அரசு பள்ளிகளில் தமிழ் வாசிப்புத் திறனை மேம்படுத்த புது திட்டம்
அரசு பள்ளி மாணவர்கள் தமிழ் வாசிப்புத் திறனை மேம்படுத்த சிவகங்கை மாவட்டத்தில் துவங்கும் முன்மாதிரி திட்டத்திற்கென ஆசிரியர்களுக்கு பிரத்யேக பயிற்சி அளித்தனர்.
அரசு பள்ளிகளில் மேற்கொண்ட ஆய்வுகளில் 10ம் வகுப்பு வரை முன்னேறிய பெரும்பாலான மாணவர்களுக்கு தமிழை கூட சரியாக வாசிக்க தடுமாறும் நிலையில் இருப்பதால் வாசிப்புத்திறனை மேம்படுத்த முடிவெடுக்கப்பட்டது.
முதல் கட்டமாக 3 முதல் 10ம் வகுப்பு வரை இந்த முன் மாதிரி வாசிப்பு திறனை அமல்படுத்துவது குறித்து, தேவகோட்டையில் கல்வி அதிகாரிகள் மற்றும் நூலக அதிகாரிகளுடன் ஆலோசிக்கப் பட்டது. ஒவ்வொரு வகுப்பறையிலும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி புதிய உக்திகளில் வாசிப்பு, தமிழ் எழுத்துக்களை கற்றுத்தருவது என, முடிவெடுக்கப்பட்டது. இதற்காக அரசு உயர், மேல்நிலை பள்ளிகளிலும் இருந்து தலா ஒரு ஆசிரியருக்கு சிவகங்கையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
சி.இ.ஓ.,கணேசமூர்த்தி கூறுகையில், "மாணவர்களின் வாசிப்பு திறனை அதிகரிப்பு குறித்து ஏற்கனவே ஆசிரியர்கள் படித்த ஒன்று தான். புதிய உத்திகள் மூலம் மேலும் வாசிப்பு திறனை மேம்படுத்துவது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் ஒன்றிய, வட்டார அளவிலான ஆசிரியர்களுக்கு வாசிப்பு திறன் குறித்த பயிற்சி தரப்படும். தமிழை தொடர்ந்து படிப்படியாக அடுத்த பாடம், வகுப்பினருக்கும் வாசிப்பு திறனை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்," என்றார்.
+2 Latest Study Materials
Computer
- +2 Computer Science Star Office 8 - Practical Guide -By Mr. A.Prabagar,Principal,Barathi Hr.Sec.School, Redipatti. -DOWNLOAD தமிழ் வழி
பெண் தேர்வாளரை பணியில் நியமிக்க வேண்டும்: ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு
தவறான கேள்விக்கு சரியான விடை எழுதிய பெண் தேர்வாளருக்கு வேலை வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
சேலம் மாவட்டம், கசகனூர் கிராமத்தைச் சேர்ந்த பி.தேன்மொழி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிவரம்: 2012-2013-ஆம் ஆண்டு முதுநிலை உதவி ஆசிரியர் பணிக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தியது.
தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு தவறான பதில் கொடுக்கப்பட்டிருந்தது. தவறான பதில் கொடுக்கப்பட்டிருந்தும் நான் சரியான பதில் எழுதினேன். இது போன்ற கேள்விக்கு பதில் அளித்தால் அதற்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும்.
ஒரு மதிப்பெண் வழங்கினால் பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டுக்கு தேவையான 94 மதிப்பெண் எனக்கு கிடைக்கும். அதனால், கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கு தேவையான ஒரு மதிப்பெண்ணும், வேலையும் எனக்கு வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் அன்பரசு ஆஜரானார். விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு வினாத்தாளில் தவறான பதில் கொடுக்கப்பட்டிருந்தும் மனுதாரர் சரியான பதில் எழுதியுள்ளார். கேள்விக்கு பதில் அளித்ததால் அதற்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும்.
இதன் மூலம், மனுதாரருக்கு தேவையான கட்- ஆஃப் மதிப்பெண் கிடைத்துவிடும். அதனால், மனுதாரரை முதுநிலை உதவி ஆசிரியர் பணியில் நியமிக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.
