RESOURCES
- HOME
- DRAW
- POD CAST
- FOR XII
- KIDS TV
- LIFE SKILLS
- COLORING PAGES
- TAMIL PROVERBS
- TET
- ENGLISH
- CCE
- E-LIBRARY
- ENGLISH for TAMIL
- MAPS
- WORKSHEETS
- FOR TENTH
- SCHOOL VISIT
- STORIES
- நவக்கிரகங்கள்
- தமிழ் இலக்கணம்
- அரசானைகள் GO'S
- ENGLISH EXERCISES
- AUDIO BOOK
- FUN
- ONLINE ENGLISH
- GRAMMAR
- RESOURCE BOOK
- EARTH PARTS
- RESOURCES
- LEARN TAMIL
- MUSIC FOR PPT
- தமிழ் எழுதி
- Kids activities
- E-content
- ORIGAMI
- PLANETORIUM
- WEBCAM EFFECTS
- சிறுகதைகள்
- சமையல்
- TET CENTRE
- மருத்துவம்
- கணினி
- புத்தகங்கள்
- CLASS POSTERS
- TRANSLATE
- MATHS KIT
- ENGLISH PRACTICE
- TAMIL SITES
- CERTIFICATES
- e-Grammar
- Scientists
- GAMES
- INTEL TOOLS
- E-ENGLISH CLASSROOM
- TEACHERS PAY
- BUSY TEACHER
- கல்வி விகடன்
- VECTOR ART
- How to draw
- Hello kids
- CEO VILLUPURAM
- TED SUGATAM
- MATHS GOODIES
- TEACHNOLOGY
- MATHS-IXL
- KIDS PHONICS
- PHONETICS
- VIDEOS
- FREE CLIPARTS
- TAMIL ACADEMY
- TAMIZH NOOLAGAM
- English-Tamil dictionary
- VILLUPURAM DISTRICT
- Gamified Grammar
Thursday, October 31, 2013
நவம்பர் 18 க்கு பிறகுதான் TNTET 2013 தேர்வு முடிவுகள்!
தகுதி தேர்வு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வானது -
வழக்கின் முடிவை பொறுத்து அமையும் - ஐகோர்ட்
"ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில், தேர்வு மற்றும் நியமனங்கள்,
வழக்கின் முடிவைப் பொறுத்து அமையும்" என, சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர், எம்.பழனிமுத்து
தாக்கல் செய்த மனு:
ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலின் வழிமுறைப்படி,
"ஆசிரியர் தகுதி தேர்வில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, தகுதி
மதிப்பெண்ணில், 5 சதவீதம் தளர்த்தலாம்" என, கூறப்பட்டுள்ளது. 11 மாநிலங்களில்,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, தகுதி மதிப்பெண் தளர்த்தப்பட்டுள்ளது.
சில மாநிலங்களில், பிற்படுத்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கும், தளர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்திலும், தகுதி மதிப்பெண் தளர்த்தக் கோரி,
தாக்கல் செய்த மனு, நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த, மே மாதம்,
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு, தகுதி மதிப்பெண்ணை தளர்த்தினால், புதிய தேர்வு தேவையில்லை.
எனவே, புதிய தகுதி தேர்வு தொடர்பான நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று, கருப்பையா, வழக்கறிஞர் ரமேஷ் ஆகியோரும், மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இம்மனுக்கள், தலை மை நீதிபதி அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய, "முதல் பெஞ்ச்" முன், விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், சிறப்பு அரசு பிளீடர் கிருஷ்ணகுமார், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி ஆஜராகினர்.
இறுதி விசாரணையை, நவ., 18ம் தேதிக்கு தள்ளி வைத்து, "ஆசிரியர் தேர்வு மற்றும் நியமனங்கள், இவ்வழக்கின் மீதான இறுதி முடிவைப் பொறுத்து அமையும்" என,"முதல் பெஞ்ச்" உத்தரவிட்டது.
இதற்கிடையில் தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனமும்,
டிசம்பர் மாத இறுதியில் ஆசிரியர் பணி நியமனம் நடைபெறும் என்பதாலும் நவம்பர் 18 ஆம் தேதிக்கு மேல் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை எதிர்பார்க்கலாம் என்று தெரிகிறது.
Wednesday, October 30, 2013
செய்தி
Monday, October 28, 2013
அரசு பள்ளிகளில் தமிழ் வாசிப்புத் திறனை மேம்படுத்த புது திட்டம்
அரசு பள்ளி மாணவர்கள் தமிழ் வாசிப்புத் திறனை மேம்படுத்த சிவகங்கை மாவட்டத்தில் துவங்கும் முன்மாதிரி திட்டத்திற்கென ஆசிரியர்களுக்கு பிரத்யேக பயிற்சி அளித்தனர்.
அரசு பள்ளிகளில் மேற்கொண்ட ஆய்வுகளில் 10ம் வகுப்பு வரை முன்னேறிய பெரும்பாலான மாணவர்களுக்கு தமிழை கூட சரியாக வாசிக்க தடுமாறும் நிலையில் இருப்பதால் வாசிப்புத்திறனை மேம்படுத்த முடிவெடுக்கப்பட்டது.
முதல் கட்டமாக 3 முதல் 10ம் வகுப்பு வரை இந்த முன் மாதிரி வாசிப்பு திறனை அமல்படுத்துவது குறித்து, தேவகோட்டையில் கல்வி அதிகாரிகள் மற்றும் நூலக அதிகாரிகளுடன் ஆலோசிக்கப் பட்டது. ஒவ்வொரு வகுப்பறையிலும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி புதிய உக்திகளில் வாசிப்பு, தமிழ் எழுத்துக்களை கற்றுத்தருவது என, முடிவெடுக்கப்பட்டது. இதற்காக அரசு உயர், மேல்நிலை பள்ளிகளிலும் இருந்து தலா ஒரு ஆசிரியருக்கு சிவகங்கையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
சி.இ.ஓ.,கணேசமூர்த்தி கூறுகையில், "மாணவர்களின் வாசிப்பு திறனை அதிகரிப்பு குறித்து ஏற்கனவே ஆசிரியர்கள் படித்த ஒன்று தான். புதிய உத்திகள் மூலம் மேலும் வாசிப்பு திறனை மேம்படுத்துவது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் ஒன்றிய, வட்டார அளவிலான ஆசிரியர்களுக்கு வாசிப்பு திறன் குறித்த பயிற்சி தரப்படும். தமிழை தொடர்ந்து படிப்படியாக அடுத்த பாடம், வகுப்பினருக்கும் வாசிப்பு திறனை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்," என்றார்.
+2 Latest Study Materials
Computer
- +2 Computer Science Star Office 8 - Practical Guide -By Mr. A.Prabagar,Principal,Barathi Hr.Sec.School, Redipatti. -DOWNLOAD தமிழ் வழி
பெண் தேர்வாளரை பணியில் நியமிக்க வேண்டும்: ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு
தவறான கேள்விக்கு சரியான விடை எழுதிய பெண் தேர்வாளருக்கு வேலை வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
சேலம் மாவட்டம், கசகனூர் கிராமத்தைச் சேர்ந்த பி.தேன்மொழி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிவரம்: 2012-2013-ஆம் ஆண்டு முதுநிலை உதவி ஆசிரியர் பணிக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தியது.
தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு தவறான பதில் கொடுக்கப்பட்டிருந்தது. தவறான பதில் கொடுக்கப்பட்டிருந்தும் நான் சரியான பதில் எழுதினேன். இது போன்ற கேள்விக்கு பதில் அளித்தால் அதற்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும்.
ஒரு மதிப்பெண் வழங்கினால் பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டுக்கு தேவையான 94 மதிப்பெண் எனக்கு கிடைக்கும். அதனால், கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கு தேவையான ஒரு மதிப்பெண்ணும், வேலையும் எனக்கு வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் அன்பரசு ஆஜரானார். விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு வினாத்தாளில் தவறான பதில் கொடுக்கப்பட்டிருந்தும் மனுதாரர் சரியான பதில் எழுதியுள்ளார். கேள்விக்கு பதில் அளித்ததால் அதற்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும்.
இதன் மூலம், மனுதாரருக்கு தேவையான கட்- ஆஃப் மதிப்பெண் கிடைத்துவிடும். அதனால், மனுதாரரை முதுநிலை உதவி ஆசிரியர் பணியில் நியமிக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.
தெரிந்த வினாக்களுக்கு முதலில் விடைகள் எழுதுங்கள்: மாணவர்களுக்கு அறிவுரை:
கூடலூரில் நேற்று மதியம் 1:00 மணிக்கு துவங்கிய பிளஸ் 2 மாணவர்களுக்கான "ஜெயித்துக்காட்டுவோம்" நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர் தேர்வில் வெற்றி பெற கோவை எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் கொடுத்த "டிப்ஸ்" விபரம்:
விசாலாட்சி, (தமிழ்): கேட்கப்பட்ட கேள்விக்கு அதற்குரிய வினா எண்ணை சரியாக எழுத வேண்டும்; திருக்குறள், தொடர் நிலை செய்யுள், மறுமலர்ச்சி பாடல் போன்ற பிரிவுகளில் அதிக மதிப்பெண்கள் கேட்கப்படுகிறது. மனப்பாட பகுதியை மனப்பாடம் செய்வதுடன் அடிக்கடி பிழை இல்லாமல் எழுதி பார்த்தால், தேர்வு நேரத்தில் எளிதாக விடையளிக்க இயலும். துணைப்பாடத்தை விரிவாக புரியும் வகையில் படித்துக்கொண்டால் இரண்டாம் தாளுக்கான விடைகளை எளிதாக எழுத இயலும்.
கமலா (ஆங்கிலம்): நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும்; தேவையற்ற விடைகளை எழுதுதல், அடித்தல் திருத்தல் இருத்தல் கூடாது. தெரிந்த விடையை உடனடியாக எழுத வேண்டும். கடின உழைப்பு மட்டுமே தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வழி வகை ஏற்படுத்தும்.
கிறிஸ்டோபர் தனபால் (வணிகவியல், கணக்குப்பதிவியல்): முதலில் தெரிந்த வினாக்களுக்கான விடைகளை தெளிவாக புரியும் வகையில் எழுத வேண்டும். வினா எண்களை தவறுதலாக எழுதாமல் சரியாக எழுத வேண்டும்.
தனியார் வணிகம் மற்றும் அமைப்புகளின் முறைகள் குறித்து நன்றாக தெரிந்துகொண்டால் அதில் பெரிய கேள்விகள் கேட்கப்படும் போது, எளிதாக விடையளிக்கலாம். கூட்டாண்மை வணிகம் குறித்தும், தெரிந்துகொண்டால் ஏதுவாக அமையும். தலைப்பிட்டு பதில் எழுத வேண்டும்; முக்கிய குறிப்புகளை அடிக்கோடிட்டு காட்ட வேண்டும். கணக்குகள் சரியாக எழுதினால் மட்டுமே விடை சரியாக கிடைக்கும்.
சரஸ்வதி: (பொருளியல்) சரியாக படித்தால் அதிக மதிப்பெண்கள் பெற இயலும் பாடம் பொருளியல். அரைமணிநேரத்தில் 80மதிப்பெண்களுக்கான விடைகளை எளிதாக எழுத இயலும். அதற்கு மாணவர்கள் பொருளியல் பாடத்தை படிக்கும்போது புரிந்துக்கொள்ள வேண்டும்.
சித்ரகலா(கணக்கு): கணக்குகளை திரும்ப, திரும்ப போட்டு பயிற்சி எடுப்பதன் மூலம் தேர்வு நேரத்தில் ஏற்படும் மனசோர்வையும், சந்தேகமும் இல்லாமல் விடை எழுத வழி ஏற்படுத்தும். இப்பாடத்தில் ஒவ்வொரு பகுதியிலும் எந்த கணக்கு தேர்விற்கு வரும் என்பதை முந்தைய காலங்களில் நடந்த பொதுத்தேர்வு விடைகளை ஆய்வு செய்து பயிற்சி செய்து வழிமுறைகளை மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.
திருவருட்செல்வி(இயற்பியல்): முதல் பத்து பாடங்களை முறையாக படித்தால் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களை பெற இயலும். சூத்திரங்களை மனதில் பதிய வைத்துக்கொண்டால் விடை எழுதும்போது உதவியாக இருக்கும்.
பரமேஸ்வரி(வேதியியல்): முதல் பாகத்தில் நன்றாக புரிந்து படித்தால் ஒரு மதிப்பெண் விடையளிக்க ஏதுவாக இருக்கும். அதேபோல் இரண்டாம் பாகத்திலும் பாடங்களை தேர்வு செய்து படிக்க வேண்டும். ஒவ்வொரு வழிமுறைகளையும் தெளிவாக தெரிந்துக்கொண்டால் விடையளிக்கும்போது வீண் சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்கும்.
நாகராஜ்( தாவரவியல்): பாடங்களை மீண்டும், மீண்டும் படித்து மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். எழுத்து பிழை இல்லாமலும், தாவர வகைகளின் பெயர்களையும் தெளிவாக எழுதவும் வேண்டும்.
இசைவாணி(உயிரியல்): புத்தகத்தில் எந்தமாதிரியான விடைகள் உள்ளதோ அதேபோன்று தேர்விலும் எழுத வேண்டும். அதேபோல் படங்கள் வரையும்போது கவனமாக இருக்க வேண்டும்.
Saturday, October 19, 2013
தொடக்கக்கல்வித்துறையில் உள்ள தனியார் / அரசு / ஊராட்சி / மாநகராட்சி பள்ளிகளுக்கு 2013-14ஆம் ஆண்டிற்கான கேடயங்கள் வழங்குதல் சார்பாக மாவட்டந் தோறும் 3 பள்ளிகளை தேர்ந்தெடுத்து அனுப்ப தொடக்கக்கல்வித்துறை உத்தரவு
சமுதாய விழிப்புணர்வு மற்றும் பல்லூடக பாதுகாப்பு தொடக்கநிலை ஆசிரியர் கையேடு
SSA - PRIMARY CRC - SOCIAL AWARENESS & CYBER SAFETY MODULE CLICK HERE...
பகுதி நேர ஆசிரியர்களுக்கு விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்து சம்பளத்தை முழுமையாக பிரதி மாதம் 5ம் தேதிக்குள் வழங்கவும், மேலும் சில விதிமுறைகளை வழங்கி திட்ட இயக்குநர் உத்தரவு
SPD - PART TIME INSTRUCTORS - PAYMENT OF SALARY IN FULL - INSTRUCTIONS CLICK HERE...
|
Saturday, October 12, 2013
வகுப்பறையை ஸ்மார்ட் வகுப்பாக மாற்ற
வணக்கம், உங்கள் மொபைலில் Android Smart Mobile Phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே DHILIPteacher ANDROIDஅப்ளிகேசனை நிறுவி பள்ளிக்கல்வி / தொடக்கக் கல்வி / அனைவருக்கும் கல்வி இயக்கம் / RMSA / ஆசிரியர் தேர்வு வாரியம் / அரசுத் தேர்வுகள் துறை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளும் வண்ணம் தங்கள் வகுப்பறையை ஸ்மார்ட் வகுப்பாக மாற்ற ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.
TO DOWNLOAD திலிப் ஆசிரியர் ANDROID APPLICATION" CLICK HERE...
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு 10 நாட்களில் வெளியிட ஏற்பாடு
ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு இன்னும் 10 நாட்களுக்குள் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் மும்முரமான பணியில் ஈடுபட்டுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு
ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த மாதம் 17 மற்றும் 18–ந் தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. இடை நிலை ஆசிரியர்களுக்கான தேர்வை 2 லட்சத்து 67 ஆயிரத்து 950 பேர் 677 மையங்களில் எழுதினார்கள். இவர்களில் 17 ஆயிரத்து 974 பேர் மாற்றுத்திறனாளிகள்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை 4 லட்சத்து 11 ஆயிரத்து 600 பேர் 1060 மையங்களில் எழுதினார்கள்.
தேர்வு எழுதிய காட்சி வீடியோ எடுக்கப்பட்டது.
தேர்வு முடிவு உடனடியாக வெளியிடப்பட இருந்தது. ஆனால் முதுகலை பட்டதாரிகள் பணிக்கான எழுத்துத்தேர்வில் தமிழ் தேர்வில் உள்ள வினாத்தாளில் எழுத்து பிழை இருந்தது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்தது. இதன் காரணமாக ஆசிரியர் தகுதி தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி பாதிக்கப்பட்டது.
பின்னர் தமிழ் பாடம் தவிர மற்ற பாடங்களுக்கான முதுகலை பட்டதாரி பணிக்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.
சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்
Thursday, October 10, 2013
அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு - அரசு அறிவிப்பு:
அரசானை எண்:401 நாள்:10.10.2013
To Download G.O CLICK HERE
தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்துள்ள ஒரு உத்தரவில், தமிழக அரசு ஊழியர்கள் ,
ஆசிரியர்கள் ஆகியோருக்கு அகவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு
1-7- 2013-ம் ஆண்டில் இருந்து கணக்கிட்டு வழங்கப்படும். இதன் மூலம் 8 லட்சம் அரசு
ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர் பயடைவர்,' என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் அலகுத் தேர்வு மாதிரி வினாத்தாள்
கிளிக் செய்க
நன்றி
ரா.தாமோதரன்
தமிழாசிரியர்
Monday, October 7, 2013
Sunday, October 6, 2013
பள்ளி மாணவர்களுக்கு பயன்படும் புதிய ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்
தொழில்நுட்பம் வளர்ந்து பல்வேறு சாதனங்களை படைத்து வருகிறது. கல்வித்துறையிலும் பல்வேறு வழிமுறைகளில் கணினியும், அதுசார்ந்த சாதனங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
கணினிக்கு அடுத்த தற்பொழுது பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் டேப்ளட் பி.சி கள், கையடக்கத் தொலைபேசியான ஆண்ட்ராய்ட் மொபைல்கள் போன்றவற்றிற்கும் கல்வித் தொடர்பான புதிய அப்ளிகேஷன்கள் வரத்துவங்கியுள்ளன.
Ntional Council of Educational Research and Training என்ற அமைப்பின் கீழ் வரும் பள்ளிப் பாடப் புத்தகங்கள் (ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை) அனைத்தும் புதிய ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனில் வெளியிடப்பட்டுள்ளது.
NCERT-android-App-for-school-s tudents-1to-12
என்.சி.ஆர்.டி அமைப்பின் கீழ் வரும் அனைத்து புத்தகங்களையும் இந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் மூலம் மாணவர்கள் படிக்கலாம்.
பயன்மிக்க இந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்ய:
Download NCERT App for school students
android apps for school students, ncert android apps, apps for ncert school students, smartphone apps for students, ncert apps for tablet pc, ncert apk for smartphone, ncert apps for computer, ncert app for mini laptop.

NCERT-android-App-for-school-s

NEWS
"உறங்க விடாமல் செய்வதுதான் கனவு": அப்துல்கலாம்
"உறக்கத்தில் வருவது அல்ல கனவு, உறங்கவிடாமல் செய்வது தான் கனவு," என்று, தனியார் கல்லூரி விழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசினார்.
நாமக்கல் பி.ஜி.பி., கல்லூரி சார்பில், "கலாமுடன் ஒரு நாள்" என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசியதாவது:
"ஒவ்வொரு இளைஞருக்கும் ஒரு லட்சியம் இருக்க வேண்டும். அந்த லட்சியத்தை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். அறிவை பெற தேடுதல் வேண்டும். அவ்வாறு இருந்தால் வெற்றியை அடையலாம். தோல்வியை தோல்வி அடையச் செய்ய வேண்டும்.
உறக்கத்தில் வருவது அல்ல கனவு, உறங்கவிடாமல் செய்வது தான் கனவு. அந்த கனவை காணுங்கள். சிறு லட்சியம், அது ஒரு குற்றமாகும். நம்பிக்கையின்மையில் இருந்து மீள, லட்சிய விதைகளை விதைக்க வேண்டும். வரும் 2020ல் வளர்ந்த தமிழகம், வலிமைமிக்க
இந்தியாவை உருவாக்க வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் மூன்று பேர் முக்கியமானவர்கள், அவர்களில், தாய், தந்தை, ஆரம்பப் பள்ளி ஆசிரியர். சிறந்த மருத்துவர், விஞ்ஞானி, இன்ஜினியர், ஆசிரியர், விவசாயி, அரசியல்வாதி ஆகியோர் வரிசையில் வந்தவர்கள் தான், தாமஸ் ஆல்வா எடிசன், கிரகாம் பெல், சர்.சி.வி.ராமன், ஸ்ரீனிவாச ராமானுஜம் உள்ளிட்டோர்.
அவர்களின் சாதனைகள் தான், உலகத்தில் இன்றும் பேசப்படுகிறது. நான் ஜனாதிபதியாக பணியாற்றிய காலத்தில், ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாணவர்களை சந்திப்பது உண்டு. அந்த வகையில், வடகிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பழங்குடியின மாணவர்களை சந்தித்தேன்.
அதில், ஸ்ரீகாந்த் என்ற பார்வையற்ற எஸ்.எஸ்.எல்.ஸி., மாணவன் 92 சதவீத மதிப்பெண் பெற்று தன்னம்பிக்கையுடன் போராடி எம்.ஐ.டி., யில் இடம் கிடைத்து படித்தார். உயர்ந்த நோக்குடன் படித்து வெற்றியாளராக வர இறைவனை பிராத்திக்கிறேன்." இவ்வாறு அவர் பேசினார்.
இடமாற்ற கலக்கத்தில் ஆசிரியர்கள்
அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், பணியிடங்கள் நிர்ணயிக்கப்பட்டு, இயக்குனரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். பள்ளிகளில் ஆகஸ்ட் மாத மாணவர்களின் வருகை அடிப்படையில், ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயிக்கப்படுகிறது. தொடக்க பள்ளிகளில் 30 மாணர்களுக்கும், நடுநிலைப் பள்ளிகளில் 35 மாணவர்களுக்கும் ஒரு ஆசிரியர் பணியிடம் வழங்கப்படுகிறது. கூடுதலாக உள்ள ஆசிரியர்கள் பணிநிரவல் மூலம் வேறு பள்ளிகளுக்கு இடம் மாற்றம் செய்யப்படுகின்றனர்.அதன்படி, நடப்பாண்டிற்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள்,தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில், மாணவர்களின் வருகை பதிவை ஆய்வு செய்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் மூலம், இயக்குனரகத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளன. பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்களே உள்ளதால், இடமாற்ற கலக்கத்தில் ஆசிரியர்கள் உள்ளனர்.
இரட்டைப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை வருகிற திங்கட்கிழமை வருகிறது
07.10.2013 அன்று இரட்டைப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் முதலாவது அமர்வில் விசாரணை வரிசை பட்டியல் எண் 28வதாக வழக்கு விசாரணைக்கு வருகிறது. சென்ற முறை இரட்டைப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்த போது போதிய நேரமின்மை காரணமாக அனைத்துதரப்பும் ஒப்புக்கொண்டதால், நீதிபதிகள் 07.10.2013 அன்று வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. வருகிற 07.10.2013 அன்று இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு முடிவு பெரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
|
"உறங்க விடாமல் செய்வதுதான் கனவு": அப்துல்கலாம்
"உறக்கத்தில் வருவது அல்ல கனவு, உறங்கவிடாமல் செய்வது தான் கனவு," என்று, தனியார் கல்லூரி விழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசினார்.
நாமக்கல் பி.ஜி.பி., கல்லூரி சார்பில், "கலாமுடன் ஒரு நாள்" என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசியதாவது:
"ஒவ்வொரு இளைஞருக்கும் ஒரு லட்சியம் இருக்க வேண்டும். அந்த லட்சியத்தை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். அறிவை பெற தேடுதல் வேண்டும். அவ்வாறு இருந்தால் வெற்றியை அடையலாம். தோல்வியை தோல்வி அடையச் செய்ய வேண்டும்.
உறக்கத்தில் வருவது அல்ல கனவு, உறங்கவிடாமல் செய்வது தான் கனவு. அந்த கனவை காணுங்கள். சிறு லட்சியம், அது ஒரு குற்றமாகும். நம்பிக்கையின்மையில் இருந்து மீள, லட்சிய விதைகளை விதைக்க வேண்டும். வரும் 2020ல் வளர்ந்த தமிழகம், வலிமைமிக்க இந்தியாவை உருவாக்க வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் மூன்று பேர் முக்கியமானவர்கள், அவர்களில், தாய், தந்தை, ஆரம்பப் பள்ளி ஆசிரியர். சிறந்த மருத்துவர், விஞ்ஞானி, இன்ஜினியர், ஆசிரியர், விவசாயி, அரசியல்வாதி ஆகியோர் வரிசையில் வந்தவர்கள் தான், தாமஸ் ஆல்வா எடிசன், கிரகாம் பெல், சர்.சி.வி.ராமன், ஸ்ரீனிவாச ராமானுஜம் உள்ளிட்டோர்.
அவர்களின் சாதனைகள் தான், உலகத்தில் இன்றும் பேசப்படுகிறது. நான் ஜனாதிபதியாக பணியாற்றிய காலத்தில், ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாணவர்களை சந்திப்பது உண்டு. அந்த வகையில், வடகிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பழங்குடியின மாணவர்களை சந்தித்தேன்.
அதில், ஸ்ரீகாந்த் என்ற பார்வையற்ற எஸ்.எஸ்.எல்.ஸி., மாணவன் 92 சதவீத மதிப்பெண் பெற்று தன்னம்பிக்கையுடன் போராடி எம்.ஐ.டி., யில் இடம் கிடைத்து படித்தார். உயர்ந்த நோக்குடன் படித்து வெற்றியாளராக வர இறைவனை பிராத்திக்கிறேன்." இவ்வாறு அவர் பேசினார்.
|
இடமாற்ற கலக்கத்தில் ஆசிரியர்கள்
அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், பணியிடங்கள் நிர்ணயிக்கப்பட்டு, இயக்குனரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
பள்ளிகளில் ஆகஸ்ட் மாத மாணவர்களின் வருகை அடிப்படையில், ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயிக்கப்படுகிறது. தொடக்க பள்ளிகளில் 30 மாணர்களுக்கும், நடுநிலைப் பள்ளிகளில் 35 மாணவர்களுக்கும் ஒரு ஆசிரியர் பணியிடம் வழங்கப்படுகிறது. கூடுதலாக உள்ள ஆசிரியர்கள் பணிநிரவல் மூலம் வேறு பள்ளிகளுக்கு இடம் மாற்றம் செய்யப்படுகின்றனர்.
அதன்படி, நடப்பாண்டிற்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள்,தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில், மாணவர்களின் வருகை பதிவை ஆய்வு செய்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் மூலம், இயக்குனரகத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளன. பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்களே உள்ளதால், இடமாற்ற கலக்கத்தில் ஆசிரியர்கள் உள்ளனர்.
இரட்டைப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை வருகிற திங்கட்கிழமை வருகிறது
07.10.2013 அன்று இரட்டைப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் முதலாவது அமர்வில் விசாரணை வரிசை பட்டியல் எண் 28வதாக வழக்கு விசாரணைக்கு வருகிறது. சென்ற முறை இரட்டைப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்த போது போதிய நேரமின்மை காரணமாக அனைத்து
தரப்பும் ஒப்புக்கொண்டதால், நீதிபதிகள் 07.10.2013 அன்று வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. வருகிற 07.10.2013 அன்று இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு முடிவு பெரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Subscribe to:
Posts (Atom)