Friday, December 27, 2013

அரசு ஊழியர்களுக்கு குறைக்கப்பட்ட ஊதியத்தை டிசம்பர் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்ய கூடாது:
அரசு ஊழியர்களுக்கு மூன்று நபர் கமிஷனின் அடிப்படையில் குறைக்கப்பட்ட ஊதியத்தை, டிசம்பர் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யக் கூடாது என கருவூலங்களுக்கு நிதித்துறை திடீர் உத்தரவிட்டுள்ளது. 
தமிழகத்தில் 6வது ஊதியக் குழு பரிந்துரைகள் கடந்த 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த ஊதியத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் குற்றம்சாட்டின.இதைத்தொடர்ந்து, ஊதியக்குழு முரண்பாடுகளை களைய தமிழக அரசு மூன்று நபர் குழுவை அமைத்தது. இந்த குழுக்களின் பரிந்துரைகள் கடந்த ஜூலை மாதம் அரசு ஆணைகளாக வெளியிடப்பட்டன.

இதில் வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை, வருவாய் துறை, போலீஸ் துறை, நெடுஞ்சாலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட 22 துறைகளைச் சேர்ந்த 52 பதவிகளுக்கான அடிப்படை ஊதியத்தில் மாற்றம் செய்து தமிழக நிதித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது, ஏற்கனவே நிர்ணயித்து வழங்கப்பட்ட அடிப்படை ஊதியத்தை திடீரென குறைக்கக் கூடாது என வழக்கு தொடுக்கப்பட்டது. 

ஐகோர்ட்டில் நடந்து வரும் இந்த வழக்கின் விசாரணை ஜன.6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.எனவே, அடிப்படை ஊதியம் குறைத்து உத்தரவிடப்பட்ட ஊழியர்களுக்கு வழக்கு நிலுவையில் இருப்பதால், டிசம்பர் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யக் கூடாது. 
ஏற்கனவே, ஊதியக்குழுவால் நிர்ணயித்து வழங்கப்பட்ட ஊதியத்தையே டிசம்பர் மாதத்துக்கும் வழங்க வேண்டும் என அந்தந்த துறைகளுக்கும், மாவட்ட கருவூலம் மற்றும் சார் நிலை கருவூலங்களுக்கும் தமிழக நிதித்துறை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
1,000 மெட்ரிக் பள்ளிகளுக்கு விதிமுறைகள் தளர்வு : நிபுணர் குழு அறிக்கையில் பரிந்துரை :சென்னையில் 75 பள்ளிகளுக்கு சிக்கல்?
உரிய இடவசதி இல்லாத, 1,000 மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு, விதிமுறைகளை தளர்த்தி, தொடர்ந்து இயங்க, நடவடிக்கை எடுக்கலாம்' என, தமிழக அரசிற்கு சமர்ப்பிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கையில், பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனினும், சென்னையில், 75 பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது.


முந்தைய அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், தனியார் பள்ளிகளுக்கு, குறைந்தபட்ச இடவசதி குறித்து, வரையறை செய்யப்பட்டது. கிராமமாக இருந்தால், மூன்று ஏக்கர்; நகர பஞ்சாயத்து எனில், ஒரு ஏக்கர்; நகராட்சி பகுதியாக இருந்தால், 10 கிரவுண்டு; மாவட்ட தலைநகரில், எட்டு கிரவுண்டு; மாநகராட்சி பகுதி எனில், ஆறு கிரவுண்டு இடம் இருக்க வேண்டும் என, அரசு தெரிவித்துள்ளது.'இந்த விதிமுறை, புதிய பள்ளிகள் துவங்குபவர்களுக்கு மட்டும் என்றில்லாமல், ஏற்கனவே இயங்கும் பள்ளிகளுக்கும் பொருந்தும்' என, தெரிவிக்கப்பட்டது. இதனால், 10 ஆண்டு, 20 ஆண்டுகளுக்கு முன் அங்கீகாரம் பெற்று, குறைந்த இட வசதியில் இயங்கிவரும், 1,000 மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டது.

இதுகுறித்து ஆய்வு செய்ய, பள்ளி கல்வி இயக்குனர் தலைமையில், நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, மாநிலம் முழுவதும், பலதரப்பினரிடம் கருத்துகளை கேட்டறிந்தது.நிபுணர் குழுவின் பரிந்துரை அறிக்கை, சில தினங்களுக்கு முன், தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டதாக, தனியார் கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க பொதுச்செயலர், நந்தகுமார் கூறியதாவது:'பழைய பள்ளிகளுக்கு, விதிமுறைகளை தளர்த்தி, தொடர்ந்து இயங்க,வழிவகை செய்யலாம்' என, பரிந்துரை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, தகவல்கள் வந்துள்ளன. அதன்படி, கிராமப்புற பகுதியில், ஒரு ஏக்கர்; நகர பஞ்சாயத்தில், 10 கிரவுண்டு; நகராட்சி பகுதியில், ஐந்து கிரவுண்டு; மாவட்ட தலைநகரில், நான்கு கிரவுண்டு; மாநகராட்சி பகுதியில், மூன்றுகிரவுண்டு என்ற அடிப்படையில் கணக்கிட்டு, பழைய பள்ளிகள், தொடர்ந்து இயங்க வகை செய்யலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி பார்த்தால், சென்னையில் உள்ள, 75 பள்ளிகளுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படும். இந்த பள்ளிகளிடம் இடவசதி, ஒரு கிரவுண்டுக்கும் குறைவாக உள்ளது. எனவே, இந்த பள்ளிகள், நர்சரி, பிரைமரி பள்ளிகளாக தரம் குறைக்கப்பட்டு, தொடர்ந்து இயங்கும். நிபுணர் குழு அறிக்கையை, நாங்கள், முழு மனதுடன் ஏற்கிறோம்.இவ்வாறு, நந்தகுமார் தெரிவித்தார்.
குளிர்காலத்தில் கடைபிடிக்கும் சில ஆரோக்கிய பழக்கங்கள்:
குளிர்காலம் வந்துவிட்டது, அக்டோபர் மாதத்தின் வெயில் தீபாவளிக்குப் பின்னர் வேகமாக குறைந்து, உதறலெடுக்கும் குளிர்காலம் தொடங்கி விட்டது. இந்நாட்களில், உங்கள் சருமம் வறண்டு போகும், முடிகள் உறைந்து விடும் மற்றும் உடலின் தினசரி நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படத் துவங்கும். இந்த மாற்றங்களை எதிர் கொள்ள சற்றே அதிகமான கவனமும், கவனிப்பும் வேண்டும்.   ஏனெனில், குளிர் காற்று உடலுக்கு எப்பொழுதும் நல்லதல்ல.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் பெரிதும் பாதிக்கும் வகையில் இந்த குளிர்காலம் அமைந்து விடுகிறது. கடும் வெயிலையும் தாங்கி கொள்ளும் இந்த உடல் குளிர்காலத்தில் பாடாய்படுத்தி விடுகிறது. இனி வரும் இரண்டு மாத குளிரை சமாளித்து நோயற்ற வாழ்வை பெற நாம் முயற்சிக்க வேண்டும். எனவே உங்கள் உடல் நலன் பாதிக்கப்படாமல் இருக்கவும் மற்றும் குளிர் காலத்திற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளவும் நீங்கள் சில ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியுள்ளது. குளிர்காலத்தில் உடல் நலனைப் பாதுகாக்க செய்ய வேண்டிய சில குறிப்புகள் உங்களுக்காக...  சத்தான உணவு :  குளிர்காலங்களில் சளி மற்றும் இருமலைத் தூண்டும் உணவுகளை நீங்கள் சாப்பிட வேண்டாம். ஐஸ் கிரீம், குளிர் பானங்கள் மற்றும் உடல் வெப்பநிலையை விட குறைந்த வெப்பநிலையுடைய உணவுகள் எதையும் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.  குறைவாக சாப்பிடவும் :  குளிர்காலத்தில் அதிகம் பசி எடுக்கும், எனவே அதிகம் சாப்பிடத் தோன்றும். ஆனால் அவர்கள் குறைவாகவே சாப்பிட வேண்டும். அதன் மூலம் செறிமாணம் தொடர்பான பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும். உடல் வெப்பநிலையை சரியாக வைத்திருக்க உதவும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.  தொடர்ச்சியான உடற்பயிற்சி :  காலையில் நேரமாக எழுந்து உடற்பயிற்சி செய்யத் தொடங்கவும். குளிர்காலத்தில் சூரிய உதயம் தாமதமாகவே நிகழும், எனவே குளிர் நம்மை படுக்கையின் கதகதப்பிலிருந்து எழுந்திருக்க விடாது. எனவே, சோம்பலுடன் தாமதமாக எழுந்து நாள் முழுவதும் சோம்பலாக இருப்பதை தவிர்க்கும் பொருட்டாக, தினமும் அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை பின்பற்றவும். சாப்பிட்ட பின்   நடைப்பயிற்சி :  சாப்பிட்ட உடனேயே தூங்கச் செல்ல வேண்டாம், இதன் மூலம் சோம்பல் ஏற்படும். சாப்பிட்ட பின்னர், குறிப்பாக இரவு உணவுக்கு பின்னர் நடைப்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. இதன் மூலம் முறையான செரிமானம் ஆகவும், உருளைக்கிழங்கு சாப்பிட்ட பின்னர் வரும் எஃபெக்ட்டும் மட்டுப்படும்.  மாய்ஸ்சுரைசர் :  குளிர்காலத்தில் சருமம் பகுதி வறண்டு காணப்படும். இதனை தவிர்ப்பதற்கு பால் கலந்த மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்தவும். நாளுக்கு ஒருமுறையாவது இவற்றை நீங்கள் உடலில் தடவ வேண்டும்.  குளிர்கால உடை :  குளிர்காலத்தில் மொத்தமான உடைகளை பயன்படுத்துங்கள். வெளியே செல்லும் போது காதுகள் மற்றும் பாதங்களை குளிர்காற்று படாமல் மூடியபடி செல்லவும். இவ்வாறு செய்வதன் மூலம் ஜலதோஷம் மற்றும் குளிர்கால நோய்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.  நோய்கள் :  குளிரினால் நோய்கள் வந்தால் மற்றவர்களிடம் தொடர்பு கொள்வதை தவிர்க்கவும். சுகாதாரமான உணவு, அதிகமான ஓய்வு மற்றும் குளிர்கால புண்கள் உள்ள மற்றவர்களின் தொடர்புகளிலிருந்து விலகியிருத்தல் ஆகியவற்றால் நோய்கள் வருவதை தவிர்க்க முடியும்.  தியானம் :  மனதை அமைதியாகவும், கதகதப்பாகவும் வைக்க தியானம் செய்யுங்கள். குளிர் காலம் சில வேளைகளில் அயற்சியூட்டுவதாக இருந்தாலும், தியானம் உங்களை புத்துணர்வுடன் வைத்திருக்கும்.  சூடான பானங்கள் :  சூப் மற்றும் பிற சூடான பானங்களை உட்கொள்ளவும். அவை குளிர்காலத்தில் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும். குளிர்காலம் முழுவதுமே இந்த பானங்களை பருகினால் குளிர் போயோ போச்சு!  காரம் கொஞ்சம் தேவை :  உடலை கதகதப்பாக வைத்திருக்க நிறைய மிளகாய் மற்றும் பிற காரங்களை உணவில் சேர்த்துக் கொள்ளவும். இது உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்தி, உடலை சராசரி வெப்பநிலையில் வைத்திருக்கும்.  ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் :  குளிர்காலங்களில், ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் உடல் கதகதப்பாக இருக்கும். பரங்கிக்காய், உருளைக்கிழங்கு போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிடுங்கள்.  வைட்டமின் `டி' :  குளிர்காலத்தில் சூரிய வெளிச்சம் போதிய அளவில் உடலில் படாத காரணத்தால். வைட்டமின் `டி' பற்றாக்குறை ஏற்படும். எனவே, சாப்பிடும் உணவில் வைட்டமின் `டி' உள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக் கொண்டு, வைட்டமின் டி பற்றாக்குறையை தவிர்க்கவும்.  தண்ணீர் :   சருமம் வறண்டு போவதைத் தவிர்க்க குளிர்காலத்தில் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் போதிய தண்ணீர் அளவை பராமரிக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது நிதர்சன உண்மை தானே!  சன் ஸ்க்ரீன் :  குளிர்காலத்தில் சூரியனின் கதிர்கள் குறைந்த அளவே இருப்பதால், சற்றே முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எனவே எங்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம் சருமம் பழுப்படைவதையும் மற்றும் எரிச்சலை தவிர்க்கவும் சன் ஸ்கீரீன்களை பயன்படுத் தவும்.  ஆற்றலுக்கு முன்னுரிமை :  உங்களுடைய மனநிலை மற்றும் ஆற்றலை எப்பொழுதும் உயர்வாக வைத்திருங்கள். குளிர்காலம் சுற்றுச்சூழலை டல்லாக வைத்திருந்து, உங்களுடைய ஆற்றலை மட்டுப்படுத்தி வீணாக்கி விடும். இவையெல்லாம், குளிர் காலத்தில் உடல் நிலையை சிறப்பான முறையில் பராமரிப்பதற்கான குறிப்புகள்.  இவைகளைப் பின்பற்றி பயன் பெறுங்கள்.
மாலை நேர சிறப்பு வகுப்புகளை ரத்து செய்ய கூடாது:
பொதுத் தேர்வுகளில் அதிக அளவு தேர்ச்சி சதவீதம் எட்ட வேண்டும் என்பதற்காக  மாலை நேர சிறப்பு வகுப்புகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஒவ்வொரு பள்ளியும் அதிக தேர்ச்சி வீதத்தை காட்ட வேண்டும் என்று ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. கடந்த 2011ல் நடந்த 10ம் வகுப்பு தேர்வில் 85.30 சதவீதமும், பிளஸ் 2 தேர்வில் 85.90 சதவீதமும், 2012ல் நடந்த தேர்வில் 10ம் வகுப்பில் 86.20 சதவீதமும், பிளஸ் 2 தேர்வில் 86.70 சதவீதமும் மாணவர் தேர்ச்சி அடைந்தனர். 2 மேற்கண்ட ஆண்டுகளில் நடந்த தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற தேர்ச்சி சதவீதம் குறித்து பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பகுப்பாய்வு செய்யப்பட்டது. 

அதில் தென் மாவட்டங்களை விட வட மாவட்டங்களின் தேர்ச்சி வீதம் குறைவாக இருப்பது தெரியவந்தது. இதற்கு காரணம் போதிய ஆசிரியர்கள் இல்லை என்பது தெரியவந்தது. அதனால் ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் 19000 ஆசிரியர்கள் புதியதாக நியமிக்கப்பட்டனர். இதையடுத்து 2013 பொதுத் தேர்வில் அதிக அளவில் மாணவர்கள் முதல் 3 இடங்களை பிடித்ததுடன் தேர்ச்சி வீதமும் கணிசமாக அதிகரித்தது. இதையடுத்து 2014ம் ஆண்டு தேர்வில் அதிக தேர்ச்சி வீதம் பெற வேண்டும் என்று அனைத்து பள்ளி தலைமை  ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் இரண்டாவது வாரத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில் மாணவர்களுக்கு மாலை நேரத்தில் சிறப்பு வகுப்புகள் தொடங்கப்பட்டன. 

3.30 மணிக்கு முடியும் பள்ளிகள் மாலை 4.15 மணி வரையும், 4 மணிக்கு முடியும் பள்ளிகளில் 4.45 மணி வரையும் இந்த சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.  இதற்கிடையே இரண்டாம் பருவத் தேர்வு விடுமுறையை காரணம் காட்டி வகுப்புகளை இடையில் நிறுத்தாமல் விடுமுறை நாட்களிலும் நடத்த வேண்டும். பள்ளி நாட்களிலும் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகள் தொடர்ந்து நடக்கும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். சில தனியார் பள்ளிகள் இரவு நேர வகுப்புகளையும் நடத்தி வருகின்றன. இதையடுத்து 2014ம் ஆண்டு தேர்வில் 2 சதவீதம் தேர்ச்சி வீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள். சான்றிதல் சரிபார்ப்புக்குப்பின் புதிய ரேங்க் பட்டியலில் இடம்பெறப்போவது யார்?
முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான எழுத்து தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்த்தல் 30 மற்றும் 31–ந் தேதிகளில் நடைபெறுகிறது. முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் எழுத்து தேர்வில் 150க்கு மதிப்பெண்களும்,வேலைவாய்ப்பக பதிவு மூப்புக்கு அதிகபட்சமாக 4 மதிப்பெண்களும்,பணி அனுபவத்துக்கு அதிகபட்சமாக 3 மதிப்பெண்களும் வழங்கப்படும்.

வேலைவாய்ப்பக பதிவு மூப்புக்கு :

1 to 3 வருடங்கள் வரை - 1 மதிப்பெண்

3 to 5 வருடங்கள் வரை - 2 மதிப்பெண்

5 to 10 வருடங்கள் வரை - 3 மதிப்பெண்

1 0 வருடங்களுக்கு மேல் - 4 மதிப்பெண்

பணி அனுபவத்துக்கு :

1 to 2 வருடங்கள் வரை - 1 மதிப்பெண்

2to 5 வருடங்கள் வரை - 2 மதிப்பெண்

5 வருடங்களுக்கு மேல் - 3 மதிப்பெண்

மேல்நிலை வகுப்புகளில் (+1,+2) பாடம் எடுத்த அனுபவமே இதற்கு கணக்கில் எடுதுக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்து தேர்வில் 150க்கு தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்களுடன்,வேலைவாய்ப்பக பதிவு ,பணி அனுபவத்துக்கானா மதிப்பெண்களும் சேர்க்கப்பட்டு புதியதாக மெரிட்பட்டியல் தயாரிக்கப்படும்

எழுத்து தேர்வில் 150 க்கு தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்களுடன்,வேலைவாய்ப்பக பதிவு ,பணி அனுபவத்துக்கானா மதிப்பெண்களும் சேர்க்கப்பட்டு புதியதாக மெரிட்பட்டியல் தயாரிக்கப்படும்.பின்னர் இனஒதுக்கீடு உள்ளிட்ட விதிகளை பின்பற்றி புதிய இறுதிப்பட்டியல் தயாராகும்.

தற்போது 605 பணியிடங்களுக்கு 694 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளதால் 89 பேருக்கு பணி நியமன வாய்ப்பு கிடைக்காமல் போகக்கூடும். பொதுப்பட்டியலில் இடம்பெற்றுள்ள 188 பேர்களுல் 7 பேர் மட்டுமே oc பிரிவைச்சேர்ந்தவர்கள்.
விவரம் வருமாறு
GT. -188
BC. -184 ( 9 visual impaired)
BCM. -27
MBC. -152 (3 visual impaired)
SC. -110 (1 visual impaired)
SCA. -24
ST. -9

என 694 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

போட்டித் தேர்வுக்கு தகவல்கள் தரும் இணையதளம்:
இன்றைய போட்டிமயமான உலகில் வேலைவாய்ப்பு பெற வேண்டுமானால் சம்பந்தப்பட்ட போட்டித் தேர்வில் வெற்றி பெறுவது அவசியமாகும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் போட்டி தேர்வுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருப்பவர்கள் தங்களது அறிவுத்திறமையையும், பயிற்சி முறையையும் சுய பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

இந்த சூழ்நிலையில் TRB, NET, SET, UPSC மற்றும் TNPSC போன்ற போட்டி தேர்வுகளை எழுத விரும்பும் பொருளாதார பிரிவு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்காக புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

www.economicsquestionsandanswers.com

என்ற இணையதளத்தில் பல்வேறு பொருளியல் சார்ந்த தேர்வுகளுக்கான கலைத்திட்டம், தேர்வு வரைமுறைகள், பாடநூல், வினா வடிவமைப்பு, வினாவங்கி, இதுவரை நடைபெற்ற அனைத்து தேர்வுகளுக்குமான தேர்வுத் தாள்கள் மற்றும் விடைகள் (தமிழ் மற்றும் ஆங்கில வழியில்) மற்றும் பொருளியலுக்கான அரிய பல சிறப்பு தகவல்களான பொருளாதார அறிஞர்கள் மற்றும் அவர்கள் வெளியிட்ட கருத்துக்கள், பொருளாதார அறிஞர்கள் படைத்த நூல்கள், இதுவரை நோபல்பரிசு பெற்ற பொருளியல் அறிஞர்களில் விபரங்கள், வளரும் வளர்ந்த நாடுகள் பற்றிய தகவல்கள், இதுவரை நடைபெற்ற ஐந்தாண்டு திட்டங்கள், ஐந்தாண்டு திட்ட தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் பற்றி செய்திகள், இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலை வாய்ப்புத் திட்டங்கள் மற்றும் அதன் நோக்கங்கள், பல்வேறு பரிசீலனைக்குழுக்களும் அதன் விபரங்களும், முக்கிய பொருளாதார நிகழ்வுகள், தேசிய வருமான கணக்கீட்டு முறைகள், பொருளியல் சார்ந்த சூத்திரங்கள், நிதிக்குழு பற்றிய முக்கிய தகவல்கள், கிராமப்புற, நகர்ப்புற வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் பற்றிய தகவல்கள் போன்றவை வெளியிடப்பட்டுள்ளன.
அனைத்து தேர்வுகளுக்கும் பாட வாரியாக ஒரு மதிப்பெண் வினாக்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சிறந்த பொருளியல் பாட வல்லுநர்கள், தனி சிறப்பு வாய்ந்த பயிற்சியாளர்கள் மற்றும் சிறந்த பாட நூர்கள் மூலமாக தயாரிக்கப்பட்ட வினாக்கள் இதில் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட அனைத்து தேர்வுகளுக்கும் தயாராகும் மாணவர்கள் இந்த இணையதளத்தை பார்த்து பயன் பெறலாம்.

அகில இந்திய மேகல் கலர் கான்டெஸ்ட் - தமிழக வெற்றியாளர்கள் விபரம்:

நாட்டின் முன்னணி மற்றும் முன்னோடி எழுதுபொருட்கள், கலைப் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான, கோகுயோ கேம்லின் லிமிடெட் நிறுவனம், அகில இந்திய கேமல் கலர் கான்டெஸ்ட் என்ற பெயரில் நடத்தப்பட்ட போட்டிகளில், தமிழகத்திலிருந்து வெற்றி பெற்றவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இப்போட்டியில் தமிழகத்திலிருந்து 209 பள்ளிகள் பங்கேற்றன. இப்பள்ளிகளிலிருந்து மொத்தம் 2 லட்சத்து 7 ஆயிரத்து 892 நுழைவுகள் பெறப்பட்டன. இவற்றிலிருந்து 3,246 நுழைவுகள் விரிவாக மதிப்பீட்டு அடிப்படையில் பள்ளி அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டு பிராந்திய அளவில் மதிப்பீடு செய்யப்பட்டன.

முதல் பரிசைத் தவிர, இரண்டாம் பரிசுக்கு இருவரும், மூன்றாம் பரிசுக்கு மூவரும், ஆறுதல் பரிசுக்கு 10 மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.குரூப் வாரியாக தமிழக அளவில் வெற்றிபெற்ற மாணவர்களின் விபரங்கள்

GROUP A  - Pre Primary  -  K. KavyaSri  -  SBAO School, Anna nagar

GROUP B  -  Standard 1 & 2  -  Immanuvel Naronha  -  Vels Academy School, Avadi

GROUP C  -  Standard 3 & 4  -  R. Raj Priya  -  St. Patrics Hr.Sec.School

GROUP D  -  Standard 5,6 & 7  -  S.A. Latchiya Mathangi

GROUP E  -  Standard 8,9,10  -  S. Yathugiri Rajan  -  P.S. Senior Secondary School, Mylapore.

No comments:

Post a Comment