RESOURCES
- HOME
- DRAW
- POD CAST
- FOR XII
- KIDS TV
- LIFE SKILLS
- COLORING PAGES
- TAMIL PROVERBS
- TET
- ENGLISH
- CCE
- E-LIBRARY
- ENGLISH for TAMIL
- MAPS
- WORKSHEETS
- FOR TENTH
- SCHOOL VISIT
- STORIES
- நவக்கிரகங்கள்
- தமிழ் இலக்கணம்
- அரசானைகள் GO'S
- ENGLISH EXERCISES
- AUDIO BOOK
- FUN
- ONLINE ENGLISH
- GRAMMAR
- RESOURCE BOOK
- EARTH PARTS
- RESOURCES
- LEARN TAMIL
- MUSIC FOR PPT
- தமிழ் எழுதி
- Kids activities
- E-content
- ORIGAMI
- PLANETORIUM
- WEBCAM EFFECTS
- சிறுகதைகள்
- சமையல்
- TET CENTRE
- மருத்துவம்
- கணினி
- புத்தகங்கள்
- CLASS POSTERS
- TRANSLATE
- MATHS KIT
- ENGLISH PRACTICE
- TAMIL SITES
- CERTIFICATES
- e-Grammar
- Scientists
- GAMES
- INTEL TOOLS
- E-ENGLISH CLASSROOM
- TEACHERS PAY
- BUSY TEACHER
- கல்வி விகடன்
- VECTOR ART
- How to draw
- Hello kids
- CEO VILLUPURAM
- TED SUGATAM
- MATHS GOODIES
- TEACHNOLOGY
- MATHS-IXL
- KIDS PHONICS
- PHONETICS
- VIDEOS
- FREE CLIPARTS
- TAMIL ACADEMY
- TAMIZH NOOLAGAM
- English-Tamil dictionary
- VILLUPURAM DISTRICT
- Gamified Grammar
Tuesday, December 31, 2013
Monday, December 30, 2013
Sunday, December 29, 2013
உயர் தொடக்க வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்களுக்கு """"அறிவோம் அகிலத்தை"" என்ற புவியியல் வரைபடத்திறன் (Map reading Skill Training) மாநில, மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சிக்கான தேதிகள் அறிவிப்பு
பி.எட் படிக்கும் மாணவர்களுக்கு - Model Lesson Plan
NMMS விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் ஒத்திவைப்பு- இயக்குநர் ஆணை - (இணையத்தில் ஜனவரி 2 முதல் 4 வரை பதிவேற்றலாம்)
பள்ளிகளில் அரசுக்கு செலுத்தவேண்டிய கட்டணம் மற்றும் கணக்கு தலைப்பு விபரம் :
அனைத்து வகைப் பள்ளிகளின் மாதந்திர சம்பளம் பெரும் கணக்கு தலைப்பு எண் விபரம்-ALL HEAD ENFACEMENT DETAILS:
- GOVERNMENT SECONDARY / HIGHER SECONDARY SCHOOL
MUNICPAL ANDCORPORATION SECONDARY/HIGHER SECONDARYSCHOOL
CREATIONOF ADDITIONAL POST IN HIGH SCHOOLS AND HIGHER SECONDARY SCHOOLS UNDER RASHTRIYA MADHYAMIK SHIKSHA ABHIYAN. (RMSA)
GOVT HIGH \HIGHERSECONDARY SCHOOL UNDER SARVA SIKSHA ABHIYAN SCHEME (SSA)
- UP GRADATIONOF SCHOOLS UNDER RASHTRIYA MADHYAMIK SHIKSHA ABHIYAN. (RMSA)
UP GRADATIONOF SCHOOLS UNDER RASHTRIYA MADHYAMIK SHIKSHA ABHIYAN. (RMSA)
AIDED HIGH / HIGHER SECONDARY SCHOOL ALL TREASURY SUBMITTED ENFACEMENT FORM
துணை கலெக்டர் உள்பட 4 பதவிகளுக்கான குரூப்–1 முதல் நிலை தேர்வு,
துணை கலெக்டர் உள்பட 4 பதவிகளுக்கான குரூப்–1 முதல் நிலை தேர்வு, 2014 ஏப்ரல் 26–ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:–
தமிழ்நாட்டில் காலியாக உள்ள துணை கலெக்டர் பதவி(3 இடம்), துணை போலீஸ் சூப்பிரண்டு பதவி(33), உதவி கமிஷனர் பதவி(33), கிராமப்புற வளர்ச்சி துறை உதவி இயக்குனர் பதவி(10) உள்பட 4 உயர் பதவிகளுக்கான 77 காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் முடிவு செய்து உள்ளது.
இதற்கான முதல் நிலை தேர்வை 2014 ஏப்ரல் 26–ந் தேதி நடத்த உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.net என்ற இணையதளங்கள் வாயிலாக ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்ச வயது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இதே போன்று சட்டம் பயின்றவர்களுக்கு 1 ஆண்டு வயது வரம்பு சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 28–ந் தேதி கடைசி நாள் ஆகும்.
தமிழக அரசு ஆணையின்படி, இந்த தேர்வில், தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. குரூப்–1 முதல்நிலை தேர்வானது 3 மணி நேரம் நடைபெறுகிறது.
இதில் 150 பொது அறிவு வினாக்கள், 50 திறனாய்வு வினாக்கள் என மொத்தம் 200 கொள்குறி(Objective) வகை வினாக்கள் கேட்கப்படும்.
குரூப்–1 முதல்நிலை தேர்வானது, சென்னை, காஞ்சீபுரம், விழுப்புரம், அரியலூர், திருச்சி, சிதம்பரம், கோவை, ஈரோடு, திண்டுக்கல், கரூர், நாகர்கோவில், நாகப்பட்டினம், நாமக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை உள்பட 33 மையங்களில் நடைபெற உள்ளது.
தேர்வு கட்டணமாக 125 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் இ–மெயில் முகவரி மற்றும் கைபேசி எண்களை தவறாமல் குறிப்பிட வேண்டும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
CLICK HERE FOR ALL STUDY MATERIALS |
Friday, December 27, 2013
பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 28.12.2013 அன்று காலை 9.00 மணிக்கு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TO DOWNLOAD DSE - BT TO PG PROMOTION COUNSELING WILL BE HELD ON 28.12.2013 @ CONCERN CEO OFFICES REG PROC CLICK HERE...
அரசாணை (நிலை) எண்.249, பக(எஸ்.எஸ்.ஏ2) துறை, நாள் 09.12.2013. அரசாணையின்படி, அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் வட்டார வளமையங்களில் முதுகலை ஆசிரியர் பணிநிலையில் பணிபுரிந்து வரும் மேற்பார்வையாளர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர் பணிநிலையில் பணிபுரிந்துவரும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு முதுகலை ஆசிரியர்களாக மாறுதல் ஆணை வழங்கப்பட வேண்டியுள்ளது. இதன்படி முதுகலை ஆசிரியர் பணி நிலையில் பணிபுரிந்து வரும் 44 மேற்பார்வையாளர்கள் மற்றும் 19 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு மட்டும் முதுகலை ஆசிரியர் பணிக்கு மாறுதல் ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 28.12.2013 அன்று காலை 9.00 மணிக்கு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் நடத்தப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து 28.12.2013 அன்றே 01.01.2013 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு வெளியிடப்பட்டுள்ள தகுதி வாய்ந்தோர் பட்டியலில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு கீழ்க்கண்ட விவரப்படி முதுகலை ஆசிரியர் பணிக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு ஆணைகள் வழங்கப்பட உள்ளது.
1. தமிழ் வரிசை எண் 1 முதல் 153வரை
2. ஆங்கிலம் வரிசை எண் 1 முதல் 102 வரை
3. கணிதம் வரிசை எண் 1 முதல் 102 வரை
4. இயற்பியல் வரிசை எண் 1 முதல் 86 வரை
5. வேதியியல் வரிசை எண் 1 முதல் 105 வரை
6. தாவரவியல் வரிசை எண் 1 முதல் 37d வரை
7. விலங்கியல் வரிசை எண் 1 முதல் 41 வரை
8. வரலாறு வரிசை எண் 1 முதல் 116 வரை
9. பொருளியல் வரிசை எண் 1 முதல் 95 வரை
10. வணிகவியல் வரிசை எண் 1 முதல் 56 வரை
11. புவியியல் வரிசை எண் 1 முதல் 02
12. அரசியல் அறிவியல் வரிசை எண் 1 முதல் 12 வரை
13. உ.க.இ.நிலை-வரிசை எண் 1 1 முதல் 23 வரை
கலந்தாய்வு 28.12.2013 அன்று காலை 9.00 மணிக்குத் தொடங்கி முதலில் முதுகலை ஆசிரியர் நிலையில் உள்ள வட்டார வளமைய மேற்பார்வையாளர்/ஆசிரியர் பயிற்றுநர் பணியிலிருந்து அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியராக மாவட்டத்திற்குள் மாறுதலும், அதனைத் தொடர்ந்து மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலும், அதனைத் தொடர்ந்து முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு 01.01.2013 நிலவரப்படியான முன்னுரிமைப் பட்டியலில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன்னுரிமைப்படி பணிமாறுதல் மூலம் பதவி உயர்வும் வழங்கப்படவுள்ளது.
முதுகலை ஆசிரியர் பணி நிலையில் பணிபுரியும் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்/ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் மேற்படி முன்னுரிமைப் பட்டியலில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் இக்கலந்தாய்வில் கலந்துகொள்ள பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்குள் நடைபெறும் கலந்தாய்வு முடிக்கப்பட்ட பின்னரே மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வுத் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு குறைக்கப்பட்ட ஊதியத்தை டிசம்பர் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்ய கூடாது:
அரசு ஊழியர்களுக்கு மூன்று நபர் கமிஷனின் அடிப்படையில் குறைக்கப்பட்ட ஊதியத்தை, டிசம்பர் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யக் கூடாது என கருவூலங்களுக்கு நிதித்துறை திடீர் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 6வது ஊதியக் குழு பரிந்துரைகள் கடந்த 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த ஊதியத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் குற்றம்சாட்டின.இதைத்தொடர்ந்து, ஊதியக்குழு முரண்பாடுகளை களைய தமிழக அரசு மூன்று நபர் குழுவை அமைத்தது. இந்த குழுக்களின் பரிந்துரைகள் கடந்த ஜூலை மாதம் அரசு ஆணைகளாக வெளியிடப்பட்டன.
இதில் வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை, வருவாய் துறை, போலீஸ் துறை, நெடுஞ்சாலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட 22 துறைகளைச் சேர்ந்த 52 பதவிகளுக்கான அடிப்படை ஊதியத்தில் மாற்றம் செய்து தமிழக நிதித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது, ஏற்கனவே நிர்ணயித்து வழங்கப்பட்ட அடிப்படை ஊதியத்தை திடீரென குறைக்கக் கூடாது என வழக்கு தொடுக்கப்பட்டது.
ஐகோர்ட்டில் நடந்து வரும் இந்த வழக்கின் விசாரணை ஜன.6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.எனவே, அடிப்படை ஊதியம் குறைத்து உத்தரவிடப்பட்ட ஊழியர்களுக்கு வழக்கு நிலுவையில் இருப்பதால், டிசம்பர் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யக் கூடாது.
ஏற்கனவே, ஊதியக்குழுவால் நிர்ணயித்து வழங்கப்பட்ட ஊதியத்தையே டிசம்பர் மாதத்துக்கும் வழங்க வேண்டும் என அந்தந்த துறைகளுக்கும், மாவட்ட கருவூலம் மற்றும் சார் நிலை கருவூலங்களுக்கும் தமிழக நிதித்துறை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
|
1,000 மெட்ரிக் பள்ளிகளுக்கு விதிமுறைகள் தளர்வு : நிபுணர் குழு அறிக்கையில் பரிந்துரை :சென்னையில் 75 பள்ளிகளுக்கு சிக்கல்?
உரிய இடவசதி இல்லாத, 1,000 மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு, விதிமுறைகளை தளர்த்தி, தொடர்ந்து இயங்க, நடவடிக்கை எடுக்கலாம்' என, தமிழக அரசிற்கு சமர்ப்பிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கையில், பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனினும், சென்னையில், 75 பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது.
முந்தைய அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், தனியார் பள்ளிகளுக்கு, குறைந்தபட்ச இடவசதி குறித்து, வரையறை செய்யப்பட்டது. கிராமமாக இருந்தால், மூன்று ஏக்கர்; நகர பஞ்சாயத்து எனில், ஒரு ஏக்கர்; நகராட்சி பகுதியாக இருந்தால், 10 கிரவுண்டு; மாவட்ட தலைநகரில், எட்டு கிரவுண்டு; மாநகராட்சி பகுதி எனில், ஆறு கிரவுண்டு இடம் இருக்க வேண்டும் என, அரசு தெரிவித்துள்ளது.'இந்த விதிமுறை, புதிய பள்ளிகள் துவங்குபவர்களுக்கு மட்டும் என்றில்லாமல், ஏற்கனவே இயங்கும் பள்ளிகளுக்கும் பொருந்தும்' என, தெரிவிக்கப்பட்டது. இதனால், 10 ஆண்டு, 20 ஆண்டுகளுக்கு முன் அங்கீகாரம் பெற்று, குறைந்த இட வசதியில் இயங்கிவரும், 1,000 மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டது.
இதுகுறித்து ஆய்வு செய்ய, பள்ளி கல்வி இயக்குனர் தலைமையில், நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, மாநிலம் முழுவதும், பலதரப்பினரிடம் கருத்துகளை கேட்டறிந்தது.நிபுணர் குழுவின் பரிந்துரை அறிக்கை, சில தினங்களுக்கு முன், தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டதாக, தனியார் கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க பொதுச்செயலர், நந்தகுமார் கூறியதாவது:'பழைய பள்ளிகளுக்கு, விதிமுறைகளை தளர்த்தி, தொடர்ந்து இயங்க,வழிவகை செய்யலாம்' என, பரிந்துரை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, தகவல்கள் வந்துள்ளன. அதன்படி, கிராமப்புற பகுதியில், ஒரு ஏக்கர்; நகர பஞ்சாயத்தில், 10 கிரவுண்டு; நகராட்சி பகுதியில், ஐந்து கிரவுண்டு; மாவட்ட தலைநகரில், நான்கு கிரவுண்டு; மாநகராட்சி பகுதியில், மூன்றுகிரவுண்டு என்ற அடிப்படையில் கணக்கிட்டு, பழைய பள்ளிகள், தொடர்ந்து இயங்க வகை செய்யலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி பார்த்தால், சென்னையில் உள்ள, 75 பள்ளிகளுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படும். இந்த பள்ளிகளிடம் இடவசதி, ஒரு கிரவுண்டுக்கும் குறைவாக உள்ளது. எனவே, இந்த பள்ளிகள், நர்சரி, பிரைமரி பள்ளிகளாக தரம் குறைக்கப்பட்டு, தொடர்ந்து இயங்கும். நிபுணர் குழு அறிக்கையை, நாங்கள், முழு மனதுடன் ஏற்கிறோம்.இவ்வாறு, நந்தகுமார் தெரிவித்தார்.
|
குளிர்காலத்தில் கடைபிடிக்கும் சில ஆரோக்கிய பழக்கங்கள்:
குளிர்காலம் வந்துவிட்டது, அக்டோபர் மாதத்தின் வெயில் தீபாவளிக்குப் பின்னர் வேகமாக குறைந்து, உதறலெடுக்கும் குளிர்காலம் தொடங்கி விட்டது. இந்நாட்களில், உங்கள் சருமம் வறண்டு போகும், முடிகள் உறைந்து விடும் மற்றும் உடலின் தினசரி நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படத் துவங்கும். இந்த மாற்றங்களை எதிர் கொள்ள சற்றே அதிகமான கவனமும், கவனிப்பும் வேண்டும். ஏனெனில், குளிர் காற்று உடலுக்கு எப்பொழுதும் நல்லதல்ல.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் பெரிதும் பாதிக்கும் வகையில் இந்த குளிர்காலம் அமைந்து விடுகிறது. கடும் வெயிலையும் தாங்கி கொள்ளும் இந்த உடல் குளிர்காலத்தில் பாடாய்படுத்தி விடுகிறது. இனி வரும் இரண்டு மாத குளிரை சமாளித்து நோயற்ற வாழ்வை பெற நாம் முயற்சிக்க வேண்டும். எனவே உங்கள் உடல் நலன் பாதிக்கப்படாமல் இருக்கவும் மற்றும் குளிர் காலத்திற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளவும் நீங்கள் சில ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியுள்ளது. குளிர்காலத்தில் உடல் நலனைப் பாதுகாக்க செய்ய வேண்டிய சில குறிப்புகள் உங்களுக்காக... சத்தான உணவு : குளிர்காலங்களில் சளி மற்றும் இருமலைத் தூண்டும் உணவுகளை நீங்கள் சாப்பிட வேண்டாம். ஐஸ் கிரீம், குளிர் பானங்கள் மற்றும் உடல் வெப்பநிலையை விட குறைந்த வெப்பநிலையுடைய உணவுகள் எதையும் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. குறைவாக சாப்பிடவும் : குளிர்காலத்தில் அதிகம் பசி எடுக்கும், எனவே அதிகம் சாப்பிடத் தோன்றும். ஆனால் அவர்கள் குறைவாகவே சாப்பிட வேண்டும். அதன் மூலம் செறிமாணம் தொடர்பான பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும். உடல் வெப்பநிலையை சரியாக வைத்திருக்க உதவும் உணவுகளை சாப்பிடுவது நல்லது. தொடர்ச்சியான உடற்பயிற்சி : காலையில் நேரமாக எழுந்து உடற்பயிற்சி செய்யத் தொடங்கவும். குளிர்காலத்தில் சூரிய உதயம் தாமதமாகவே நிகழும், எனவே குளிர் நம்மை படுக்கையின் கதகதப்பிலிருந்து எழுந்திருக்க விடாது. எனவே, சோம்பலுடன் தாமதமாக எழுந்து நாள் முழுவதும் சோம்பலாக இருப்பதை தவிர்க்கும் பொருட்டாக, தினமும் அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை பின்பற்றவும். சாப்பிட்ட பின் நடைப்பயிற்சி : சாப்பிட்ட உடனேயே தூங்கச் செல்ல வேண்டாம், இதன் மூலம் சோம்பல் ஏற்படும். சாப்பிட்ட பின்னர், குறிப்பாக இரவு உணவுக்கு பின்னர் நடைப்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. இதன் மூலம் முறையான செரிமானம் ஆகவும், உருளைக்கிழங்கு சாப்பிட்ட பின்னர் வரும் எஃபெக்ட்டும் மட்டுப்படும். மாய்ஸ்சுரைசர் : குளிர்காலத்தில் சருமம் பகுதி வறண்டு காணப்படும். இதனை தவிர்ப்பதற்கு பால் கலந்த மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்தவும். நாளுக்கு ஒருமுறையாவது இவற்றை நீங்கள் உடலில் தடவ வேண்டும். குளிர்கால உடை : குளிர்காலத்தில் மொத்தமான உடைகளை பயன்படுத்துங்கள். வெளியே செல்லும் போது காதுகள் மற்றும் பாதங்களை குளிர்காற்று படாமல் மூடியபடி செல்லவும். இவ்வாறு செய்வதன் மூலம் ஜலதோஷம் மற்றும் குளிர்கால நோய்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். நோய்கள் : குளிரினால் நோய்கள் வந்தால் மற்றவர்களிடம் தொடர்பு கொள்வதை தவிர்க்கவும். சுகாதாரமான உணவு, அதிகமான ஓய்வு மற்றும் குளிர்கால புண்கள் உள்ள மற்றவர்களின் தொடர்புகளிலிருந்து விலகியிருத்தல் ஆகியவற்றால் நோய்கள் வருவதை தவிர்க்க முடியும். தியானம் : மனதை அமைதியாகவும், கதகதப்பாகவும் வைக்க தியானம் செய்யுங்கள். குளிர் காலம் சில வேளைகளில் அயற்சியூட்டுவதாக இருந்தாலும், தியானம் உங்களை புத்துணர்வுடன் வைத்திருக்கும். சூடான பானங்கள் : சூப் மற்றும் பிற சூடான பானங்களை உட்கொள்ளவும். அவை குளிர்காலத்தில் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும். குளிர்காலம் முழுவதுமே இந்த பானங்களை பருகினால் குளிர் போயோ போச்சு! காரம் கொஞ்சம் தேவை : உடலை கதகதப்பாக வைத்திருக்க நிறைய மிளகாய் மற்றும் பிற காரங்களை உணவில் சேர்த்துக் கொள்ளவும். இது உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்தி, உடலை சராசரி வெப்பநிலையில் வைத்திருக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் : குளிர்காலங்களில், ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் உடல் கதகதப்பாக இருக்கும். பரங்கிக்காய், உருளைக்கிழங்கு போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிடுங்கள். வைட்டமின் `டி' : குளிர்காலத்தில் சூரிய வெளிச்சம் போதிய அளவில் உடலில் படாத காரணத்தால். வைட்டமின் `டி' பற்றாக்குறை ஏற்படும். எனவே, சாப்பிடும் உணவில் வைட்டமின் `டி' உள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக் கொண்டு, வைட்டமின் டி பற்றாக்குறையை தவிர்க்கவும். தண்ணீர் : சருமம் வறண்டு போவதைத் தவிர்க்க குளிர்காலத்தில் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் போதிய தண்ணீர் அளவை பராமரிக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது நிதர்சன உண்மை தானே! சன் ஸ்க்ரீன் : குளிர்காலத்தில் சூரியனின் கதிர்கள் குறைந்த அளவே இருப்பதால், சற்றே முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எனவே எங்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம் சருமம் பழுப்படைவதையும் மற்றும் எரிச்சலை தவிர்க்கவும் சன் ஸ்கீரீன்களை பயன்படுத் தவும். ஆற்றலுக்கு முன்னுரிமை : உங்களுடைய மனநிலை மற்றும் ஆற்றலை எப்பொழுதும் உயர்வாக வைத்திருங்கள். குளிர்காலம் சுற்றுச்சூழலை டல்லாக வைத்திருந்து, உங்களுடைய ஆற்றலை மட்டுப்படுத்தி வீணாக்கி விடும். இவையெல்லாம், குளிர் காலத்தில் உடல் நிலையை சிறப்பான முறையில் பராமரிப்பதற்கான குறிப்புகள். இவைகளைப் பின்பற்றி பயன் பெறுங்கள்.
|
மாலை நேர சிறப்பு வகுப்புகளை ரத்து செய்ய கூடாது:
பொதுத் தேர்வுகளில் அதிக அளவு தேர்ச்சி சதவீதம் எட்ட வேண்டும் என்பதற்காக மாலை நேர சிறப்பு வகுப்புகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஒவ்வொரு பள்ளியும் அதிக தேர்ச்சி வீதத்தை காட்ட வேண்டும் என்று ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. கடந்த 2011ல் நடந்த 10ம் வகுப்பு தேர்வில் 85.30 சதவீதமும், பிளஸ் 2 தேர்வில் 85.90 சதவீதமும், 2012ல் நடந்த தேர்வில் 10ம் வகுப்பில் 86.20 சதவீதமும், பிளஸ் 2 தேர்வில் 86.70 சதவீதமும் மாணவர் தேர்ச்சி அடைந்தனர். 2 மேற்கண்ட ஆண்டுகளில் நடந்த தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற தேர்ச்சி சதவீதம் குறித்து பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பகுப்பாய்வு செய்யப்பட்டது.
அதில் தென் மாவட்டங்களை விட வட மாவட்டங்களின் தேர்ச்சி வீதம் குறைவாக இருப்பது தெரியவந்தது. இதற்கு காரணம் போதிய ஆசிரியர்கள் இல்லை என்பது தெரியவந்தது. அதனால் ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் 19000 ஆசிரியர்கள் புதியதாக நியமிக்கப்பட்டனர். இதையடுத்து 2013 பொதுத் தேர்வில் அதிக அளவில் மாணவர்கள் முதல் 3 இடங்களை பிடித்ததுடன் தேர்ச்சி வீதமும் கணிசமாக அதிகரித்தது. இதையடுத்து 2014ம் ஆண்டு தேர்வில் அதிக தேர்ச்சி வீதம் பெற வேண்டும் என்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் இரண்டாவது வாரத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில் மாணவர்களுக்கு மாலை நேரத்தில் சிறப்பு வகுப்புகள் தொடங்கப்பட்டன.
3.30 மணிக்கு முடியும் பள்ளிகள் மாலை 4.15 மணி வரையும், 4 மணிக்கு முடியும் பள்ளிகளில் 4.45 மணி வரையும் இந்த சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே இரண்டாம் பருவத் தேர்வு விடுமுறையை காரணம் காட்டி வகுப்புகளை இடையில் நிறுத்தாமல் விடுமுறை நாட்களிலும் நடத்த வேண்டும். பள்ளி நாட்களிலும் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகள் தொடர்ந்து நடக்கும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். சில தனியார் பள்ளிகள் இரவு நேர வகுப்புகளையும் நடத்தி வருகின்றன. இதையடுத்து 2014ம் ஆண்டு தேர்வில் 2 சதவீதம் தேர்ச்சி வீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
|
முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள். சான்றிதல் சரிபார்ப்புக்குப்பின் புதிய ரேங்க் பட்டியலில் இடம்பெறப்போவது யார்?
முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான எழுத்து தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்த்தல் 30 மற்றும் 31–ந் தேதிகளில் நடைபெறுகிறது. முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் எழுத்து தேர்வில் 150க்கு மதிப்பெண்களும்,வேலைவாய்ப்பக பதிவு மூப்புக்கு அதிகபட்சமாக 4 மதிப்பெண்களும்,பணி அனுபவத்துக்கு அதிகபட்சமாக 3 மதிப்பெண்களும் வழங்கப்படும்.
வேலைவாய்ப்பக பதிவு மூப்புக்கு :
1 to 3 வருடங்கள் வரை - 1 மதிப்பெண்
3 to 5 வருடங்கள் வரை - 2 மதிப்பெண்
5 to 10 வருடங்கள் வரை - 3 மதிப்பெண்
1 0 வருடங்களுக்கு மேல் - 4 மதிப்பெண்
பணி அனுபவத்துக்கு :
1 to 2 வருடங்கள் வரை - 1 மதிப்பெண்
2to 5 வருடங்கள் வரை - 2 மதிப்பெண்
5 வருடங்களுக்கு மேல் - 3 மதிப்பெண்
மேல்நிலை வகுப்புகளில் (+1,+2) பாடம் எடுத்த அனுபவமே இதற்கு கணக்கில் எடுதுக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்து தேர்வில் 150க்கு தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்களுடன்,வேலைவாய்ப்பக பதிவு ,பணி அனுபவத்துக்கானா மதிப்பெண்களும் சேர்க்கப்பட்டு புதியதாக மெரிட்பட்டியல் தயாரிக்கப்படும்
எழுத்து தேர்வில் 150 க்கு தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்களுடன்,வேலைவாய்ப்பக பதிவு ,பணி அனுபவத்துக்கானா மதிப்பெண்களும் சேர்க்கப்பட்டு புதியதாக மெரிட்பட்டியல் தயாரிக்கப்படும்.பின்னர் இனஒதுக்கீடு உள்ளிட்ட விதிகளை பின்பற்றி புதிய இறுதிப்பட்டியல் தயாராகும்.
தற்போது 605 பணியிடங்களுக்கு 694 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளதால் 89 பேருக்கு பணி நியமன வாய்ப்பு கிடைக்காமல் போகக்கூடும். பொதுப்பட்டியலில் இடம்பெற்றுள்ள 188 பேர்களுல் 7 பேர் மட்டுமே oc பிரிவைச்சேர்ந்தவர்கள்.
விவரம் வருமாறு
GT. -188
BC. -184 ( 9 visual impaired)
BCM. -27
MBC. -152 (3 visual impaired)
SC. -110 (1 visual impaired)
SCA. -24
ST. -9
என 694 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
|
போட்டித் தேர்வுக்கு தகவல்கள் தரும் இணையதளம்:
இன்றைய போட்டிமயமான உலகில் வேலைவாய்ப்பு பெற வேண்டுமானால் சம்பந்தப்பட்ட போட்டித் தேர்வில் வெற்றி பெறுவது அவசியமாகும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் போட்டி தேர்வுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருப்பவர்கள் தங்களது அறிவுத்திறமையையும், பயிற்சி முறையையும் சுய பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
இந்த சூழ்நிலையில் TRB, NET, SET, UPSC மற்றும் TNPSC போன்ற போட்டி தேர்வுகளை எழுத விரும்பும் பொருளாதார பிரிவு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்காக புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
www.
|
அகில இந்திய மேகல் கலர் கான்டெஸ்ட் - தமிழக வெற்றியாளர்கள் விபரம்:நாட்டின் முன்னணி மற்றும் முன்னோடி எழுதுபொருட்கள், கலைப் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான, கோகுயோ கேம்லின் லிமிடெட் நிறுவனம், அகில இந்திய கேமல் கலர் கான்டெஸ்ட் என்ற பெயரில் நடத்தப்பட்ட போட்டிகளில், தமிழகத்திலிருந்து வெற்றி பெற்றவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இப்போட்டியில் தமிழகத்திலிருந்து 209 பள்ளிகள் பங்கேற்றன. இப்பள்ளிகளிலிருந்து மொத்தம் 2 லட்சத்து 7 ஆயிரத்து 892 நுழைவுகள் பெறப்பட்டன. இவற்றிலிருந்து 3,246 நுழைவுகள் விரிவாக மதிப்பீட்டு அடிப்படையில் பள்ளி அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டு பிராந்திய அளவில் மதிப்பீடு செய்யப்பட்டன.
முதல் பரிசைத் தவிர, இரண்டாம் பரிசுக்கு இருவரும், மூன்றாம் பரிசுக்கு மூவரும், ஆறுதல் பரிசுக்கு 10 மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.குரூப் வாரியாக தமிழக அளவில் வெற்றிபெற்ற மாணவர்களின் விபரங்கள்
GROUP A - Pre Primary - K. KavyaSri - SBAO School, Anna nagar
GROUP B - Standard 1 & 2 - Immanuvel Naronha - Vels Academy School, Avadi
GROUP C - Standard 3 & 4 - R. Raj Priya - St. Patrics Hr.Sec.School
GROUP D - Standard 5,6 & 7 - S.A. Latchiya Mathangi
GROUP E - Standard 8,9,10 - S. Yathugiri Rajan - P.S. Senior Secondary School, Mylapore.
|
Saturday, December 14, 2013
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் - 2014 தேதி அறிவிப்பு:
10ஆம் வகுப்பு தேர்வு தேதிகள்:
மார்ச் 26: தமிழ் முதல்தாள்,
மார்ச் 27: தமிழ் இரண்டாம் தாள்,
ஏப்.1: ஆங்கிலம் முதல் தாள்,
ஏப் 2ம் தேதி ஆங்கிலம் 2ம் தாள்,
ஏப்.4ம் தேதி: கணிதம்,
ஏப்.7ம் தேதி: அறிவியல்,
ஏப்.9ம் தேதி: சமூக அறிவியல்.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை -2014
12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு மார்ச் 3 முதல் 25 வரையும்,10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு மார்ச் 26 முதல் ஏப்ரல் 9 வரை நடைபெறும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 12ஆம் வகுப்புக்கு காலை 10மணிக்கு தொடங்கி மதியம் 1.15மணிக்கு முடிவடைகிறது. 10ஆம் வகுப்பிற்கு காலை 9.15மணிக்கு 12மணிக்கு முடிவடைகிறது. கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.
பாடவாரியாக தேர்வு தேதிகள்: மார்ச் 03: தமிழ் முதல்தாள்;
மார்ச் 5: தமிழ் இரண்டாம் தாள்; மார்ச் 6: ஆங்கிலம் முதல் தாள் மார்ச் 7: ஆங்கிலம் 2ம் தாள்;
மார்ச் 10: இயற்பியல், பொருளியல், மார்ச்13: வணிகவியல், புவியியல், மனையியல்; மார்ச் 14: கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியியல்: மார்ச் 17: வேதியியல், கணக்கு பதிவியல்: மார்ச் 20: உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்; மார்ச் 24: அரசியல் அறிவியல். நர்சிங், புள்ளியியல்,
மார்ச் 25: கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி.
தமிழ்நாட்டில் மத்திய அரசு தனியார் கூட்டுமுயற்சியில் துவங்கப்பட இருக்கின்ற 356 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் பட்டியல் மாவட்டம் வாரியாக:
click here-CBSE 356 MODEL SCHOOLS LIST
8TH NATIONAL SCHOLARSHIP EXAMINATION STUDY MATERIALS:
10th Question Papers and Study Materials
THANKS TO R.SIVAPRAKASAM B.T ASST GHS THENGIYANATHAM VILLUPURAM D.T 606 201.
Half yearly 10th English Answer Key-2013
ENGLISH PAPER I
ENGLISH PAPER II
10 ஆம் வகுப்பு ஆங்கிலம் -அரையாண்டுத்தேர்வு 2012 ANSWER KEY நமக்காக தொகுத்து தந்தவர் R.SIVAPRAKASAM M.SC,B.ED GOVT HIGH SCHOOL THENGIYANATHAM VILLUPURAM D.T -606201.
- ENGLISH PAPER I
- ENGLISH PAPER II
S.KUMAR M.Sc.,M.Ed.,St.ANTONY'S HSS MELNARIYAPPANUR CHINNASALEM TKVILLUPURAMDt.-606201
10 ஆம் வகுப்பு கணிதம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் 9 பக்கங்களில் DOWNLOAD
10 ஆம் வகுப்பு கணிதம் நடந்து முடிந்த ஏப்ரல் 2012,ஜூன் 2012,அக்டோபர் 2012 -36 பக்கங்கள் உள்ள வினாத்தாள்கள் 6 பக்கங்களில் பதிவிறக்கம் செய்யவும் ..
- Download here
பட்டதாரி ஆசிரியரில்இருந்து முதுநிலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்விற்கு கலந்தாய்வில் கலந்துகொள்ள தகுதிவாய் ந்தோர்பட்டியல்:
SUBJECT
DOWNLOAD LINK
1
TAMIL
SUBJECT
|
DOWNLOAD LINK
|
1
|
TAMIL
|
DOWNLOAD-CLICK HERE
2
ENGLISH
2
|
ENGLISH
|
DOWNLOAD-CLICK HERE
3
MATHEMATICS
3
|
MATHEMATICS
|
DOWNLOAD-CLICK HERE
4
PHYSICS
4
|
PHYSICS
|
DOWNLOAD-SOON
5
CHEMISTRY
5
|
CHEMISTRY
|
DOWNLOAD-CLICK HERE
6
BOTONY
6
|
BOTONY
|
DOWNLOAD-CLICK HERE
7
ZOOLOGY
7
|
ZOOLOGY
|
DOWNLOAD-CLICK HERE
8
COMMERCE
8
|
COMMERCE
|
DOWNLOAD-CLICK HERE
9
ECONOMICS
9
|
ECONOMICS
|
DOWNLOAD-CLICK HERE
10
HISTORY
10
|
HISTORY
|
DOWNLOAD-CLICK HERE
11
GEOGRAPHY
11
|
GEOGRAPHY
|
DOWNLOAD-CLICK HERE
12
PHYSICAL DIRECROR
12
|
PHYSICAL DIRECROR
|
DOWNLOAD-CLICK HERE
IGNOU -M.Ed., நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு M. Ed. Entrance Test, 2013 Results:
Subscribe to:
Posts (Atom)