Wednesday, October 30, 2013

செய்தி


நவம்பர் 1 பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
தீபாவளி திருநாளை முன்னிட்டு தஞ்சை உட்பட சில மாவட்டங்களில் நவம்பர் 1 பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 9 தேதி பள்ளி வேலை நாளாக செயல்படும்.
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு இந்த வாரத்தில் வெளியீடு

சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும், இந்த வார இறுதிக்குள்,டி.இ.டி., தேர்வு முடிவு வெளியாகிறது. ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக, கடந்த ஆகஸ்டில், டி.இ.டி., தேர்வு நடந்தது;6.5லட்சம் பேர், எழுதினர். விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, முடிவுகள் தயாராக உள்ளன.


தற்போது,சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருவதால், முடிவு வெளியாவது தள்ளிப்போவதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாளையுடன், சட்டசபை கூட்டத்தொடர் முடிகிறது. அதன்பின், டி.இ.டி., தேர்வு முடிவு வெளியாகும் என,எதிர்பார்க்கப்படுகிறது.
ஆங்கில வழிக் கல்வியால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

ஆங்கில வழிக் கல்வி கொண்டு வரப்பட்டுள்ளதால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் கூறினார்.

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை துணைநிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பேசியது:

அரசு துவக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி கொண்டுவரப்பட்டதால், தமிழ் பேசும் மாணவர்கள் குறைந்து போவார்களோ என்ற கவலை உள்ளது. தமிழ் மொழி அதன் செல்வாக்கை இழந்துவிடுமோ என்ற கவலையும் உள்ளது என்றார்.

அப்போது அமைச்சர் பி.பழனியப்பன் கூறியது:

ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருந்து வருகிறது. வேலைவாய்ப்புக்கு என்று செல்லும் ஆங்கில வழி பயிலும் மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

மேலும் ஆங்கில வழிக் கல்விக்காகவே தனியார் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்கும் நிலையும் இருக்கிறது. அதன் காரணமாகவே பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி கொண்டு வரப்பட்டது. தற்போது தனியார் பள்ளிகளையும் தவிர்த்து அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேரும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஆங்கில வழிக் கல்வியில் 1.21 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்றார் அவர்.
த.அ.உ.ச 2005 - பி.எஸ்.சி., பி.எட்., முடித்த பின் பி.ஏ., (ஆங்கிலம்) மூன்றாண்டுகள் படித்தவர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றபின் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியமர்த்தலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் பதில்

RTI -2005 - பி.எஸ்.சி., பி.எட்., முடித்த பின் பி.ஏ., (ஆங்கிலம்) மூன்றாண்டுகள் படித்தவர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றபின் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியமர்த்தலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் பதில்:

SCHOOL EDN -TEMPORARY POST-ADDITIONAL POST GRADUATE  ASST IN HIGHER SECONDARY SCHOOL SANCTIONED TEMPORARY POST CONTINUATIONS ORDER FROM 29.10.2013 AWAITED FROM GOVERNMENT ORDER ISSUED...


No comments:

Post a Comment