Wednesday, August 7, 2013

மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற விடா முயற்சி, சகிப்பு தன்மை அவசியம்

"மாணவர்களுக்கு விடாமுயற்சியும், சகிப்பு தன்மையும் இருந்தால் அனைத்து சவால்களை வெற்றி கொள்ளலாம்" என முன்னாள் துணைவேந்தர் வைத்தியநாதன் தெரிவித்தார்.

விக்கிரவாண்டி சூர்யா இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது. விழாவில் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் வைத்தியநாதன், முதலாம் ஆண்டு வகுப்புகளை துவக்கி வைத்து பேசியதாவது:

"மாணவர்கள் விடாமுயற்சி மற்றும் சகிப்பு தன்மையை தங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டால் எதிர்காலத்தில் அனைத்து சவால்களையும் சந்திக்கலாம். இங்குள்ள சிறந்த உள் கட்டமைப்பு வசதிகளை மாணவர்கள் முறையாக பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெற்று பல்கலைகழக அளவில் சாதனை படைக்க பாடுபட வேண்டும்.

படிப்புடன், விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் போது, மாணவன் புத்துணர்ச்சி பெற்று படிப்பில் ஆர்வமுடன் கவனம் செலுத்த முடியும். முக்கியமாக கல்லூரிக்கு தவறாமல் வருகை தந்து படிப்பில் கவனம் செலுத்தி வாழ்க்கையின் லட்சியத்தை அடைய வேண்டும்." இவ்வாறு முன்னாள் துணை வேந்தர் டாக்டர் வைத்தியநாதன் பேசினார்.
தொடக்ககல்வி - அகஇ மூலம் 1 முதல் 4 வகுப்புகளுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக்கற்றல், 6 முதல் 8 வரை படைப்பாற்றல் கல்வி முறையை கண்காணித்து, பள்ளிகளை வகைப்படுத்தி அறிக்கை ஒவ்வொரு மாதமும் 10ஆம் தேதிக்குள் அனுப்ப இயக்குநர் உத்தரவு

SSA - MINUTES OF THE MEETING CONDUCTED BY PRINCIPAL SECRETARY
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் பெறுவதற்கான கூட்டுப் போராட்டத்திற்கு, அனைத்து ஆசிரியர் சங்கங்களுக்கும் தமிழ்நாடு ஆரமப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் அழைப்பு

மூன்று நபர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அண்மையில் தமிழக அரசு 88 அரசாணைகள் வெளியிட்டது. இதில் அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லாததையொட்டி தொடக்கக் கல்வித்துறையில் உள்ள பெரும்பாலான சங்கங்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை  அறிவித்தன. எனினும் அனைத்து ஆசிரியர் சங்கங்களும் இணைந்து போராட வேண்டும்
என்ற கோரிக்கை பரவலாக ஆசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டது. ஏற்கெனவே ஒரு சில சங்கங்கள் அழைப்பு விடுத்து இருந்தது. தற்பொழுது தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியும் வரும் 18ம் தேதி அனைத்து சங்கங்களை அழைத்து கூட்டு போராட்டத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

எம்.பில் / பி.எச்.டி., ஊக்க ஊதியம் தொடர்பாக அரசு பிறபித்த தெளிவுரை ஆணைக்கு சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால் தடை விதித்து உத்தரவு.

தொடக்க / பள்ளிக்கல்வித்துறையில் உள்ள நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு எம்.பில்., / பி.எச்.டி படித்தவர்களுக்கு இரண்டாம் ஊக்க ஊதியம் வழங்க அரசாணை எண்.18 நாள்.18.01.2013 மூலம் தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து பட்டதாரி ஆசிரியர்கள் ஊக்க ஊதியம் பெற்று வந்தனர். பிறகு தமிழக அரசு 17.07.2013 அன்று இவ்வரசாணை தொடர்பான தெளிவுரையில் அரசாணை எண்.18 வழங்கிய நாள் முதல் ஊக்க ஊதியம் அனுமதிக்கலாம் என்று தெளிவுரை வழங்கியது. இதையடுத்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் அதன் தலைவர் மற்றும் 8 ஆசிரியர்கள் தொடர்ந்து வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 11ம் எண் நீதிமன்றத்தில் நீதியரசர் ஹரிபரந்தாமன்
அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தெளிவிரை கடிதத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து அரசாணை  எண் .18ன் படி ஊக்க ஊதியம் பெற்று கொள்வதற்கான வாய்ப்பு ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஏற்கெனவே  ஆசிரியர்கள் பெற்ற எம்.பில்., ஊக்க ஊதியத்தை திரும்ப அரசு கணக்கில் செலுத்துவதற்கான வாய்ப்பு இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு வந்தபின்பே தெரியவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓய்வூதியத்தாரர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.35000/-லிருந்து ரூ.50000/- ஆக உயர்த்தி தமிழக முதல்வர் உத்தரவு
பிரச்னைகளை தீர்க்காததால் பி.இ.டி., ஆசிரியர் உண்ணாவிரதம்

சாதாரண பிரச்னைகளை தீர்ப்பதற்குக் கூட அதிகாரிகள் முன் வராததால், 10ம் தேதி, மாநில அளவில், உண்ணாவிரத போராட்டம் நடத்த, உடற்கல்வி ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். அரசு ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, உடற்கல்வி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பது, உடற்கல்வி ஆசிரியர்களின் பிரதான கோரிக்கைகளாக உள்ளது.

மேலும், சம்பந்தமே இல்லாமல், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, கணிதத் தேர்வு நடத்தும் முறையை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். 1985ல், பள்ளிகளில் உள்ள விளையாட்டு நிதியை கையாளும் பொறுப்பு, உடற்கல்வி ஆசிரியர்களிடம் இருந்தது. அதனால், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பணிக்கு வருபவர்கள், கணக்கு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிலை இருந்தது.

தற்போது, பள்ளி தலைமை ஆசிரியர்களின் கீழ், அனைத்து பொறுப்புகளும் வந்துவிட்டன. இந்த நிலையிலும், கணக்கு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும், இதை காரணம் காட்டி, பதவி உயர்வு வழங்க மறுப்பதும், எந்த வகையில் நியாயம் என, உடற்கல்வி ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

எந்த பிரச்னைகளும் தீர்க்கப்படாததால், உடற்கல்வி ஆசிரியர்கள், மாநில அளவில், வரும் 10ம் தேதி, சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.
பேராசிரியர்கள் பற்றாக்குறை: மாணவிகளின் எம்.பில்., படிப்பு கனவு தகர்ந்தது
சிவகங்கை அரசு மகளிர் கல்லூரியில் போதிய பி.எச்.டி.,பேராசிரியர் இன்றி, எம்.பில்., சேர முடியாமல் மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இக்கல்லூரி வணிகவியல் துறையில், கடந்த ஆண்டு எம்.பில்., ஆய்வு படிப்பு கொண்டு வரப்பட்டது. முதுகலை வணிகவியல் பட்டம் பெற்ற மாணவிகள் எம்.பில்.,லில் சேரலாம். பி.எச்.டி., முடித்த பேராசிரியர்கள் தான் இவர்களுக்கு வழிகாட்டியாக நியமிக்க முடியும்.

கடந்தாண்டு 3 பேராசிரியர்கள் மட்டும் இருந்ததால் தலா ஒருவருக்கு 2 பேர் வீதம் 6 மாணவிகளை எம்.பில்., வகுப்பில் சேர்த்தனர். 2013-14ம் கல்வியாண்டில் 18 பேர் எம்.பில்.,வகுப்பில் சேர விண்ணப்பித்தனர். தற்போது 2 பேராசிரியர்கள் மட்டுமே பணியில் இருப்பதால், 4 மாணவிகள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

போதிய பேராசிரியர்கள் இன்றி மற்ற மாணவிகளுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கூடுதல் மாணவிகளை சேர்க்க, கல்லூரி நிர்வாகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கு பரிந்துரை செய்தும் அனுமதி கிடைக்கவில்லை. இக்கல்லூரி வணிகவியல் துறையில் எம்.பில்., படிப்போரின் எண்ணிக்கை 2 வது ஆண்டாக குறைந்தது.

பாதிக்கப்பட்ட மாணவிகள் கூறுகையில், "பின் தங்கிய மாவட்டத்தில் உயர் படிப்பிற்கு அனுமதி கிடைப்பதே அரிது. அதிலும், போதிய பேராசிரியர்கள் இன்றி, எம்.பில்., போன்ற ஆய்வு படிப்புகளை படிக்க முடியாத நிலை தொடர்கிறது. இக்கல்லூரியில் பணியில் 2 பேராசிரியர்களும் கூடுதல் மாணவிகளுக்கு வழிகாட்ட அழகப்பா பல்கலை அனுமதித்தால் மேலும் சிலருக்கு வாய்ப்பு கிடைக்கும்," என்றனர்.

கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது, "இத்துறையில் ஒருவர் மாற்று பணியில் சென்றதால் 2 பேராசிரியர்கள் மட்டுமே உள்ளதால் 4 மாணவிகளை சேர்க்க முடிந்தது. மற்ற அரசு கல்லூரிகளில் பி.எச்.டி.,முடித்த ஒரு பேராசிரியர் 5 எம்.பில்.,மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கின்றனர். சிவகங்கையில் இந்நிலை நீடித்தால் எம்.பில்.,ஆய்வு படிப்பு கொண்டு வந்ததன் நோக்கம் நிறைவேறாது," என்றனர்.
அஇகதி - அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் SMDC சிறப்பு கூட்டம் 15.08.2013 அன்று நடத்த இயக்குநர் உத்தரவு
TRB - PG TRB EXAM - 2013 - TAMIL TENTATIVE CUT OFF
 
டி.இ.டி., தேர்வை கண்காணிக்க கலெக்டர்கள் தலைமையில் குழு

ஆகஸ்ட் 17,18 தேதிகளில் நடக்க உள்ள டி.இ.டி., தேர்வை கண்காணிக்க, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில், சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன,'' என, டி.ஆர்.பி., புதிய தலைவர், விபு நய்யார் தெரிவித்தார். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, வரும், 17,18 தேதிகளில், டி.இ.டி., போட்டித் தேர்வு
நடக்கிறது. 17ம் தேதி காலை, இடைநிலை ஆசிரியர் பணிக்கான முதல் தாள் தேர்வு நடக்கிறது. இதை, 2,68,160 பேர் எழுதுகின்றனர். மறுநாள் 18ம் தேதி காலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு நடக்கிறது. இதை, 4,11,634 பேர் எழுதுகின்றனர். முதல் தாள் தேர்வு, 870 மையங்களிலும், இரண்டாம் தாள் தேர்வு, 1,070 மையங்களிலும் நடக்கின்றன. ஏழு லட்சம் பேர், தேர்வை எழுதுவதால், தேர்வை கண்காணிப்பதற்கு, டி.ஆர்.பி., தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. டி.ஆர்.பி., புதிய தலைவராக, விபு நய்யார் பதவியேற்றுள்ள நிலையில், டி.இ.டி., தேர்வு, விரைவில் நடக்க உள்ளது.

தேர்வு ஏற்பாடுகள் குறித்து, விபு நய்யார் கூறியதாவது: அதிகமான தேர்வர்கள் பங்கேற்பதால், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகளை, முழுவீச்சில் செய்து வருகிறோம். மாவட்ட கலெக்டர்கள் தலைமையில், கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், மாவட்ட எஸ்.பி., மற்றும் மாவட்ட அளவில் உள்ள கல்வித்துறை அதிகாரிகள் இடம்பெறுகின்றனர்.இவ்வாறு, விபு நய்யார் கூறினார்.

இவராவது கவனிப்பாரா? : ஆசிரியர் தேர்வு வாரியம், ஆண்டுக்கு, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை, தேர்வு செய்யும் பணியை செய்து வருகிறது. ஆனால், இந்த அமைப்பில், போதுமான பணியாளர்கள் இல்லாத நிலை, பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த பிரச்னையை தீர்க்க, இதுவரை பதவியில் இருந்த தலைவர்கள், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது பதவியேற்றுள்ள புதிய தலைவராவது, பணியாளர்கள் பற்றாக்குறை பிரச்னையை தீர்க்கவும், டி.ஆர்.பி.,யின் உள் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பணியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆசிரியர்கள் நேரடியாக சென்று பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பி.எட். படிப்பு படிக்க தமிழக அரசு தடை, ஆனால் தொலைதூரக் கல்வி மூலம் மேற்படிப்பு படிக்க எவ்வித தடையும் இல்லை.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பி.எட். படிப்பு படிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால், தொலைதூரக்கல்வி மூலம் மேற்படிப்பு படிக்க எவ்வித தடையும் இல்லை.

