Monday, November 3, 2014

Computer Instructor District Wise Seniority List:



தேசிய திறனாய்வு தேர்வு : 1.47 லட்சம் பேர் பங்கேற்பு:


பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு, இன்று, மாநிலம் முழுவதும், 350 மையங்களில் நடக்கிறது. 1.47 லட்சம் மாணவ, மாணவியர், தேர்வை எழுதுகின்றனர்.மத்திய அரசு, நாடு முழுவதும், 10ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு, போட்டித் தேர்வை நடத்தி, தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, பிளஸ் 1 முதல், பிஎச்.டி., வரை, கல்வி உதவித் தொகை வழங்குகிறது. இரண்டு கட்டங்களாக, தேர்வு நடத்தப்படுகிறது. முதல் கட்ட தேர்வு, இன்று நடக்கிறது. மத்திய அரசின் ஏஜன்சியாக, தமிழக அரசு தேர்வுத்துறை நடத்தும் இத்தேர்வில், 1 லட்சத்து 47 ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.
காலை, 9:30 மணி முதல், 11:00 மணி வரை, திறனறிதல் தேர்வும், 11:30 மணி முதல், பகல், 1:00 மணி வரை, படிப்புத் திறன் தேர்வும் நடக்கிறது. ஒவ்வொரு தேர்வும், தலா, 90 கேள்விகள், தலா, ஒரு மதிப்பெண் வீதம், 90 மதிப்பெண்களுக்கு, 'அப்ஜக்டிவ்' முறையில், கேள்வி - பதில்கள் தரப்பட்டு, சரியான விடையை தேர்வு செய்யும் முறையில், தேர்வு நடத்தப்படுகிறது.

Monday, October 6, 2014

BRC (Maths) Training for Primary Teachers: 

Dates Announced.

            அகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான அடிப்படை கணிதத் திறன் மேம்படுத்துதல் என்ற தலைப்பில் வட்டார வள மைய அளவில் 14.10.2014 முதல் 17.10.2014 வரை மற்றும் 27.10.2014 முதல் 30.10.2014 வரை இரண்டு கட்டங்களாக நான்கு நாட்கள் பயிற்சி நடைபெற உள்ளது

             அனைவருக்கும் கல்வி இயக்கம், மாநிலத் திட்ட இயக்குனர், சென்னை-6 அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/பயிற்சி/ அகஇ/2014. நாள். .08.2014 செயல்முறைகளின் படி 2014-15ஆம் கல்வியாண்டில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான அடிப்படை கணிதத் திறன் மேம்படுத்துதல் பயிற்சி வட்டார வள மைய அளவில் 14.10.2014 முதல் 17.10.2014 வரை மற்றும் 27.10.2014  முதல் 30.10.2014 வரை இரண்டு கட்டங்களாக நான்கு நாட்கள் பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சி காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறுகிறது.


Sunday, September 7, 2014

காலாண்டு பொதுத்தேர்வு கால அட்டவணையில் மாற்றம்

காலாண்டு பொதுத்தேர்வு கால அட்டவணையில் மாற்றம் செய்துள்ளது
பள்ளிக்கல்வித்துறை நடைபெறவிருக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு காலாண்டு பொதுத்தேர்வு கால அட்டவணையில் மாற்றம் செய்துள்ளது
10 மற்றும் 12ம் வகுப்பு காலாண்டு பொதுத்தேர்வு நடைபெறவிருக்கும் நிலையில் பள்ளிக்கல்வித்துறை நிர்வாக வசதியின் காரணமாக கால அட்டவணையில் 12ம் வகுப்பு ஆங்கிலம் மற்றும் 10ம் வகுப்பு மொழி பாடம் ஆகியவற்றின் தேர்வுகள் காலாண்டு விடுமுறைக்குப்பின் கீழ்க்கண்டவாறு மாற்றம் செய்துள்ளது.மேலும் அந்தந்த மாவட்டங்களில் 17, 18 செப்டம்பரில் வேறு வகுப்புகளுக்கு தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தால் அவையும் அக்டோபர் 07,08ல் மாற்றப்படவுள்ளது.
QUARTERLY EXAM12th TIME TABLE
17.09.14 ENGLISH I PAPER => 07.10.14 ENGLISH I PAPER
18.09.14 ENGLISH II PAPER => 08.10.14 ENGLISH II PAPER
QUARTERLY EXAM10th TIME TABLE
17.09.14 1ST LANGUAGE I PAPER => 07.10.14 1ST LANGUAGE I PAPER
18.09.14 1ST LANGUAGE II PAPER => 08.10.14 1ST LANGUAGE II PAPER