நவம்பர், 10ம் தேதிக்குள், 2,200 புதிய முதுகலை ஆசிரியர்கள் நியமனம்
தமிழ் அல்லாத இதர பாடங்களுக்கு, தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பதிவு எண்கள் விவரமும், சில தினங்களுக்கு முன், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து. ஒரு இடத்திற்கு, ஒருவர்என்ற வீதத்தில். தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் சான்றிதழ்களை சரிபார்ப்பதற்கான முகாம், வரும், 22, 23ம் தேதிகளில்,
மாநிலம் முழுவதும், 14 இடங்களில் நடக்கிறது. 32 மாவட்டங்களும், இந்த, 14 இடங்களில் அடங்கும் வகையில், பட்டியல் தயாரிக்கப்பட்டு, , www.trb.tn.nic.in என்ற, டி.ஆர்.பி.,இணையதளத்தில், வெளியிடப்பட்டது. மேலும்,சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க இருப்பவர்களுக்கான அழைப்பு கடிதங்களும், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட தேர்வர்கள், 'ரோல் எண்'களை பதிவு செய்து, தங்களுக்கான அழைப்பு கடிதங்களை, பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. வழக்கமாக, சான்றிதழ் சரிபார்ப்பு, பல கட்டங்களாக நடக்கும். சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு,மீண்டும் வாய்ப்பு அளிக்கும் வகையில், பல கட்டங்களாக மீண்டும், மீண்டும் நடத்தப்படும். ஆனால், இம்முறை அதுபோன்ற வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என்றும், சான்றிதழ்சரிபார்ப்பின்போது, உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்காததேர்வர்களின் தேர்வு, ரத்தாகிவிடும் என்றும், டி.ஆர்.பி.,அறிவித்துள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பின்போது,என்னென்ன ஆவணங்கள் கொண்டுவர வேண்டும் என்ற முழுமையான விவரங்களையும், இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள், இறுதி தேர்வுப் பட்டியலை தயாரித்து, பள்ளி கல்வித்துறைக்கு வழங்கிவிட, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.
எனவே, நவம்பர், 10ம் தேதிக்குள், தமிழ் பாடம் தவிர்த்து, இதர பாடங்களுக்கு, 2,200 புதிய ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படலாம் என,எதிர்பார்க்கப்படுகிறது.
10,000 பட்டதாரி ஆசிரியர், 3,000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு
தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. தற்போது, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 10 ஆயிரம் உள்ளன. மீதம் உள்ள 3 ஆயிரம் பணியிடங்கள், இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள். இவற்றை நிரப்ப, பாடவாரியான காலியிடங்களை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.
விரைவில் இப்பணி முடிந்து, தகுதித் தேர்வின் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
|
குரூப் - 1 தேர்வுக்கு வயது வரம்பை உயர்த்த கோரிக்கை
"குரூப் - 1 தேர்வுக்கான வயது வரம்பை 50 வயதாக உயர்த்த வேண்டும்" என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் மாநில செயலர், தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் - 1 தேர்வுக்கு, பொதுப் பிரிவினருக்கு 30 வயதும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு, 35 வயதும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. குரூப் - 1 தேர்வுகள் ஆண்டு தோறும் நடத்தப்படுவதில்லை. கடந்த 12ஆண்டுகளில், ஐந்து முறை மட்டுமே நடத்தப்பட்டுள்ளது.
இதனால், பல ஆயிரக்கணக்காணோர், குரூப் - 1 தேர்வு எழுது முடியாமல் போகிறது. கேரளாவில், குரூப் - 1 தேர்வு எழுத வயது வரம்பு, 50ஆகவும், மேற்குவங்கம், திரிபுரா, அரியானா, அசாம், குஜராத் மாநிலங்களில், 45 ஆகவும் உள்ளது. எனவே, தமிழகத்திலும் குரூப் - 1 தேர்வு எழுத, பொதுப் பிரிவினருக்கு 45 ஆகவும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவருக்கு, 50 ஆகவும் வயது வரம்பை உயர்த்த வேண்டும். இதற்கு, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, பாண்டியன் கூறியுள்ளார்.
|
குரூப் - 1 ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்
வரும், 25ம் தேதி முதல் நடக்க உள்ள குரூப் - 1 முதன்மை தேர்வுக்கான, ஹால் டிக்கெட், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், ஷோபனா அறிவிப்பு: குரூப் - 1 முதன்மை தேர்வு, வரும், 25, 26, 27 ஆகிய தேதிகளில், சென்னையில் மட்டும் காலையில் நடக்கிறது. இந்த தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள தேர்வர்கள், www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் இருந்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மூன்று நாட்களும், பொது அறிவுத்தாள், ஒன்று, இரண்டு, மூன்று என, மூன்று தாள்களாக நடக்கும். காலை, 10:00 மணி முதல் பகல், 1:00 மணி வரை, தேர்வு நடக்கும். ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் சந்தேகம் ஏதும் இருந்தால், contacttnpsc@gmail.com என்ற இ-மெயில் முகவரியிலோ அல்லது தேர்வாணையத்தின் கட்டணம் இல்லாத தொலைபேசி (18004251002) மூலமாகவோ, தேர்வர்கள் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, ஷோபனா அறிவித்துள்ளார்.
இந்த தேர்வு, கடந்த மாதம் நடக்க இருந்தது. அதே நாளில், வேறு போட்டித் தேர்வுகள் இருந்ததால், இம்மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. முதன்மை தேர்வை, 950க்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர்.
|
எஸ்.எஸ்.ஏ., ஆய்வுக்கூட்டம் திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி பங்கேற்பு
ஒருங்கிணைந்த பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்திலுள்ள, 10 யூனியன்களிலும், அனைவருக்கும் கல்வி இயக்க செயல்பாடுகள் குறித்து, மாநிலத்திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி தலைமை ஆய்வு கூட்டம் நடந்தது.
பெரம்பலூர் கலெக்டர் தரேஷ்அஹமது முன்னிலை வகித்தார். ஆய்வு கூட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க செயல்பாடுகளான, பள்ளிகளில் செயல்வழி கற்றல் கல்வி முறை, படைப்பாற்றல் கல்வி முறை, ஆசிரியர்களுக்கான பயிற்சி முறைகள், பள்ளி செல்லா குழந்தைகளுக்கான உண்டு உறைவிட மையங்களின் செயல்பாடுகள், மாற்றுத்திறன் கொண்டோர்களுக்கான உண்டு உறைவிட மையங்களின் செயல்பாடுகள், பெண்களுக்கான சிறப்பு உண்டு உறைவிட மைய செயல்பாடுகள், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட பள்ளி வகுப்பறை கட்டிட பணிகள், சுற்றுசுவர் பணிகள், கழிப்பறை பணிகள் ஆகியவைகளின் முன்னேற்றம், ஆசிரியர்களுக்கான ஊதிய விவரங்கள் உள்ளீட்ட அனைத்து செயல்பாடுகள் பற்றி, விரிவாக மாநிலத்திட்ட இயக்குனர் ஆய்வு மேற்கொண்டு, அறிவுரை வழங்கினார்.
மாநில திட்ட இயக்குனர் ஆய்வின்போது, ஒவ்வொரு ஒன்றியம் வாரியாக அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில், படிக்கும் திறன், அடைவுத்திறன் ஆகியவைகள் பற்றி கேட்டறிந்து, மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் குறைவாக உள்ள பள்ளிகளையும் அதற்கான காரணங்களையும் ஆய்வு செய்தார்.
அப்போது அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் மேம்பட, அனைத்து அலுவலர்களும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
ஒன்றியங்களில் வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், உதவி மற்றும் கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள், பள்ளிகளை அடிக்கடி பார்வையிட்டு ஆசிரியர்களுக்கும், தலைமையாசிரியர்களுக்கும் தேவையான அறிவுரைகள் வழங்கவேண்டும் என அறிவுறுத்தினார்.
ஆய்வு கூட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சி.இ.ஓ., பரிமளா, சி.இ.ஓ., மகாலிங்கம், தொடக்கக்கல்வி அலுவலர் எலிசபெத் உட்பட பலர் பங்கேற்றனர்.
|
|
No comments:
Post a Comment