Friday, September 27, 2013

இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு அக்டோபர் 7ந் தேதிக்கு ஒத்திவைப்பு, இறுதி தீர்ப்பு வரும் வரை பணி மாறுதல் நிறுத்தி வைப்பு - சென்னை உயர்நீதிமன்றம்
         சென்னை உயர்நீதிமன்றத்தில் இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு இன்று தலைமை நீதிபதி மற்றும் சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வின் முன் இன்று பிற்பகல் 3.45மணிக்கு விசாரணைக்கு வந்தது. 
        போதிய நேரமின்மை காரணமாக இரு தரப்பும் செய்துகொண்ட சமரசத்தை அடுத்து நீதிபதிகள் வருகிற அக்டோபர் மாதம் 7ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
              மேலும் அன்றைய தினமே வழக்கை முடித்து கொள்ள அனைத்து தரப்பும் ஒத்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுவரை பணி மாறுதல்கள் மேற்கொள்ள கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறபித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் எந்தப் பிரிவினருக்கும் தளர்வு கிடையாது - ஆசிரியர் தேர்வு வாரியம்
          ஆசிரியர் தகுதித் தேர்வின் தேர்ச்சி மதிப்பெண்ணில் எந்தப் பிரிவினருக்கும் தளர்வு வழங்கக் கூடாது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

          ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணில் தளர்வு கோரும் பொது நல வழக்கு மீதான விசாரணையின்போது ஆசிரியர் தேர்வு வாரியம் இதைத் தெரிவித்துள்ளது.

              இது தொடர்பாக வழக்குரைஞர் எம்.பழனிமுத்து சென்னை உயர் நீதின்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

தமிழகத்தில் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைத்துப் பிரிவினருக்கும் ஒரே தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

               தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத தேர்ச்சி மதிப்பெண் தளர்வை வழங்க வேண்டும். இதர மாநிலங்களில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 முதல் 20 சதவீதம் வரை மதிப்பெண்ணில் தளர்வு வழங்கப்படுகிறது.

                அதனால், தமிழகத்தில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் பல்வேறு பிரிவினருக்கும் தகுதி மதிப்பெண் தளர்வு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

            இந்த மனு, தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய முதன்மை டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் புதன்கிழமை (செப்டம்பர் 25) விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு:

               இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை மத்திய அரசு 2009-ஆம் ஆண்டு கொண்டு வந்தது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என இந்தச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
                 இதன்படி, 2012-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.

இந்தத் தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி பெற முடியும். தேர்ச்சி பெற்றவர்களுக்குத்தான் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பில் தெரிவித்தது.
              2012-ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் 0.37 சதவீதம் பேர் மட்டும் தேர்ச்சி பெற்றனர். மிகக் குறைந்த அளவில் தேர்ச்சி இருந்ததால், ஆசிரியர் தகுதி மறுதேர்வு நடத்தப்பட்டது. இதில் 2.99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
                 ஆசிரியர் நியமனத்துக்கு ஆசிரியர் தகுதித் தேர்வே அடிப்படை என்பதால், அதில் தேர்ச்சி பெறுபவர்களை மட்டுமே ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்ந்தெடுக்க வேண்டும் என தமிழக அரசு வழிகாட்டி விதிமுறைகளை அறிவித்தது.
                    ஆசிரியர் தேர்வு வாரியம் என்பது ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தும் அமைப்பு மட்டுமே. ஆசிரியர் தகுதித் தேர்வின் தகுதி மதிப்பெண்களை நிர்ணயிக்கும் தகுதி மாநில அரசுக்குத்தான் உள்ளது. தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான குறைந்த அளவு தேர்ச்சி வீதத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் தளர்த்த முடியாது.
               தமிழகத்தில் ஆசிரியராக நியமனம் செய்வதற்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்குவதற்காகவே இந்த தகுதி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
                ஆசிரியர் தகுதித் தேர்வுக்குரிய தகுதி மதிப்பெண்ணில் எந்தப் பிரிவினருக்கும் தளர்வு வழங்கக் கூடாது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
                         இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்
வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.



வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

அண்ணாமலை பல்கலை. அரசு பல்கலை.யாக மாறியது: அரசிதழில் உத்தரவு வெளியீடு
        சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசு பல்கலைக்கழகமாக மாறியுள்ளது. இதற்கான சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து, அது தமிழக அரசிதழில் செவ்வாய்க்கிழமை வெளியாகியுள்ளது.

         இதையடுத்து, பல்கலைக்கழகத்தின் இணை வேந்தராக இனி உயர் கல்வித் துறை அமைச்சர் செயல்படுவார். இதுவரை இணைவேந்தராக அந்தப் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் எம்.ஏ.எம்.ராமசாமி செயல்பட்டு வந்தார். புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரையில் தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவதாஸ் மீனா நிர்வாகியாகச் செயல்படுவார்.

                அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், சம்பளத்தை குறைக்கவும் முடிவு செய்திருப்பதாக வெளியான தகவலையடுத்து, கடந்த 2012-ஆம் ஆண்டு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டது.

            நிர்வாக குளறுபடி மற்றும் பணி நியமனத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதும் கண்டறியப்பட்டதால் பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டன. இதை பரிசீலனை செய்த தமிழக அரசு, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்துவதற்கான சட்ட மசோதாவை தயாரித்தது. அந்த மசோதா கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, மே 16-ஆம் தேதி சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

                இந்த சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இப்போது ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு அறிவிப்பு

          மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் என 80 லட்சம் பேர் பயன் அடைவார்கள். இந்த ஊதியக் குழுவை அமைப்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், 2016 ஜனவரி முதல் தேதியிலிருந்து இதன் பரிந்துரைகள் அமலுக்கு வரும் என்றும் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அறிக்கை ஒன்றில் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

           அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: 7-வது ஊதியக் குழு மூலம் மத்திய அரசின் 50 லட்சம் ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள்.

பொதுவாக ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக் குழுவை மத்திய அரசு அமைத்து, சம்பள உயர்வு அளித்து வருகிறது. இதை மாநில அரசுகளும் சில திருத்தங்களுடன் பின்பற்றி வருகின்றன.

தற்போதைய 7-வது ஊதியக் குழு தனது பரிந்துரைகளை அளிக்க 2 ஆண்டுகாலம் அவகாசம் எடுத்துக் கொள்ளும். எனவே, 2016 ஜனவரி முதல் தேதியிலிருந்து புதிய ஊதியம் அமலுக்கு வரும்.

இந்த ஊதியக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் குறித்து, சம்பந்தப்பட்ட துறையினருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6-வது ஊதியக் குழு பரிந்துரைகள் 2006 ஜனவரி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார் சிதம்பரம்.

காங்கிரஸ் தகவல் தொடர்புப் பிரிவு பொதுச் செயலாளர் அஜய் மக்கான் தனது டிவிட்டர் பதிவில், ""திறமைசாலிகள் அரசுப் பணிகளில் சேர்வதை ஊக்கப்படுத்தவேண்டும். அதற்கு ஊதியக் குழுக்கள் உதவுகின்றன.

2003-ல் பாஜக தலைமையிலான அரசு 6-வது ஊதியக் குழுவை அமைக்க மறுத்தது. ஆனால் அடுத்து வந்த காங்கிரஸ் அரசு 2005-ஆம் ஆண்டு 6-வது ஊதியக் குழுவை அமைத்தது. இப்போது 7-வது குழுவையும் அமைத்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறுகையில், ""ஊதியக் குழுக்கள் அமைக்கப்படுவது ஊழியர்களின் உரிமை. ஊதியக் குழுக்கள் பரிந்துரை செய்தால்தான் அரசால் அதை நிறைவேற்ற முடியும்'' என்று குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு இறுதியில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் மற்றும் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஊதியக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள ஊழியர் சங்கம், ஊதியக் குழுவின் பரிந்துரைகளை 2011-ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்தே அமல்படுத்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளது.

மத்திய அரசு ஊழியர் மற்றும் பணியாளர் சங்கத்தின் தலைவர் கே.கே.என். குட்டி கூறுகையில், ""மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியம் மறு நிர்ணயம் செய்யப்படுவதை அடிப்படையாகக் கொண்டு, 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி புதிய விகிதத்தை 2001, ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து கணக்கிட வேண்டும்.
மேலும் 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

ஊழியர்களுக்கான பல்வேறு படித் தொகைகளும் அடிப்படை சம்பளத்தின் விகிதாச்சாரத்தில் அமைவதால், அடிப்படை சம்பளம் உயர்வது படித் தொகைகளும் உயர்வதற்கு வழி வகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment