Friday, December 27, 2013


7வது சம்பள கமிஷன் அமைப்பதில் தீவிரம்: தேர்தல் அறிவிப்பிற்குள் மத்திய அரசு ஜரூர்!

மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன், லோக்சபா தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன், அமைக்கப்படும் என தெரிகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு, பத்தாண்டுக்கு ஒரு முறை சம்பள உயர்வு மற்றும் இதர சலுகைகள் வழங்குவதற்காக, சம்பள கமிஷன் அமைக்கப்படும்.
இந்த கமிஷன், பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி, இரண்டு ஆண்டுகளில், அறிக்கை அளிக்கும். இதன் பரிந்துரைகள், உடனடியாக அமலுக்கு வரும். 

இதன்படி, கடந்த ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரை, 2006, ஜனவரி 1ம் தேதி அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரை, 2016ம் ஆண்டு அமல்படுத்தப்பட வேண்டும். இதன் அடிப்படையில், ஏழாவது சம்பள கமிஷன் அமைப்பது தொடர்பான அறிவிப்பை, எதிர்பார்த்து, மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். 

சில மாதங்களுக்கு முன், மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், வெளியிட்ட அறிவிப்பில், ஏழாவது சம்பள கமிஷன் அமைக்க, பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்து விட்டார் என, குறிப்பிட்டு இருந்தார்.

லோக்சபா தேர்தல், அடுத்தாண்டு, மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு வருவதற்கு முன், சம்பள கமிஷன் அமைப்பது குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு மத்திய அரசு முயன்று வருகிறது. 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 35 லட்சம் ஓய்வூதியதாரர்கள், இதனால், பயன் அடைவர். சமீபத்தில், நடந்து முடிந்த பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில், நிதி மானிய கோரிக்கைக்கு ஒப்புதல் வாங்கப்பட்டது. இதில், இரண்டாவது, துணை மானிய கோரிக்கையாக, 3.5 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் பெறப்பட்டது. இது, ஏழாவது சம்பள கமிஷனுக்கு ஒதுக்கீடு செய்வதற்காகத்தான் என கூறப்படுகிறது. 

ஏழாவது சம்பள கமிஷன், அமைப்பது தொடர்பான வேலைகளை, நிதி அமைச்சகம் துவக்கவிட்டது. இதற்கான, காபினட் ஒப்புதலை பெறுவதற்காக, குறிப்பாணை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இன்னும், இரண்டொரு வாரங்களில், அமைச்சரவையில் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பள கமிஷன் அமைப்பது தொடர்பான அறிவிப்பு வெளியான தேதியில் இருந்து, இரண்டு ஆண்டுகளுக்குள், கமிஷன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
தற்போதுள்ள நடைமுறைப்படி, சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி, கமிஷனுக்கு தலைவராக நியமிக்கப்படுவார். உறுப்பினர்களாக, அதிகாரிகளும், பொருளாதார வல்லுனர்களும் இடம் பெறுவர். இதற்கிடையில், தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் - 1995ன் கீழ், 1,000 ரூபாய் குறைந்தபட்ச ஓய்வூதியமாக நிர்ணயிக்கப்படும் என தெரிகிறது.

10ம் வகுப்பு தேர்வு எழுதுவோர் பட்டியல் 27க்குள் அனுப்ப உத்தரவு:

இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர்கள் பற்றிய பட்டியல்களை  27ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் தேர்வுத் துறைக்கு அனுப்ப வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் துறைஉத்தரவிட்டுள்ளது.பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மார்ச் 26ம் தேதி  பொதுத் தேர்வு தொடங்குகிறது. 
முன்னதாக ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் தேர்வுத் துறைக்கு மாணவர்கள் பற்றிய விவரங்கள் பெறப்படும். இந்த ஆண்டு அந்த விவரங்கள் அனைத்தும், ஆன்லைன் மூலம் பெற தேர்வுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 6500 அரசுப் பள்ளிகள், 3200 தனியார் பள்ளிகள் மூலம்  பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ளவர்களின் பெயர், போட்டோ, முகவரி, தந்தை பெயர், உள்ளிட்ட விவரங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெற்று, ஆன்லைன் மூலம் தேர்வுத் துறைக்கு அனுப்ப வேண்டும் என்று தேர்வுத் துறை ஏற்கெனவே அறிவித்து இருந்தது. அதன்படி அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் பட்டியல்களை தயாரித்து வைத்துள்ளனர். தற்போது பிளஸ் 2 வகுப்பு பட்டியல் அனுப்பும் பணி நடப்பதால், பத்தாம் வகுப்பு மாணவர்கள் பட்டியல் 27ம் தேதி ஆன்லைனில் அனுப்பி வைக்கப்படும்.

தேர்வுத் துறை அதைப் பெற்று, ஸ்கேன் செய்து ஒரு பட்டியல் தயார் செய்யும். பின்னர் அந்த பட்டியல் மீண்டும் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைப்பார்கள். அதில் உள்ள குறைகளையும் சுட்டிக்காட்டி இருப்பார்கள். இதற்கான ஆய்வுக் கூட்டம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையில் சென்னையில் நடக்கிறது. பிளஸ் 2 வகுப்புக்கான திருத்திய பட்டியல்கள் மீண்டும் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளது.அந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ள குறைகளை தலைமை ஆசிரியர்கள் திருத்தம் செய்து அனுப்புவார்கள். இதற்கு பிறகு இறுதிப் பட்டியல் தயாரிப்பார்கள். பின்னர்  மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம், இறுதி விவரம் ஆகியவை ஆன்  லைன் மூலம் தேர்வுத் துறைக்கு வந்து சேரும்.
தேர்வுக்கு "ஆன்லைன்'னில் பதிவு செய்யாத பள்ளிகளுக்கு வாய்ப்பு:
தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை "ஆன்லைன்' மூலம் பதியாத பள்ளிகள், புதிய பள்ளிகளுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 மற்றும் 10 ம் வகுப்பு, பொதுத்தேர்வுஎழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை, டிச.,10 க்குள் ஆன்லைனில் பதிய, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டிருந்தது. 
ஆனால், சில பள்ளிகள் பதிவு செய்யவில்லை. பதிவு செய்யாத பள்ளிகள், சரிபார்ப்பு பெயர் பட்டியல் (நாமினல் ரோல்) பெறாத பள்ளிகள், தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை, நாளைக்குள் சென்னை அரசு தேர்வுத்துறை அலுவலகத்தில் கொடுக்க வேண்டுமென, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "ஆன்லைன்'ல் பதிவு செய்த பள்ளிகள், சரிபார்ப்பு பெயர் பட்டியலில் உள்ள மாணவர்களின் பெயர், "இன்சியல்", மதம், இனம் ஆகியவற்றை சரிபார்த்து, 2014 ஜன.,4 ல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலங்களில் ஒப்படைக்க வேண்டும். அதேபோல் "ஆன்லைன்' மூலம், ஜன.,1 முதல் 3 ம் தேதி மாலை 5:00 மணிக்குள் மாணவர்கள் பட்டியலில் உள்ள திருத்தங்களை சரிசெய்து கொள்ள வேண்டும் எனவும், தலைமைஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment