / எச்சரிக்கையை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு புதிய ஓய்வூதிய திட்ட அறிமுகத்தை நியாயப் படுத்துகிறது.  மற்றொருபுறம் புதிய ஓய்வூதியதாரர்கள், இந்த நிதியை எங்கு முதலீடு செய்வது என்பதை தீர்மானிக்கும் நிலையில் இல்லாததால், எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் அது எப்போது கிடைக்கும் என்றே தெரியாத நிலையில் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.  இந்த நிதி முதலீடு எங்கு முதலீடு செய்யப்படும் என்பது, புதிய ஓய்வூதியம் நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க திட்டத்தில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ள வழிமுறைகள், விதிகளுக்குட்பட்டே  முடிவெடுக்கப்பட்டு முதலீடு செய்யப்படும் என்று சொல்லப்படுவது எந்த அளவு நம்பகத்தன்மை உடையது.

உதாரணமாக, அமைச்சரவையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த குழுவின் முதல் ஆலோசனை, அதிகாரிகளால் அறிவிக்கப்பட்ட திட்டத்தில் சந்தாதாரர் எங்கு தனக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் உறுதி செய்யப்படுகிறதோ, அதை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.  ஆனால் பிரச்சனை என்னவென்றால் அனைத்து திட்டங்களும், இந்த ஓய்வூதியம் நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க திட்டத்தால் ஏற்கனவே தீர்மானிக்கப் பட்டுவிட்டது,  அவை அனைத்தும் உறுதி சொல்லப்படும் வரவை கொடுக்குமா அல்லது விலைவாசி உயர்வை சமன் செய்யுமா என்பதற்கு உறுதியில்லை.

மேலும் இந்த ஓய்வூதிய நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க திட்டம், சந்தாதாரர் எத்தனை முறை, பணம் எடுப்பது, நோக்கம் மற்றும் எடுக்கும் அளவு குறித்து தீர்மானிக்கும் உரிமையை தன்னிடம் வைத்துள்ளது.  இந்த மசோதாவில் உள்ள ஒரு திருத்தம், ஒரு சந்தாதாரர், அல்லது மொத்த வைப்பிலிருந்து 25 சதமானத்திற்கு மேல் தனது கணக்கிலிருந்து ஓய்வூதியம் எடுத்துக் கொள்ள முடியாது.  எதிர்பாராத அவசர காலத் தேவைக்காக சந்தாதாரர்கள் தேவைப்படும் போது பணம் எடுத்துக் கொள்ளும் வகையில் சில சலுகைகளை நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.  மேலும், சந்தாதாரர்கள் தங்களது ஓய்வூதியத்திற்கான சந்தாவை, அரசின் பங்கில் 100 சதம் முதலீடு செய்ய உரிமை வழங்கி ஒரு திருத்தம் கொடுத்துள்ளது.  ஆனால், குழுவின் இந்த இரண்டு ஆலோசனைகளையும் அமைச்சரவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை.  ஓய்வூதிய திட்டத்தில் நேரடி அந்நிய முதலீட்டிற்கு அமைச்சரவை ஒப்புதலே தற்போதுள்ள மற்றொரு கவலை.  அதே நேரத்தில், இந்த திட்டத்தின் கீழ், “ஓய்வூதியம் நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க அமைப்பு” நெறிமுறைகளை வகுக்க ஆலோசனை கூற, இந்த திட்டத்தில் முதலீடு செய்ய தயாராக உள்ளவர்களின் பிரதிநிதிகளை கொண்ட, “துடிப்புள்ள ஓய்வூதிய ஆலோசனை குழு!” ஒன்றை அமைப்பதற்கான ஒப்புதலை அளித்துள்ளது.

“உலக அளவில் பொருளாதார வீழ்ச்சி காரணமாக அரசின் செலவினங்கள் குறைக்கப்படுவதில், ஓய்வூதியமும் அடங்கும்” தொழிலாளர்கள் இந்த பிரச்சனைகள் மீது வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  ஓய்வூதியத் திட்டத்தில் அந்நிய நேரடி முதலீடு செய்தால், இந்தியாவின் எளியவர்கள் பயனடைவார்கள் என்பது நகைப்புக் குரியதாக உள்ளது.  நிதி நாட்டுக்குள் வரும் என்றில்லாமல், நாட்டை விட்டு பணம் அதிகமாக வெளியே போவதுதான் சாத்தியம்” என்கிறார் ராஜ்ய சபை உறுப்பினரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சியை சேர்ந்த திரு டாபன் சென்.  இவர் இந்திய தொழிற்சங்க மையத்தின் பொதுச் செயலாளர் ஆவார்.  குறிப்பாகச் சொல்லப்போனால், நிலைக்குழு பரிந்துரைத்த பல்வேறு ஆலோசனைகள் மந்திரிசபை ஏற்கவில்லை.  இந்த ஓய்வூதிய நிதியை நிர்வகிக்கும் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பொதுத்துறை நிறுவனத்தில் இருப்பவர்களாக இருக்க வேண்டும் என்ற இந்த குழுவின் யோசனை கூட ஏற்கப்படவில்லை.  இந்த ஓய்வூதிய நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க அமைப்பு தற்போதைய அடிப்படை நிலையிலிருந்த ஆய்வில் பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து ஒரே ஒருவரை மட்டுமே இந்த அமைப்பில் நிதி மேலாளராக வைத்துக் கொள்ளலாம் என்றும், அது காலப்போக்கில் நடைமுறையின் அடிப்படையில் விரிவாக்கம் செய்து கொள்ளலாம் என்று விதி வகுத்துள்ளது என்ற அடிப்படையில் இந்த ஆலோசனையை அமைச்சரவை நிராகரித்துவிட்டது.

அமைப்புசாரா தொழிலில் உள்ள மக்களுக்கான சமூக பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு விரிவான சட்டம் இயற்றப்படவேண்டும் என இந்த குழு பரிந்துரைத்தது.  இந்த நிலைக்குழு அந்நிய நேரடி முதலீட்டை ஆதரிப்பதாக இருந்தாலும், ஓய்வூதிய திட்டத்தைப் பொறுத்தவரை, முதலீடு என்பது நாட்டிற்கு அப்பால் செல்லாத வகையில், தற்போதைய காப்பீட்டுத் துறை முதலீடுகள் போல இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.  இந்த ஓய்வூதிய அமைப்பில் தொழிலாளர்கள் சார்பு அமைப்புகளின் பிரதிநிதிகளும், சந்தாதாரர்களும், சிறப்பு குழுவில் கூட்டு பிரதிநிதிகளாக ஏற்கப்படவேண்டும் என்றும் பரிந்துரைத்தது.  அந்நிய நேரடி முதலீட்டை ஓய்வூதிய திட்டத்தில் 28 சதமானம் அனுமதிப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இந்தக் குழு அறிவுறுத்தியது.  ஏனென்றால், நிதித்துறையில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் / தொழில்மைய அமைப்புகள் போன்றவற்றோடு, இந்த முதுமைக்கால ஓய்வூதிய நிதியை நிர்வகிப்பதை ஒப்பிட முடியாது”. நேரடி அந்நிய முதலீட்டை ஓய்வூதியத் திட்டத்தில் அனுமதிப்பது என்பதை, தற்போதைய சட்டத்தில் பொருத்தமான திருத்தங்கள் கொண்டுவந்த பின்னரே அமுல்படுத்த வேண்டும் என்றும் குழு தங்களது பரிந்துரையில் சிபாரிசு செய்துள்ளது.

இந்த திருத்தங்கள் மக்களவையின் ஒப்புதல் பெற வேண்டும்.  ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைப்பில் உள்ள சில உறுப்பினர்களே இந்த நேரடி அந்நிய முதலீட்டிற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.  எனவே, குறிப்பாக ஓய்வூதிய திட்டம் மற்றும் காப்பீட்டுத் துறையில் நேரடி அந்நிய முதலீட்டை ஏற்க மாட்டார்கள்.  பாரதீய ஜனதா கட்சியோ, நேரடி அந்நிய முதலீட்டை எதிர்த்தாலும், ஓய்வூதிய நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க திட்டத்திற்கும், புதிய ஓய்வூதிய திட்டத்திற்கும் ஆதரவாக உள்ளது.  இடது சாரிகள் மட்டுமே இந்த ஓய்வூதிய நெறி மற்றும் விரிவாக்கத் திட்டத்திற்கும், புதிய ஓய்வூதிய திட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், ஓய்வூதியத்தில் நேரடி அந்நிய முதலீட்டையும் எதிர்த்து நிற்பர் என்று தெரிகிறது.
மசோதா இதுவரை நிறைவேறவில்லை , மேலும்  எந்த அளவு CPS புனையப்பட்டாலும் அது பயனற்ற பாதுக்கப்பற்ற திட்டம் என்பதே இதுவரை நாம் அனுபவத்தால் அறிந்த உண்மை.)
Posted: 07 Jan 2013 11:15 PM PST
பள்ளி நேரத்தை மாற்றியமைக்க பெற்றோர், ஆசிரியர்கள் எதிர்ப்பு- Dinamalar

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், பள்ளிகளின் வேலை நேரத்தை மாற்றும் அரசின் முயற்சிக்கு, ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்ப்பு தெரித்துள்ளனர். ஆசிரியர்களுக்கு சிரமம் ஏற்படுவது ஒரு பக்கம் இருந்தாலும், மாணவ, மாணவியர் உடலாலும், உள்ளத்தாலும் கடுமையாக பாதிக்கப்படுவர் என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

கடந்த மாதம், சென்னை, பெருங்குடியில், பேருந்து படிக்கட்டுகளில் பயணித்த மாணவர்கள் நான்கு பேர், லாரி மோதி பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவத்தை, சென்னை ஐகோர்ட் தானாக முன்வந்து, விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதைத் தொடர்ந்து, போக்குவரத்து துறை, ஐகோர்ட்டில் ஒரு பதில் அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் கூறியுள்ளதாவது: சென்னையில், பள்ளி வேலை நேரத்தை, காலை, 7:30 மணியில் இருந்தும், கல்லூரி வேலை நேரத்தை, 8:00 மணியில் இருந்தும் துவங்கும் வகையில், மாற்றம் செய்யலாம். 

இந்தக் கருத்தை, கல்வித்துறை மற்றும் கல்லூரி கல்வித்துறையிடம் தெரிவித்துள்ளோம். மேலும், கல்வி நிறுவனங்கள் துவங்கும் நேரம் மற்றும் முடியும் நேரங்களில், கூடுதல் பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விவகாரம், ஆசிரியர், மாணவர், பெற்றோர் மத்தியில், பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சென்னையைப் பொறுத்த வரை, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், காலை, 8:45 மற்றும் 9:00 மணிக்கு துவங்குகின்றன. தனியார் பள்ளிகள், 8:00 மணியில் இருந்து, 8:30க்குள் துவங்கப்படுகின்றன. தற்போதைய நேரத்தை மாற்றினால், பள்ளியின் தூரத்தை பொறுத்து, முன்கூட்டியே மாணவர்கள் கிளம்ப வேண்டியிருக்கும். குறைந்தபட்சம், 6:45 மணி முதல் கிளம்ப வேண்டியிருக்கும். இதற்கு, அதிகாலை, 5:00 அல்லது 5:30க்கே எழுந்து, குளித்து முடித்து, தயாராக வேண்டிய நிலை ஏற்படும். இதனால், அரசின் முயற்சிக்கு, ஆசிரியர்கள், மாணவர்கள், ஆரம்பத்திலேயே எதிர்ப்பு குரல் கொடுக்கின்றனர்.
அகில இந்திய துவக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலர் அண்ணாமலை கூறியதாவது: காலை, மாலை நேரங்களில், பேருந்துகளின் எண்ணிக்கையை இப்போதே அதிகரிக்கலாம். மாணவர்களுக்கென, தனியாக சிறப்பு பேருந்துகளை இயக்கலாம். அனைத்து பேருந்துகளிலும், கதவுகள் அமைப்பதை கட்டாயமாக்கலாம். இதில் எதையுமே செய்யாமல், பள்ளிகளின் வேலை நேரத்தை மாற்றினால், நடைமுறையில் பல்வேறு சிக்கல்கள் கண்டிப்பாக வரும்.

காலையில் சரியாக சாப்பிடாமல் பள்ளிக்கு வந்து, மயக்கம் அடைந்து விழுகின்றனர். இதுபோன்ற சம்பவம், அரசுப் பள்ளிகளிலும் நடக்கிறது; தனியார் பள்ளிகளிலும் நடக்கின்றன. இதனால், மாணவர் மட்டுமில்லாமல், பெற்றோர், ஆசிரியர்களுக்கும் சிரமம் ஏற்படும். ஆசிரியர்கள், நீண்ட தொலைவில் உள்ள பள்ளிகளில் வேலை பார்க்கின்றனர். அதிகாலையில் எழுந்து தயாரானால் தான், ஆசிரியர்களாலும், 7:30க்கு, பள்ளிக்குச் செல்ல முடியும். எனவே, நேர மாற்றம் செய்யும் முயற்சியை, அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

இந்த விவகாரம் குறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "தற்போதுள்ள நேரத்திற்கு, பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டும், பிரச்னை தீராது; போக்குவரத்து நெரிசல் தான் அதிகமாக ஏற்படும். நேரத்தை மாற்றுவது தான் ஒரே தீர்வு. அரசு உத்தரவிட்டால், நேரத்தை மாற்ற நாங்கள் தயார்" என்றார். 

இந்த விவகாரம் தொடர்பாக, போக்குவரத்து துறை, கல்வித்துறை, காவல்துறை அதிகாரிகள் அடங்கிய கூட்டு கூட்டம், 10ம் தேதி, சென்னையில் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில், இறுதி முடிவு எடுக்கப்படும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
51 தலைமை ஆசிரியர்கள் டி.இ.ஓ.,க்களாக உயர்வு

பள்ளி கல்வித்துறையில், 51 தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகளாக, பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் காலியாக இருந்த டி.இ.ஓ., பணியிடங்களை நிரப்ப, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களில், தகுதி வாய்ந்தவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டன. இந்த பட்டியலுக்கு, துறையின் ஒப்புதல் கிடைத்ததை அடுத்து, 51 பேரும், டி.இ.ஓ.,க்களாக பதவி உயர்வு செய்து, உத்தரவு வெளியிடப்பட்டன. 

தலைமை ஆசிரியர்கள், டி.இ.ஓ.,க்களாக பதவி உயர்வு பெற்றதால் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்கள், உடனடியாக நிரப்பப்பட மாட்டாது என்றும், பொதுத் தேர்வுக்குப் பிறகே நிரப்பப்படும் என்றும், கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 
ne
பட்டதாரி மற்றும் பணிமூப்பு தகுதிவாய்ந்த முதுகலை ஆசிரியர்களை, தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு செய்யப்பட வேண்டும். இவர்களை பதவி உயர்வு செய்தால், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் பாதிக்கப்படும் என்பதால், தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனவரி 10ம் தேதி சமூக அறிவியல் தேர்வு

பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, நேற்று நடக்க இருந்த சமூக அறிவியல் அரையாண்டு தேர்வு, மாநிலம் முழுவதும் ரத்து செய்யப்பட்டது. கேள்வித்தாள், முன்கூட்டியே, வெளியானதை தொடர்ந்து, தேர்வு ரத்து முடிவு எடுக்கப்பட்டது. இந்த தேர்வு, வரும் 10ம் தேதி நடக்கும் என பள்ளிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, காலாண்டு, அரையாண்டு தேர்வுகளும், மாநில அளவில், பொது தேர்வாக நடக்கிறது. கேள்வித்தாள் தயாரித்து, கல்வித்துறைக்கு வழங்கும் பணியை, தேர்வுத்துறை செய்கிறது. தேர்வை நடத்த வேண்டியது, கல்வித்துறையின் பொறுப்பு. 

கடந்த மாதம் இறுதியில், அரையாண்டு தேர்வு துவங்கியது. 10 நாள் விடுமுறைக்குப் பின், இம்மாதம், 2ம் தேதி, மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. விடுமுறைக்கு முன்னதாக, மொழிப்பாட தேர்வுகள் நடந்தன. விடுமுறைக்குப் பின், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் தேர்வுகள் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தன. 

கணிதம், அறிவியல் தேர்வுகள் நடந்த நிலையில், 10ம் வகுப்பு மாணவருக்கு, நேற்று சமூக அறிவியல் தேர்வு நடக்க இருந்தது. ஆனால், முன்கூட்டியே கேள்வித்தாள், வெளியான விவகாரம், விருதுநகர் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவல், அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. மாநில அளவில், பொது தேர்வாக நடத்தப்படுவதால், கேள்விகள், எஸ்.எம்.எஸ்., மூலம், மற்ற மாவட்டங்களுக்கும் பரவியிருக்கலாம் என, அதிகாரிகள் கருதினர். இதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும், சமூக அறிவியல் தேர்வு ரத்து செய்ய, கல்வித்துறை உத்தரவிட்டது. இத்தேர்வை, 10ம் தேதி மீண்டும் நடத்தவும், துறை அறிவுறுத்தி உள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட எந்த மாவட்டத்திலும், சமூக அறிவியல் தேர்வு நடக்கவில்லை. இதனால், மாநிலம் முழுக்க, தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது உறுதியானது. முந்தைய ஆட்சி காலத்தில், தேனி மாவட்டம், அல்லி நகரத்தில், 10ம் வகுப்பு சமூக அறிவியல் பொதுத்தேர்வு கேள்வித்தாள், வெளியானது. இதனால், இத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் நடத்தப்பட்டது. 

விரைவில், பொதுத்தேர்வு துவங்க உள்ள நிலையில், அரையாண்டு தேர்வு கேள்வித்தாள் வெளியாகி இருப்பது, அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதேபோல், பொதுத்தேர்வில் நடந்துவிடக் கூடாது என்பதற்காக, கேள்வித்தாள் கட்டுகள் வைக்கும் இடத்தில், பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
அனைவருக்கும் கல்வி திட்டம்: பயிற்சியை புறக்கணிக்கும் ஆசிரியர்கள் - Dinamalar

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், பயிற்சி தரப்படும் நாளன்று, அதிகமான ஆசிரியர்கள் விடுமுறை எடுப்பதால், அரசின் முயற்சியும், நிதியும் வீணாவதுடன், மாணவர் நலனும் பாதிக்கப்படுகிறது.
1.மாவட்டக் கல்வி அலுவலர்கள் நேரடி நியமனம்: போட்டித்தேர்வு மூலம் 12 உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள், 12 மாவட்ட கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
2.10 மற்றும் 12-ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு பொதுத் தேர்வாக நடத்தப்படுகிறது. பத்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வுக்கான சமூக அறிவியல் பாடத்தின் வினாத்தாள் வெளியானதால் 07.01.2013 அன்று நடைபெறுவதாக இருந்த சமூக அறிவியல் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய கேள்வித்தாள் அச்சடிக்கப்பட்டு இத்தேர்வு வரும் 10-ம் தேதி நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

Sunday, January 6, 2013


52 தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் களாக பதவி உயர்வு
    தமிழகம் முழுவதும் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் 52 பேருக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.        இவர்கள் அனைவரும்  நாளை (திங்கள்கிழமை) தங்களுக்கான பணியிடங்களில் சேர வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
பணி ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் தமிழகம் முழுவதும் 75 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இதனால், கல்விப் பணிகள் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.இதையடுத்து, புதிய மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான பட்டியலுக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது. இந்தப் பட்டியல் சனிக்கிழமை மாலை வெளியிடப்பட்டது.இதில் 12 இடங்கள் நேரடி நியமனத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மீதமுள்ள 11 காலியிடங்கள் குறித்து எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை.

       மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வில் தங்களுக்கு கூடுதல் பணியிடங்களை ஒதுக்க வேண்டும் என்று கோரி வருவது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு பெற்று பணியில் சேர உள்ள 51 அலுவலர்களின் பெயர் பட்டியல்

1. மாவட்டக் கல்வி அலுவலர், தக்கலை 
சி.பால்ராஜ்
முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்
முதன்மைக் கல்வி அலுவலகம்,
திண்டுக்கல்    
2. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்வேலூர்
எஸ்.அருண்மொழி                         
தலைமை ஆசிரியர்     
அரசு மேல்நிலைப் பள்ளி                  
கன்னிகைபேர்                        
திருவள்ளூர் மாவட்டம்     
3. மெட்ரிக் பள்ளிகள் ஆய்வர்மதுரை
செ.எமரல்சி     
தலைமை ஆசிரியர்                       
அரசு உயர்நிலைப் பள்ளி,               
பறக்கை
கன்னியாகுமரி மாவட்டம் 
4. மாவட்டக் கல்வி அலுவலர் பெரியகுளம்
டி.சி.அனந்தநாயகி 
தலைமை ஆசிரியர்  
அரசு மேல்நிலைப் பள்ளி
அ.வல்லாளப்பட்டி
மதுரை மாவட்டம்    

5. மாவட்டத் தொடக்க கல்வி அலுவலர்,தூத்துக்குடி
சீ.வசந்தா                                   
தலைமை ஆசிரியர்                         
அரசு உயர்நிலைப் பள்ளி                  
வடமலைபுரம்                             
விருதுநகர் மாவட்டம்      

6. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்நாகப்பட்டினம்
கா.பழனிவேல்
தலைமை ஆசிரியர்                        
அரசு (மகளிர்)  மேல்நிலைப் பள்ளி     
கள்ளக்குறிச்சி
விழுப்புரம் மாவட்டம்                                                                      

7. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்,திருப்பூர்
கு.மா.காந்திமதி
தலைமை ஆசிரியர்
அரசு உயர்நிலைப் பள்ளி
அய்யம்பாளையம்
ஈரோடு மாவட்டம்   

8.மாவட்டக் கல்வி அலுவலர், சேலம்
அ.சுப்பிரமணியன்
தலைமை ஆசிரியர்                        
அரசு (மகளிர்) மேல்நிலைப் பள்ளி ,
பரமத்தி ,                            
நாமக்கல் மாவட்டம்                                                                   

9. மாவட்டக் கல்வி அலுவலர்ஈரோடு
சு.மாலதி                                   
தலைமை ஆசிரியர்                        
அரசு உயர்நிலைப் பள்ளி                  
49-கவுண்டம் பாளையம்                    
கோயம்புத்தூர் மாவட்டம் 
10. மெட்ரிக் பள்ளிகள் ஆய்வர், சேலம்      
வி.செல்வராஜ்
தலைமை ஆசிரியர்                        
அரசு மேல்நிலைப் பள்ளி                  
முத்துக்காப்பட்டி                       
நாமக்கல் மாவட்டம்                                                           
11. மாவட்டக் கல்வி அலுவலர் நாகப்பட்டினம்
ஏ.இராஜமாணிக்கம்                     
தலைமை ஆசிரியர்                        
அரசு உயர்நிலைப் பள்ளி  
கீழ்குமாரமங்கலம்                         
கடலூர் மாவட்டம்           
12. மாவட்டக் கல்வி அலுவலர் பட்டுக்கோட்டை
சி.நரேந்திரன்
தலைமை ஆசிரியர்                        
அரசு மேல்நிலைப் பள்ளி                  
தாணிக்கோட்டகம்
              நாகப்பட்டினம் மாவட்டம்                                                                   

13. மெட்ரிக் பள்ளிகள் ஆய்வர் திருவள்ளூர்
நா.கண்ணன்                                
தலைமை ஆசிரியர்                        
அரசு உயர்நிலைப் பள்ளி    
சிங்காடிவாக்கம்                           
காஞ்சிபுரம் மாவட்டம்     
14. மாவட்டக் கல்வி அலுவலர்தர்மபுரி
டி.துரைசாமி
தலைமை ஆசிரியர்                         
அரசு உயர்நிலைப் பள்ளி    
மிட்டப்பள்ளி
கிருஷ்ணகிரி மாவட்டம்    

15. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்,திருவள்ளூர்
வி.எம்.கலாவல்லி
தலைமை ஆசிரியர்                        
அரசு மேல்நிலைப் பள்ளி                  
அசோக்நகர்,சென்னை-83                                                                             

16. மாவட்டக் கல்வி அலுவலர் மயிலாடுதுறை
வீர.வெள்ளைச்சாமி
தலைமை ஆசிரியர்                         
அரசு (மகளிர்) உயர்நிலைப் பள்ளி  ,
அரிமழம்,                          
புதுக்கோட்டை மாவட்டம்  

17. மாவட்டக் கல்வி அலுவலர்,முசிறி
வி.எஸ்.பார்த்திபன்
தலைமை ஆசிரியர்                        
அரசு மேல்நிலைப் பள்ளி     
மாணந்தங்குடி அய்யன்பேட்டை
திருவாரூர் மாவட்டம்     

18. மாவட்டக் கல்வி அலுவலர் திருவண்ணாமலை
எம்.சசிகலாவதி
தலைமை ஆசிரியர்                        
அரசு உயர்நிலைப் பள்ளி    
செம்பள்ளி,
வேலூர் மாவட்டம்   
19. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், திருவண்ணாமலை
ம.பொ.கணேசன்
தலைமை ஆசிரியர்                         
அரசு உயர்நிலைப் பள்ளி ,     
எலவம்பாடி,  வேலூர் மாவட்டம்       
20. மாவட்டக் கல்வி அலுவலர் திருவாரூர்
ஆர்.குணசேகரன்
தலைமை ஆசிரியர்                        
அரசு (மகளிர்) மேல்நிலைப் பள்ளி,
கும்பகோணம்
தஞ்சாவூர் மாவட்டம்                                                        
21. மாவட்டக் கல்வி அலுவலர்,பழனி
ச.கலையரசி
தலைமை ஆசிரியர்                        
அரசு உயர்நிலைப் பள்ளி ,   
மாயனூர்,
கரூர் மாவட்டம்.          
22. மெட்ரிக் பள்ளிகள் ஆய்வர் கோயம்புத்தூர்
கே.கைலாஸ்
தலைமை ஆசிரியர்                        
அரசு மேல்நிலைப் பள்ளி  
எர்ணாபுரம்
நாமக்கல் மாவட்டம்       
23. மாவட்டக் கல்வி அலுவலர் அறந்தாங்கி       
சி.தாமரை
தலைமை ஆசிரியர்                        
அரசு உயர்நிலைப் பள்ளி,                 
இரூர்,
பெரம்பலூர் மாவட்டம்     
24. மாவட்டக் கல்வி அலுவலர், பெரம்பலூர்
டி.வனஜாசலோமி
தலைமை ஆசிரியர்                        
அரசு மேல்நிலைப் பள்ளிகீரனூர்,
புதுக்கோட்டை மாவட்டம்        
25. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்,திண்டுக்கல்
பொ.சிவானந்தம்
தலைமை ஆசிரியர்                                
அரசு உயர்நிலைப் பள்ளி ,
எம்.சுப்புலாபுரம்,                                   
மதுரை மாவட்டம்    
26. மாவட்டக் கல்வி அலுவலர் விழுப்புரம்
டி..செங்குட்டுவன்
தலைமை ஆசிரியர்                        
அரசு மேல்நிலைப் பள்ளி 
சி.முட்லூர்,                               
கடலூர் மாவட்டம்.                                                                 
27. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்,விருதுநகர்
தி. ராஜேஸ்வரி
மேற்பார்வையாளர்,       
வட்டாரவளமையம்,                        
தூத்துக்குடி ஊரகம்        
28. மாவட்டக் கல்வி அலுவலர் உசிலம்பட்டி
ச.இரவிக்குமார்
மேற்பார்வையாளர்
வட்டார வளமையம்
மூஞ்சிறை
கன்னியாகுமரி மாவட்டம்         
29. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்,கடலூர்
த.குணசேகரன்
தலைமை ஆசிரியர்     
எம்.சி.எஸ்.எம். அரசு மேல்நிலைப் பள்ளி  ,
படாளம்
காஞ்சிபுரம் மாவட்டம்                                                                
30. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்,விழுப்புரம்             
வி.மல்லிகா
தலைமை ஆசிரியர்                        
அரசு உயர்நிலைப் பள்ளி,  
பூங்குளம்,
பண்ருட்டி தாலுக்கா     
கடலூர் மாவட்டம்   
31. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், ஈரோடு  
ஆர்.கந்தசாமி
தலைமை ஆசிரியர்                        
அரசு மேல்நிலைப் பள்ளி   
நாமகிரிப்பேட்டை
நாமக்கல் மாவட்டம்                                                             
32. மாவட்டக் கல்வி அலுவலர் உத்தமபாளையம்
இல.ஜெயலட்சுமி                          
தலைமை ஆசிரியர்                        
அரசு உயர்நிலைப் பள்ளி      
ஆர்.பி.பிள்ளமநாயக்கன்பட்டி              
திண்டுக்கல் மாவட்டம்     
33. மாவட்டக் கல்வி அலுவலர் அருப்புக்கோட்டை
பி.சுப்ரமணி
தலைமை ஆசிரியர்                         
அரசு மேல்நிலைப் பள்ளி    
காசிபாளையம்
திண்டுக்கல் மாவட்டம்                                                             
34. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்,தஞ்சாவூர்
க.கணேசன்                                 
தலைமை ஆசிரியர்                        
அரசு உயர்நிலைப் பள்ளி ,               
உஞ்சினி,                            
அரியலூர் மாவட்டம்       
35. மாவட்டக் கல்வி அலுவலர் கிருஷ்ணகிரி
எஸ்.முகமதுகலீல்
தலைமை ஆசிரியர்                        
அரசு (மகளிர்) மேல்நிலைப் பள்ளி
சேலம் 636 001           
36. மாவட்டக் கல்வி அலுவலர்,தேவக்கோட்டை ம.சு.செந்தமிழ்செல்வி                      
தலைமை ஆசிரியர்                        
அரசு உயர்நிலைப் பள்ளி  
படர்ந்தபுளி ,
தூத்துக்குடி மாவட்டம்     
37. மாவட்டக் கல்வி அலுவலர்,புதுக்கோட்டை.
வே.இராமச்சந்திரன்
தலைமை ஆசிரியர்                         
அரசு சையது முர்துசா மேல்நிலைப் பள்ளி
மதுரை ரோடுதிருச்சி – 8                                                                           
38. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்,திருநெல்வேலி.
ஆ.வசந்தி                                  
தலைமை ஆசிரியர்                         
அரசு உயர்நிலைப் பள்ளி ,                
விஜயபுரி ,                           
தூத்துக்குடி மாவட்டம்     
39. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்,கிருஷ்ணகிரி
ஆர்.கமலம்
தலைமை ஆசிரியர்                        
அரசு மேல்நிலைப் பள்ளி    
வையப்பமலை
நாமக்கல் மாவட்டம்.      
40. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்,கரூர்
மு.பொன்னம்மாள்                 
தலைமை ஆசிரியர்                        
அரசு உயர்நிலைப் பள்ளி,         
கீழப்பட்டி (எம்)                 
புதுக்கோட்டை மாவட்டம்        
41. மாவட்டக் கல்வி அலுவலர்,குன்னூர்
சி.ஏ.சண்முகவடிவு
தலைமை ஆசிரியர்                        
அரசு மேல்நிலைப் பள்ளி  
சின்னியம்பாளையம்
கோயம்புத்லூர் மாவட்டம்                                                               
42. மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர்,கரூர்
சி.கதிர்வேலு                        
தலைமை ஆசிரியர்                        
அரசு உயர்நிலைப் பள்ளி ,                
ஹவுசிங்போர்டு காலனி,                
செய்யாறு,                  
திருவண்ணாமலை மாவட்டம்   
43. மாவட்டக் கல்வி அலுவலர்,திருப்பத்தூர்
பா.வெள்ளையம்மாள்                      
தலைமை ஆசிரியர்                        
அரசு (ம) உயர்நிலைப் பள்ளி              
முகப்பேர் (கிழக்கு)  -600 037  
திருவள்ளூர் மாவட்டம்                                                                                  
 
தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் 100 பள்ளிகள் வீதம் 3,200 ஆங்கில வழி இணைப்பு பள்ளிகள் தொடங்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

       தமிழகம் முழுவதும் அடுத்த கல்வி ஆண்டில் 3,200 ஆங்கில வழி இணைப்பு பள்ளிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
 
                ஆங்கில வழிக் கல்வி என்பது ஏழை மாணவர்களுக்கு எட்டாக் தனியாகவே இருந்து வந்தது. இதை தவிர்க்க, அனைத்து குழந்தைகளுக்கும் சமவாய்ப்பு கிடைக்க நடப்பு கல்வி ஆண்டில் தமிழகம் முழுவதும் உள்ள துவக்கப் பள்ளிகளில், தேர்வு செய்யப்பட்ட 320 பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை பெற்றோர்கூட தங்கள் குழந்தைகளை அருகில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் தலா 2 பிரிவுகள் ஆங்கில வழி கல்வியில் இருக்கும். இதுவரை ஊராட்சி தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி இல்லை. தற்போது இந்த பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 லட்சத்து 23 ஆயிரம் மாணவ, மாணவிகள் ஆங்கில வழியில் கல்வி கற்கிறார்கள். துவக்கப் பள்ளி நிலையிலேயே இந்த ஆண்டு ஆங்கில வழி தொடங்கப்பட்டதால் 24 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக ஆங்கில வழியில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த மாதம் கோவையில் தொடக்கக் கல்வி இயக்குனரின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், 24 வகையான உத்தரவுகள் மற்றும் ஆலோசனைகளை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கியுள்ளனர். அதன்படி, ஒவ்வொரு ஒன்றியத்திலும் குறைந்தது 10 துவக்கப் பள்ளிகளை ஆங்கில வழி இணைப்பு பள்ளிகளாக தேர்வு செய்ய வேண்டும். அதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ள பள்ளிகளின் முழு விவரங்களையும் ஜனவரி மாதத்திற்குள் மாநில தொடக்கக் கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் அவரவர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தலா 10 துவக்கப்பள்ளிகள் வீதம் மாவட்டம் முழுவதும் 100 பள்ளிகளின் பட்டியலை தயார் செய்து அனுப்பி வருகின்றனர். இதுகுறித்து தர்மபுரி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் கூறுகையில், ‘மாவட்டத்திற்கு 100 பள்ளிகள் என்றாலும் 32 மாவட்டத்திற்கும் 3,200 தொடக்கப் பள்ளிகள் ஆங்கில வழி இணைப்புப் பள்ளிகளாக அடுத்த கல்வி ஆண்டில் நடைமுறைக்கு வரும். ‘ என்றனர்.

இணைப்பு பள்ளி என்றால் என்ன?
தொடக்க பள்ளிகளில் தமிழ் வழி படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களில், ஆங்கில வழியில் படிக்க விருப்பம் உள்ளவர்களை தேர்ந்தெடுத்து, அதே பள்ளியில் அவர்களுக்கு ஆங்கில வழியில் தனியாக வகுப்புகளை நடத்துவது இணைப்பு பள்ளி (பேரலல் இங்கிலீஷ் மீடியம்) என்று அழைக்கப்படுகிறது. ஆங்கில வழியில் கற்க மாணவர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டினால், பின்னர் அதே வளாகத்தில் தனியாக கட்டிடமும் கட்டப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
2013 மார்ச் மாதம் நடைபெறும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் பங்கேற்க விரும்பும் தனித்தேர்வர்கள் ஆன்-லைன் மூலம் ஜனவரி 7 முதல் 18 வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.

      2013 மார்ச் மாதம் நடைபெறும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் பங்கேற்க விரும்பும் தனித்தேர்வர்கள் ஆன்-லைன் மூலம் ஜனவரி 7 முதல் 18 வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.      அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார். பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 8 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுத உள்ளனர். இந்தத் தேர்வில் ஏற்கெனவே தேர்வு எழுதி தேர்ச்சிப் பெறாதவர்கள் தனித்தேர்வர்களாகவும் (எச் வகையினர்), பத்தாம் வகுப்புத் தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று 2 ஆண்டுகள் இடைவெளியும், 1.4.2013-ம் தேதி 16 1/2 வயதும் பூர்த்தியடைந்தவர்கள் நேரடித் தனித்தேர்வர்களாகவும் (எச்பி வகையினர்) விண்ணப்பிக்கலாம். 
           நேரடித் தனித்தேர்வர்கள் வரலாறு, பொருளியல் உள்ளிட்ட ஐந்து வகையான பாடத்தொகுப்புகளில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். விண்ணப்பிக்கும் முறை: தனித்தேர்வர்கள் ஆன்-லைனில் தமது புகைப்படத்தை "அப்லோடு' செய்து, முழுமையான விவரங்களைப் பூர்த்திசெய்த பிறகு, அவர்களுக்கான விண்ணப்ப எண் வழங்கப்படும். இந்த விண்ணப்ப எண்ணை தனித்தேர்வர்கள் உடன் குறித்துக்கொள்ள வேண்டும். இந்த விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே, புகைப்படத்துடன் விவரங்களைப் பதிவு செய்த விண்ணப்பத்தையும், தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய சலானையும் பதிவிறக்கம் செய்துகொள்ள இயலும். இந்த விண்ணப்பத்தை நகலெடுத்து தேர்வர்கள் வைத்துக்கொள்ள வேண்டும். 
        இந்த எண்ணைப் பயன்படுத்தியே எந்தவொரு சந்தேகங்களுக்கும் தேர்வுத்துறையிடம் முறையீடு செய்யவோ, தேர்வுக்கூட நுழைவுச் சீட்டைப் பெறவோ முடியும். பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தில் புகைப்படத்தை ஒட்டி, அதில் கடைசியாகப் பயின்ற பள்ளித் தலைமையாசிரியரிடம் சான்றொப்பம் பெறுதல் வேண்டும். தேர்வுக் கட்டணம்: மறுமுறை தேர்வு எழுதுவோர் ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50 வீதம் தேர்வுக் கட்டணமும், இதரக் கட்டணமாக ரூ.35-ம் செலுத்த வேண்டும். நேரடித் தனித்தேர்வர்கள் தேர்வுக் கட்டணம் ரூ.150-ம், இதர கட்டணம் ரூ.35, கேட்டல், பேசுதல் திறன் தேர்வு ரூ.2 என மொத்தமாக ரூ.187 செலுத்த வேண்டும். கோர் பேங்கிங் சேவை உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் கிளையில் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டிய இறுதி தேதி ஜனவரி 19 ஆகும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் இடங்கள்: சென்னை, திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, கடலூர், வேலூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள், அங்குள்ள மண்டல துணை இயக்குநர் அலுவலகங்களிலும், இதர மாவட்டங்களிலிருந்து விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள் அவரவர் மாவட்டத்திலுள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களிலும் ஜனவரி 7 முதல் 19-க்குள் நேரடியாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
         அஞ்சல் மூலம் விண்ணப்பங்களை அனுப்பக் கூடாது. விண்ணப்பங்களுடன் இணைக்க வேண்டிய நகல்கள்: வங்கிச் சலான், சான்றொப்பமிடப்பட்ட மதிப்பெண் சான்றிதழின் நகல், பள்ளித் தலைமையாசிரியரிடம் இருந்து பெற்ற தகுதிச் சான்றிதழ் (பள்ளி மாணவர்களாகப் பதிவு செய்து தேர்வு எழுதாதவர்களுக்கு மட்டும்), செய்முறை மதிப்பெண்களுக்கான ஆவணம் (செய்முறைப் பாடங்கள் உள்ள தேர்வுகள் எழுதுவோர் மட்டும்) இணைத்து விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். நேரடித் தனித்தேர்வர்களுக்கு வங்கிச் சலான், பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான அசல் மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாறுதல் சான்றிதழின் அசல், இடப்பெயர்வு சான்றிதழ் (வெளிமாநில மாணவர்கள் மட்டும்) விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
 
2 ஆண்டுகளில் புதிதாக 92 கல்லூரிகள் துவக்கம்

             அனைத்து தரப்பினரும் உயர்கல்வி பெரும் வகையில், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது," என, தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் ஸ்ரீதர் தெரிவித்தார்.
 
        விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் உள்ள தனியார் பல்கலை.,யில் நடந்த விழாவில், அவர் பேசுகையில், "தமிழகத்தில் உயர்கல்வி மேம்படுத்தும் முயற்சியில், அரசு ஈடுபட்டு வருகிறது. நகர்புறங்களுக்கு இணையான கல்வி, கிராமப்புற மாணவர்களுக்கும் கிடைத்திட, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், கலை, அறிவியல், பாலிடெக்னிக் உட்பட 92 புதிய கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன.

          50க்கு மேற்பட்ட புதிய பாடங்களும், 299 புதிய பாடத்திட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் தற்போது 2,200 கல்லூரிகளும், விளையாட்டு, கல்வியியல் உட்பட 14 பல்கலை கழகங்களும் செயல்பட்டு வருகிறது சமுதாயத்தில் அனைத்து தரப்பினரும் உயர்கல்வி பெரும் வகையில், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது" என்றார்.

30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு: டி.என்.பி.எஸ்.சி. சுறுசுறுப்பு

        கடந்த ஆண்டில், தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு, 24 ஆயிரம் பேரை தேர்வு செய்து, சாதனை படைத்த, டி.என்.பி.எஸ்.சி., நடப்பு ஆண்டில், 30 ஆயிரம் பேர் வரை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக அரசின்
 
             பல்வேறு துறைகளில் தேவைப்படும், பணியாளர் எண்ணிக்கை குறித்த விவரங்களை பெற்று, தேர்வாணையம் இறுதி செய்துள்ளது.இது குறித்த அறிவிப்பு, பொங்கலுக்குப் பின் வெளியாகும் என, தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன. சில ஆண்டுகளாக, தமிழக அரசின் பல்வேறு துறைகளில், புதிய பணியாளர்களை நியமனம் செய்யும் பணி, வேகம் எடுத்து வருகிறது. கடந்த 2011ல், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதில் இருந்து, அரசுப் பணியாளர்கள் தேர்வு செய்யும் பணி, முழு வீச்சில் நடந்து வருகிறது. துறை வாரியாக, காலியாக உள்ள பணியிடங்கள் கணக்கு எடுக்கப்பட்டு, டி.என்.பி.எஸ்.சி., - டி.ஆர்.பி., மூலமும், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையிலும், பல்வேறு வகையான பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

அரசுப் பணிகள், தொய்வின்றி, முழுவீச்சில் நடப்பதற்கு வசதியாக, காலிப் பணியிடங்களை நிரப்புவதில், முதல்வர் ஜெயலலிதா, தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். இதனால், பட்டதாரிகள், மிகுந்த உற்சாகத்துடன், பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கேற்று, அரசுப் பணிகளில் சேர்ந்து வருகின்றனர். குறிப்பாக, டி.என்.பி.எஸ்.சி., மூலமாக அரசு பணியாளர்களும், டி.ஆர்.பி., மூலமாக ஆசிரியர்களும், கணிசமான எண்ணிக்கையில் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

டி.என்.பி.எஸ்.சி., தலைவராக நடராஜ் பதவி ஏற்றதில் இருந்து, தேர்வு நடத்துவதிலும், முடிவை உடனுக்குடன் வெளியிட்டு, பணி நியமன உத்தரவுகளை வழங்குவதிலும், தேர்வாணையம் வேகமாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு, குரூப்-2 பணியிடங்கள், 10 ஆயிரத்து 500, குரூப்-4 நிலையில், 10 ஆயிரத்து 718 இடங்கள், 1,870 வி.ஏ.ஓ., பணியிடங்கள் உட்பட, 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

இந்நிலையில், நடப்பு ஆண்டில், புதிய பணி நியமனம் செய்வதற்காக, துறை வாரியாக உள்ள காலி பணியிடங்கள் விவரங்களை, தேர்வாணையம் கேட்டு பெற்றுள்ளது. அதன்படி, 30 ஆயிரம் பேர் வரை, நடப்பு ஆண்டில் தேர்வு செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த முழுமையான அறிவிப்பு, பொங்கல் பண்டிகை முடிந்ததும் வெளியாகும் என, தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

அப்போது, இந்த ஆண்டு முழுவதும், எத்தனை வகையான தேர்வுகள் நடக்கும், ஒவ்வொரு தேர்விலும், எத்தனை பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர், தேர்வு அறிவிப்பு, தேர்வு நடக்கும் தேதி, முடிவு அறிவிப்பு, பின் கலந்தாய்வு, பணி நியமனம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அடங்கிய ஆண்டு தேர்வு அட்டவணையை, தேர்வாணைய தலைவர் நடராஜ் வெளியிடுவார் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

புதிய தேர்வு அறிவிப்பில், குரூப்-4 நிலையிலான காலி இடங்கள், எண்ணிக்கை கணிசமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.  அதேபோல், குரூப்-2 தேர்விலும், அதிகளவில் தேர்வர்கள் தேர்வு செய்ய வாய்ப்புகள் உள்ளன என்றும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன. எனவே, பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி முதல், பட்டதாரிகள் வரை படித்தவர்கள், இப்போதே போட்டித் தேர்வுகளுக்கு தயாராக ஆரம்பித்து விடலாம்.

தொடர்ச்சியாக, பல்வேறு போட்டித் தேர்வுகள் நடப்பதால், தேர்வாணையத்தின் புதிய அறிவிப்பை, பயிற்சி மைய நிர்வாகிகளும், ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
 
பள்ளி மாணவிகளுக்கு பிரத்யேக பேருந்து: புதுச்சேரி அரசு அறிவிப்பு

       பள்ளிகளுக்கு மாணவ, மாணவியர், மொபைல் போன் கொண்டு வருவது தடை செய்யப்படுவதுடன், அடுத்த கல்வியாண்டிலிருந்து, மாணவியருக்கு தனியாக பேருந்துகள் இயக்கப்படும்,' என, கல்வியமைச்சர் தியாகராஜன் கூறினார்.
 
   புதுச்சேரி அரசுப் பள்ளியில், பிளஸ் 2 படிக்கும் மாணவி, கடந்த 1ம் தேதி கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவ, மாணவியரிடம் ஒழுக்கத்தை மேம்படுத்துவது குறித்து, மேல்நிலைப் பள்ளி முதல்வர்களுடன், கல்வியமைச்சர் தியாகராஜன், துறை செயலர் மற்றும் இயக்குனர், நேற்று கலந்துரையாடல் நடந்தினர்.

பின்னர் அமைச்சர் தியாகராஜன் கூறியதாவது: பள்ளி மாணவ, மாணவியரிடம் ஒழுக்கத்தை மேம்படுத்த, சில நடவடிக்கைகளை அமல்படுத்த உள்ளோம். மாணவ, மாணவியர், பள்ளிக்கு மொபைல் போன் கொண்டு வருவது தடை செய்யப்படும். மீறி கொண்டு வருகின்றனரா என்பதை, பறக்கும் படை அமைத்து கண்காணிக்கப்படும்.

அரசு சார்பில், இயக்கப்படும் மாணவர் சிறப்பு பேருந்துகளை, அடுத்த கல்வியாண்டு முதல், மாணவர்களுக்குத் தனியாகவும், மாணவியருக்குத் தனியாகவும் இயக்கப்படும். இந்த பேருந்துகளில், வெளி நபர்கள் பயணிக்கின்றனரா என்பதும் கண்காணிக்கப்படும். மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகளை, பெற்றோருக்குத் தெரியப்படுத்திய பிறகே நடத்த வேண்டும்.

அடுத்த கல்வியாண்டு முதல், மாணவியருக்கு, "ஓவர் கோட்" வழங்கப்படும். எட்டு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியருக்கு உடல், மன நலத்திற்கான கவுன்சிலிங் அளிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.