Tuesday, September 17, 2013

இரட்டை பட்ட வழக்கு நாளை (18.09.2013) வழக்கு எண் : 55ஆக மீண்டும் விசாரணைக்கு வருகிறது....

Department exams for 2013 December had been announced
Application date:15.9.2013
Last date:               15.10.2013
Exam date:   23.12.2013-  31.12.2013
Exam fees -Each paper-50+30
அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்கள் 02.10.2013 முதல் 08.10.2013 வரை "Joy of Giving Week" அறிவுறை வழங்கி தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு
10, 12 விடைத்தாள்களில் இனி ரகசிய குறியீடு… அரசுத் தேர்வுத்துறை முடிவு

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வு விடைத்தாள்களில் முறைகேடுகளை தடுக்க, இனி டம்மி நம்பருக்கு பதிலாக ரகசிய குறியீடு வழங்க அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. 
 
 பிளஸ்-2 தேர்வு விடைத்தாள்களில் தமிழ், ஆங்கிலம் தவிர கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல், விலங்கியல், தாவரவியல் உள்ளிட்ட 10 பாடங்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் போது எந்த தவறும் நடக்கக்கூடாது என்பதற்காக மாணவர்கள் எழுதிய தேர்வு பதிவு எண்ணை அகற்றிவிட்டு டம்மி நம்பர் கொடுக்கப்படுகிறது. 
 
 இதனால் எந்த மாணவருடைய விடைத்தாள், எங்கு மதிப்பீடு செய்வதற்கு செல்கிறது என்று கண்டறிய முடியாது. ஆனாலும், அந்த தாளை எளிதில் கண்டுபிடித்து விட முடியும் என்ற நிலை உள்ளது. இது போன்ற முறைகேடுகளை தடுக்கும் வகையில் அரசு தேர்வுகள் துறை, இனிமேல் டம்மி நம்பருக்கு பதிலாக தேர்வர்களின் விடைத்தாளிலேயே ரகசிய குறியீட்டை முதலிலேயே பிரிண்ட் செய்ய முடிவு செய்துள்ளது. 
 
அந்த குறியீட்டை யாரும் சாதாரணமாக காண முடியாதபடி கம்ப்யூட்டர் மூலம் மட்டுமே அறியும்படி வடிவமைத்துள்ளனர். இதனால் எந்த விடைத்தாள் எங்கு மதிப்பீடு செய்யப்படுகிறது என்ற விவரம் யாருக்கும் தெரியாது. இந்த திட்டத்திற்கு அனுமதி கிடைத்ததும், வருகிற அக்டோபர் மாதம் நடக்க இருக்கின்ற தேர்விலேயே அமல்படுத்த அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
தமிழாசிரியர் நியமன தேர்வு வினாத்தாளில் பிழை டி.ஆர்.பி., தலைவர் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமன தேர்வில், அச்சுப்பிழையுள்ள கேள்விகளுக்கு, முழு மதிப்பெண் கோரிய வழக்கில், "ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரிடம் சில விளக்கங்கள் பெற வேண்டியுள்ளதால், செப்.,18 ல் ஆஜராக வேண்டும்,' என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

மதுரை புதூர் விஜயலட்சுமி தாக்கல் செய்த மனு: 605 முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம், ஜூலை 21 ல் தேர்வு நடந்தது. "பி' வரிசை வினாத்தாள்களில் சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதும் பிரிவில் 150 கேள்விகள் இருந்தன. 47 கேள்விகளில் அச்சுப்பிழைகள் உள்ளன.

உதாரணமாக, வினா 75 ல் "தமிா மொழி பெருமை மிக்க பழைய வரலாறு உடையதாகும் என்று உரைத்தவர்? 76 ல் "மதுரையை தென் தமிா மதுரை' என குறிப்பிடும் நூல்? என அச்சுப்பிழைகள் உள்ளன. அச்சுப்பிழை கேள்வி விடைகளுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும். தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும், என குறிப்பிட்டார்.

விசாரித்த நீதிபதி, ""தேர்வு முடிவு வெளியிட தடை விதிக்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆஜராக வேண்டும்,'' என்றார்.

நீதிபதி எஸ்.நாகமுத்து முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் ஜெயகுமாரன் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர்கள் அறிவொளி, தங்கம்மாள் ஆஜராயினர்.

வாரிய செயலாளர் வசுந்தராதேவி பதில் மனு: வாரியம் கைப்பிரதியாக வினாத்தாள் தயாரித்து, ரகசியமாக அச்சடிக்கும். ஏதேனும் தவறுகள் உள்ளனவா? என அச்சுப் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், வினாத்தாளின் முதல் பிரதியில் சரிபார்ப்பர். அதன்படி "ஏ,பி,சி,டி' என வினாத்தாள் வரிசைப்படுத்தப்படும்.

இத்தேர்வில் "பி' வரிசை வினாத்தாளில் பிழைகள் ஏற்பட்டுள்ளன. இத்தவறுக்கு, அச்சடிக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் பொறுப்பு. ரகசியம் கருதி, தேர்வு நாளன்று தான், வினாத்தாட்களை பிரித்து பார்ப்போம். அச்சடிக்கும் ரகசிய பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்டவர்கள்.

பிழைகள் இருந்தாலும், வார்த்தைகளின் அர்த்தத்தை புரிந்து கொண்டு, பதிலளிக்கக்கூடிய வகையில், வினாக்கள் அமைந்திருந்தன. தேர்வு எழுதியவர்களின் வினாத்தாட்களை ஆய்வு செய்தோம். முதல் 10 ரேங்க் பெற்றவர்களில், 6 பேர் "பி' வரிசை வினாத்தாட்கள்படி, எழுதியவர்கள். மறு தேர்வு, கருணை மதிப்பெண் என்ற கேள்விக்கு இடமில்லை. மறுதேர்வால், ஏற்கனவே அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பாதிக்கப்படுவர், என குறிப்பிட்டார்.
நீதிபதி: பிழைகள் ஏற்பட்டிருந்தாலும், தேர்வு துவங்கிய 30 நிமிடத்தில், சரிசெய்ய நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஏற்கனவே, ஆசிரியர் நியமன தேர்வில் 73 கேள்விகளில் அச்சுப்பிழைகள் இருந்ததாக, வழக்கு தாக்கலானது. அப்போது, ஐகோர்ட் தன் அதிருப்தியை வெளிப்படுத்தியது. தேர்வு எழுதுபவர்களுக்கு, வினாத்தாட்களை அச்சடிப்பவர்கள் யார்? என தெரியாது.

பிழையின்றி வினாத்தாட்கள் தயாரிக்க முடியவில்லை எனில், டி.ஆர்.பி., தலைவர் அப்பதவியை வகிக்க தகுதியற்றவராகி விடுகிறார். அவர் ஏன் ஆஜராகவில்லை? ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக்கோரி, மனு செய்துள்ளாரா?

அரசு வக்கீல்: அவருக்கு முக்கிய வேலை இருந்ததால், ஆஜராகவில்லை.
நீதிபதி: பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க, இக்கோர்ட் உள்ளது. அச்சுப்பிழை எனக்கூறி, ஊழியர்கள் மீது பழியை சுமத்தி விட்டு, தப்பிக்க முடியாது. டி.ஆர்.பி., தலைவர் என்ற முறையில், சரிபார்க்கும் கடமை உள்ளது. அவரிடம் சில விளக்கம் பெற வேண்டியுள்ளதால், செப்.,18 ல் ஆஜராக வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment