200 வருடங்கள் கழித்துத் தோன்ற இருக்கிற வால்நட்சத்திரத்தை, உபகரணங்கள் ஏதும் இன்றி நம் கண்களாலேயே கண்டு ரசிக்கலாம். அந்த வால்நட்சத்திரத்தின் பெயர் ‘ஐசான்’.
விண்வெளியில் பல வருடங்களுக்கு ஒரு முறை தெரிபவை வால்நட்சத்திரங்கள். கிரேக்கத்தில் இதை ‘கோமெட்டா’ என்றனர். அப்படியென்றால் நீண்ட முடி உடையது என்று பொருள். பின்னர் காமெட் என்றானது. ஒளிவீசும் விண்மீனில் நீண்டு வால் போல் இருக்கும் பகுதியே இப்பெயருக்குக் காரணம்.
ஆரம்ப காலத்தில் இதன் நீண்ட பகுதி பனிக்கட்டியாலும் தூசியாலும் ஆனது என நம்பப்பட்டது. உண்மையில் வால்நட்சத்திரம் வேகமாகப் பயணம் செய்யும்போது சூரிய வெப்பத்தால் அதிலிருக்கும் பனிக்கட்டி உருகி நீரும் தேவையற்ற பொருள்கள் எரிந்த புகையும் வெளியாகும். இவை இரண்டும் சேர்ந்து வால் போல இருக்கும். பொதுவாக வால்நட்சத்திரம் ஒழுங்கற்ற அமைப்புடன்தான் இருக்கும். சூடான சூரிய மண்டலத்தின் உள் வட்டத்துக்குள் வந்த பின்னர் வால் முளைக்கும். அப்போது பிரகாசமாகத் தெரியும். அவை சூரியனை நெருங்க, நெருங்க வாலின் நீளமும் நீண்டுகொண்டே போகும். அதன் நீளம் பல லட்சம் கிலோமீட்டர்வரை இருக்கும். இவை தங்கள் சுற்றுப்பாதையில் சூரியனுக்கு அருகில் வந்த பின்னர் மிகத் தொலைவில் சென்று மறையும். அதில் ஒன்றுதான் நாம் பார்க்க இருக்கும் ஐசான் வால்நட்சத்திரம். ஐசானின் வயது என்ன தெரியுமா? சுமார் 460 கோடி ஆண்டுகள் என்று கணித்திருக்கிறார்கள். சூரியன் தோன்றியபோது இதுவும் தோன்றியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். அப்போது பிறந்த வால்நட்சத்திரம்தான் இப்போது நம்மை முதல்முறையாகப் பார்க்க வருகிறது!
ஐசான் வால் நட்சத்திரம் ரொம்பப் பெரியது. இதன் வாலின் நீளம் மட்டும் 3 லட்சம் கி.மீ. அகலம் 5 லட்சம் கி.மீ.
சூரியனை உரசிச் செல்லும்போது ஐசான், சிதறிப் போகலாம். அப்படி ஏதும் நடக்காவிட்டால், இந்த நூற்றாண்டின் பிரகாசமான வால்நட்சத்திரம் இதுதான்.
ஐசான் வால்நட்சத்திரத்தைக் கிழக்கு வானில் அதிகாலையில் சூரியன் உதயமாவதற்கு முன் பார்க்கலாம்.
நவம்பர் இரண்டாவது வாரம் வரை ஐசான், புதன் கோள் அருகே வரும். அப்போது தொலைநோக்கி அல்லது பைனாகுலர் உதவியுடன் பார்க்கலாம்.
நவம்பர் 3ஆவது வாரம் முதல் அதிகாலை கிழக்கு அடிவானில் சூரியன் உதயம் ஆவதற்கு முன் இதை வெறும் கண்ணால் பார்க்கலாம். வெறும் கண்ணால் பார்ப்பது ஆபத்து இல்லை.
நவம்பர் 29ஆம் தேதி மாலை மேற்கு அடிவானில் மிகவும் பிரகாசமாகத் தெரியும். அப்போது வெறும் கண்ணால் நன்றாகப் பார்க்கலாம்.
டிசம்பர் முதல் ஒருவேளை வால் நீண்டு இருந்தால் ஜனவரி முதல் வாரம் வரை முழு இரவிலும் நன்றாகத் தெரியும் என்று புதுவை அறிவியல் கழகத்தினர் தெரிவித்திருக்கிறார்கள். அனைவரும் ஐசானைப் பார்க்கத் தயாராவோமா.
ஆசிரியர் தகுதித்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் பட்டியல் வெளியீடு

முதல் தாள் (இடைநிலை ஆசிரியர் தேர்வு):
1. சி. இராஜம்மாள் - ஈரோடு மாவட்டம் - 126 மதிப்பெண் - முதல் இடம்

2. பி. சத்யா - திண்டுக்கல் மாவட்டம் - 122 மதிப்பெண் - இரண்டாவது
இடம்
ஆர்.இராமசந்திரன் - விழுப்புரம் மாவட்டம் - 122 மதிப்பெண்

(ஒரே மதிப்பெண் இருந்தால்பிறந்த தேதி அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும்)

இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர் தேர்வு) :
1. ஆர். வினுஷா - தூத்துக்குடி மாவட்டம் - 126 மதிப்பெண் - முதல் இடம்

2. பி. இராஜகாளீஸ்வரி - இராமநாதபுரம் மாவட்டம் - 123 மதிப்பெண் - இரண்டாவது இடம்

3. வி. மேகலா - காஞ்சிபுரம் மாவட்டம் - 122 மதிப்பெண் - மூன்றாவது இடம்

சி. குருமூர்த்தி - ஈரோடு மாவட்டம் - 122 மதிப்பெண் - மூன்றாவது இடம்


பி. அன்பரசி - திருவண்ணாமலை மாவட்டம் - 122 மதிப்பெண் - மூன்றாவது இடம்
டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேரில், 15 ஆயிரம் பேருக்கு, அரசு பள்ளிகளில், ஆசிரியர் வேலை உறுதி
டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேரில், 15 ஆயிரம் பேருக்கு, அரசு பள்ளிகளில், ஆசிரியர் வேலை உறுதி; 12 ஆயிரம் பேர், ஏமாற்றம் அடையும் நிலை எழுந்துள்ளது.

டி.இ.டி., முதல் தாள் தேர்வில், 12,596 பேரும், இரண்டாம் தாள் தேர்வில், 14,496 பேரும், தேர்ச்சி பெற்றுள்ளனர். எனினும், அரசு பள்ளிகளில், 15 ஆயிரம் பணியிடங்கள் வரை, காலியாக இருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடக்க கல்வித்துறையில், 880 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், 1,500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், காலியாக இருக்கின்றன. பள்ளி கல்வித்துறையில், தற்போதைய நிலவரப்படி, 10,500 இடங்கள் காலியாக உள்ளன. மே மாதம், பணி ஓய்வு பெறும் ஆசிரியர் பணியிடங்களையும் சேர்த்தால், மேலும், சில ஆயிரம் இடங்கள் அதிகரிக்கலாம்.

மொத்தத்தில், 15 ஆயிரம் பேருக்கு, அரசு பள்ளிகளில், ஆசிரியர் வேலை கிடைக்க, அதிக வாய்ப்புகள் உள்ளன.

தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேருக்கும், இம்மாத இறுதியிலோ அல்லது, டிசம்பர், முதல் வாரத்திலோ, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். அதன்பின், இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு,கல்வித்துறையிடம், டி.ஆர்.பி., வழங்கும். டிசம்பர் இறுதிக்குள், புதிய ஆசிரியர், பணி நியமனம் செய்யப்படலாம். இடைநிலை ஆசிரியர் பணியை பொறுத்தவரை, தேர்ச்சி பெற்றிருந்தாலும், மாநில அளவில், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தான், பணி நியமனம் நடக்கும். பட்டதாரி ஆசிரியர் மட்டும், தேர்வர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனம் செய்யப்படுவர். எனவே, 12 ஆயிரம் பேருக்கு, அரசு பள்ளிகளில், ஆசிரியர் வேலை  கிடைக்க வாய்ப்பு இல்லை.

இவர்கள், தனியார் பள்ளிகளில், ஆசிரியர் வேலையில் சேரலாம். அரசு பள்ளிகளில், ஒவ்வொரு ஆண்டும், கணிசமான எண்ணிக்கையில், ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டுவருகின்றனர். ஆனால், மாணவர் சேர்க்கை சதவீதம், சரிந்துகொண்டே வருகிறது. இதனால், ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம், 1:25 என்ற நிலை உள்ளது. டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையும் நியமனம் செய்யும்போது, ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம், மேலும் சரியும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வரும் ஆண்டுகளில், ஆசிரியர் நியமனம், பெரிய அளவில் இருக்காது என, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களை தனித்தேர்வர்களாக எழுத வற்புறுத்தக் கூடாது
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களை தனித்தேர்வர்களாக எழுத வற்புறுத்தக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


தனியார் பள்ளிகள் அவ்வாறு வற்புறுத்தினால் பெற்றோர்கள் இ-மெயில் மூலமாகவும், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை வெளியிட்ட அறிவிப்பு:
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பயிலும் மாணவர்களை கல்வியாண்டின் இடையில்
பெற்றோர்களின் விருப்பமின்றி மாற்றுச்சான்றிதழ் வழங்கி தனித்தேர்வர்களாக அவர்களை பொதுத்தேர்வு எழுத வலியுறுத்தக்கூடாது என ஏற்கெனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் மூலமாகவும், தனியார் பள்ளிகளின் முதல்வர்கள் கூட்டங்களிலும் பள்ளி மாணவர்களை எந்தக் காரணத்தாலும் தனித்தேர்வர் என விண்ணப்பித்து தேர்வு எழுத வற்புறுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனியார் பள்ளிகளின் பத்தாம் வகுப்பு மாணவர்களை மதிப்பெண்
குறைவாக பெற்ற காரணத்தால் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதுமாறு மெட்ரிக் பள்ளிகள் வற்புறுத்துவதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகத்துக்கு இ-மெயில் மூலமó புகார்கள் வருகின்றன.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கல்வியாண்டின் இடையில் பெற்றோர் விருப்பமின்றி மாற்றுச் சான்றிதழ் வழங்கக் கூடாது. இந்த மாணவர்களை எந்தக் காரணம்கொண்டும் தனித்தேர்வர்கள் என விண்ணிப்பித்து தேர்வு எழுத வற்புறுத்தக்கூடாது.
இந்த விதிகளைப் பின்பற்றாத பள்ளிகள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறோம்.
இதில் ஏதேனும் விதிமீறல்கள் இருக்கும் என்றால் கீழ்க்கப்பட்ட இ-மெயில் முகவரியிலும், எஸ்.எம்.எஸ். மூலமும் பெற்றோர்கள் புகார் தெரிவிக்கலாம்.
இ-மெயில் முகவரி:  dmschennai2010@gmail.com, எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டிய செல்போன் எண்கள்: 94421-44401, 94435-74633.
டி.இ.டி., தேர்வு முடிவு வெளியீடு: வெறும் 4% பேர் தேர்ச்சி

ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூன்றாவது முறையாக, கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்திய டி.இ.டி., தேர்வின் முடிவை, நேற்றிரவு வெளியிட்டது. தேர்வெழுதிய, 6.6 லட்சம் பேரில், வெறும், 4.09 சதவீதம் பேர் மட்டுமே, தேர்ச்சி பெற்றனர். முந்தைய தேர்வை விட, 1.1 சதவீதம் பேர், கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆகஸ்ட் 17,18ம் தேதிகளில், டி.இ.டி., தேர்வுகள் நடந்தன. தமிழகத்தில், முதல் தாள் தேர்வை (இடைநிலை ஆசிரியர் பணி), 2.62 லட்சம் பேரும், இரண்டாம் தாள் தேர்வை (பட்டதாரி ஆசிரியர் பணிக்கானது), 4 லட்சம் பேரும் எழுதினர். விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, முடிவுகள் தயாராக இருந்தன. இரு வாரங்களாக, தேர்வு முடிவை தேர்வர் எதிர்பார்த்து வந்தனர். 

இந்நிலையில் நேற்றிரவு தேர்வு முடிவை டி.ஆர்.பி., வெளியிட்டது. www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், தேர்வு முடிவு வெளியிடப்பட்டன. தேர்வெழுதிய, 6.6 லட்சம் பேரில், 27,092 பேர் தேர்ச்சி பெற்றனர். வெறும், 4.09 சதவீதம் பேர் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட 60 சதவீத மதிப்பெண் மற்றும் அதற்கு அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர். 

கடந்த ஆண்டு, அக்டோபரில் நடந்த தேர்வை விட, 1.1 சதவீதம் பேர், கூடுதாலாக தேர்ச்சி பெற்றனர். கடந்த தேர்வில், 2.99 சதவீதம் பேர், தேர்ச்சி பெற்றனர்.

பள்ளிக்கல்வி - அனைத்து CEO / ACEO / DEO / DEEO / IMS 

ஆய்வுக்கூட்டம் 09.11.2013 அன்றைய தினத்திற்கு 

ஒத்திவைப்பு