தொடக்கக் கல்வி - பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு பள்ளி வேலை நாட்களில் மாற்றம் I 23.4.14 முதல் 25.4.14 வரை விடுமுறை I 3ம் பருவத் தேர்வு ஏப்.,21ம் தேதி தொடங்கி ஏப்.,29வரை நடக்கிறது I மே1 முதல் கோடை விடுமுறை I தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவிப்பு
|
ஏப்., 23, 24 தேர்வுகளை தேர்தலுக்கு பின் நடத்த முடிவு
மாநிலம் முழுவதும் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு ஏப்., 23, 24ல் நடத்த வேண்டிய பொதுத் தேர்வை, தேர்தலுக்குப் பின் நடத்த தொடக்கக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தற்போது பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத் தேர்வு நடந்து வருகிறது. வரும் 26ல் இருந்து 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு துவங்குகிறது.
இதற்கிடையே இதர வகுப்பு மாணவ, மாணவியருக்கான, பொதுத்தேர்வும் நடக்கிறது. பள்ளிக் கல்வித்துறை கீழ் இயங்கும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், ஏப்., 22 உடன், அனைத்து வகுப்புகளுக்கான தேர்வும் முடிந்து விடுகிறது. எனவே, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு, எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் இறுதி வரை வேலை நாள். இதனால் 8ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு இந்த மாத இறுதியில் துவங்கி, ஏப்., இறுதி வரை பொதுத்தேர்வு நடத்த, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஏப்., 23, 24 தேதிகளிலும் தேர்வு அட்டவணை உள்ளது. பெரும்பாலான ஓட்டுச்சாவடிகள், ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் தான் அமைக்கப்படுகின்றன. இதை கருத்தில் கொண்டு, ஏப்., 23, 24ல் நடக்க உள்ள தேர்வுகளை, தேர்தலுக்குப் பின் நடத்த தொடக்கக் கல்வித்துறை, முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை, ஓரிரு நாளில், அனைத்து பள்ளிகளுக்கும், இயக்குனரகம் தெரிவிக்கும்.
ஆசிரியர் நியமன தேர்வு மதிப்பெண்: மனு தள்ளுபடி
முதுகலை ஆசிரியர் நியமனத் தேர்வில், கூடுதல் மதிப்பெண் பெற தவறான தகவல் அளித்தவரின் மனுவை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. புதுக்கோட்டை, மணல்மேல்குடி சுவர்ணகுமார் தாக்கல் செய்த மனு: ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம், 2012-13ல் நடந்த முதுகலை இயற்பியல் ஆசிரியர் நியமன தேர்வில் பங்கேற்றேன்.
மொத்தம், 150க்கு 102 மதிப்பெண் &'கட்- ஆப்&' நிர்ணயிக்கப்பட்டது. எனக்கு, 101 மதிப்பெண் கிடைத்தது. விடைத்தாள் நகலை சரிபார்த்தேன். வினா, 115க்கு சரியான விடையளித்துள்ளேன். அதற்கு, 1 மதிப்பெண் கூடுதலாக வழங்கி, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். ஒரு பணியிடத்தை காலியாக வைத்திருந்து, என்னை நியமிக்க டி.ஆர்.பி.,க்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டார். நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன், விசாரணைக்கு மனு வந்தது. அரசு வழக்கறிஞர் சண்முகநாதன் ஆஜராகி மனுதாரரின் அசல் விடைத்தாள் நகலை சமர்ப்பித்தார். நீதிபதி: மனுதாரர், 115வது வினாவிற்கு, &'சி&' என பதில் அளித்துள்ளார். ஆனால், &'பி&' தான் சரியான விடை; அதை விடையாக எழுதியுள்ளேன்; அதனடிப்படையில் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் என மனு செய்துள்ளார். கோர்ட்டிற்கு, தவறான தகவல் அளித்துள்ளார். எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார்.
ஆசிரியர்களுக்கு போட்டோவுடன் அடையாள அட்டை வழங்க உத்தரவு
தமிழகத்தில் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு போட்டோவுடன் அடையாள அட்டை, தமிழ், ஆங்கிலத்தில் வழங்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 32 மாவட்டங்களில், 64 கல்வி மாவட்டங்கள் உள்ளன.
இதில் துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை அரசுப்பள்ளிகள் 36 ஆயிரத்து 813, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் 8 ஆயிரத்து 395, சுயநிதிப்பள்ளிகள், 11,365 உள்ளன. இதில் மொத்தமாக 56,573 பள்ளிகள் உள்ளன. இதில் பணியாற்றும் ஆசிரியர்கள் 56 ஆயிரம் பேர் உள்ளனர். மொத்தமாக மாணவர்கள் 1.35 கோடி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் போட்டோவுடன் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். கடந்த ஆண்டுகளில் வெறும் ஆங்கிலத்தில் மட்டுமே அடையாள அட்டையில் இடம் பெற்றிருந்தது. தற்போது புதியதாக வழங்கப்படும் அடையாள அட்டைகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இடம் பெற்றிருக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கான அடையாள அட்டை வழங்க அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பள்ளிக்கல்வித்துறையின் செயலாளர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிக்கல்வி - 2014 - 15ம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துதல் சார்பான விவரங்கள் அனுப்ப இயக்குனர் உத்தரவு
|
10-ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள்: இன்று முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்
பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) முதல், அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்திலிருந்து ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பத்தாம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 26 முதல் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.அறிவியல் பாடத் தேர்வு எழுதுவோர் செய்முறைத் தேர்வு நடைபெறும் நாள் குறித்த விவரத்தை, ஏற்கெனவே செய்முறை பயிற்சி பெற்ற பள்ளித் தலைமையாசிரியரிடம் மார்ச் 17-ஆம் தேதி அறிந்து கொள்ளலாம்.
செய்முறைத் தேர்வுகளை மார்ச் 18 முதல் 23-ஆம் தேதி வரை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள்: இன்று நடக்க இருந்த நேர்முக தேர்வு ஒத்திவைப்பு
சென்னை பல்கலையில், உதவி பேராசிரியர்களுக்கான நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில், பல்வேறு துறைகளில் காலியாக உள்ள, உதவி பேராசிரியர் பணிக்கான நேர்முகத் தேர்வு, இன்று நடப்பதாக இருந்தது.
ஆனால், லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருப்பதால், நேர்முகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 'மாற்றியமைக்கப்பட்ட தேதி, பின்னர் அறிவிக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
பிளஸ் 2 இயற்பியல் தேர்வு: ஏராளமானோர் 200-க்கு 200 மதிப்பெண் பெற வாய்ப்பு
பிளஸ் 2 தேர்வில் இயற்பியல் பாடத்தின் வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததால் ஏராளமான மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண் பெற வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டுதான் வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததாகவும் அவர்கள் கூறினர். பிளஸ் 2-வில் முக்கியப் பாடங்களுக்கான தேர்வுகள் இயற்பியல் பாடத்துடன் திங்கள்கிழமை தொடங்கின. முதல் பாடமான இயற்பியல் வினாத்தாள் எளிமையாக இருந்ததால் பெரும்பாலான மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தேர்வு மையங்களை விட்டு வெளியே வந்தனர்.
தேர்வு தொடர்பாக ஆசிரியர்கள் கூறியது: இயற்பியல் பாடத்தைப் பொருத்தவரை பெரும்பாலும் ஆசிரியர்களும், மாணவர்களும் எதிர்பார்த்த கேள்விகளே அதிகளவில் இடம் பெற்றிருந்தன. இந்த ஆண்டு ஒரு மதிப்பெண் வினாக்களும் எளிமையாக இருந்தன. இதனால், படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்கள் இந்த ஆண்டு 200-க்கு 200 மதிப்பெண் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அதேபோல், பொருளாதாரப் பாட வினாத்தாளும் மிகவும் எளிமையாக இருந்தது என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
|
|
|
|
|
No comments:
Post a Comment