மக்களவைத் தேர்தல் நிகழ்வுகளை மடிக்கணினியில் பதிவு செய்ய தகுதியானஇளைஞர்கள் மற்றும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
மக்களவைத் தேர்தல் நிகழ்வுகளை மடிக்கணினியில் பதிவு செய்ய தகுதியானஇளைஞர்கள் மற்றும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மக்களவைத் தேர்தலின்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளவாக்குச்சாவடிகளில் நடைபெறும் நிகழ்வுளை காலை 7 மணி முதல் மாலை 5மணி வரை மடிக்கணினியில் பதிவு செய்வதற்கு தகுதியான இளைஞர்கள்மற்றும் மாணவர்கள் தேவைப்படுகிறார்கள். இந்த பணியின்போது, மிகப்பெரிய ஜனநாயக முறையிலானதேர்தலை நேரிடையாக வாக்குச்சாவடியிலிருந்து காண இளைஞர்களுக்கும்மாணவர்களுக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு ஆகும். இந்தப் பணியில் பங்கேற்பவர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்படும்மதிப்பூதியம் வழங்கப்படும். விருப்பமுள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் பெயர், முகவரி மற்றும்தொலைபேசி எண் குறித்தவிவரங்களை 9498002589 என்றஎண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்கலாம் என செய்திக்குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
10ம் வகுப்பு தனித்தேர்வருக்கு மார்ச் 18 முதல் செய்முறை தேர்வு
10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, வரும் 18 முதல், 22ம் தேதி வரை, செய்முறை தேர்வு நடக்கவுள்ளது. தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, வரும் 26 முதல், ஏப்., 9ம் தேதி வரை நடக்கிறது. சமச்சீர் கல்வி முறையில், 10ம் வகுப்பில், செய்முறை தேர்வு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு, பள்ளிகளில் செய்முறை பயிற்சியும், தேர்வும் நடத்தப்படுகிறது. தனித்தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு, வரும் 18 முதல், 22ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதற்காக, தனித்தேர்வர்கள், பயிற்சி பெற்ற மையங்களில், மார்ச், 17ம் தேதி, பெயரை பதிவு செய்து, தேர்வு நடைபெறும் நாளை தெரிந்து கொள்ளலாம் என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
|
ஏப்ரல் முதல் துறைமுகங்களை பள்ளி மாணவர்கள் பார்வையிடலாம்
ஏப்ரல் மாதம் முதல் துறைமுகங்களை பள்ளி மாணவர்கள் பார்வையிடலாம் என, கடந்த மாதம் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். இதையடுத்து தற்போது அதற்கான பணிகளை சென்னை துறைமுக நிர்வாகம் எடுத்து வருகிறது.
இந்தியாவில் மும்பை, கொல்கத்தா, சென்னை, உள்ளிட்ட 12 பெரிய துறைமுகங்கள் உள்ளன. பாதுகாப்பு காரணத்திற்காகவும், வேறு சில காரணத்திற்காகவும் துறைமுகங்களில் வெளியாட்கள் யாரும் செல்ல அனுமதி இல்லை. துறைமுகங்களில் 24 மணி நேரமும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பில் இருப்பது வழக்கம்.
பொதுவாக துறைமுகங்களை, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட வேண்டுமென்றால், நிர்வாக அலுவலகத்தில் உரிய அனுமதி சீட்டு வாங்க வேண்டும். இதனால் துறைமுகங்களை பார்வையிட பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் குறைவாகவே இருந்து வந்தது. இந்நிலையில் துறைமுகங்களை பார்வையிட, பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என, பல்வேறு பள்ளிகள் மற்றும் சமூகநல ஆர்வலர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த கோரிக்கையை மத்திய கப்பல்துறை அமைச்சகம் நீண்ட நாள்களாக ஆலோசித்து, ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவின் பெரிய துறைமுகங்களை பார்வையிட, பள்ளி மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தது. அதன்படி, வரும் ஏப்ரல் மாதம் முதல் துறைமுகங்களை பள்ளி மாணவர்கள் இலவசமாக பார்வையிட அனுமதி அளிக்கப் படும் என, மத்திய அமைச் சர் ஜி.கே.வாசன் அறிவித் தார். தற்போது சென்னை துறைமுகத்தில் அதற்கான நடவடிக்கையை துறைமுக நிர்வாகம் எடுத்து வருகிறது.
இது குறித்து சென்னை துறைமுக தலைவர் அதுல்யா மிஸ்ரா கூறுகையில், ‘பள்ளி குழந்தைகள் துறைமுகத்தை பார்வையிட அனுமதி அளிக்க வேண்டும் என, பல தரப்பினர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று, மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தற்போது இதற்கான அனுமதியை பெற்று தந்துள்ளார். தற்போது பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. தேர்வுகள் முடிந்து விடுமுறை ஆரம்பித்ததும் மாணவர்கள் துறைமுகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
|
|
No comments:
Post a Comment