Monday, October 29, 2012


டி.இ.டி., தேர்வு முடிவு ஒரு வாரம் தள்ளி வைப்பு
     சட்டசபை கூட்டத்தொடர் நடப்பதால், டி.இ.டி., தேர்வு முடிவு,
 ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 
கடந்த, 14ல் நடந்த, டி.இ.டி., மறுதேர்வில், 4.75 லட்சம் தேர்வர் பங்கேற்றனர்.
விடைத்தாள் மதிப்பீடு முடிந்து விட்டது. தேர்வு தொடர்பாக, தேர்வர்கள் 
கொடுத்த, 400க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் மீது, ஆய்வு நடத்தி,
 உரிய மதிப்பெண் இழப்பீடுகளையும், டி.ஆர்.பி., வழங்கியுள்ளதாக,
 துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, தேர்வு முடிவு 
தயாரிக்கும் பணிகள், சில நாட்களாக நடந்து வந்தன. 27ம் தேதியுடன், 
அனைத்துப் பணிகளும் முடிந்து விட்டன. இதனால், 28 அல்லது 
29ம் தேதியில், முடிவை வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டிருந்தது. ஆனால், 
எத்தனை சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என, தெரியவில்லை.
 இதற்கிடையே, சட்டசபையின், குளிர்கால கூட்டத் தொடர், நவ., 2 வரை நடக்கிறது. 
இந்நேரத்தில், தேர்வு முடிவை வெளியிடுவது சரியாக இருக்காது என,
 டி.ஆர்.பி., கருதியது. முந்தைய தேர்வை விட, தேர்ச்சி சதவீதம் 
அதிகரித்தோ அல்லது குறைந்தோ, எப்படி இருந்தாலும், அது, சட்டசபையில்
 விமர்சனத்தை ஏற்படுத்தும் எனவும், டி.ஆர்.பி., கருதுகிறது. இதனால், சட்டசபை 
கூட்டத் தொடர் முடிந்தபின், தேர்வு முடிவு வெளியாகும் என, துறை வட்டாரங்கள் 
தெரிவித்தன.

Constitution of District Level Vigilance Committee and
 State Level Scrutiny Committee to verify the genuineness 
of community certificate

New Pension Scheme - Offer Document
click here to download - New Pension Scheme - Offer Document

Pupil –teacher ratio as per RIGHT OF CHILDREN TO FREE AND COMPULSORY EDUCATION ACT-2009 and NORMS AND STANDARDS FOR A school

click here & Download Pupil –teacher ratio as per RIGHT OF 
CHILDREN TO FREE AND COMPULSORY EDUCATION ACT-2009 and 
NORMS AND STANDARDS FOR A school


அனைவருக்கும் கல்வி இயக்கம் - "Shiksha Ka Haq Abhiyan" கீழ் நடைபெறும் பள்ளி / வட்டார / மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகள் மற்றும் பரிசு வழங்கல்களை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்குமாறு மாநிலத் திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.


      அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் போட்டிகள் மற்றும்  விழாக்கள் "Shiksha Ka Haq Abhiyan" எனற தலைப்பின் கீழ் நடத்துமாறு உத்தரவிடப்பட்டது.

 இதையடுத்து பள்ளி / வட்டார மற்றும் மாவட்ட அளவில் போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்க ஏற்பாடுகள் அனைத்து மாவட்டத்திலும் வட்டார அளவில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இன்று சென்னை மாநிலத் திட்ட
அலுவலகத்தில் இருந்து இப்போட்டிகள் மறு உத்தரவு வரும் வரை "Shiksha Ka Haq Abhiya" கீழ் நடைபெறும் பள்ளி / வட்டார / மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகள் மற்றும் பரிசு வழங்கல்களை நிறுத்தி வைக்குமாறு மாநிலத் திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளதாக அனைவருக்கும் கல்வி இயக்கக வட்டராங்கள் தெரிவிக்கின்றன.

+2 தனித்தேர்வு: விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி துவக்கம

      பிளஸ் 2 தனித்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி நாமக்கல்லில் துவங்கியது. இம்மாதம் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்களுக்கு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. விடைத்தாள் மதிப்பீடு அக்.,30ம் தேதி வரை நடக்கும்.600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  மதிப்பீடு செய்யும் பணி முடியும் வரை பள்ளிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளனர். விரைவில் இப்பணிகள் முடிவடைந்து விடைகள் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



ஜார்க்கண்ட் மாநில பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்களின் ஓய்வு வயது உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் முதலமைச்சர் அர்ஜூன் முன்டா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், மாநில பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியர்களின் ஓய்வு வயது 62யிலிருந்து 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது

No comments:

Post a Comment