Friday, April 18, 2014

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தேர்வு கட்டணம் ஆன்லைனில் செலுத்த
ANNAMALAI UNIVERSITY EXAM FEE ONLINE PAYMENT CLICK THE BELOW LINK

கிளிக் செய்க

முதுகலை தேர்வுகள் கால அட்டவணை
POST GRADUATE COURSES EXAM TIMETABLE

கிளிக் செய்க

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய மாணவர் விபரங்கள் சேகரிப்பு

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில் பள்ளிகள் மூலம் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மாணவர்கள் பதிவை மேற்கொள்ள, விபரங்களை சேகரிக்க பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கும் பொழுது ஆன்லைன் மூலம் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

ஏற்கனவே 10ம் வகுப்பு முடித்து மதிப்பெண் சான்றுகளை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த 12ம் வகுப்பு மாணவர்கள், அவர்களின் பெயர், பள்ளியின் பெயர், பதிவெண், முகவரி, ஏற்கனவே பதிந்த வேலை வாய்ப்பகத்தின் பதிவெண் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

முதல் முறையாக பதிவு செய்யும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 மாணவர்கள் அவர்களின் பெயர், பள்ளியின் பெயர், பதிவெண், பிறந்த தேதி, பாலினம், அப்பா, அம்மா பெயர், முகவரி, மாவட்டம், ரேஷன் கார்டு எண், சாதி சான்றிதழ் எண், மதம், உயர்கல்வி படிக்க விரும்புகிறீர்கள், எனில், எந்த வகையான படிப்பு, அதை விடுத்து தொழில் செய்ய விரும்பினால், சொந்த தொழிலா, பிறரிடம் வேலைக்கு செல்கிறீர்களா? ஆகிய விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். 

இந்த விபரங்களை தலைமை ஆசிரியர்கள் வருகிற மே 2-ம்தேதிக்குள் சேகரித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கணினி ஆசிரியர்கள், வேலை வாய்ப்பு அதிகாரிகளுடன் ஆலோசித்து, பதிவை ஆன்லைனில் செய்வதற்குரிய ஏற்பாடுகள் முன் கூட்டியே மேற்கொள்ள வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கு அடுத்த மாதம் விண்ணப்பம் வினியோகம்?

"தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்காக மே இரண்டாவது வாரத்தில் விண்ணப்பம் வினியோகிக்கப்படலாம்" என, மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,555 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் போக மாநில ஒதுக்கீட்டில் 2,172 இடங்கள் உள்ளன.

இவை, இட ஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதுதவிர, தமிழகத்தில் உள்ள 13 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பிக்கும் 950 அரசு ஒதுக்கீடு எம்.பி.பி.எஸ். இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கு ஒரே விண்ணப்பம் தான் வழங்கப்படுகிறது. 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ல் வெளியாக உள்ளது. இதையொட்டி, இந்த கல்வி ஆண்டுக்கான விண்ணப்ப வினியோகம் மே இரண்டாவது வாரத்தில் துவங்கும் என, தெரிகிறது. "விண்ணப்பக் கட்டணம், வினியோக தேதி உள்ளிட்ட முழு விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்" என, மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment