வகுப்பறையை ஸ்மார்ட் வகுப்பாக மாற்ற
வணக்கம், உங்கள் மொபைலில் Android Smart Mobile Phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே DHILIPteacher ANDROIDஅப்ளிகேசனை நிறுவி பள்ளிக்கல்வி / தொடக்கக் கல்வி / அனைவருக்கும் கல்வி இயக்கம் / RMSA / ஆசிரியர் தேர்வு வாரியம் / அரசுத் தேர்வுகள் துறை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளும் வண்ணம் தங்கள் வகுப்பறையை ஸ்மார்ட் வகுப்பாக மாற்ற ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.
TO DOWNLOAD திலிப் ஆசிரியர் ANDROID APPLICATION" CLICK HERE...
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு 10 நாட்களில் வெளியிட ஏற்பாடு
ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு இன்னும் 10 நாட்களுக்குள் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் மும்முரமான பணியில் ஈடுபட்டுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு
ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த மாதம் 17 மற்றும் 18–ந் தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. இடை நிலை ஆசிரியர்களுக்கான தேர்வை 2 லட்சத்து 67 ஆயிரத்து 950 பேர் 677 மையங்களில் எழுதினார்கள். இவர்களில் 17 ஆயிரத்து 974 பேர் மாற்றுத்திறனாளிகள்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை 4 லட்சத்து 11 ஆயிரத்து 600 பேர் 1060 மையங்களில் எழுதினார்கள்.
தேர்வு எழுதிய காட்சி வீடியோ எடுக்கப்பட்டது.
தேர்வு முடிவு உடனடியாக வெளியிடப்பட இருந்தது. ஆனால் முதுகலை பட்டதாரிகள் பணிக்கான எழுத்துத்தேர்வில் தமிழ் தேர்வில் உள்ள வினாத்தாளில் எழுத்து பிழை இருந்தது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்தது. இதன் காரணமாக ஆசிரியர் தகுதி தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி பாதிக்கப்பட்டது.
பின்னர் தமிழ் பாடம் தவிர மற்ற பாடங்களுக்கான முதுகலை பட்டதாரி பணிக்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.
No comments:
Post a Comment