Sunday, December 29, 2013

பள்ளிகளில் அரசுக்கு செலுத்தவேண்டிய கட்டணம் மற்றும் கணக்கு தலைப்பு விபரம் :


அனைத்து வகைப் பள்ளிகளின் மாதந்திர சம்பளம் பெரும் கணக்கு தலைப்பு எண் விபரம்-ALL HEAD ENFACEMENT DETAILS:
  1. GOVERNMENT SECONDARY / HIGHER SECONDARY SCHOOL
  2.  MUNICPAL  ANDCORPORATION  SECONDARY/HIGHER SECONDARYSCHOOL

  3. CREATIONOF ADDITIONAL POST IN HIGH SCHOOLS AND HIGHER SECONDARY SCHOOLS UNDER RASHTRIYA MADHYAMIK SHIKSHA ABHIYAN.     (RMSA)

  4. GOVT  HIGH \HIGHERSECONDARY SCHOOL UNDER SARVA SIKSHA ABHIYAN SCHEME  (SSA)

  5. UP GRADATIONOF SCHOOLS UNDER RASHTRIYA MADHYAMIK SHIKSHA ABHIYAN.     (RMSA) 
  6. UP GRADATIONOF SCHOOLS UNDER RASHTRIYA MADHYAMIK SHIKSHA ABHIYAN.     (RMSA) 

  7. AIDED  HIGH / HIGHER SECONDARY SCHOOL ALL TREASURY SUBMITTED  ENFACEMENT FORM

11ம் வகுப்பிற்கு முப்பருவ கல்வி- வலியுறுத்தும் கல்வித்துறை:

தனியார் பள்ளிகள், அரசு விதிமுறைகளை மதிக்காமல், பிளஸ் 1 வகுப்பில் முழுக்க முழுக்க பிளஸ் 2 பாடத்தையே நடத்துகின்றன. இதை தவிர்க்கவும், பிளஸ் 1 வகுப்பிற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவும், முப்பருவ கல்வி முறையை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்" என கல்வித்துறை வலியுறுத்தி உள்ளது.

தனியார் பள்ளிகளின் வளர்ச்சியில், பிளஸ்2, 10ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள், 100 சதவீத பங்கை வகிக்கின்றன. 100 சதவீத தேர்ச்சி மற்றும் மாநில அளவில், குறிப்பிடத்தக்க இடங்களை பெறுவதன் மூலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகள், பிரமாண்ட வளர்ச்சியை பெற்றுள்ளன.
வட மாவட்டங்களைச் சேர்ந்த பெற்றோரும், தங்கள் பிள்ளைகளை, இந்த மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்த்து, லட்சக்கணக்கில் செலவழிக்கின்றனர். தனியார் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பிலும், பிளஸ் 1  வகுப்பிலும், அந்த வகுப்பிற்குரிய பாடங்களுக்கு, முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஒன்பதாம் வகுப்பில், 10ம் வகுப்பு பாடத்தை நடத்துவதையும், பிளஸ்1 வகுப்பில், பிளஸ்2 பாடத்தை நடத்துவதையும், பல ஆண்டுகளாக, கடைப்பிடித்து வருகின்றனர்.
இரு ஆண்டுகள், ஒரே பாடத்தை படிப்பதன் மூலம், மாணவர்களுக்கு, பாடப் பகுதிகள், நன்றாக மனப்பாடம் ஆகிவிடுகின்றன. தேர்வில் சாதிப்பதற்கு இதுவே காரணமாக உள்ளது. இதுபோன்ற விதிமீறலை தடுக்கவும், பிளஸ்1 வகுப்பிற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவும், இந்த வகுப்பிலும் முப்பருவ கல்வி முறையை அமல்படுத்தலாம் என கல்வித்துறை கருதுகிறது.
அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிளஸ்1 வகுப்பு, பெயர் அளவிற்குத் தான் உள்ளது. பாடமும், சரியாக நடத்துவதில்லை; தேர்வும், முறையாக நடப்பதில்லை. முப்பருவ கல்வி முறையை அமல்படுத்தினால், தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து வகை பள்ளிகளிலும், முறையாக, பிளஸ் 1 வகுப்புகள் நடக்கும்.
அந்தந்த பருவ பாடங்களை, ஆசிரியர் நடத்துவர்; தேர்வும் முறையாக நடக்கும். இதனால், முன்கூட்டியே, பொது தேர்வு பாடங்களை நடத்துவதையும் தடுக்க முடியும்.
தற்போது, ஒன்பதாம் வகுப்பிலும், முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அனைத்து பள்ளிகளிலும் ஒன்பதாம் வகுப்பு பாடங்கள், சரியாக நடக்கின்றன. 10ம் வகுப்பு பாடத்தை, முன்கூட்டியே நடத்துவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.
பத்தாம் வகுப்பிற்கு, முப்பருவ கல்வி முறை வருவதே, பெரும் குழப்பத்தில் உள்ள நிலையில், பிளஸ் 1 வகுப்பிற்கு வருமா என்பது கேள்விக்குறியே.
மத்திய இடைநிலை கல்வி திட்டத்துக்கு கூடுதல் நிதி-அனைத்தும் இந்த ஆண்டே செலவு செய்திட வேண்டும்:

மத்திய அரசின் சார்பில் கடந்த 2009ம் ஆண்டு மத்திய இடைநிலைக் கல்வி திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) அனைத்து மாநிலங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், 9ம் வகுப்பு ஆசிரியர்களுக்குபயிற்சி அளிப்பது, மாதிரிப் பள்ளிகளை நிறுவுவது, மாணவியர் விடுதிகள் கட்டுவது உள்ளிட்ட பணிகள் நடக்கிறது.இதற்காக மத்திய அரசு 75 சதவீத நிதியும், மாநில அரசுகள் 25 சதவீத நிதியையும் செலவிட வேண்டும். இதற்காக கடந்த ஆண்டு மத்திய அரசு தனது பங்காக ரூ.510 கோடி வழங்கியது.  அத்துடன் மாநில அரசின் பங்கும் இணைத்து மேற்கண்ட பணிகள் தொடங்கப்பட்டன. மாணவியர் தங்கி படிக்க வசதியாக 11 விடுதிகள் ஜவ்வாது மலை, நீலகிரி மலை, கொல்லிமலை உள்ளிட்ட மலைப் பிரதேசங்களில் கட்டப்படுகின்றன.

விலை ஏற்றம் காரணமாக மாநில அரசு கூடுத லாக ரூ.45 கோடியே 44 லட்சம் ஒதுக்கியுள்ளது.அதேபோல தமிழகத்தில் 44 மாதிரிப் பள்ளிகள் கட்டவும் திட்டமிடப்பட்டது. அதில் இரண்டாம் கட்டமாக 26 மாதிரி பள்ளி கள் கட்டும் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியது. விலை ஏற்றம் காரணமாக அந்த பணிகள் நின்றன. இதனால் இப்பணிகளுக்காக தமிழக அரசு கூடுதலாக ரூ.57 கோடியே 23 லட்சம் வழங்கியுள்ளது.இதையடுத்து, ஆர்எம்எஸ்ஏ திட்டத்தின் கீழ் வரும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் 1851 கூடுதல் வகுப்பறைகள் கட்ட மாநில அரசு கூடுதல் நிதியாக ரூ.71 கோடியே 18 லட்சம் வழங்கியுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் ஆண்டு ஊதிய உயர்வு பெரும் ஆசிரியர்கள் இன்று 28.12.2013 பதவி உயர்வு பெற்று இருந்தால் ஊதியம் மாற்றம் குறித்து விளக்கம் :
தற்போது பட்டதாரி ஆசிரியரில் இருந்து முதுநிலை பட்டதாரி ஆசிரியராக இன்று 28.12.2013 பதவி உயர்வு பெறுபவர்களில் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 2014 ஆண்டு ஊதிய உயர்வாக இருக்கும்.இவர்கள் இம்மாத கடைசிலோ ஜெனவரி முதல் வாரத்திலோ பணியில் சேர்வார்கள் எனில் அவர்கள் (OPTION) கொடுத்து 3% ஐ ஆண்டு ஊதிய உயர்விற்கு பிறகு பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறு பெற்றால் 3%+3%=6% கிடைக்கும் இது ஒரு Incentive பெற்றமைக்கு சமம்.ஆனால் அதுவரை தரவூதிய வித்யாசமான ரூ 200 பெற்றுகொள்ளலாம்.அதேசயம் பணியில் சேர்ந்தவுடன் 3%பெற்றால் அவர்களது ஆண்டு ஊதிய உயர்வு ஏப்ரலில் இருந்து ஜெனவரிக்கு மாறிவிடும் ஆகையால் (OPTION) கொடுத்து ஏப்ரலில் பெற்றால் சற்று கூடுதலாக கிடைக்கும. 

No comments:

Post a Comment