RESOURCES
- HOME
- DRAW
- POD CAST
- FOR XII
- KIDS TV
- LIFE SKILLS
- COLORING PAGES
- TAMIL PROVERBS
- TET
- ENGLISH
- CCE
- E-LIBRARY
- ENGLISH for TAMIL
- MAPS
- WORKSHEETS
- FOR TENTH
- SCHOOL VISIT
- STORIES
- நவக்கிரகங்கள்
- தமிழ் இலக்கணம்
- அரசானைகள் GO'S
- ENGLISH EXERCISES
- AUDIO BOOK
- FUN
- ONLINE ENGLISH
- GRAMMAR
- RESOURCE BOOK
- EARTH PARTS
- RESOURCES
- LEARN TAMIL
- MUSIC FOR PPT
- தமிழ் எழுதி
- Kids activities
- E-content
- ORIGAMI
- PLANETORIUM
- WEBCAM EFFECTS
- சிறுகதைகள்
- சமையல்
- TET CENTRE
- மருத்துவம்
- கணினி
- புத்தகங்கள்
- CLASS POSTERS
- TRANSLATE
- MATHS KIT
- ENGLISH PRACTICE
- TAMIL SITES
- CERTIFICATES
- e-Grammar
- Scientists
- GAMES
- INTEL TOOLS
- E-ENGLISH CLASSROOM
- TEACHERS PAY
- BUSY TEACHER
- கல்வி விகடன்
- VECTOR ART
- How to draw
- Hello kids
- CEO VILLUPURAM
- TED SUGATAM
- MATHS GOODIES
- TEACHNOLOGY
- MATHS-IXL
- KIDS PHONICS
- PHONETICS
- VIDEOS
- FREE CLIPARTS
- TAMIL ACADEMY
- TAMIZH NOOLAGAM
- English-Tamil dictionary
- VILLUPURAM DISTRICT
- Gamified Grammar
Monday, November 11, 2013
Sunday, November 10, 2013
ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கை மனு கொண்டுவருபவர்களுக்கு உடனடி தீர்வு கம்ப்யூட்டர் உதவியுடன் அந்த நிமிடமே பதில்
ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மனு கொண்டுவருபவர்களுக்கு கம்ப்யூட்டர் உதவியுடன் உடனடியாக பதில் அளிக்கிறார்கள். தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் செய்கிறது. அதுமட்டுமல்ல அரசு என்ஜினீயரிங் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களை எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்கிறது. மேலும் அரசு கலை கல்லூரிகளுக்கு உதவி பேராசிரியர்களை தேர்வு செய்கிறது. இப்படியாக வருடம் முழுவதும் ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை நடத்தி வருகிறது.
இப்போது ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக விபுநய்யர் உள்ளார். உறுப்பினர் செயலாளராக தண்.வசுந்தராதேவியும், உறுப்பினர்களாக க.அறிவொளியும், தங்கமாரியும் உள்ளனர்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
அதில் சிலர் மதிப்பெண் குறைவாக இருக்கிறது என்றும், சிலர் விடை சரியாக இல்லை என்றும் புகார் தெரிவித்தவண்ணம் தினமும் வருகிறார்கள்.
குறை தீர்க்கும் மையம்
அவ்வாறு வருபவர்களுக்கு சரியான முறையில் பதில் அளிப்பதற்காக தலைவர் விபுநய்யர் ஒரு குறைதீர்ப்பு மையத்தை ஏற்படுத்தி உள்ளார்.
இந்த மையம் ஆசிரியர் தேர்வு வாரிய நுழைவு வாயில் அருகே உள்ளது.
இதற்காக லேடி வெலிங்டன் மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் திலகவதியும், கூடுவாஞ்சேரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் செந்தில்வேலும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதில் ஆசிரியர் செந்தில்வேல் ஆசிரியர் தேர்வு வாரிய நுழைவு வாயிலில் இருக்கிறார். கோரிக்கை கொண்டுவருபவர்களிடம் மனுக்களை பெறுகிறார். ஆசிரியர் தகுதி தேர்வில் குறைந்த மார்க் உள்ளது என்று கூறினால் உடனே அவரை அருகே உள்ள குறை தீர்க்கும் மையத்திற்கு அழைத்துச்செல்கிறார்.
அங்கு ஆசிரியர் திலகவதி உடனடியாக கம்ப்யூட்டர் உதவியுடன் அந்த நபரின் விடைத்தாளை எடுத்து காண்பித்து பார்க்கவைக்கிறார்.
திருப்தி அடைகிறார்கள்
கடந்த 2 நாட்களாக இந்த மையம் செயல்பட்டு வருகிறது. இது தொடர்ந்து செயல்பட உள்ளது. கடந்த 2 நாட்களில் 13 பேர் மதிப்பெண் வித்தியாசம் என்று கோரி வந்தனர். அந்த நிமிடமே கோரிக்கை மனு கொண்டுவந்தவர்களை கம்ப்யூட்டர் முன் அமர்த்தி பதில் அளிக்கப்படுகிறது. குறைதீர்க்கும் மையத்தில் பார்த்த பின்னர் அவர்கள் திருப்தியுடன் செல்கிறார்கள்.
மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ள விடைகளில் சில தவறு உள்ளன என்று பலர் மனு கொடுத்துள்ளனர்.
செல்போனில் தெரிவிக்கலாம்
இந்த குறை உள்பட மொத்தம் 300–க்கும் மேற்பட்ட மனுக்கள் வந்துள்ளன. சிலர் தொலைபேசியில் தங்களது குறைகளை தெரிவிக்கிறார்கள். அவர்களின் தொலைபேசி எண்ணை வாங்கி வைத்துக்கொண்டு பின்னர் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து பதில் அளிக்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் தொடர்பாக எந்த சந்தேகமாக இருந்தாலும் நேரில் வரலாம். அல்லது 7373008134 மற்றும் 7373008144 ஆகிய செல்போன்களில் தொடர்பு கொள்ளலாம்.
பணியில் இருக்கும் போது அரசு ஊழியர்கள் இறந்தால், அவர்களது வாரிசுகளுக்கு தகுதி அடிப்படையில் வேலை வழங்க உத்தரவு
எம்.சுதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விரம்: திருவண்ணாமலை மாவட்டம் அகரம் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சத்துணவு சமையலராக எனது தாய் பணிபுரிந்தார். கடந்த 2004-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி பணியிலிருக்கும் போது அவர் இறந்தார். அரசு பணியின் போது எனது தாய் இறந்ததால், கருணை அடிப்படையில் அந்த வேலையை எனக்கு வழங்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தேன்.
அதில், சத்துணவு அமைப்பாளர் பணி வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தேன். மாவட்ட ஆட்சியரும் அந்த மனுவை ஏற்றுக் கொண்டு 2009-ஆம் ஆண்டு அரசுக்கு பரிந்துரைத்தார். ஆனால், சமையலர் அல்லது சமையல் உதவியாளர் பணியில் தான் நியமிக்க முடியும், சத்துணவு அமைப்பாளராக நியமிக்க முடியாது எனக் கூறி சமூக நலத்துறை எனது கோரிக்கையை மறுத்து விட்டது. அதனால், கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பாளர் வேலை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு நடந்து வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இறந்த அரசு ஊழியர்களின் பதவியைப் பொறுத்து அவர்களது வாரிசுகளுக்கு வேலை வழங்கக் கூடாது. வாரிசுகளின் தகுதி அடிப்படையில் அவர்களுக்கு வேலை வழங்க வேண்டும். அதனால், மனுதாரின் தகுதி அடிப்பைடையில் 8 வாரங்களுக்குள் அவருக்கு சத்துணவு அமைப்பாளர் வேலை வழங்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கு தயாராகும் பள்ளிகள்
மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. ஓட்டுச் சாவடியாக செயல்படும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், தங்களது பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து ஒவ்வொரு வட்டார தொடக்க கல்வி அலுவலகத்திலும் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக குடிநீர், மின்சாரம், கழிப்பறை வசதி உள்ளாதா? எந்த மாதிரியான கட்டடம், மராமத்து பணி தேவையா என்பது குறித்து விளக்கமும் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் கேள்விக்கு ஆசிரியர்கள் எழுத்து பூர்வமாக பதில் கொடுத்துள்ளனர்.
ஓட்டுச்சாவடியில் வாக்களிக்க வரும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் தேர்தல் கமிஷன் கேள்விகள் கேட்டுள்ளது. ஜனவரிக்குள், பள்ளிகளில் உள் கட்டமைப்பு வசதிகளை செய்து முடிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
இதையடுத்து லோக்சபா தேர்தலுக்கு பள்ளிகளை தொடக்க கல்வித்துறையினர் தயார்படுத்தி வருகின்றனர்.
சென்னை பல்கலை: இளங்கலை படிப்புக்கான கால அட்டவணை வெளியீடு
சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப் படிப்புக்கான கால அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
பி.ஏ., பி.எஸ்சி, பி.காம்.,(கோ-ஆப்ரேஷன்ஸ்), பி.சி.எஸ், பி.காம்.,கார்போரெட் சிக்ரேட்டரிஷிப், பி.லிட், பி.எஸ்சி., விசுவல் கம்யூனிகேஷன் உள்ளிட்ட படிப்புகளுக்கான (2005-06) கல்வியாண்டில் விண்ணப்பித்தவர்கள் கால அட்டவணையை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
கால அட்டவணையை பார்க்க www.ideunom.ac.in என்ற இணையதளத்தை காணலாம்.
சிறப்பு கட்டணத்தை ஈடுசெய்ய அரசு பள்ளிகளுக்கு ரூ.52 லட்சம் ஒதுக்கீடு
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களிடம் இருந்து பெறப்படும் சிறப்பு கட்டணத்தை (ஸ்பெஷல் பீஸ்) ரத்து செய்த ஈரோடு மாவட்டத்துக்கு, 52 லட்சம் ரூபாயை அரசு வழங்கி உள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள் மற்றும் நிதியுதவி பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளிடம் மிக குறைந்த கட்டணம் சிறப்பு கட்டணமாக பெறப்பட்டு வந்தது. இந்த கட்டணத்தில் இருந்து பள்ளிகளுக்கு தேவையான சிறுசிறு வசதிகளை மேம்படுத்திக் கொள்ள பள்ளிகளிலேயே அந்தந்த தலைமையாசிரியர் இந்நிதியை கையாள அரசு அனுமதி வழங்கி இருந்தது.
அரசு பள்ளிகள் மாநகராட்சி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆறு முதல் ப்ளஸ் 2 வரை சேர்க்கப்படும் மாணவர்கள் மற்றும் பள்ளியில் தொடர்ந்து படிக்கும் மாணவ, மாணவிகளிடம் பெறப்பட்டு வரும் சிறப்பு கட்டணம் 2008-09 ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டன.
அரசே முழு கட்டணத்தையும் மாணவர்களுக்காக ஏற்றுக் கொண்டு, பள்ளிகளுக்கு ஏற்படும் நிதியிழப்பை ஈடு செய்ய, சிறப்பு கட்டணத்தை ஆண்டுதோறும் பள்ளிகளுக்கு அரசு வழங்கி வருகிறது.
தமிழகம் முழுவதும், 2011-12ம் ஆண்டு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும், 21 கோடி ரூபாயும், மாநகராட்சி பள்ளிகளுக்கு 50 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது. இதேபோல், 2012-13ம் ஆண்டுக்கு 20.50 கோடி ரூபாயும், 2013-14ம் ஆண்டுக்கு, 20.50 கோடி ரூபாயும் அரசு ஒதுக்கியது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலை மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு, இந்தாண்டுக்கான சிறப்பு கட்டணம் வழங்குவதற்கான ஆணை தற்போது வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 192 அரசு, மாநகராட்சி மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு 2012-13ம் ஆண்டுக்கு 54 லட்சம் ரூபாயும், 2013-14ம் ஆண்டுக்கு 52 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு தற்போது வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈரோடு மாவட்டத்தில் மொத்தம், ஐந்து லட்சத்துக்கும் மேலான மாணவ, மாணவிகள் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகம், நோட்டுப் புத்தகம், சைக்கிள், ப்ளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு லேப் டாப், ஒன்று முதல், ப்ளஸ் 1 வரை புத்தகப் பை, ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு கணித உபகரணப் பெட்டி, ஒன்று முதல், 8ம் வகுப்பு வரை படிக்கும், சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு, இரண்டு செட் இலவச சீருடை வழங்கப்படுகிறது.
தவிர, முதல் வகுப்பிலிருந்து, ப்ளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ், கலர் கிரையான்ஸ், கலர் பென்சில்கள் போன்ற, 16 வகையான இலவசப்பொருள்கள் அரசு வழங்கும் நிலையில், மாணவர்கள் செலுத்தி வந்த சிறப்பு கட்டணத்தையும் அரசு ரத்து செய்துள்ளது. அதனால் ஏற்படும் நிதியிழப்பை பள்ளிகளுக்கு வழங்கி அடிப்படை வசதிகள் தடையின்றி வடக்க வழி செய்துள்ளது.
இந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு, பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதால், மாணவ, மாணவிகளுக்கு குடிநீர், கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகளை தொய்வின்றி மேற்கொள்ள முடியும், என, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
Friday, November 8, 2013
News

200 வருடங்கள் கழித்துத் தோன்ற இருக்கிற வால்நட்சத்திரத்தை, உபகரணங்கள் ஏதும் இன்றி நம் கண்களாலேயே கண்டு ரசிக்கலாம். அந்த வால்நட்சத்திரத்தின் பெயர் ‘ஐசான்’.
விண்வெளியில் பல வருடங்களுக்கு ஒரு முறை தெரிபவை வால்நட்சத்திரங்கள். கிரேக்கத்தில் இதை ‘கோமெட்டா’ என்றனர். அப்படியென்றால் நீண்ட முடி உடையது என்று பொருள். பின்னர் காமெட் என்றானது. ஒளிவீசும் விண்மீனில் நீண்டு வால் போல் இருக்கும் பகுதியே இப்பெயருக்குக் காரணம்.
ஆரம்ப காலத்தில் இதன் நீண்ட பகுதி பனிக்கட்டியாலும் தூசியாலும் ஆனது என நம்பப்பட்டது. உண்மையில் வால்நட்சத்திரம் வேகமாகப் பயணம் செய்யும்போது சூரிய வெப்பத்தால் அதிலிருக்கும் பனிக்கட்டி உருகி நீரும் தேவையற்ற பொருள்கள் எரிந்த புகையும் வெளியாகும். இவை இரண்டும் சேர்ந்து வால் போல இருக்கும். பொதுவாக வால்நட்சத்திரம் ஒழுங்கற்ற அமைப்புடன்தான் இருக்கும். சூடான சூரிய மண்டலத்தின் உள் வட்டத்துக்குள் வந்த பின்னர் வால் முளைக்கும். அப்போது பிரகாசமாகத் தெரியும். அவை சூரியனை நெருங்க, நெருங்க வாலின் நீளமும் நீண்டுகொண்டே போகும். அதன் நீளம் பல லட்சம் கிலோமீட்டர்வரை இருக்கும். இவை தங்கள் சுற்றுப்பாதையில் சூரியனுக்கு அருகில் வந்த பின்னர் மிகத் தொலைவில் சென்று மறையும். அதில் ஒன்றுதான் நாம் பார்க்க இருக்கும் ஐசான் வால்நட்சத்திரம். ஐசானின் வயது என்ன தெரியுமா? சுமார் 460 கோடி ஆண்டுகள் என்று கணித்திருக்கிறார்கள். சூரியன் தோன்றியபோது இதுவும் தோன்றியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். அப்போது பிறந்த வால்நட்சத்திரம்தான் இப்போது நம்மை முதல்முறையாகப் பார்க்க வருகிறது!
ஐசான் வால் நட்சத்திரம் ரொம்பப் பெரியது. இதன் வாலின் நீளம் மட்டும் 3 லட்சம் கி.மீ. அகலம் 5 லட்சம் கி.மீ.
சூரியனை உரசிச் செல்லும்போது ஐசான், சிதறிப் போகலாம். அப்படி ஏதும் நடக்காவிட்டால், இந்த நூற்றாண்டின் பிரகாசமான வால்நட்சத்திரம் இதுதான்.
ஐசான் வால்நட்சத்திரத்தைக் கிழக்கு வானில் அதிகாலையில் சூரியன் உதயமாவதற்கு முன் பார்க்கலாம்.
நவம்பர் இரண்டாவது வாரம் வரை ஐசான், புதன் கோள் அருகே வரும். அப்போது தொலைநோக்கி அல்லது பைனாகுலர் உதவியுடன் பார்க்கலாம்.
நவம்பர் 3ஆவது வாரம் முதல் அதிகாலை கிழக்கு அடிவானில் சூரியன் உதயம் ஆவதற்கு முன் இதை வெறும் கண்ணால் பார்க்கலாம். வெறும் கண்ணால் பார்ப்பது ஆபத்து இல்லை.
நவம்பர் 29ஆம் தேதி மாலை மேற்கு அடிவானில் மிகவும் பிரகாசமாகத் தெரியும். அப்போது வெறும் கண்ணால் நன்றாகப் பார்க்கலாம்.
டிசம்பர் முதல் ஒருவேளை வால் நீண்டு இருந்தால் ஜனவரி முதல் வாரம் வரை முழு இரவிலும் நன்றாகத் தெரியும் என்று புதுவை அறிவியல் கழகத்தினர் தெரிவித்திருக்கிறார்கள். அனைவரும் ஐசானைப் பார்க்கத் தயாராவோமா.
ஆசிரியர் தகுதித்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் பட்டியல் வெளியீடு
முதல் தாள் (இடைநிலை ஆசிரியர் தேர்வு):
1. சி. இராஜம்மாள் - ஈரோடு மாவட்டம் - 126 மதிப்பெண் - முதல் இடம்
2. பி. சத்யா - திண்டுக்கல் மாவட்டம் - 122 மதிப்பெண் - இரண்டாவது
இடம்
ஆர்.இராமசந்திரன் - விழுப்புரம் மாவட்டம் - 122 மதிப்பெண்
இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர் தேர்வு) :
1. ஆர். வினுஷா - தூத்துக்குடி மாவட்டம் - 126 மதிப்பெண் - முதல் இடம்
2. பி. இராஜகாளீஸ்வரி - இராமநாதபுரம் மாவட்டம் - 123 மதிப்பெண் - இரண்டாவது இடம்
3. வி. மேகலா - காஞ்சிபுரம் மாவட்டம் - 122 மதிப்பெண் - மூன்றாவது இடம்
சி. குருமூர்த்தி - ஈரோடு மாவட்டம் - 122 மதிப்பெண் - மூன்றாவது இடம்
|
டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேரில், 15 ஆயிரம் பேருக்கு, அரசு பள்ளிகளில், ஆசிரியர் வேலை உறுதி
டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேரில், 15 ஆயிரம் பேருக்கு, அரசு பள்ளிகளில், ஆசிரியர் வேலை உறுதி; 12 ஆயிரம் பேர், ஏமாற்றம் அடையும் நிலை எழுந்துள்ளது.
டி.இ.டி., முதல் தாள் தேர்வில், 12,596 பேரும், இரண்டாம் தாள் தேர்வில், 14,496 பேரும், தேர்ச்சி பெற்றுள்ளனர். எனினும், அரசு பள்ளிகளில், 15 ஆயிரம் பணியிடங்கள் வரை, காலியாக இருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடக்க கல்வித்துறையில், 880 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், 1,500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், காலியாக இருக்கின்றன. பள்ளி கல்வித்துறையில், தற்போதைய நிலவரப்படி, 10,500 இடங்கள் காலியாக உள்ளன. மே மாதம், பணி ஓய்வு பெறும் ஆசிரியர் பணியிடங்களையும் சேர்த்தால், மேலும், சில ஆயிரம் இடங்கள் அதிகரிக்கலாம்.
மொத்தத்தில், 15 ஆயிரம் பேருக்கு, அரசு பள்ளிகளில், ஆசிரியர் வேலை கிடைக்க, அதிக வாய்ப்புகள் உள்ளன.
தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேருக்கும், இம்மாத இறுதியிலோ அல்லது, டிசம்பர், முதல் வாரத்திலோ, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். அதன்பின், இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு,கல்வித்துறையி இவர்கள், தனியார் பள்ளிகளில், ஆசிரியர் வேலையில் சேரலாம். அரசு பள்ளிகளில், ஒவ்வொரு ஆண்டும், கணிசமான எண்ணிக்கையில், ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டுவருகின்றனர். ஆனால், மாணவர் சேர்க்கை சதவீதம், சரிந்துகொண்டே வருகிறது. இதனால், ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம், 1:25 என்ற நிலை உள்ளது. டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையும் நியமனம் செய்யும்போது, ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம், மேலும் சரியும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வரும் ஆண்டுகளில், ஆசிரியர் நியமனம், பெரிய அளவில் இருக்காது என, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. |
10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களை தனித்தேர்வர்களாக எழுத வற்புறுத்தக் கூடாது
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களை தனித்தேர்வர்களாக எழுத வற்புறுத்தக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தனியார் பள்ளிகள் அவ்வாறு வற்புறுத்தினால் பெற்றோர்கள் இ-மெயில் மூலமாகவும், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை வெளியிட்ட அறிவிப்பு: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பயிலும் மாணவர்களை கல்வியாண்டின் இடையில் பெற்றோர்களின் விருப்பமின்றி மாற்றுச்சான்றிதழ் வழங்கி தனித்தேர்வர்களாக அவர்களை பொதுத்தேர்வு எழுத வலியுறுத்தக்கூடாது என ஏற்கெனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் மூலமாகவும், தனியார் பள்ளிகளின் முதல்வர்கள் கூட்டங்களிலும் பள்ளி மாணவர்களை எந்தக் காரணத்தாலும் தனித்தேர்வர் என விண்ணப்பித்து தேர்வு எழுத வற்புறுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தனியார் பள்ளிகளின் பத்தாம் வகுப்பு மாணவர்களை மதிப்பெண் குறைவாக பெற்ற காரணத்தால் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதுமாறு மெட்ரிக் பள்ளிகள் வற்புறுத்துவதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகத்துக்கு இ-மெயில் மூலமó புகார்கள் வருகின்றன. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கல்வியாண்டின் இடையில் பெற்றோர் விருப்பமின்றி மாற்றுச் சான்றிதழ் வழங்கக் கூடாது. இந்த மாணவர்களை எந்தக் காரணம்கொண்டும் தனித்தேர்வர்கள் என விண்ணிப்பித்து தேர்வு எழுத வற்புறுத்தக்கூடாது. இந்த விதிகளைப் பின்பற்றாத பள்ளிகள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறோம். இதில் ஏதேனும் விதிமீறல்கள் இருக்கும் என்றால் கீழ்க்கப்பட்ட இ-மெயில் முகவரியிலும், எஸ்.எம்.எஸ். மூலமும் பெற்றோர்கள் புகார் தெரிவிக்கலாம். இ-மெயில் முகவரி: dmschennai2010@gmail.com, எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டிய செல்போன் எண்கள்: 94421-44401, 94435-74633. |
டி.இ.டி., தேர்வு முடிவு வெளியீடு: வெறும் 4% பேர் தேர்ச்சி
ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூன்றாவது முறையாக, கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்திய டி.இ.டி., தேர்வின் முடிவை, நேற்றிரவு வெளியிட்டது. தேர்வெழுதிய, 6.6 லட்சம் பேரில், வெறும், 4.09 சதவீதம் பேர் மட்டுமே, தேர்ச்சி பெற்றனர். முந்தைய தேர்வை விட, 1.1 சதவீதம் பேர், கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஆகஸ்ட் 17,18ம் தேதிகளில், டி.இ.டி., தேர்வுகள் நடந்தன. தமிழகத்தில், முதல் தாள் தேர்வை (இடைநிலை ஆசிரியர் பணி), 2.62 லட்சம் பேரும், இரண்டாம் தாள் தேர்வை (பட்டதாரி ஆசிரியர் பணிக்கானது), 4 லட்சம் பேரும் எழுதினர். விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, முடிவுகள் தயாராக இருந்தன. இரு வாரங்களாக, தேர்வு முடிவை தேர்வர் எதிர்பார்த்து வந்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு தேர்வு முடிவை டி.ஆர்.பி., வெளியிட்டது. www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், தேர்வு முடிவு வெளியிடப்பட்டன. தேர்வெழுதிய, 6.6 லட்சம் பேரில், 27,092 பேர் தேர்ச்சி பெற்றனர். வெறும், 4.09 சதவீதம் பேர் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட 60 சதவீத மதிப்பெண் மற்றும் அதற்கு அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு, அக்டோபரில் நடந்த தேர்வை விட, 1.1 சதவீதம் பேர், கூடுதாலாக தேர்ச்சி பெற்றனர். கடந்த தேர்வில், 2.99 சதவீதம் பேர், தேர்ச்சி பெற்றனர்.
|
பள்ளிக்கல்வி - அனைத்து CEO / ACEO / DEO / DEEO / IMSஆய்வுக்கூட்டம் 09.11.2013 அன்றைய தினத்திற்குஒத்திவைப்பு |
Subscribe to:
Posts (Atom)

