Friday, May 9, 2014

மாநிலத்தில் முதல் மதிப்பெண் 1193 - ஊத்தங்கரை மாணவி சுஷாந்தி பெற்றார்!

2014ம் ஆண்டிற்கான பிளஸ் 2 தேர்வில், ஊத்தங்கரையின் ஸ்ரீவித் மந்திர் மேல்நிலைப் பள்ளி மாணவி சுஷாந்தி, மொத்தம் 1200க்கு 1193 மதிப்பெண்கள் பெற்று, மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.


இரண்டாமிடத்தை தருமபுரியின் ஸ்ரீ விஜய்வித் மேல்நிலைப் பள்ளியின் அலமேலு என்ற மாணவி, 1192 மதிப்பெண்களுடன் பிடித்துள்ளார்.


மூன்றாமிடத்தை இரண்டு பேர் பகிர்ந்து கொண்டுள்ளனர். மூன்றாமிடத்திற்கான மதிப்பெண் 1191. நாமக்கல் கிரீன்பார்க் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் துளசி ராஜனும், செங்கல்பட்டு, பிரின்ஸ் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த நித்யாவும் மூன்றாமிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.


தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி முதல் 25ம் தேதி வரை, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. இத்தேர்வை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சேர்த்து, 2242 மையங்களில், மொத்தம் 8.26 லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர்.

இவர்களில், 3.8 லட்சம் பேர் ஆண்கள் மற்றும் 4.45 லட்சம் பேர் ஆண்கள். தேர்வு முடிவுகள், மே மாதம் 9ம் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை 10 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

Higher Secondary HM Promotion Panel - 2014 Now Released.

              01.01.2014 அன்றைய நிலையில் அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான தேர்ந்தோர் பட்டியல்  (அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்  01 முதல் 287  முடிய மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 ம் இணைந்து 01 முதல் 1080  முடிய 

              மற்றும் நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்  01 முதல் 04  முடிய மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்  01) இத்துடன் இணைத்து அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த பட்டியலை, தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து  உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி சம்மந்தப்பட்ட ஆசிரியர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் அந்ததந்த பள்ளியின் அறிவிப்பு பலகையில் (சூடிவiஉந  க்ஷடியசன) ஒட்டி வைக்குமாறு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவிக்கப்படுகிறது.  இதற்கான ஒப்புதலை சார்ந்த தலைமை ஆசிரியகளிடமிருந்து பெற்று தங்களது அலுவலக கோப்பில் வைக்குமாறும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
        மேலும், இப்பட்டியலில் இடம் பெற்ற விவரங்கள் ஏதேனும் மாறுபாடு இருப்பின்( ழுநுசூனுநுசு, னுஹகூநு டீகு க்ஷஐசுகூழ  னுஹகூநு டீகு துடீஐசூஐசூழு ) அல்லது மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியான முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெயர்கள்  விடுப்பட்டிருப்பின்  அன்னாரின் விண்ணப்பத்துடன் (முதுகலை ஆசிரியர் உடற்கல்வி இயக்குநர் நிலை-1-யாக இருப்பின் டி.ஆர்.பி-யின் தர எண்ணை டி.ஆர்.பி அலுவலகத்தில் தற்போதைய நிலையில் பெற்று) கருத்துருவை சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரின் மேலொப்பம் மற்றும் பரிந்துரையுடன் சமர்ப்பிக்கவும், மற்றும் இம் முன்னுரிமை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள  முதுகலை ஆசிரியர்கள் / உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களில் தகுதி அல்லாதோர் பெயர் சேர்க்கப்பட்டிருப்பின் அது குறித்த விவரத்தினையும் தவறாமல், இச்செயல்முறைகள் கிடைக்கப்பெற்ற ஒரு வார காலத்திற்குள் ( 16-05-2014 ) க்குள் கண்டிப்பாக தெரிவிக்கவும் சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

              மேலும் இதில் ஏதேனும் கவனக்குறைவு ஏற்படும் பட்சத்தில், அவற்றிற்கு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரே முழு பொறுப்பாவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களை பொறுத்தமட்டில் அவர்களின் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியில் பணிவரன்முறை செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ள முன்னுரிமை எண்-படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.  முதுகலை ஆசிரியர்களை பொறுத்தவரையில் ஆசிரியர்  தேர்வு வாரியம் மூலம் பணி வாய்ப்பு பெற்றவர்களை ஆசிரியர்  தேர்வு வாரியத்திலிருந்து தற்போது பெறப்பட்ட அவர்களின் தர எண்/ வருடத்தின் அடிப்படையிலும், தற்காலிக பணி வாய்ப்பு/பதவி உயர்வு/கருணை அடிப்படை நியமனம் பெற்றவர்களை அவர்களின் முதுகலை ஆசிரியர் பதவியில் பணிவரன்முறை செய்யப்பட்ட நாளின் அடிப்படையில் வரிசைப்படுத்தப் பட்டுள்ளது.   தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட  மூன்று ஆசிரியர்களுக்கு தர எண் இல்லாத நிலையில், அவர்களின் பதவி உயர்வு முற்றிலும் கிடைக்கப் பெறாத நிலை ஏற்படும் என்பதால், அவர்களின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு, கருணையோடு பரிசீலினை செய்து, அவர்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில், சார்ந்த ஆசிரியர்களை அவர்களின் முதுகலை ஆசிரியர் பதவியில் பணிவரன்முறை செய்யப்பட்ட நாளின் படி, ஆண்டின் கடைசியில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.  இவர்கள் தங்களின் தர எண்/ ஆண்டு ஆகிய விவரத்தினை ஆசிரியர் தேர்வு வாரியத்திலிருந்து  தற்போதைய நிலையில் பெற்று  குறிப்பிட்ட நாளுக்குள் அளிக்கும் பட்சத்தில், அவர்களின் வரிசை அதன்படி மாற்றி அமைக்க பரிசீலிக்கப்படும் எனவும்.  இது சார்பான ஆதாரம் பெற்று இணைக்கப்படாத முறையீடுகள் எவையும் பரிசீலிக்க இயலாது எனத் தெரிவிக்கப்படுகிறது.  மேலும் இவ்வாறான முறையீட்டினை தங்களின் நிலையிலேயே தக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், ஆதாரம் உள்ள முறையீடுகளை உடன் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் பரிந்துரை செய்து சமர்ப்பிக்கவும் , நேரடியாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது




கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா? என்பதை அறிய...

அகவிலைப்படி ஊதிய நிலுவைத் தொகை பெற்றுவிட்டீர்களா?

                         அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால்ஊதியப்பட்டியல்கருவூலத்தில் சமர்ப்பித்துவிட்டோம் என்று இழுத்தடிக்கிறார்களா?

                        கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதாஎந்தநாளில் சம்பளம் வரவு வைக்கப்படும் போன்ற தகவகல்களை நீங்களேஇணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

1. www.treasury.tn.gov.in/Public/ ecstokenno.aspxஎன்ற தளத்திற்குச் செல்லவும்.
2. உங்களது மாவட்டத்தினைத் தெரிவு செய்யவும்.
3. Sub treasury ஐத் தெரிவு செய்யவும்.
4. Select branch என்னும் பகுதிக்கு அருகில் உள்ள கட்டத்தில் உங்கள்வங்கியின் MICR code ஐப் பதிவு செய்யவும்.(உங்கள் காசோலைப்புத்தகத்தில் பார்த்தால் தெரியும்)
5. உங்கள் வங்கிக் கணக்கு எண்ணைப் பதிவு செய்யுங்கள்.

அவ்வளவு தான் நண்பர்களேஎந்த தேதியில் உங்கள் அலுவலர்கருவூலத்தில் ஊதியப்பட்டியலைச் சமர்பித்தார்எந்த தேதியில் அதுகாசாக்கப்படும் என அறியலாம்.
மேலும் கடந்த காலத்தில் நீங்கள் பெற்ற ஊதிய விபரங்களையும் அறியமுடியும்.

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் : கல்வித்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

           அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளை துவங்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
          மாணவர்களின் கல்வி உரிமைகளுக்கான பெற்றோர் சங்கத்தின் தலைவர், வெங்கடேசன் என்பவர், தாக்கல் செய்த மனு: பெரும்பாலும், தனியார் பள்ளிகள் தான், எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளை நடத்துகின்றன. இந்தப் பள்ளிகள் எல்லாம், கூடுதல் கட்டணங்களை வசூலிக்கின்றன. இதனால், பெற்றோர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். சமச்சீர் கல்வி, தரமான கல்வி குறித்து வலியுறுத்தப்பட்டாலும், தனியார் பள்ளிகள், தாங்களாகவே பாடத்திட்டங்களை வகுத்துக் கொள்கின்றன. எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகளுக்கு கூட, சமச்சீர் கல்வி இருக்க வேண்டும். அரசு பள்ளிகளில், ஆறாவது வயதில் இருந்து தான் குழந்தைகளை சேர்க்கின்றனர். தனியார் பள்ளிகளில், மூன்று வயதில் இருந்தே குழந்தைகளை சேர்க்கின்றனர்.
 
          குழந்தைகளின் மனநிலை, உடல்தகுதி மேம்பாட்டுக்கு, நடவடிக்கை எடுக்க, அரசு தவறி விட்டது. சென்னை மாநகராட்சி மேயர், 25 மழலையர் பள்ளிகளை துவங்கப் போவதாக அறிவித்துள்ளார். அரசு தொடக்கப் பள்ளிகளிலும், எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளை துவங்கக் கோரி, அரசுக்கு மனு அனுப்பினேன். எனவே, இந்த கல்வியாண்டு முதல், அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளை துவங்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, நீதிபதிகள் சுதாகர், சசிதரன் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர், ஜிம்ராஜ் மில்டன் ஆஜரானார். மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதிலளிக்க, அரசுக்கு, "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.


No comments:

Post a Comment