உயர்கல்விக்கு ஊக்கத்தொகை

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் கல்வித்தகுதியை மேம்படுத்தி மாணவர்களுக்கு சிறந்த முறையில் பாடம் சொல்லிக்கொடுக்கும் வகையில் அவர்களின் கூடுதல் கல்வித்தகுதிகளுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது. ஆசிரியர்கள் தங்கள் பணிக்காலத்தில் அதிகபட்சம் 2 ஊக்க ஊதியங்கள் பெறலாம். (ஒரு ஊக்க ஊதியம் என்பது 2 இன்கிரிமென்ட் ஆகும்).

உதாரணத்திற்கு ஒரு இடைநிலை ஆசிரியர் பட்டப்படிப்பு முடித்தால் ஒரு ஊக்கத்தொகையும், பி.எட். முடித்தால் இன்னொரு ஊக்கத்தொகையும் பெறலாம். அதாவது அந்த ஆசிரியருக்கு 4 இன்கிரிமென்ட்டுகள் வழங்கப்படும். ஒரு இன்கிரிமென்ட் என்பது அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் (கிரேடு பே) 3 சதவீதத்தை குறிக்கும்.

விடுமுறை எடுத்துக்கொண்டு படிக்க தடை

இதேபோல் பட்டதாரி ஆசிரியர் முதுகலை பட்டமும், எம்.எட். பட்டமும் பெற்றால் இதேபோல் 2 ஊக்க ஊதியங்களை பெறுவார். அண்மையில் அவர்களுக்கு எம்.பில். பி.எச்டி. படிப்புகளுக்கும் ஊக்க ஊதியம் பெற அனுமதி வழங்கப்பட்டது. நேரடியாக கல்லூரிக்கு சென்று படிக்க விரும்பும் ஆசிரியர்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு படிக்கச் செல்வார்கள். அப்போது அவர்களுக்கு 50 சதவீத அடிப்படை சம்பளமும், முழு அகவிலைப்படியும் சம்பளமாக வழங்கப்படும்

இந்த நிலையில், அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு பட்டப்படிப்போ, பட்ட மேற்படிப்போ, பி.எட். படிப்போ படிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

தொலைதூரக்கல்வி படிக்கலாம்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் நேரடி சேர்க்கை மூலம் பி.எட். படித்த காலங்களை விடுமுறை விடுப்பு நீங்கலாக, அவர்களின் கணக்கில் இருப்பில் உள்ள ஈட்டிய விடுப்பு மற்றும் சொந்த அலுவலின் பேரில் ஈட்டா விடுப்பு வழங்கியும் அந்த விடுப்புகள் போக மீதி நாட்களுக்கு ஊதியமில்லா விடுப்பு வழங்கியும் முறைப்படுத்த பள்ளிக்கல்வி இயக்குனருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்த அனுமதியானது அரசாணை வெளியிடப்படும் நாளுக்கு முந்தைய நாளில் (22.7.2013) நேரடி சேர்க்கை மூலம் பி.எட். படித்த அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டுமே பொருந்தும். தற்போது பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் தொலைதூரக்கல்வி மூலம் பி.எட். படிப்பு, பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்புகள் படிக்க ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும்

அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விடுப்பில் செல்ல அனுமதி வழங்கி அவர்கள் நேரடி சேர்க்கை மூலம் படிக்க செல்வதால் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படுகிறது. எனவே இனி வரும் காலங்களில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நேரடி சேர்க்கை மூலம் பி.எட், பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு படிக்க அனுமதி வழங்குவதை தவிர்க்குமாறு பள்ளிக்கல்வி இயக்குனருக்கு அறிவுறுத்தப்படுகிறது.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment