Saturday, February 1, 2014


ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் ஆன்லைனில் பதிவேற்றம்.

தொடக்கக் கல்வித் துறையில் கல்வி மேலாண்மைத் தகவல் முறையின் (EMIS) ஓர் அங்கமான ஆசிரியர் தன்விவரங்களை (Teachers Profile) ஆன்லைனில் பதிவேற்றுவதற்காக ஆசிரியர்களின் தற்போதைய அடிப்படை விவரங்கள் அனைத்தும் அந்தந்த ஒன்றியங்களில் ஆன்லைனில் பதிவிடஅறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி, பணிப்பதிவேட்டிலுள்ள அனைத்துப் பதிவுகளும் பதிவிடப்படவுள்ளன. முதற்கட்டமாக அடிப்படை விவரங்களையும் புகைப்படத்தையும் தரவேற்றும் பணி பிப்ரவரிமுதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது.ஏற்கனவே பள்ளிகள் குறித்த DISE விவரங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.

அதில் e-ServiceRegister என்னும் பக்கத்தில் ஆசிரியர்களின் அடிப்படை விவரங்களான பெயர் பிறந்த தேதி, பணியில் சேர்ந்த தேதி, மொழி, இனம், பதவி உயர்வு, சம்பளம், வீட்டு முகவரி, இரத்த வகை, அங்க மச்ச அடையாளங்கள், புகைப்படம், மெயில் முகவரி, செல்பேசி எண், இருசக்கர நாற்சக்கர ஓட்டுநர் உரிம எண், PAN கார்டு எண், போன்றவை தற்போது பதியப்படுகின்றன.

பணிப்பதிவேட்டில் பதியும் அனைத்து விவரங்களும் விடுப்பு, சரண்டர் போன்ற விவரங்களும் TPF, CPS, SPF, HF, பணிக்கொடை போன்றவற்றுக்கான வாரிசு நியமனம், ஆதார் எண் போன்றவையும் அடுத்த கட்டப் பணியின் போது பதிவேற்றப்பட உள்ளன.

மனப்பாடப்பகுதி பாடல்கள் ஆடியோ சி.டி.க் களாக மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றன.

             பத்தாம் வகுப்பு மாணவர்கள் மனப்பாடப்பகுதியில் முழு மதிப்பெண் எடுக்க மனப்பாடப்பகுதி பாடல்கள் இனிமையான இசை மற்றும் ராகத்தில் பாடப்பட்டு ஆடியோ சி.டி.க் களாக மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றன.

          பத்தாம் வகுப்பு மாணவர்கள் மனப்பாடப்பகுதியில் முழு மதிப்பெண் எடுக்க பள்ளிக்கல்வித்துறை புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. அதன்படி, மனப்பாடப்பகுதி பாடல்கள் இனிமையான இசை மற்றும் ராகத்தில் பாடப்பட்டு ஆடியோ சி.டி.க் களாக மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றன. 
           மாணவர்களின் நாடித் துடிப்பை தெரிந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை, மாணவர்கள் வழியிலே சென்று மனப்பாடப்பகுதி பாடல்களை எளிதாக படிக்கவும் நினைவில் வைக்கவும் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. மனப் பாடப்பகுதியில் சரியாக பதில் அளித்தால் முழு மதிப்பெண் பெற்று விடலாம் என்று மாணவ-மாணவிகளுக்கு குறிப்பாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அடிக்கடி அறிவுரை கூறுவது வழக்கம். 
            இந்த நிலையில், 10-ம் வகுப்பு மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கில பாடத்தில் மனப்பாடப்பகுதியில் முழு மதிப்பெண் எடுக்கும் வகையில் அந்த பாடல்கள் இனிய இசையில் ரசித்துக் கேட்கத் தூண்டும் ராகத்தில் ஆடியோ சி.டி.யாக உருவாக்கப்பட்டுள்ளன. மத்திய இடைநிலை கல்வி திட்ட (ஆர்.எம்.எஸ்.ஏ.) உதவியுடன் மாநில ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் இந்த சி.டி.யை தயாரித்துள்ளது. 
             இசையில் அரசு பள்ளி இசை ஆசிரியர்களும், பள்ளி மாணவ-மாணவிகளும் இந்த பாடல்களை பாடியுள்ளனர். 
           34 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ஆடியோ சி.டியை தயாரித்து ஆர்.எம்.எஸ்.ஏ.விடம் ஒப்படைத்துள்ளது. 
                         இதில், தமிழ் பாடத்தில் திருக்குறள், திருவாசகம், சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம், பெரியபுராணம், நாலாயிரத் திவ்யபிரபந்தம், சீறாப்புராணம் உள்ளிட்ட பாடங்களில் இருந்து 14 மனப்பாடப்பகுதி பாடல் களும், அதேபோல், ஆங்கில பாடத்தில் 4 மனப்பாட பாடல்களும் இடம்பெற்றுள்ளன. 

நினைவாற்றலைப் பல மடங்கு அதிகரிக்கும்: பிராண முத்திரை

பிராண முத்திரை :
           பயிற்சி மூளையின் செல்களில் குளுகோஸ் சக்தியாக மாற ஆக்சிஜன்மிக மிக அவசிய  காரணம மூளை தனது எரிபொருளாக குளுகோஸையேபயன்படுத்திக் கொள்கிறதுஇவை நவீன விஞ்ஞானம் கூறும் உண்மைகள்பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே மூளைக்கும் பிராண சக்திக்கும் இடையிலானதொடர்பு குறித்து நமது தந்திர யோகிகள் அறிந்திருந்தனர்மூளையின்இயக்கத்திற்கு பிராண வாயு (ஆக்சிஜன் ) மட்டுமின்றிபிராண சக்தி எனப்படும்பிராணனும் தேவை என தந்திர யோக நூல்கள் கூறுகின்றனஇந்த பிராணசக்தியை உடலில் அதிகரிக்கச் செய்துமூளையின் செயல்திறனைப் பலமடங்குஅதிகரிக்கச் செய்யும் எளிய தந்திர யோக முறையே பிராண முத்திரையாகும்.
செய்முறை:
               சிறுவிரல்மோதிர விரல் ஆகியவற்றின் நுனிப் பகுதியால்பெருவிரலின் நுனிப்பாகத்தைத் தொடவும்அதிக அழுத்தம் வேண்டாம்.
சற்றே தொட்டுக் கொண்டிருந்தால் போதும்பிற இரு விரல்களும் (சுட்டுவிரல்,நடுவிரல்வளைவின்றி நேராக இருக்கட்டும்.
 
அமரும் முறை:
ஆசனங்களில் பரிச்சயம் உள்ளவர்கள் பத்மாசனம் அல்லது அர்த்தபத்மாசனத்தில் அமர்ந்து செய்யலாம்.
மற்றவர்கள் கால்களை மடக்கி அமர்ந்து செய்யவும்.
மாணவர்கள் படிக்கத் துவங்கும்முன் நாற்காலியில் அமர்ந்தபடியே இந்தமுத்திரையைச் செய்யலாம்.
தலைகழுத்துமுதுகு ஆகியவை வளைவின்றி நேராக இருக்க வேண்டும்.
 
செய்முறை :
இரு கைகளிலும்ஒரே நேரத்தில் செய்யவும்.
சுவாசம் இயல்பான நடையில் இருக்கட்டும்.
சீராகவும் ஆழமாகவும் இருப்பது அவசியம்.
மூச்சை அடக்குதல் கூடாது.
குறைந்த பட்சம் 8 நிமிடங்கள்அதிக பட்சமாக 48 நிமிடங்கள் வரையில்செய்யலாம்.
  சராசரியாக பள்ளி மாணவர்கள்காலையில் 16 நிமிடங்கள்மாலையில் 16 நிமிடங்கள் செய்யப் பழகிக்கொள்வதுநல்லது.
 
பலன்கள்:
மூளையின் செயல்களுக்கு பிராண சக்தியும்பிராண வாயுவும் அதிக அளவில்கிடைப்பதால்மூளை சுறுசுறுப்பாகிறது.
மூளையின் செல்களிலுள்ள சோர்வு மறைந்துபுத்துணர்ச்சியுடன் மூளைசெயல்படத் துவங்கும்.
உடலிலுள்ள அனைத்து செயல்களுக்குமே பிராண சக்தி அதிக அளவில்பாய்வதால் உடலில் உள்ள அசதிசோர்வுசோம்பேறித்தனம் ஆகியவைமறைந்துஉடலிலும் ஒரு புத்துணர்வு உருவாகும்.
உடல் , மூளை இரண்டின் செயல்திறணும் பல மடங்கு அதிகரிக்கும்உடலில்பிராண சக்தி அதிக அளவில் பாயும்போதுநாடிகளில் உள்ள சக்தித் தடைகள்அதிகரிக்கும்.
 இவை தவிர பிராண வாயுவுக்கு வேறு ஒரு மிக முக்கியமான பணியும் உண்டு.ஆக்சிஜன் அதிகம் கிடைப்பதால் மூளையின் செயல்கள் சுறுசுறுப்படைந்தாலும்இடது மூளையின் செயல்பாடுகளே அதிகரிக்கும்.
பிராண சக்தி அதிக அளவில் செல்லும்போதுதான் வலது மூளையின்பணிகளானபேச்சுத்திறன்எழுத்துத்திறன்கற்பனைத்திறன் ஆகியவையும்அதிகரிக்கும்.
நினைவாற்றலை அதிகரிக்கும்.

No comments:

Post a Comment