Friday, September 20, 2013


மிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?

        இணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள். தமிழ் மொழிபயன்படுத்துதலில் புதியவர்களுக்கு மிக எளிதாக தட்டச்சு செய்யும் வசதி தருவது Google Tamil Transliteration. இதனை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

1.முதலில் இங்கே [http://goo.gl/IZJUX] சென்று தட்டச்சு மென்பொருளை தரவிறக்கம் செய்யவும்.

2.Windows 7/Vista/XP பயன்படுத்தும் அன்பர்கள் இதை பயன்படுத்த இயலும்.

3.இதை இப்போது இன்ஸ்டால் செய்யவும்.

4.இன்ஸ்டால் செய்து முடித்தவுடன் Desktop -Task Bar இல் Right Click செய்து Toolbars -> Language bar என்பதை தெரிவு செய்யவும். [படம் 1]

இதில் இந்த வசதி வராத நண்பர்கள் கீழே உள்ளதை பின் பற்றவும்.

5. Windows 7/Vista பயனாளிகள்

• Control Panel ->Date, Time, Language, and Regional Options–> Regional and Language Options -> Keyboard and Languages என்பதற்கு செல்லவும்.

• Change keyboards… என்பதை கிளிக் செய்து Text services and input languages என்பதை ஓபன் செய்யவும்.

• Language Bar க்கு வரவும்.

• Language Bar -ல் உள்ள Docked in the taskbar என்ற ரேடியோ பட்டனை Enable செய்ய வேண்டும்.

• இப்போது Apply கொடுக்கவும். இப்போது நீங்கள் மேலே கூறி உள்ள Step-4 ஐ செய்யவும்.

6.Windows XP பயனாளிகள்

• Control Panel -> Regional and Language Options -> Languages tab -> Text services and input languages (Details) -> Advanced Tab என்பதற்கு செல்லவும்.

• முதலில் System configuration, என்பதில் Turn off advanced text services என்பது கிளிக் செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். [படம் 2]

•Regional and Language Options -> Languages tab -> Text services and input languages (Details) -> Advanced Tab என்பதற்கு மீண்டும் செல்லவும்.

•இப்போது Settings>Language Bar ஐ கிளிக் செய்து அதில் Details >Language bar என்பதை தெரிவு செய்து வருவதில் Show the Language bar on the desktop என்பதை கிளிக் செய்து விடவும்.

• இப்போது எல்லாவற்றையும் Apply கொடுத்து விடவும்.

7. இப்போது உங்கள் Tool Bar இல் படம் 3-இல் போல ஒன்று வந்து சேர்ந்து விடும். இதில் தட்டச்சு செய்யும் போது கிளிக் செய்தால் Tamil என்று வரும்.

8.இது உங்களுக்கு Desktop இல் படம் நான்கில் உள்ளபடி தோற்றம் அளிக்கும்.

9. இப்போது நீங்கள் எளிதாக தட்டச்சு செய்ய முடியும்.

உதாரணம்:

Amma – அம்மா
karpom – கற்போம்
[படம் -5]

இதில் மாற்று வார்த்தைகள் அடுத்தடுத்து வருவதை கவனிக்கவும். இதை Key Board-இல் உள்ள Arrow பட்டன்களை பயன்படுத்தி தெரிவு செய்ய முடியும்.

10.இதில் சரியாக தட்டச்சு செய்தும் உங்களுக்கு சில எழுத்துகள் வரவில்லை என்றால் Ctrl+K என்பதை கொடுத்து குறிப்பிட்ட எழுத்தை இடைச்செருகலாக சேர்க்கலாம்.

11. இதில் இருந்து உடனடியாக ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய CTRL+G கொடுக்கவும்.

- பிரபு கிருஷ்ணா
YOURS VAAZHGA VALAMUDAN
B. SRINIVASAN.M.A.,M.Ed.,M.C.A.,

M.A(YOGA)
KRISHNAGIRI - 635 001
CELL : 99943-94610
srinivasanb2401@blogspot.com
பிளஸ் 2 தனி தேர்வுக்கு இன்று முதல் "ஹால் டிக்கெட்"

           பிளஸ் 2 தனி தேர்வு, வரும், 23ம் தேதி துவங்குகிறது. மாநிலம் முழுவதும், 130 மையங்களில் நடக்கும் தேர்வை, 40 ஆயிரம் மாணவர் எழுதுகின்றனர். 

           இவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

             அக்., 5ம் தேதி வரை, பிளஸ் 2 தனித் தேர்வு நடக்கிறது. 10ம் வகுப்பு தனி தேர்வும், 23ம் தேதி துவங்குகிறது. ஆனால், 30ம் தேதியுடன் முடிகிறது. 170 மையங்களில் நடக்கும் இத்தேர்வை, 46 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

                     தேர்வர், இன்று முதல், 23ம் தேதி வரை, www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து, "ஹால் டிக்கெட்"களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை நேற்று அறிவித்தது. இதேபோல், 10ம் வகுப்பு தனி தேர்வர்களும், தங்களது, "ஹால் டிக்கெட்"டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

                  விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, "ஹால் டிக்கெட்"டை, பதிவிறக்கம் செய்யலாம். "தத்கால்" திட்டத்தில் விண்ணப்பித்த தேர்வர்கள், 21, 22ம் தேதிகளில், ஹால் டிக்கெட்டை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பள்ளிகளுக்கு மேஜை, நாற்காலி வாங்க எம்.பி.,க்கள் நிதி ஒதுக்க அனுமதி

           "எம்.பி.,க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, பள்ளிக்கூடங்களுக்கு தேவையான மேஜை, நாற்காலிகள் வாங்கவும், கூட்டுறவு சங்கங்களுக்கு கட்டுமான வசதியை ஏற்படுத்தவும் ஒதுக்கீடு செய்யலாம்" என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

          நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் தொகுதியில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள, ஒவ்வொரு எம்.பி.,க்கும், ஆண்டுதோறும், 5 கோடி ரூபாயை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது. இதன் மூலம் ஒவ்வொரு எம்.பி.,யும், தன் தொகுதியில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள, மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

             லோக்சபா எம்.பி.,க்களுக்கு, அவர்கள் சார்ந்துள்ள தொகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு மட்டுமே பரிந்துரை செய்ய முடியும். ராஜ்ய சபா எம்.பி.,யாக இருந்தால், ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பரிந்துரைக்கலாம். இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் பணிகளில், எந்தெந்த பணிகளுக்கு, பரிந்துரை செய்யலாம் என்பது ஏற்கனவே வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

             இதில், புதிதாக, பள்ளிக்கூடங்களுக்கு தேவையான மேஜை, நாற்காலி போன்ற மரச்சாமான்களை வாங்க பரிந்துரை செய்யலாம். ஆரம்பப் பள்ளி முதல், மேல்நிலைப் பள்ளி வரை, மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் நடத்தப்படும் பள்ளிகளில், மேஜை, நாற்காலிகள் வாங்க பரிந்துரை செய்யலாம். இந்த வகையில், ஆண்டொன்றுக்கு, 50 லட்சம் ரூபாய் அனுமதிக்கலாம்.

               அதிலும் ஒரு பள்ளிக்கு, ஆயுட்கால அதிகபட்ச அளவு, 10 லட்சம் ரூபாய் வரை மட்டுமே அனுமதிக்க முடியும். அதே போல், கூட்டுறவு சங்கங்களுக்கு கட்டடம் போன்ற கட்டுமான வசதிகளை ஏற்படுத்த பரிந்துரை செய்யலாம். ஆனால், எம்.பி.,யோ, அவரது குடும்ப உறுப்பினர்களோ, அந்த சங்கத்தில் உறுப்பினர்களாகவோ, நிர்வாகிகளாகவோ இருக்கக் கூடாது என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
முதுகலை வணிகவியல் ஆசிரியர் நியமனம் : ஐகோர்ட் உத்தரவு

          "பி.ஏ., (கார்ப்பரேட் செக்ரட்ரிஷிப்), பி.காம்., பட்டப் படிப்பிற்கு சமம் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதை பின்பற்றாமல், முதுகலை வணிகவியல் ஆசிரியர் நியமனத்தில் மனுதாரரை நிராகரித்தது ஏற்புடையதல்ல. பணி நியமனம் வழங்க வேண்டும்" என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

            ராஜபாளையம் ராஜேஸ்வரி தாக்கல் செய்த மனு: 1998 ல் பி.ஏ.,(கார்ப்பரேட் செக்ரட்ரிஷிப்-நிறுவன செயலாண்மை) படித்தேன். 2008 ல் எம்.காம்., (வணிகவியல்) முடித்தேன். பி.எட்., தேர்ச்சி பெற்றேன். ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் முதுகலை ஆசிரியர்கள் 2895 பேர் நியமனத்திற்கான தேர்வு 2012 மே 27 ல் நடந்தது.

          வணிகவியல் பாடத்திற்கு நான் தேர்வு எழுதினேன். மொத்தம் 150 மதிப்பெண்ணில், அதிகபட்ச மதிப்பெண் 121 எடுத்திருந்தனர். எனக்கு 109 மதிப்பெண் கிடைத்தது. தேர்வு செய்யப்பட்டவர்களின் தகுதிப் பட்டியலை 2012 டிச.,11 ல் டி.ஆர்.பி., வெளியிட்டது. என் பெயர் இல்லை.

           டி.ஆர்.பி., அலுவலகத்தில் விசாரித்த போது, "நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியை நீங்கள் பெறவில்லை. பி.காம்.,-எம்.காம்.,- பி.எட்., முடித்தவர்களை மட்டும் அனுமதிக்க முடியும்" என்றனர்.

              பி.ஏ.,(நிறுவன செயலாண்மை), பி.காம்., படிப்பிற்கு சமம் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதை பின்பற்றாமல், எனக்கு பணி வாய்ப்பை நிராகரித்த டி.ஆர்.பி., உறுப்பினர் செயலாளர் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். பெண்களுக்கான பொதுப்பிரிவின் கீழ் எனக்கு தகுதி உள்ளது. பணி நியமனம் வழங்க வேண்டும், என குறிப்பிட்டார்.

                நீதிபதி எஸ்.நாகமுத்து முன், விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் வீரகதிரவன் ஆஜரானார். அரசு தரப்பு வக்கீல், "அரசு உத்தரவானது, கூட்டுறவுத்துறை பணி நியமனத்திற்கு மட்டுமே பொருந்தும். ஆசிரியர் பணிக்கு பொருந்தாது" என்றார்.

              நீதிபதி: பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற சிரமத்துடன் படிக்கின்றனர். பி.ஏ.,(நிறுவன செயலாண்மை), பி.காம்., பட்டத்திற்கு சமம் என 2004 ல் அரசு உத்தரவிட்டுள்ளது. அதை பின்பற்றாமல், மனுதாரரை நிராகரித்தது ஏற்புடையதல்ல. மனுதாரருக்கு 6 வாரங்களுக்குள் பணி நியமனம் வழங்க டி.ஆர்.பி., உறுப்பினர் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.


ஆங்கில மொழி அறிவை வளர்த்துக் கொள்ள விரும்புபவர்களுக்கு பயன்படும் சில இணையதளங்கள் இதோ...

ஆங்கிலத்தைப் புரிந்துகொண்டு எளிதாகப் பேசவும் எழுதவும் கற்றுக் கொடுக்கிறது பிபிசி வேர்ல்ட் சர்வீஸ் நடத்தும் லேர்னிங் இங்கிலீஷ் இணையதளம். ஒவ்வொரு நாளும், அந்த நாளில் நடக்கும் ஏதேனும் ஒரு சுவையான செய்தியினை அழகான முறையில் அலசுவதுடன் அதில் உள்ள முக்கியமான வார்த்தைகள், அதனை எவ்வாறு உச்சரிப்பது, அதற்கு என்ன அர்த்தம் என்பதை எல்லாம் தனியே விளக்குகிறது. ஆங்கில இலக்கணம், ஆங்கிலச் சொற்கள் மற்றும் சொற்றொடர்களின் அர்த்தங்கள் மற்றும் அதன் உச்சரிப்பு குறித்தும் எளிதாக விளக்குகிறார்கள். ஒருவேளை உங்களுக்கு முறையாக உட்கார்ந்து படிப்பதற்கு ஆர்வம் இல்லை. ஆனால் விளையாட்டு செய்திகளை ஆர்வத்துடன் படிக்கும் ஆர்வம் இருக்கிறது என்றால் உங்களுக்காக இவர்களே Talking Sport என்று விளையாட்டு செய்திகளை தனியே தொகுத்து வைத்திருக்கிறார்கள். நீங்கள் இந்தப் பகுதிக்குள் சென்று உங்களுக்கு ஆர்வமுள்ள விளையாட்டு தொடர்பான விஷயங்களைப் படிப்பதுடன், அதில் உள்ள முக்கியமான வார்த்தைகளையும், அதற்கு என்ன அர்த்தம் என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். இதைத்தவிர, ‘Word master’ என்ற விளையாட்டு இருக்கிறது. இதில் நீங்கள் என்ன மாதிரியான சொற்களை அறிந்து இருக்கிறீர்கள் என்பதை சோதனை செய்யும் வகையில் விளையாட்டுடன் இணைத்து இருக்கிறார்கள். இதைத் தவிர, உங்களுக்கு பக்கத்தில் உள்ளவர்களுடன் உரையாடுவது எப்படி? பல்வேறு இடங்களில் இரண்டு பேர் எப்படிப் பேசிக்கொள்வார்கள் என்பது குறித்து உதாரணத்துடன் விளக்கி இருக்கிறார்கள்.




மேலும், இந்த இணையதளத்தின் இன்னொரு சிறப்பு, நீங்கள் படிப்பதைக் கேட்க முடிவதுடன், ஆடியோக்களை டவுன்லோடு செய்துகொள்ள முடியும். ஆடியோவில் கேட்பதைப் படிப்பதற்கு உதவியாக அதனையும் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். ஆடியோ மற்றும் படிப்பதற்கு உதவியான ஏராளமான கோப்புகளை நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இணையத்தில் சேமித்து வைத்திருக்கிறார்கள். அவற்றை எல்லாம் நீங்கள் கேட்டோ அல்லது படித்தோ ஆங்கிலத்தை வளர்த்துக்கொள்ளலாம். நீங்கள் விற்பனை அல்லது மேலாண்மை பொறுப்புகளில் இருந்தால் அதற்கான 6 minute English என்ற பகுதி இருக்கிறது. ஆசிரியர்களுக்கு, மாணவர்களுக்கு எப்படி ஆங்கில அறிவினை போதிப்பது என்று பல விஷயங்களை போதுமான தகவல்களுடன் விளக்கி இருக்கிறார்கள். ஆங்கிலம் கற்க நினைப்பவர்களுக்கு இந்த இணையத்தளம் ஒரு கற்கண்டு.




அமெரிக்க அரசின் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா என்ற ஊடக நிறுவனத்தின் லேர்னிங் இங்கிலீஷ் என்ற இணையதளத்திலும் ஆங்கிலம் கற்பதற்கான பல்வேறு வசதிகள் உள்ளன. அத்துடன் சாமானிய மனிதர்கள் பயன்படுத்தும் ஆங்கிலச்சொற்களுக்கான புத்தகத்தையும் இது வெளியிட்டு இருக்கிறது.




சின்னக் குழந்தைகளுக்கு கதை சொல்வதில் இருந்து கல்லூரி மாணவர்கள் ஆங்கிலத்தில் கட்டுரை எழுதுவதற்கு உதவுவது வரை பல்வேறு தகவல்கள் இந்த இணையதளத்தில் உள்ளன. இந்த இணையதளத்தில் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்வதற்கு வீடியோ முறையில் பாடங்களைப் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள், இருவர் உரையாடலின் ஆடியோ ஃபைல்கள் உள்ளன.



ஆங்கில ஆசிரியர் வகுப்பு எடுப்பது போல் இலக்கணப் பாடங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு விளக்கங்களுடன் படித்தவுடன் எளிதில் பதில் சொல்லும் வகையில் வினாக்களைக் கொடுத்து இருக்கிறார்கள். இந்த இணையதளத்தை மூன்று முக்கிய அம்சங்களாகப் பிரித்து இருக்கிறார்கள். ஒன்று ஆங்கிலம் கற்க என்று பொதுப்பிரிவும், இரண்டாவது, இளைஞர்கள் கற்றுக்கொள்ள என்று தனிப்பிரிவு மூன்றாவதாக, குழந்தைகள் கற்றுக்கொள்வதற்கு என்று தனிப்பிரிவும் இந்த இணைய தளத்தில் உள்ளன. குழந்தைகளுக்கான பிரிவில் ஆங்கிலத்தில் கதைகளை படிப்பது, உச்சரிப்பு பயிற்சி, விளையாட்டு மூலம் ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் பயிற்சி, எழுத்துப் பயிற்சி என பல உட்பிரிவுகளும் உள்ளன. பாடல்கள் மற்றும் விளையாட்டுகள் மூலம் ஆங்கிலத்தை கற்றுக் கொள்ள வழிவகை செய்திருக்கிறார்கள். கல்லூரி வெளிநாடுகளுக்குச் சென்று படிக்க விரும்பும் கல்லூரி மாணவர்கள் IELTS என்ற ஆங்கில மொழித் திறனறித் தேர்வை எழுத வேண்டும். இந்தத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் பல தகவல்கள் இந்த இணையதளத்தில் உள்ளன. இதனைப் பார்த்து, இத்தேர்வுக்குத் தயாராகும் வழிமுறைகளை அறிந்துகொள்ளலாம்.


No comments:

Post a Comment