Sunday, October 6, 2013

NEWS

"உறங்க விடாமல் செய்வதுதான் கனவு": அப்துல்கலாம்

"உறக்கத்தில் வருவது அல்ல கனவு, உறங்கவிடாமல் செய்வது தான் கனவு," என்று, தனியார் கல்லூரி விழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசினார்.

நாமக்கல் பி.ஜி.பி., கல்லூரி சார்பில், "கலாமுடன் ஒரு நாள்" என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசியதாவது:

"ஒவ்வொரு இளைஞருக்கும் ஒரு லட்சியம் இருக்க வேண்டும். அந்த லட்சியத்தை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். அறிவை பெற தேடுதல் வேண்டும். அவ்வாறு இருந்தால் வெற்றியை அடையலாம். தோல்வியை தோல்வி அடையச் செய்ய வேண்டும்.

உறக்கத்தில் வருவது அல்ல கனவு, உறங்கவிடாமல் செய்வது தான் கனவு. அந்த கனவை காணுங்கள். சிறு லட்சியம், அது ஒரு குற்றமாகும். நம்பிக்கையின்மையில் இருந்து மீள, லட்சிய விதைகளை விதைக்க வேண்டும். வரும் 2020ல் வளர்ந்த தமிழகம், வலிமைமிக்க
இந்தியாவை உருவாக்க வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் மூன்று பேர் முக்கியமானவர்கள், அவர்களில், தாய், தந்தை, ஆரம்பப் பள்ளி ஆசிரியர். சிறந்த மருத்துவர், விஞ்ஞானி, இன்ஜினியர், ஆசிரியர், விவசாயி, அரசியல்வாதி ஆகியோர் வரிசையில் வந்தவர்கள் தான், தாமஸ் ஆல்வா எடிசன், கிரகாம் பெல், சர்.சி.வி.ராமன், ஸ்ரீனிவாச ராமானுஜம் உள்ளிட்டோர்.

அவர்களின் சாதனைகள் தான், உலகத்தில் இன்றும் பேசப்படுகிறது. நான் ஜனாதிபதியாக பணியாற்றிய காலத்தில், ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாணவர்களை சந்திப்பது உண்டு. அந்த வகையில், வடகிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பழங்குடியின மாணவர்களை சந்தித்தேன்.

அதில், ஸ்ரீகாந்த் என்ற பார்வையற்ற எஸ்.எஸ்.எல்.ஸி., மாணவன் 92 சதவீத மதிப்பெண் பெற்று தன்னம்பிக்கையுடன் போராடி எம்.ஐ.டி., யில் இடம் கிடைத்து படித்தார். உயர்ந்த நோக்குடன் படித்து வெற்றியாளராக வர இறைவனை பிராத்திக்கிறேன்." இவ்வாறு அவர் பேசினார்.

இடமாற்ற கலக்கத்தில் ஆசிரியர்கள்

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், பணியிடங்கள் நிர்ணயிக்கப்பட்டு, இயக்குனரகத்திற்கு  அனுப்பப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். பள்ளிகளில் ஆகஸ்ட் மாத மாணவர்களின் வருகை அடிப்படையில், ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயிக்கப்படுகிறது. தொடக்க பள்ளிகளில் 30 மாணர்களுக்கும், நடுநிலைப் பள்ளிகளில் 35 மாணவர்களுக்கும் ஒரு ஆசிரியர் பணியிடம் வழங்கப்படுகிறது. கூடுதலாக உள்ள ஆசிரியர்கள் பணிநிரவல் மூலம் வேறு பள்ளிகளுக்கு இடம் மாற்றம் செய்யப்படுகின்றனர்.அதன்படி, நடப்பாண்டிற்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள்,தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில், மாணவர்களின் வருகை பதிவை ஆய்வு செய்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் மூலம், இயக்குனரகத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளன. பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்களே உள்ளதால், இடமாற்ற கலக்கத்தில் ஆசிரியர்கள் உள்ளனர்.

இரட்டைப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை வருகிற திங்கட்கிழமை வருகிறது

07.10.2013 அன்று இரட்டைப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் முதலாவது அமர்வில் விசாரணை  வரிசை பட்டியல் எண் 28வதாக வழக்கு விசாரணைக்கு வருகிறது. சென்ற முறை இரட்டைப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்த போது போதிய நேரமின்மை காரணமாக அனைத்துதரப்பும் ஒப்புக்கொண்டதால், நீதிபதிகள் 07.10.2013 அன்று வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. வருகிற 07.10.2013 அன்று இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு முடிவு பெரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment