|
SSLC SOCIAL SCIENCE SLOW LEARNERS GUIDE 2015:
SSLC SOCIAL SCIENCE SLOW LEARNERS GUIDE 2015PREPARED BY K.ANNADURAI B.T ASST GGHSS KALLAKURICHI VILLUPURAM DT
SSLC SCIENCE PUBLIC EXAMINATION SCIENCE PICTURES COLLECTION 2015
PREPARED BY C.RAJENDRAN BT ASSISTANT GHSPERUMPAKKAM- VILLUPURAM DIST
SSLC SCIENCE FULLPORTION QUESTION PAPER TAMIL MEDIUM
|
SSLC SOCIAL SCIENCE MAP PRACTICE:
THANKS TO MR.ARCHINAKUMAR DHARMAPURAI
|
SSLC SOCIAL SCIENCE IMPORTANT 5 MARKS-CLICK HERE:
THANKS TO MR.M. MARIYAPILLAI
M.A.,M.PHIL.,B.ED(HISTORY) B.T ASST IN HISTORY GGHSS KACHIRAYAPALAYAM
VILLUPURAM DISTRICT.CELL:9787687969
|
சென்னையில் அடுத்த மாதம் பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு:
சென்னையில் அடுத்த மாதம் (மே) பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு நடைபெற இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்து தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:தமிழின் பெருமையை உலகுக்கு எடுத்துரைக்கும் உலகப் பொது மறையாம் திருக்குறள் குறித்த பன்னாட்டு மாநாட்டினை உலகத் தமிழ்ச் சங்கமும், சென்னைப் பல்கலைக்கழகமும் இணைந்து அடுத்த மாதம் நடத்தவுள்ளன. இரண்டு நாள்கள் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உலகளாவிய அறிஞர்கள், குறள் நெறி ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள், பல்துறை அறிஞர்களிடம் இருந்து பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
திருவள்ளுவரும் கன்பூசியசும், திருக்குறளும் பௌத்தமும், திருக்குறளில் மேலாண்மை, திருக்குறளில் பெண்ணின் பெருமை, திருக்குறளில் கல்வி, திருக்குறளில் ஆட்சிமுறை, திருக்குறளில் அரசியல், திருக்குறளில் அறிவியல், திருக்குறளில் ஆளுமைத்திறன், திருக்குறளில் மருத்துவம், திருக்குறளில் வேளாண்மை, திருக்குறளில் உளவியல், திருக்குறளில் தத்துவம், திருக்குறளில் ஒற்றுமை, திருக்குறளில் மக்கள், திருக்குறளில் சுற்றுச்சூழல், திருக்குறளில் அறம், திருக்குறளில் புதுமையும் புரட்சியும், திருக்குறளில் சித்தர் நெறி, திருக்குறளில் நட்பு, திருக்குறளில் சுற்றம், திருக்குறளில் ஒழுக்கம், திருக்குறளில் ஈகை, திருக்குறளில் வாய்மை, திருக்குறளில் நகைச்சுவை, திருக்குறளில் காலம், திருக்குறளில் பன்முகம், இவை போன்ற பிற பொருண்மைகள் குறித்த 8 பக்க அளவில் ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
கட்டுரைகளை வரும் 30 ஆம் தேதிக்குள், மதுரைக்கு அனுப்பி வைக்க வேண்டும். "தனி அலுவலர், உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை, மனை எண்: 30, காவியன் பிளாசா, எல்.ஐ.ஜி., குடியிருப்பு, அண்ணாநகர், மதுரை-625 020' என்ற முகவரிக்கோ அல்லது 11 அளவிலான (ஊர்ய்ற் ள்ண்க்ஷ்ங்) எழுத்துருவில் யுனிகோடு முறையில் தட்டச்சு செய்து ன்ற்ள்ம்க்ன்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்க வேண்டும். வல்லுநர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள் மட்டுமே மாநாட்டில் இடம்பெறும் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
பிளஸ் 2 பொருளாதார பாடத் தேர்வில் 2 கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்:
பிளஸ் 2 பொருளாதார பாடத் தேர்வில் 2 கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படும் என, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.பிளஸ் 2 பொருளாதார பாட விடைத்தாள் திருத்துவதற்குத் தடைவிதிக்கக் கோரி தமிழ்நாடு முதுகலை ஆசிரியர்கள் சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவர் எம்.சந்திரன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.மனுவில், பிளஸ் 2 பொருளாதார பாடத்தேர்வு கடந்த மார்ச் 27 ஆம் தேதி நடைபெற்றது. இதில்"ஏ' பிரிவில் ஒரு மதிப்பெண் கேள்விகளில் 18, 20 ஆம் கேள்விகள் தவறானதாகவும் விடையளிக்க முடியாததாகவும் உள்ளன. மேலும் "டி' பிரிவில் 78 ஆவது கேள்வி கடினமானதாக உள்ளது. 20 மதிப்பெண்கள் அளிக்கக்கூடிய இந்தக் கேள்வி, தலா 10 மதிப்பெண் அளிக்கக்கூடிய இரு கேள்விகளை ஒருங்கிணைத்து கேட்கப்பட்டுள்ளது. பாடப் புத்தகத்தில் உள்ள 10 பக்கங்களில் இருந்து விடையளிக்கக் கூடியதாக இந்தக் கேள்வி உள்ளது. குறிப்பிட்ட கேள்விக்கான விடை பொருளாதார பாடத்தில் தேவை, விநியோகம் என்ற பாடத்தில் உள்ளது.
புத்தகக் குழு பரிந்துரைப்படி இந்தப் பாடத்தில் இருந்து புத்திக் கூர்மையை பரிசோதிக்கும் கேள்வி கேட்கப்பட வேண்டும். ஆனால் பயன்பாடு அடிப்படையில் கேள்வி இடம் பெற்றுள்ளது. இது தவறாகும். கடந்த 10 ஆண்டுகளாக இது போன்ற கடினமான கேள்வி கேட்கப்படவில்லை. எனவே வடிவமைப்பு விதிகளுக்கு மாறாக கேள்வி கேட்கப்பட்டு உள்ளதால் 18, 20, 78 ஆவது கேள்விகளுக்கு விடையளித்து இருந்தால் அவர்களுக்கு அதற்குரிய முழு மதிப்பெண்களை வழங்க உத்தரவிட வேண்டும். விடைகளில் தகுந்த மாற்றம் செய்யும் வரையில் விடைத்தாளை திருத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தார்.
இம்மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, "ஏ' பிரிவில் 18, 20 ஆவது கேள்விகளுக்கு விடையளித்துள்ள அனைவருக்கும் கருணை மதிப்பெண் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
|
பிளஸ் 2 மாணவர்களுக்கான புத்தகங்கள் இந்த வார இறுதிக்குள் முழுமையாக விநியோகம்:
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 புத்தகங்கள் விநியோகம் தொடங்கியுள்ளது. இந்த வார இறுதிக்குள் மாணவர்களுக்கான புத்தகங்கள் முழுமையாக விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பொதுத்தேர்வு மாணவர்கள் கோடை விடுமுறையிலும் படிக்கும் வகையில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே விநியோகம் செய்யப்படுகின்றன.
அதன்படி, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான பிளஸ் 2 புத்தகங்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகளில் பிளஸ் 1 முடித்த மாணவர்களுக்கு பிளஸ் 2 புத்தக விநியோகம் தொடங்கியுள்ளது.விழுப்புரம், தஞ்சாவூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாலான மாணவர்களுக்கு பிளஸ் 2 புத்தகங்கள் திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டன. இந்த வார இறுதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தனியார் பள்ளி மாணவர்களுக்கு....
தனியார் பள்ளி மாணவர்களுக்கான பிளஸ் 2 புத்தகங்கள் தமிழ்நாட்டுப் பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தின் வட்டார அலுவலகங்கள் மூலம் பள்ளிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்களில் பணத்தைச் செலுத்தி தனியார் பள்ளிகள் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
சில்லறை விற்பனை எப்போது?
அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கான புத்தக விநியோகம் நிறைவடைந்த பிறகே பிளஸ் 2 புத்தகங்களின் சில்லறை விற்பனை தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒன்பதாம் வகுப்பு தேர்வுகள் நிறைவடைந்த பிறகு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்புக்கான புத்தக விநியோகம் தொடங்கும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
|
படைப்பாற்றல், புத்தாக்கத்தால் மட்டுமே நாடு முன்னேற்றமடையும்: அப்துல் கலாம்:
படைப்பாற்றல், புத்தாக்கத்தால் மட்டுமே நம் நாடு முன்னேற்றத்தை அடைய முடியும் என்றார் இந்திய குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம்.தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற "தொலைநோக்கு 2025' ஆவணம் வெளியீட்டு விழா, மேற்கூரையில் 1.25 மெகாவாட் சூரியஒளி எரிசக்தி சாதனங்களை இயக்கி வைக்கும் விழாவில் அவர் மேலும் பேசியது:அடுத்த 15 முதல் 25 ஆண்டுகளில் 4 தனித்துவமான திட்டங்கள் மூலம் நம் நாடு மாற்றத்தை அடையும். குறிப்பாக தேசிய அதிதிறன் நீர்வழிச்சாலை திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். இதன் மூலம், நதிகளை இணைப்பது மட்டுமல்லாமல், வெள்ளம், வறட்சியைச் சமாளிக்க முடியும். இரண்டாவது புரட்சி விண்வெளித் துறையில் நிகழ்த்தப்பட வேண்டும். மூன்றாவது விண்ணிலிருந்து சூரிய ஒளி எரிசக்தி உற்பத்தி செய்தல், விண்வெளி சூரியஒளி எரிசக்தி செயற்கைக்கோள் மூலம் உலகத்துக்கு நாள் முழுவதும் மின்சாரம் கிடைக்கச் செய்தல் போன்றவை மேற்கொள்ளப்பட வேண்டும். நான்காவதாக, மனித சமுதாயத்துக்கு மரபணு மாற்றப்பட்ட பொருத்தமான மருந்துகள் பெறப்பட வேண்டும்.
இந்த அறிவுசார் சமுதாயத்தில் புத்தாக்கம் தொடர் செயலாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும். படைப்பாற்றல் மூலம் புத்தாக்கம் உருவாகும். அழகான சிந்தனையிலிருந்து படைப்பாற்றல் உருவாகிறது. இதை, உலகில் எந்தப் பகுதியிலிருந்தும், எந்த இடத்திலிருந்தும் செய்ய முடியும். மீனவர்கள் குடியிருப்பு, விவசாயிகளின் வீடு, பால் பண்ணை, கால்நடை தீவன மையம், வகுப்பறை, ஆய்வகம், தொழிலகம், ஆய்வு, மேம்பாட்டு மையத்திலிருந்தும் படைப்பாற்றலை தொடங்கலாம்.
கல்வி முறை, புத்தாக்க மேம்பாட்டு முறை, தொழிலகப் பங்களிப்பு, கூட்டு மூலதனம், கல்வி நிறுவனங்களுக்கு அரசியல் ஆதரவு போன்றவற்றால் பின்லாந்து நாடு உலகளாவிய புத்தாக்கப் பட்டியலில் நான்காமிடத்தையும், உலகளாவிய போட்டித் தன்மைப் பட்டியலில் நான்காம் இடத்தையும் வகிக்கிறது. நம் நாடு உலகளாவிய புத்தாக்கப் பட்டியலில் 76 ஆம் இடத்திலும், உலகளாவிய போட்டித்தன்மைப் பட்டியலில் 79 ஆம் இடத்திலும் உள்ளது. இந்தப் பட்டியல்களில் நம் நாடு முதல் 10 இடங்களில் இடம்பெறுவதற்குப் படைப்பாற்றல் கல்வி, புத்தாக்கம், தொழில்முனைவு, கூட்டு முதலீட்டு முறை ஆகியவற்றை செயல்படுத்துவதன் மூலம்தான் முடியும் என்றார் அப்துல் கலாம்.
பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆர். சேதுராமன், முதன்மையர்கள் எஸ். வைத்திய சுப்பிரமணியம், எஸ். சுவாமிநாதன், டாடா சோலார் பவர் நிறுவன நிர்வாக இயக்குநர் சஞ்சீவ் மெஹ்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
|
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: தேர்வானோர் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வு:
சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் 2 தாள்களையும் சேர்த்து 37,472 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு 2 தாள்களிலும் 80,187 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சி.பி.எஸ்.இ. பாடத் திட்டப் பள்ளிகள், கேந்த்ரிய வித்யாலய பள்ளிகள் உள்ளிட்டவற்றில் பணியாற்றுவதற்கு சி.பி.எஸ்.இ. நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
1 முதல் 5-ஆம் வகுப்பு வரை கற்பிக்க முதல் தாள் தேர்வும், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை கற்பிக்க இரண்டாம் தாள் தேர்வும் எழுத வேண்டும். இந்த ஆண்டு மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு பிப்ரவரி 21-ஆம் தேதி நடைபெற்றது. தேர்வு முடிவுகள் ஏப்ரல் 1-ஆம் தேதி வெளியிடப்பட்டன.
இந்தத் தேர்வு முடிவுகள் குறித்த விவரங்கள் சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
அதன் விவரம்: முதல் தாள் தேர்வை 2 லட்சத்து 7,522 பேர் எழுதினர். இவர்களில் 37,153 பேர் (17.90) தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டாம் தாள் தேர்வை 4 லட்சத்து 70 ஆயிரத்து 32 பேர் எழுதினர். இவர்களில் 43,034 பேர் (9.16 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் தாள் தேர்வில் பொதுப்பிரிவில் 25.18 சதவீதம், இதர பிற்படுத்தப்பட்டவர்கள் பிரிவில் 17.19 சதவீதம், எஸ்.சி. பிரிவில் 10.77 சதவீதம், எஸ்.டி. பிரிவில் 6.04 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இரண்டாம் தாள் தேர்வில் பொதுப்பிரிவில் 13.80 சதவீதம், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 8.23 சதவீதம், எஸ்.சி. பிரிவில் 3.88 சதவீதம், எஸ்.டி. பிரிவில் 4.86 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி விகிதம் முதல் தாளில் 11.95 சதவீதமாகவும், இரண்டாம் தாளில் 2.80 சதவீதமாகவும் இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
ஒருங்கிணைந்த பாடத் திட்ட விவரம் மே மாதத்தில் வெளியீடு:
பல்வேறு பட்டப் படிப்புகள் குறித்த தெளிவான புரிதலை மாணவர்களுக்கு வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பாடத் திட்ட விவரம் சேகரிக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.இந்த மாத இறுதிக்குள் அவை இறுதி செய்யப்பட்டு, மே மாதமே அந்த விவரங்களை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் எடுத்து வருகிறது.தமிழகம் முழுவதும் உள்ள அரசு, தனியார் கல்லூரிகள், தன்னாட்சி கலை அறிவியல் கல்லூரிகளில் பல வகையான படிப்புகள், இளங்கலை, முதுகலை பாடப் பிரிவுகளில் கற்பிக்கப்படுகின்றன.
தொழில் நிறுவனங்களின் தற்போதைய தேவை, உடனடி வேலைவாய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இதுபோன்று புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்படுவதாக அதன் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.இவ்வாறு அறிமுகம் செய்யப்படும் புதியப் படிப்புகளை முடிக்கும் மாணவர்கள், அரசு பணியிலோ அல்லது ஆசிரியர் பணியிலோ சேர முடியாத நிலை ஏற்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் இந்தப் படிப்புகளை கணக்கில் கொள்வதே இல்லை.
உதாரணமாக, "அப்ளைடு எகனாமிக்ஸ்', "கணினி அப்ளிகேஷனுடன்' கூடிய வணிகவியல் படிப்பு, மொழியியல் படிப்புகள் என்பன உள்ளிட்ட கல்வித் தகுதிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புறக்கணிக்கப்படுகிறது. இதனால், பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பான தொடர் புகார்களைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்த பாடத்திட்ட விவரத்தை வெளியிட தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழ்நாடு உயர் கல்வி மன்றம் இந்தப் பணியை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக கல்லூரி பட்ட படிப்புகள் குறித்த முழு விவரங்களை சேகரிக்கும் பணி, தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதோடு, மூல பட்டப் படிப்பு, வேறு எந்தெந்த பட்டப் படிப்புகளுக்கு இணையானவை என இனம் காணப்பட்டு பிரிக்கும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது.
இதன் மூலம், மாணவர் கல்லூரியில் சேரும்போதே, தான் சேரும் பட்டப் படிப்பு எதற்கு இணையானது என்பதை அறிந்துகொள்ள முடியும்.
இது குறித்து தமிழ்நாடு உயர் கல்வி மன்ற உறுப்பினர் செயலர் கரு. நாகராஜன் கூறியது:
ஒருங்கிணைந்த பாடத் திட்ட விவரம் தயாரிக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
பணிகள் முழுமையாக நிறைவுபெற்ற உடன், ஒவ்வொரு படிப்புக்கும் தனித் தனி நிபுணர்கள் மூலம் கருத்துக்கள் கேட்கப்பட்டு சீர்படுத்தும் பணி நடைபெறும். இப் பணிகள் அனைத்தும் இந்த மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு விடும்.
பின்னர் அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, மாணவர்களின் பார்வைக்காக மே மாதம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றார்.
|
"தொடக்கப் பள்ளிகளில் தமிழே பயிற்று மொழியாக வேண்டும்"
தமிழக தொடக்கப் பள்ளிகளில் தமிழே பயிற்று மொழியாவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சான்றோர் தமிழ்க் காப்பு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை:
மத்திய கல்வி உரிமைச் சட்டம் 2009-இன்படி, தமிழக தொடக்கப் பள்ளிகளில் தமிழே பயிற்று மொழி என்று கொண்டுவர சட்டம் இயற்றப்பட வேண்டும். அத்துடன், இந்த சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற வேண்டும். இதுதொடர்பாக பிரதமரைச் சந்தித்து தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
No comments:
Post a Comment