Tuesday, August 13, 2013

பள்ளிக்கல்வித்துறையில் புதிய இணை இயக்குநர்கள் பொறுப்பேற்பு

             பள்ளிக்கல்வித்துறையில் அண்மையில் இயக்குனர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு மூலம் நியமிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து தற்பொழுது புதியதாக இணை இயக்குநர்கள் பொறுப்பேற்றுள்ள பட்டியல் வெளியாகியுள்ளது. 
*இணை இயக்குநர் (பணியாளர்த் தொகுதி) திரு. கருப்பசாமி அவர்களையும்,

*இணை இயக்குநர் (இடைநிலைக்கல்வி) திரு. முத்து பழனிசாமி   அவர்களையும்,
*இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) திரு.பாலமுருகன் அவர்களையும்,
*இணை இயக்குநர் (தொழிற்கல்வி) திரு.தர்ம ராஜேந்திரன் அவர்களையும்,
*இணை இயக்குநர் (தொடக்கக் கல்வி இயக்கம்-நிர்வாகம்)  திருமதி.லதா அவர்களையும்,
*இணை இயக்குநர்  (தொடக்கக் கல்வி இயக்கம்-நிதி உதவிப் பெறும் பள்ளிகள்)  திரு.செல்வராஜ் அவர்களையும்,
*இணை இயக்குநர்  (அனைவருக்கும் கல்வி இயக்கம்)  திரு.நாகராஜ முருகன் அவர்களையும்,

*இணை இயக்குநர் (மாநில கல்வியியல் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்) திருமதி.ஸ்ரீதேவி மற்றும் உமா அவர்களையும்,
*இணை இயக்குநர் (அரசுத் தேர்வுகள் இயக்ககம்) திருமதி.ராஜராஜேஸ்வரி அவர்களையும்,
*இணை இயக்குநர் (நூலகம்) திருமதி.சுகன்யா அவர்களையும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆசிரியர்த் தகுதித் தேர்வை முன்னிட்டு 17.08.2013 சனிக்கிழமை அன்று தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்தும், அதற்கு பதிலாக 31.08.2013 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவித்து தமிழக அரசு உத்தரவு

GO.131 SCHOOL EDN (TRB) DEPT DT.13.08.2013 - DECLARE HOLIDAY ON 17.08.13 FOR TET EXAM CLICK HERE...

ஆசிரியர்த் தகுதித் தேர்வை முன்னிட்டு 17.08.2013 சனிக்கிழமை அன்று தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்தும், அதற்கு பதிலாக 31.08.2013 சனிக்கிழமை அன்று வேலை  நாளாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கல்வி - மேல்நிலைத் தேர்வு - பழைய பாடத் திட்டத்தில் தேர்ச்சிப் பெறாத பாடங்களை புதிய பாடத் திட்டத்தில் தேர்வெழுதுதல், தனித்தேர்வர்களுக்கு சில வழிமுறைகளை அனுமதித்தமைக்கு பின்னேற்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு.

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு - ஹால் டிக்கெட் வெளியீடு

TO DOWNLOAD HALL TICKET CLICK HERE...

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் 17 லட்சத்து 552 பேர் விண்ணப்பித்த நிலையில், 14 லட்சத்து 653 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.


இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நவநீத கிருஷ்ணன் கூறியதாவது: இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு நிலைகளிலான மொத்தம் 5,566 பணியிடங்களுக்கு விண்ணப்பித்த 17 லட்சத்து 552 பேரில், 3 லட்சத்து 441 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இத்தேர்வை கண்காணிக்க 950 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்வுக்காக, மாநிலம் முழுவதும் 244 மையங்களில் 4,755 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 14 லட்சத்து 653 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரை, இத்தேர்வு நடைபெறுகிறது. http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் சென்று ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சுதந்திர தினம்: ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி துறை கிடுக்கிப்பிடி

சுதந்திர தினத்தன்று பள்ளிகளுக்கு, "டிமிக்கி' கொடுக்கும் ஆசிரியர்களுக்கு, "கிடுக்கிப்பிடி' போடப்பட்டு உள்ளது. தனிவருகைப் பதிவேட்டில் பதிவு செய்யவும், வராத ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

பள்ளிகளில், ஆக., 15ம் தேதியன்று, சுதந்திர தினம் கொண்டாடப்பட வேண்டும். அன்று பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தந்து, கொடி ஏற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும். பெரும்பான்மையான கிராமப்புற பள்ளிகளில், பள்ளிக்கு எந்த ஆசிரியர்களும் வருவது கிடையாது. பள்ளியில் உள்ள வாட்ச்மேன்கள், பள்ளிகளில் கொடி ஏற்றி விடுகின்றனர். பல பள்ளிகளில், தலைமையாசிரியர் மட்டும் வருகை தந்து கொடி ஏற்றிச் செல்வார். இது குறித்து, பள்ளிக்கல்வித் துறைக்கு புகார்கள் சென்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

தலைமையாசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளதாவது: சுதந்திர தினத்தன்று பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் குறித்து, தனி வருகைப் பதிவேட்டில், பதிவு செய்ய வேண்டும். பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் குறித்து, முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, தெரியப்படுத்த வேண்டும். முதன்மை கல்வி அதிகாரிகள், பள்ளிக்கல்வி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும். பள்ளிக்கு வராத ஆசிரியரிடம் விளக்கம் கேட்கப்படும். சரியான விளக்கம் அளிக்காதவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. சுதந்திர தினத்தன்று, பள்ளிகளில், மாணவர்களுக்குக் கட்டுரை, ஓவியம், கவிதை, விளையாட்டுப் போட்டிகள் நடத்த வேண்டும். போட்டிகள் நடத்தப்பட்ட விவரத்தை, போட்டோவுடன், முதன்மைக் கல்வி அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Tamilnadu Teacher Eligibility Test - Educational Psychology Subject Questions for Paper 1 & 2 Candidates.

திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் முதுகலை பட்டம் பெற்ற ஆசிரியருக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதியம் ரத்து

No comments:

Post a Comment