Wednesday, February 12, 2014


INCOME TAX & FORM 16 FORMAT - CORRECTED AS PER RULE 80D (NHIS SUBSCRIPTION)

INCOME TAX FORMAT (CORRECTED AS PER 87A & 80D) CLICK HERE...

INCOME TAX & FORM 16 FORMAT CLICK HERE...

NHIS சந்தா தொகை வருமான வரி பிரிவு 80D-ன் கீழ் சலுகை பெற 6மாவட்ட கருவூலங்கள் ஒப்புதல்

தமிழ்நாடு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்த (ஆண்டு சந்தா) ரூ.1800/-ஐ (ரூ.150/- * 12 = ரூ.1800/-) வருமான வரி பிரிவு 80Dன் கீழ் முழுமையான சலுகை பெற இன்று மாலை வரை சில மாவட்ட கருவூலங்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த மாவட்ட கருவூலங்கள் சார்ந்த சார்நிலை கருவூலங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எஞ்சிய மாவட்டங்கள் சார்ந்த ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட கருவூலங்கள் அல்லது சார்நிலை கருவூலங்கள் தொடர்பு கொண்டு விவரங்கள் அறிய கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
Tamil Nadu Teacher Eligibility Test 2013 - to know your Roll Number


TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2013
Click here for Paper I           
Click here for Paper II           

Dated: 11-02-2014

Member Secretary

Posted: 11 Feb 2014 12:40 AM PST
சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் இரட்டைப்பட்டம் வழக்கு தள்ளுபடியானதால் இரட்டைப்பட்டம் பெற்றவர்கள் 9.2.2014 அன்று வழக்குரைஞரை சென்னையில் சந்திந்து உடனடியாக உச்ச நீதி மன்றத்தில் மனு போடுவது குறித்து நீண்ட ஆலோசனை மேற்கொண்டனர். எனவே ஒரு வார காலத்திற்குள் புது தில்லி சென்று உச்ச நீதி மன்றத்தில் சிறப்பு விடுப்பு மனுவை பதிவு செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

எனவே இவ்வழக்கில் தங்களை இணைத்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட நபர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1. திரு.இரா.கணேஷ் - 9976105153 ( சிவகங்கை, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள்)

2. திரு.மு.கலியமூர்த்தி - 9894718859 ( விழுப்புரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள மாவட்டங்கள்)

3. திரு.ப.பாண்டியன் - 9894192500 ( திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள மாவட்டங்கள்)
மேற்கண்ட நபர்களை தொடர்பு கொண்டு வழக்கில் இணைபவர்களின் பெயர்கள் விரைவில் இணைய தளங்களில் வெளியிடப்படும் எனவும் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
50% பதவி உயர்வு வழங்க ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

முதுகலை ஆசிரியர் பதவி உயர்வில், 50 சதவீத இடங்களை தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் பணிபுரியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தி உள்ளது.


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்கத்தின் சார்பில், மாநில அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், சென்னையில் நடந்தது. சங்க தலைவர், தியாகராஜன் தலைமை தாங்கினார்.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; அனைத்து வகை ஆசிரியர்களுக்கும், மத்திய அரசு ஆசிரியருக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும்; 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; பள்ளி கல்வித் துறையில், முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கும் போது, 50 சதவீத இடங்களை, அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் கோஷம் போட்டனர்.

மாநிலம் முழுவதிலும் இருந்து 3,000த்திற்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை, தமிழக அரசு பரிசீலனை செய்யாவிட்டால், பொதுக்குழுவை கூட்டி, அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்வோம் என தியாகராஜன் தெரிவித்தார்.
டி.இ.டி., புதிய மதிப்பெண்: டி.ஆர்.பி., இணையத்தில் விவரம்

ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப்பின், புதிய மதிப்பெண் விவரம், ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

கடந்த 3ம் தேதி, டி.இ.டி., தேர்வில், 5 சதவீத மதிப்பெண் சலுகை அளித்து, முதல்வர் அறிவித்தார். இதையடுத்து, கடந்த ஆண்டு நடந்த டி.இ.டி., தேர்வில், தேர்வர் பெற்ற மதிப்பெண் விவரங்களை, மீண்டும், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது. முதல்வர் அறிவிப்பின்படி, 55 சதவீத மதிப்பெண் (150க்கு 82) எடுத்து, தேர்ச்சி பெற்றதை, இணையதளத்தில் பார்த்து, உறுதி செய்து கொள்ளலாம். மேலும், பல தேர்வர்கள், தங்கள் தேர்வு பதிவு எண்ணை தவறவிட்டு விட்டதாகவும், இதனால், மதிப்பெண் விவரத்தை அறிய முடியவில்லை என்றும், டி.ஆர்.பி.,யிடம் தெரிவித்தனர். இப்படிப்பட்ட தேர்வர்கள், தங்கள் விண்ணப்ப எண்களை பதிவு செய்தால், தேர்வு பதிவு எண்களையும், மதிப்பெண் விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். முதல்வர் அளித்த சலுகையினால், தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை, 40 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரம், தெரிவித்தது. இவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணியை நடத்துவது குறித்து, அதிகாரிகள், தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மாணவர்களுக்கு தேர்வு பயம் போக்க கவுன்சிலிங்: பள்ளிக் கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன்

பள்ளிக் கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் கூறியதாவது:தற்போது பொதுத் தேர்வு நடக்க இருக்கிறது. தேர்வு குறித்து பல மாணவர்களுக்கு பயம் இருக்கிறது. அதனால் அவர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். அதைப் போக்குவதற்காக ஆர்எம்எஸ்ஏ(மத்திய இடைநிலைக் கல்வி இயக்கம்),
எஸ்இஆர்டி(மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம்) ஆகியவற்றின் மூலம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக 10ம் வகுப்புகளில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி சென்னையில் 12, 13ம் தேதிகளில் நடக்கிறது. 

அந்த ஆசிரியர்கள் மாணவர்களின் தேர்வு குறித்த பயம், மன அழுத்தம், மன உளைச்சல் ஆகியவற்றை போக்கி நல்வழிப்படுத்துவார்கள். மேலும், பொதுத் தேர்வுகளை எப்படி எதிர் கொள்வது உள்ளிட்ட விஷயங்களையும் ஆசிரியர்கள் விளக்கி மாணவர்களின் தேர்வு பயத்தை போக்குவார்கள். இந்த பயிற்சிக்காக மொத்தம் உள்ள 67 கல்வி மாவட்டங்களில் ஒரு மாவட்டத்துக்கு தலா 2 ஆசிரியர்கள் வீதம் 134 பேர் சென்னைக்கு வரவழைத்து பயிற்சி அளிக்கப்படும். நாள் ஒன்றுக்கு 45 பேர் இந்த பயிற்சியில் பங்கேற்பார்கள். பயிற்சி பெறும் ஆசிரியர்கள் உடனடியாக மற்ற ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிப்பார்கள்.

No comments:

Post a Comment