Tuesday, October 30, 2012

news

 

Nominal Roll Preparation - Declaration Form


HIGH & HR.SEC.SCHOOL HM TO DEO PANEL


RMSA மூலம் அரசு பள்ளிகளில் செயல்படும் SMDC குழு
உறுபினர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.


+2 Nominal Roll Preparation Instructions

Click Here to Download Pro

 

வங்கிப் பணிகளை பலர் விரும்புவது எதனால்?


கடந்த சில ஆண்டுகளாகவே நமது பொதுத்துறை வங்கிகளின் கிளார்க் மற்றும் அதிகாரி நிலைப் பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணியிடங்களுக்கு நமது இன்ஜினியரிங் பட்டதாரிகள் அதிக அளவில்போட்டியிடுவதைப் பார்க்க முடிகிறது. எதனால் வங்கிப் பணிகளை நோக்கி நமது இளைஞர்கள் 
பயணிக்கின்றனர் வேகமாக வளரும் துறை பாங்கிங்தான்.
சுதந்திரத்திற்குப் பிறகும், குறிப்பாக தேசிய மயமாக்கப்படலுக்குப் பின்பும் 
இந்தியாவில் வங்கித் துறை படு வேகமாக வளர்ந்து வருகிறது. Class Banking to 
Mass Banking என்னும் அடிப்படையில் குறிப்பிட்ட சிலருக்காக இயங்கி வந்த
 பொதுத் துறை வங்கிகள் தேசிய மயமாக்கலின் பின் பொது மக்களுக்கான வங்கிச்
 சேவையைத் தருவதில் கவனம் செலுத்தின.இதனால் வங்கிக் கிளைகள் ஒருபுறமும் டெபாசிட் அக்கவுண்டுகள் மறுபுறமும் அதிகரித்துக் கொண்டே சென்றன. வளர்ச்சிக்கான வாய்ப்பு
 அதிகம் என்பதால் பாங்கிங் துறையை அனைவரும் நாடுகின்றனர். வரக்கூடிய கால கட்டத்திலும் வங்கித் துறையானது மேலும் வளரும் என்பதே பொருளாதார எதிர்பார்ப்பு என்பதால் இதில் வேலை வாய்ப்புகளை பலரும் நாடுகின்றனர்.
அருமையான சம்பளம்வங்கித் துறையில் ஊழியர்களுக்குத் தரப்படும் சம்பளமானது 
தனியார் துறை வங்கியல்லாத நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் அதிகம் 
இல்லை தான் என்றாலும்
 இந்தப் பணிகளுக்குத் தரப்படும் சம்பளமானது மோசமானதும் அல்ல என்பதே உண்மை. கிளார்க் பணிகளுக்கு இந்த சம்பளம் என்றால், வங்கியில் கவர்ச்சிகரமான பணி என்பதே அதிகாரி நிலையில் தரப்படும் சம்பளம் தான்.
சம்பளம் தவிர பிற படிகளும் இளைஞர்களைக் கவருகின்றன. வீட்டுக் கடன் வசதி, பண்டிகைக்கான கடன், வாகனக் கடன், கம்ப்யூட்டர் கடன் என கடன் வசதிகள் குறைந்த வட்டியில் வங்கிப் பணிகளில் கிடைக்கின்றன. இதுவும் நமது இளைஞர்கள் வங்கிப் 
பணிகளை நாடுவதற்கான மற்றொரு முக்கியக் காரணம் எனலாம்.வங்கித் துறை 
இவ்வளவு வேகமாக வளருவதாலேயே அதன் ஊழியர்களுக்கான தேவையும் அதிகமாக உள்ளது. திறன் வாய்ந்தவர்களைத் தக்க வைத்துக் கொள்வதில் வங்கிகள் முனைப்பு காட்டுகின்றன.பல திறன்களுக்கும் வாய்ப்புகள் உள்ள துறை கிளார்க் மற்றும் பி.ஓ., 
என்று மட்டுமல்ல,ஐ.டி., ஆபிசர், சி.ஏ., கம்ப்யூட்டர் திறனாளர், சிவில் இன்ஜினியர் என பல்வேறு பிரிவுகளில் வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. விற்பனைப் பிரிவில் 
எண்ணற்ற காலியிடங்கள் எப்போதும் இருப்பதால் இளைஞர்கள் வங்கிகளை நாடுவதில் ஆச்சரியமில்லை. விரும்பக் கூடிய பணிச் சூழல் லேட் ஹவர் ஒர்க் எனப்படும் கால வரம்முறையற்ற பணித்தேவை இங்கில்லை என்றே கூறலாம்.
கார்ப்பரேட் சூழலில் வங்கிகள் இயங்குவதால் இங்கு பணி புரிவது என்பது மிக விரும்பத் 
தக்க ஆசை என்றே கூறலாம். ஒயிட் காலர் பணி என்றால் இது தான் ஒயிட் காலர் பணி.  எனவே இளைஞர்களே! வங்கிகள் காத்திருக்கின்றன தங்களுக்கான நபர்களைத் தேர்வு செய்ய....உங்களை,உங்கள் திறன்களை வளர்த்துக் கொண்டு 
வங்கிகளோடு இணையுங்கள் அவற்றின் முன்னேற்ற ஓட்டத்தில்....
 
கர்நாடகாவுக்கு தாரை வார்க்க இருந்த SSA
 நிதி தப்பியது.


          கற்பித்தலுக்கான உபகரணங்கள் வாங்குவது என்ற பெயரில், 
தமிழகத்தின், அனைவருக்கும் கல்வி திட்ட பள்ளிகளின் வளர்ச்சி 
நிதியை, கர்நாடகாவிற்கு தாரை வார்க்கும் நடவடிக்கை, நிறுத்தி 
வைக்கப்பட்டது.


"டிடி' வேண்டும்:அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் செயல்படும்
 ஒவ்வொரு பள்ளிக்கும், பராமரிப்பு நிதியாக, 7,500 ரூபாய், வளர்ச்சி
 நிதியாக, 8,000 ரூபாய் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

இதில், அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும். கடந்த மாதத்தில்,
 மாநில எஸ்.எஸ்.ஏ., திட்ட அலுவலகத்தில் இருந்து, எந்த காரணமும் 
தெரிவிக்காமல், அனைத்து பள்ளிகளும் வளர்ச்சி நிதியில் இருந்து,
 கர்நாடக மாநிலம் மைசூரில் மெட்டீரியல்ஸ் பேங்க்' என்ற பெயருக்கு, 
தலா, 2,000 ரூபாய், "டிடி' எடுத்து அனுப்ப வேண்டும்' என்று அவசர 
உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடும் எதிர்ப்பு:
இதனால், 35 ஆயிரம் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், "டிடி'
 எடுத்து, முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம், மாநில திட்ட
 அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

எந்த தகவலும் கூறாமல், "டிடி' அனுப்ப சொன்னதால், தலைமை 
ஆசிரியர்கள், கிராம கல்விகுழுவினரிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.

மேலும், "கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் தமிழகத்திலேயே
 கிடைக்கும்போது, கர்நாடக மாநிலத்தில் உள்ள நிறுவனத்தை 

ஏன் தேர்வு செய்ய வேண்டும்?' என்றும், எதிர்ப்பு கிளம்பியது.
இதுகுறித்து, "தினமலர்' இதழில் செய்தி வெளியானது.

இந்நிலையில், மாநில திட்ட அலுவலகத்தில் இருந்து,
 முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும், "மைசூரு நிறுவனத்துக்கு
 வழங்க எடுத்த, "டிடி'யை அனுப்ப வேண்டாம்; நிறுத்தி வையுங்கள்'
 என, தகவல் தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "பணம் 
அனுப்பியிருந்தால், அது திரும்ப உங்களுக்கே அனுப்பி வைக்கப்படும் 
என, மாநில திட்ட அலுவலகத்தில் இருந்து, தகவல் தெரிவிக்கப்பட்டது' 
என்றார்.
-தினமலர்

No comments:

Post a Comment