Wednesday, August 21, 2013

Todays news


இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று விசராணைக்கு வருகிறது
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு நீதியரசர் தலைமை நீதிபதி மற்றும் நீதியரசர் சத்யநாராயணன் ஆகியோர் அடங்கிய முதலாம் எண் அமர்வில், வரிசை எண் .152ல் பட்டியலிடப்பட்டுள்ளது. வரிசை எண்.152ல் உள்ளதால் இன்று மதியத்திற்கு பின் விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

             இன்று நடைபெற்ற விசாரணை குறித்து விவரம் இன்று மாலை தெரியவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இறுதிகட்ட விசாரணை இன்று நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
PP - குறித்த சென்னை கருவூல கணக்கு இயக்குனரின் கடிதம்

1.1.2011-க்கு முன்னர் தேர்வுநிலை பெற்றவர் -களுக்கு தனி ஊதியம் அனுமதியில்லை எனவும் அதனால் பெற்ற பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என வேலூர் பகுதி பள்ளிகளில் தணிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வரும் தகவல்களுக்கு விளக்கமளிக்க சென்னை கருவூல கணக்கு இயக்குனரின் கடிதம்



சிறப்புப்படி (S.A).மற்றும் தனி ஊதியம் (P.P) பற்றிய தகவல்களை அரசாணைகளின்படி பார்ப்போம்
 
இது ஒரு நபர் குழுவைத் தொடர்ந்து அரசாணை 270 நாள்.26.8.2010 இன் மூலம் இ.நி.ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.

அதாவது அரசாணையில் "Government direct that the Special Allowance of Rs.500/- per month be granted to the Secondary Grade Teachers and Headmaster High Schools" என்று உள்ளது. மேலும் இறுதியில் " The Special Allowance sanctioned in Para - I above shall take effect from 1.8.2010.
இதில் Secondary Grade Teachers என்று குறிப்பிடப்பட்டதால் அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் S.A. பெற தகுதியாகி 1.8.2010 முதல் பெற்றனர்.

பின்னர் 12.01.2011 இல் அரசாணை 23 இன் படி தனி ஊதியம்.

இதில் பத்தி 4 - இல் " இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தத்திற்கு மாற்றாக ஒரு நபர் குழுவின் அடிப்படையில் தற்போது சாதாரண நிலையில் 5200 - 20200 + தர ஊதியம் 2800 பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.500/- சிறப்புப்படிக்கு பதிலாக மாதம் ரூ.750/- ஆக உயர்த்தி அதனை தனி ஊதியமாக வழங்க அரசு ஆணையிடுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பத்தி 4 - இன் இறுதியில் " மேலும், தற்போது தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலையில் முறையே ரூ.9300-34800 + தர ஊதியம் 4300/- மற்றும் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4500/- பெறும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தேர்வுநிலை மற்றும் சிறப்புநிலையில் பணியாற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் சிறப்புபடியான ரூ.500/- தொடர்ந்து பெற அனுமதித்தும் அரசு ஆணையிடுகிறது." என்றும் உள்ளது.
சிறுவிளக்கம் உங்களுக்காக:
இதில் குறிப்பிடப்பட்டுள்ள "சாதாரண நிலையில்" என்ற வாசகத்தை வைத்துக்கொண்டு தணிக்கை தடை என்று பணத்தை திருப்பிகட்ட கூறுவதாக தற்போது தகவல்கள் பரவி வருகிறது.
அதாவது 1.1.2006 இல் புதிய ஊதிய விகிதத்தில் 5200-20200 +2800 இல் ஊதிய நிர்ணயம் செய்துகொண்ட இடைநிலை ஆசிரியர்கள் 1.1.2011 இல் தேர்வுநிலையை அடைந்திருந்தால் தனி ஊதியம் 750 பெற இயலாது என்பதாகவும், ஏனெனில் தனி ஊதிய அரசாணையில் சாதாரண நிலையில் என்று உள்ளது என தணிக்கையர்கள் கூறுகின்றனராம்.

இங்கு கொஞ்சம் பொறுமையாக படியுங்கள்.
S.A. வழங்கும்போது GRANTED TO SECONDARY GRADE TEACHERS என இருந்தததால் இதனை பெற்றவர்களை பட்டியலிட்டால்
1. 5200 - 20200 + தனி ஊதியம் 2800 பெற்று தேர்வுநிலை முடிக்காதோர்.(சாதாரண நிலை என்று வைத்துகொள்ளுங்களேன் )
2. 1.6.2009 -க்கு பின்னர் தேர்வுநிலை பெற்று 5200 - 20200 + தனி ஊதியம் 2800 பெற்றுகொண்டிருப்போர்.
3. இடைநிலை ஆசிரியர் தேர்வுநிலையினர் 9300-34800 + 4300 நிலையினர்.
4. இடைநிலை ஆசிரியர் சிறப்பு நிலையினர் 9300-34800 + 4500 நிலையினர்
(அதாவது அனைத்து நிலை இடைநிலை ஆசிரியர்களும் சிறப்பு படி பெற தகுதிடையவ்ர்கள் )
இதில் நாம் குறிப்பிட்டுள்ள வரிசை எண் 3 மற்றும் 4 இல் உள்ளவர்கள் அரசாணை 23 இன் பத்தி 4 - இன் இறுதியில்உள்ள " மேலும், தற்போது தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலையில் முறையே ரூ.9300-34800 + தர ஊதியம் 4300/- மற்றும் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4500/- பெறும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் (தேர்வுநிலை மற்றும் சிறப்புநிலையில் பணியாற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு) தற்போது வழங்கப்பட்டுவரும் சிறப்புபடியான ரூ.500/- தொடர்ந்து பெற அனுமதித்தும் அரசு ஆணையிடுகிறது." வரிகளின்படி சிறப்புபடி தொடர்ந்து பெற தகுதி பெறுகின்றனர்.
இவர்களுக்கு தொடர்ந்துபெற தகுதி பெறுகின்றனர் என்றால், இவர்களைத்தவிர மேலும் சிறப்புபடி பெற்று வந்தவர்களுக்கு என்ன நிலை?
அவர்களுக்கு "தற்போது வழங்கப்படும் ரூ.500/- சிறப்புப்படிக்கு பதிலாக மாதம் ரூ.750/- ஆக உயர்த்தி அதனை தனி ஊதியமாக வழங்க அரசு ஆணையிடுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது." என்ற வரிகளையே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பத்தி 4 இன் வரிகளை திரும்ப படியுங்கள்:
பத்தி 4 - இல் " இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தத்திற்கு மாற்றாக ஒரு நபர் குழுவின் அடிப்படையில் தற்போது சாதாரண நிலையில் 5200 - 20200 + தர ஊதியம் 2800 பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.500/- சிறப்புப்படிக்கு பதிலாக மாதம் ரூ.750/- ஆக உயர்த்தி அதனை தனி ஊதியமாக வழங்க அரசு ஆணையிடுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் சாதாரண நிலையில் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் 1.6.2009 -க்கு பிறகு தேர்வு நிலை பெற்று 5200 - 20200 + 2800 இல் உள்ளவர்களுக்கு தனி ஊதியம் இல்லை என்கின்றனர்.

இவர்களை தேர்வுநிலை பெற்றவர்கள் பட்டியலில் வைத்தால்,சிறப்புபடியை தொடர்ந்து பெற அனுமதிக்கப்பட்ட தேர்வு/சிறப்பு நிலை பெற்றவர்களுடன் இவர்களையும் இணைத்திருப்பார்கள் அல்லவா? அப்படி சிறப்பு படியை தொடர்ந்து பெற அனுமதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் 5200-20200+2800 பெறும் தேர்வுநிலை பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் இடம் பெறாததால் இவர்கள் தனி ஊதியம் பெறவே தகுதி பெற்றவர்கள்.

இதுசார்ந்து நாமக்கல் கருவூல அலுவலர் கோரிய தெளிவுரைக்கு சென்னை கருவூல கணக்கு இயக்குனர் அவர்கள் அளித்த பதிலை மீண்டும் படியுங்கள்.
நன்றி : திரு. தாமஸ் ராக்லேண்டு

(மேற்காணும் கட்டுரை அறிந்த வரையில் விளக்கப்பட்டுள்ளது, சார்ந்து தெளிவுரை தேவைப்பட்டு அரசால் அளிக்கப்பட்டால் அவையும் வெளியிடப்படும், மேலும் தங்களின் மேலான கருத்துக்கள் கட்டுரைக்கு வலு சேர்க்கும்)
SG Asst - PP ரூ.750/- & SA ரூ.500 அரசு கணக்கில் திரும்ப செலுத்த தணிக்கை குழு அறிக்கை
 

சாதரண இடைநிலை ஆசிரியர்களை தவிர மற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு PP ரூ.750/- வழங்கியது தவறு மேலும் 31.12.2005க்கு பின்னர் தேர்வு / சிறப்பு நிலை முடித்தவர்களுக்கு SA ரூ.500 வழங்கியதும் தவறு இவ்விரு பணத்தையும் அரசு கணக்கில் திரும்ப செலுத்த தணிக்கை குழு அறிக்கை அளித்துள்ளதாக தகவல்




சாதரண இடைநிலை ஆசிரியர்களை தவிர மற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு அதாவது 01.01.2011க்கு முன்னர் தேர்வு/சிறப்பு நிலை முடித்தோர்க்கு PP எனப்படும் தனி ஊதியம் ரூ.750/- வழங்கியது தவறு என்றும் மேலும் 31.12.2005க்கு பின்னர் தேர்வு / சிறப்பு நிலை முடித்தவர்களுக்கு SA எனும் சிறப்புப்படி ரூ.500 அதாவது 01.01.2006 முதல் 31.12.2010 வரை தேர்வு / சிறப்பு நிலை முடித்தவர்களுக்கு வழங்கியதும் தவறு என்றும் இவ்விரு பணத்தையும் அரசு கணக்கில் திரும்ப செலுத்த தணிக்கை குழு அறிக்கை அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
சம்பள உயர்வுக்கு காத்திருக்கும் சூப்பர் கிரேடு ஆசிரியர்கள்

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 30 ஆண்டுகள் புகாரின்றி பணிபுரியும் 10 ஆயிரம் ஆசிரியர்கள், சம்பள உயர்வுக்கான அறிவிப்பு இதுவரை வெளியாகாததால் குழப்பத்தில் உள்ளனர்.

ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாடு குறித்து ஆய்வு செய்து, அறிக்கை அளித்த "மூன்று நபர் கமிஷன்" பரிந்துரைப்படி, பத்து ஆண்டுகள் புகாரின்றி பணியாற்றிய தேர்வுநிலை ஆசிரியர்களுக்கும், 20 ஆண்டுகள் பணியாற்றிய சிறப்பு நிலை ஆசிரியர்களுக்கும், 3 சதவீதமாக இருந்த ஊக்க சம்பளம் 6 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
அரசு உதவி பெறும் பள்ளிகளில், அரசு முதுநிலை ஆசிரியர்கள் புகாரின்றி 30 ஆண்டுகளை கடந்து பணியாற்றும் "சூப்பர் கிரேடு" ஆசிரியர்களுக்கான ஊக்க சம்பளம் தொடர்பாக எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. மாநிலத்தில் 10 ஆயிரம் "சூப்பர் கிரேடு" (30 ஆண்டுகள் பணியாற்றிய) ஆசிரியர்கள் மனஅழுத்தத்தில் உள்ளனர். இதில் பெரும்பாலானோர் ஓய்வு வயதை எட்டியுள்ளனர்.
மேல்நிலை முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சரவண முருகன் கூறியதாவது: ஆசிரியர்கள் சம்பள முரண்பாடுகளை களைய தமிழக அரசு இதுவரை 89 அரசாணைகள் வெளியிட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை சார்பில் மூன்று அரசாணைகள் வெளியிடப்பட்டன. இதில் அரசாணை 23ன் படி, தேர்வு நிலை, சிறப்பு நிலை ஆசிரியர்களுக்கு ஊக்க சம்பளம் அளிக்கப்பட்டது.
ஆனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 30 ஆண்டுகள் புகாரின்றி பணியாற்றி, பதவி உயர்வு இல்லாத "சூப்பர் கிரேடு" ஆசிரியர்களுக்கு, "மூன்று நபர் கமிஷன்" பரிந்துரையின்படி ஊக்க சம்பளம் குறித்து அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. இந்நிலை அரசு மேல்நிலை பள்ளி முதுநிலை ஆசிரியர்களுக்கும் நீடிக்கிறது. கமிஷன் பரிந்துரை 30 ஆண்டு பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் பொருந்துமா? என அரசு விளக்கமளித்து குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், என்றார்.
எஸ்.எம்.எஸ்., மூலம் அரசு பொதுத்தேர்வு முடிவுகள்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை, மாணவர்கள் மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., மூலம் வழங்க தேர்வுத்துறை ஏற்பாடு செய்து வருகிறது.
இந்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்கள் செப்., 1 முதல் 30ம் தேதிக்குள் ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும், என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.                              
ஆன்-லைனில் பதிவு செய்யப்படும் மாணவர்களின் விபரங்களான, பெயர், ஜாதி, பிறந்த தேதி, போட்டோ ஆகியவை தவறு இல்லாமல் பதிவு செய்ய தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பள்ளிகள் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து கூட்டம் நடத்த வேண்டும். இந்த கூட்டத்தில் மாணவர்களின் விபரங்களை தவறுகள் இல்லாமல் பெற்று, ஆன்- லைனில் செப்., 30 க்குள் பதிவு செய்ய வேண்டும்.

இந்த விபரங்கள் பெறும் போது மாணவர்களின் தொடர்புக்காக மொபைல் போன் எண்கள் பெறப்பட்டு ஆன்- லைனில் பதிவு செய்யப்படுகிறது. அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நேரத்தில், தொடர்புக்காக வழங்கப்பட்டுள்ள மொபைல் எண்களில் மாணவர்கள் தேர்ச்சி, மதிப்பெண் விபரங்கள், எஸ்.எம்.எஸ்., மூலமாக அனுப்ப ஏற்பாடு செய்துள்ளது.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை எளிதில் தெரிந்து கொள்ள இந்த ஏற்பாடுகளை தேர்வுத்துறை செய்து வருகிறது.

இலவச திட்டங்கள் அனைத்தும், மாணவர்களுக்கும் சென்றடையும் வகையில், பணியாற்றவேண்டும்.

அரசு வழங்கும் இலவச திட்டங்களை, பள்ளி மாணவர்களுக்கு, முறையாக வழங்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களை, கல்வித்துறை வலியுறுத்தி உள்ளது.
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், லேப்-டாப், நோட்டுப் புத்தகம், சீருடை, காலணி, கணித உபகரணம், புத்தக பை உட்பட, 14 நலத்திட்டப்பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு, வகுப்பு துவங்கும் முன், நலத்திட்டப் பொருட்கள், பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன. அவற்றை, மாணவர்களுக்கு முறையாக வழங்கவில்லை என, பள்ளி நிர்வாகங்கள் மீது, புகார்கள் வந்தன.
இதையடுத்து, உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்ட, ஆலோசனை கூட்டத்தை, கல்வித்துறை, அனைத்து கல்வி மாவட்டங்களிலும் நடத்தியது. கூட்டத்தில், பள்ளிகளில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் பற்றி விவாதிக்கப்பட்டது.
 
தலைமை ஆசிரியர்கள், எவ்வளவு பணிச்சுமை இருந்தாலும், இலவச திட்டங்கள் அனைத்தும், மாணவர்களுக்கும் சென்றடையும் வகையில், பணியாற்றவேண்டும் என, கல்வி அதிகாரிகள் வலியுறுத்தினர். இலவச பொருட்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படுத்தினால், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை எச்சரித்துள்ளது.
 
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்பட உள்ளன.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்பட உள்ளன.மொத்தம் 2,881 இடங்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர்.


முக்கிய விடைகள் தொடர்பாக மொத்தம் 1,500 பேர் ஆட்சேபங்களை அனுப்பியிருந்தனர். பெரும்பாலும் தமிழ் பாடத்தில்தான் அதிகளவிலான ஆட்சேபங்களைத் தேர்வர்கள் அனுப்பியிருந்தனர்.இதில் "பி' வரிசை வினாத்தாள்களில் மட்டும் அதிக அச்சுப்பிழைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.தவறான கேள்விகள், அச்சுப்பிழைகள் தொடர்பாக அந்தந்த பாட நிபுணர்கள் ஆய்வு செய்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர். இந்த அறிக்கைகள் மீது ஆசிரியர் தேர்வு வாரியும் விரைவில் முடிவு எடுக்கும் எனத் தெரிகிறது. இது தொடர்பாக,முடிவு செய்யப்பட்டவுடன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.
 
பள்ளிக்கல்வி - ஆகஸ்ட் 16 முதல் 22 வரை சமஸ்கிருத வாரம் கொண்டாட அரசு கடிதம் வெளியீடு
 
10th & 12th Nominal Roll Preparation Instruction

            மேல்நிலை (HSC) மற்றும் பத்தாம் வகுப்பு S S L C பொது தேர்வுகள், மார்ச்/ஏப்பரல் 2014-பெயர் பட்டியல் தயாரிப்பதற்கு பள்ளி மாணாக்கரிடமிருந்து உறுதி மொழி படிவம் (DECLARATION FORM ) பெறுதல் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுரைகள்

 
தமிழக அரசு உத்தரவு
 

பள்ளிக்கல்வி - ”SAVE PAPER - SAVE TREES” - பள்ளிகளில் அறிவியல் செய்முறை பயிற்சி ஏடுகள் மற்றும் ஒப்படைப்புகளில் ஒரு பக்கத்தில் (ONE SIDE) மட்டும் பயன்படுத்துவதை தவிர்க்க தமிழக அரசு உத்தரவு

 
தொடக்கக்கல்வித் இயக்குனர் செயல்முறை

7வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு குடியரசு தின சதுரங்கப் போட்டிகள் நடத்துவதற்கான மாற்றியமைக்கப்பட்ட புதிய செயல்திட்டம் வகுத்து தொடக்கக்கல்வித் இயக்குனர் செயல்முறை வெளியிட்டுள்ளார்

 
தொடக்கக் கல்வி துறை உத்தரவு

01.06.1988 முதல் தேர்வுநிலை / சிறப்புநிலை வழங்க கோரி பெறப்பட்ட இறுதியாணைகளுக்கு, பொதுவான ஆணை பிறப்பிக்க வழக்கு தொடுத்த அனைவர்களின் விவரங்களையும் 20.08.2013க்குள் சமர்பிக்க தொடக்கக் கல்வி துறை உத்தரவு

 
2014ல் வர இருக்கும் பாராளுமன்ற தேர்தல் பணிக்காக ஆசிரியர்களின் விவரங்களை விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்புமாறு தேர்தல் ஆணையம் உத்தரவு
எம்.பில் ஊக்க ஊதியம் 17.01.2013 அன்று முதல் பெறலாம் என தமிழக அரசின் உத்தரவிற்கு இடைக்கால தடை ஆணை
பென்ஷனை நிறுத்தி வைக்க உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

"பென்ஷன் என்பது, ஒருவர், நீண்ட காலம் பணியாற்றியதற்காக கொடுக்கப்படும் நிதி; அது, அவரின் உரிமை. ஒருவர் மீதான துறை ரீதியான நடவடிக்கைகள், வழக்குகள் ஆகியவற்றை காரணமாக வைத்து, அவரின் பென்ஷனை நிறுத்தி வைக்க முடியாது' என, சுப்ரீம் கோர்ட், உத்தரவிட்டுள்ளது.


ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர், ஜித்தேந்திர குமார் ஸ்ரீவத்சவா மீது, குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. இதை காரணமாக வைத்து, அவருக்கான பென்ஷன் மற்றும் பணிக் கொடையை கொடுக்காமல், அம்மாநில அரசு நிறுத்தி வைத்தது. இதை எதிர்த்து, அவர், ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் மனு செய்தார்.

இதை விசாரித்த ஐகோர்ட், ஜித்தேந்திர குமாருக்கு, பென்ஷன் கொடுக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து, ஜார்க்கண்ட் மாநில அரசு, சுப்ரீம் கோர்ட்டில், மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள், ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய, "பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: பென்ஷன், பணிக்கொடை ஆகியவை, ஒரு ஊழியர், நீண்ட காலமாக, நேர்மையுடன் பணியாற்றியதற்காக கொடுக்கப்படும் நிதி. அது, அவரின் சொத்து போன்றது.
பென்ஷன் என்பது, ஊழியரின் உரிமை. அரசியலமைப்பு சட்ட பிரிவு, 31 (ஏ), இதை உறுதி செய்கிறது. எனவே, சம்பந்தபட்ட ஊழியர் மீதுள்ள வழக்குகள், துறை ரீதியான நடவடிக்கைகள் ஆகியவற்றை காரணமாக வைத்து, அவரின் பென்ஷனை நிறுத்தி வைக்க முடியாது. இது, அவரின் அடிப்படை உரிமையை மறுக்கும் செயல். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
51 தலைமை ஆசிரியர்கள் அதிகாரிகளாக பதவி உயர்வு


தொடக்க கல்வித் துறையில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி வந்த, 51 பேர், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர்.



தொடக்கக்கல்வித் துறையில் காலியாக இருந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு, நேற்று சென்னையில் நடந்தது. இதற்கு பணி மூப்பு அடிப்படையில், 100 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இதில், 51 பேருக்கு, பதவி உயர்வு உத்தரவுகளை, தொடக்கக்கல்வி இயக்குனர் இளங்கோவன் வழங்கினார்.
 
கணினி ஆசிரியர்கள் நியமனம் எப்போது? பிளஸ் 2 மாணவர்கள் எதிர்பார்ப்பு

மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வந்த கணினி ஆசிரியர்கள், 652 பேரை, அரசு பணிநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, பிளஸ் 2 கணினி பிரிவு மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


புதிய ஆசிரியர்கள் நியமனம் எப்போது என, மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக் கின்றனர். ஒப்பந்த அடிப்படையில், மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வந்த கணினி ஆசிரியர்கள், சிறப்பு தேர்வு அடிப்படையில், பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.

தேர்வில் தகுதி மதிப்பெண் பெறாதவர்களை பணிநீக்கம் செய்ய உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி தமிழக அரசு, 652 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்தது. இதனால், பல பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம், பகுதிநேர ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்ட கணினி ஆசிரியர்கள் தான் தற்போது, பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர். இந்த ஆசிரியர்கள், 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையிலான, மாணவர்களுக்கு பாடம் நடத்த நியமிக்கப்பட்டவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் கணினி பட்டயம் பெற்றவர்கள். மேல்நிலை வகுப்புகளுக்கு பாடம் நடத்த பி.எட்., பட்டாதாரிகளை நியமிக்க வேண்டும் என்பது விதிமுறை.

பெரும்பாலான பள்ளிகளில் பகுதிநேர கணினி ஆசிரியர்களும் நியமிக்கப்படாததால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. சில இடங்களில், மாற்றுப் பணியாக, அருகில் உள்ள பள்ளிகளின் ஆசிரியர்களை கொண்டு வாரத்தில், இரண்டு நாட்கள் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என, மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர். விரைவில் ஆசிரியர்கள் நியமிக்கப்படாவிட்டால், அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிக்கவும் மாணவர்கள் திட்டமிட்டு வருகின்றனர். இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ""கணினி ஆசிரியர்கள் நியமனம் குறித்து ஆலோசித்து வருகிறோம். மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும்,'' என்றார்.
 
மொழி பெயர்ப்பு வளர வளரத்தான் மொழியின் சிறப்பை அறிய முடியும்: அவ்வை நடராஜன்
நல்லி-திசை எட்டும் சார்பில் மொழி பெயர்ப்புக்கான பாஷா பூஷண் மொழியாக்க விருதுகள் வழங்கும் விழா கடலூரில் நடந்தது.

விழாவில் மொழியாக்கப் படைப்பாளிக்களுக்கு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராஜன், விருது வழங்கிப் பேசியதாவது:

மொழி பெயர்ப்பு என்பது கடினமான வேலை. அதை விட கடினம் ஒருவர் பேசுவதை மொழி பெயர்ப்பது என்பது. ஆங்கில மொழி பெயர்ப்பு என்பது கடினம் ஆங்கிலத்தில் ஒரே வாத்தைக்கு பல அர்த்தம் உள்ளது. இந்த பணியில் மாணவர்களை பங்கேற்ப செய்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

மொழி பெயர்ப்பு என்பது அந்த மொழியின் இலக்கியம், இடம், பொருள், சூழலைப் பொறுத்தே அமைய வேண்டும். வட மாநிலங்களில் நமது எழுத்தாளர்கள் பற்றி தெரியவில்லை. ஆனால் காண்டேகர் தெரியாத தமிழர்கள் தமிழ்நாட்டில் இல்லவே இல்லை.

இந்திய மொழிகளில் இரண்டு மொழிகள் தமிழில் அதிகம் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்றால் மராட்டியம், வங்கமும்தான். பக்கத்தில் உள்ள மலையாளத்தில் இருந்துகூட அவ்வளவு மொழி பெயர்ப்பு நூல்கள் இல்லை. மொழி பெயர்ப்பு வளர வளரத்தான், ஒரு மொழிக்கு எந்தனை வகை சிறப்புகள் இருக்கிறது என்பதை அறிய முடியும்.

காலையில் ஒரு நூல் வருகிறது என்றால் அதை ஒரு வாரத்தில் மொழி பெயர்க்க வேண்டும் என்ற ஆர்வம் கேரள மக்களிடம் அதிகளவு உள்ளது. அதை அவர்கள் சுலபமாக செய்து முடிக்கின்றனர். நாம் அதே நூலை 5 அல்லது 10 ஆண்டுகள் சென்ற பின்னரே மொழி பெயர்க்கிறோம்.

தமிழ் இலக்கியத்தை ஆங்கில மொழியில் மொழி பெயர்க்கும் போது மிகப்பெரிய சிக்கல் ஏற்படுகிறது. தமிழ்நாட்டின் பன்பாட்டை விளக்கும் போது ஆங்கிலம் சில நேரத்தில் சிரமாக உள்ளது. எனவே இந்த 2 மொழிகளையும் இரு கண்களாக வைத்து எண்ணத் துவங்கினால், தமிழ் பாண்பாட்டை, இலக்கியத் திறனை உலக நாடுகளில் எல்லாம் அறியப்படுத்த முடியும். இவ்வாறு அவ்வை நடராஜன் பேசினார்.

No comments:

Post a Comment