தெரிந்த வினாக்களுக்கு முதலில் விடைகள் எழுதுங்கள்: மாணவர்களுக்கு அறிவுரை:
கூடலூரில் நேற்று மதியம் 1:00 மணிக்கு துவங்கிய பிளஸ் 2 மாணவர்களுக்கான "ஜெயித்துக்காட்டுவோம்" நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர் தேர்வில் வெற்றி பெற கோவை எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் கொடுத்த "டிப்ஸ்" விபரம்:
விசாலாட்சி, (தமிழ்): கேட்கப்பட்ட கேள்விக்கு அதற்குரிய வினா எண்ணை சரியாக எழுத வேண்டும்; திருக்குறள், தொடர் நிலை செய்யுள், மறுமலர்ச்சி பாடல் போன்ற பிரிவுகளில் அதிக மதிப்பெண்கள் கேட்கப்படுகிறது. மனப்பாட பகுதியை மனப்பாடம் செய்வதுடன் அடிக்கடி பிழை இல்லாமல் எழுதி பார்த்தால், தேர்வு நேரத்தில் எளிதாக விடையளிக்க இயலும். துணைப்பாடத்தை விரிவாக புரியும் வகையில் படித்துக்கொண்டால் இரண்டாம் தாளுக்கான விடைகளை எளிதாக எழுத இயலும்.
கமலா (ஆங்கிலம்): நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும்; தேவையற்ற விடைகளை எழுதுதல், அடித்தல் திருத்தல் இருத்தல் கூடாது. தெரிந்த விடையை உடனடியாக எழுத வேண்டும். கடின உழைப்பு மட்டுமே தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வழி வகை ஏற்படுத்தும்.
கிறிஸ்டோபர் தனபால் (வணிகவியல், கணக்குப்பதிவியல்): முதலில் தெரிந்த வினாக்களுக்கான விடைகளை தெளிவாக புரியும் வகையில் எழுத வேண்டும். வினா எண்களை தவறுதலாக எழுதாமல் சரியாக எழுத வேண்டும்.
தனியார் வணிகம் மற்றும் அமைப்புகளின் முறைகள் குறித்து நன்றாக தெரிந்துகொண்டால் அதில் பெரிய கேள்விகள் கேட்கப்படும் போது, எளிதாக விடையளிக்கலாம். கூட்டாண்மை வணிகம் குறித்தும், தெரிந்துகொண்டால் ஏதுவாக அமையும். தலைப்பிட்டு பதில் எழுத வேண்டும்; முக்கிய குறிப்புகளை அடிக்கோடிட்டு காட்ட வேண்டும். கணக்குகள் சரியாக எழுதினால் மட்டுமே விடை சரியாக கிடைக்கும்.
சரஸ்வதி: (பொருளியல்) சரியாக படித்தால் அதிக மதிப்பெண்கள் பெற இயலும் பாடம் பொருளியல். அரைமணிநேரத்தில் 80மதிப்பெண்களுக்கான விடைகளை எளிதாக எழுத இயலும். அதற்கு மாணவர்கள் பொருளியல் பாடத்தை படிக்கும்போது புரிந்துக்கொள்ள வேண்டும்.
சித்ரகலா(கணக்கு): கணக்குகளை திரும்ப, திரும்ப போட்டு பயிற்சி எடுப்பதன் மூலம் தேர்வு நேரத்தில் ஏற்படும் மனசோர்வையும், சந்தேகமும் இல்லாமல் விடை எழுத வழி ஏற்படுத்தும். இப்பாடத்தில் ஒவ்வொரு பகுதியிலும் எந்த கணக்கு தேர்விற்கு வரும் என்பதை முந்தைய காலங்களில் நடந்த பொதுத்தேர்வு விடைகளை ஆய்வு செய்து பயிற்சி செய்து வழிமுறைகளை மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.
திருவருட்செல்வி(இயற்பியல்): முதல் பத்து பாடங்களை முறையாக படித்தால் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களை பெற இயலும். சூத்திரங்களை மனதில் பதிய வைத்துக்கொண்டால் விடை எழுதும்போது உதவியாக இருக்கும்.
பரமேஸ்வரி(வேதியியல்): முதல் பாகத்தில் நன்றாக புரிந்து படித்தால் ஒரு மதிப்பெண் விடையளிக்க ஏதுவாக இருக்கும். அதேபோல் இரண்டாம் பாகத்திலும் பாடங்களை தேர்வு செய்து படிக்க வேண்டும். ஒவ்வொரு வழிமுறைகளையும் தெளிவாக தெரிந்துக்கொண்டால் விடையளிக்கும்போது வீண் சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்கும்.
நாகராஜ்( தாவரவியல்): பாடங்களை மீண்டும், மீண்டும் படித்து மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். எழுத்து பிழை இல்லாமலும், தாவர வகைகளின் பெயர்களையும் தெளிவாக எழுதவும் வேண்டும்.
இசைவாணி(உயிரியல்): புத்தகத்தில் எந்தமாதிரியான விடைகள் உள்ளதோ அதேபோன்று தேர்விலும் எழுத வேண்டும். அதேபோல் படங்கள் வரையும்போது கவனமாக இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment