Tuesday, August 27, 2013

சிறு நீரகக் கற்கள் என்றால் என்ன..?
.............................................................
அவை எப்படித் தோன்றுகின்றன..?
.................................
.........................

நாம் உண்ணும் உணவுப்பொருட்களிலும்,குடிக்கும் நீரிலும் கால்ஷீயம், மக்னீசியம்,ஆக்ஸ்லேட்,பாஸ்பேட்,யூரியா முதலிய உப்புக்கள இருக்கின்றன்.

பொதுவாக தேவைக்கு அதிகமான இவ் உப்புக்கள்,சிறுநீரகச் செயலியல் நிகழ்வால் சிறுநீர்மூலம் வெளியேறுகிறது.

செயலியல் பாதிப்பு,தொற்று நோய்கள் முதலிய காரணங்களாலும்,உப்புக்களின் அளவு அதிகமாகும் போதும் இத்தகைய உப்புக்கள் சிறுநீரில் முழுமையாக

வெளியேறாமல், சிறு நீர்ப்பாதையில் தங்கும் சிறுநீர்,சிறுநீர்ப்பை இவற்றை இணைக்கும் குழல்கள் போன்ற நுண் உறுப்புகளில் உப்புக்கள் படிகம் போல்ப் படிந்து சிறுகச்,சிறுகச் சேர்ந்து கல் போல் பெரிதாகும்.

இதைத்தான் சிறுநீரகக் கல் என்கின்றோம்.

சிறுநீர்ப்பையில் புரோஸ்டேட் சுரப்பி வீங்கிக் கொள்ளும்போது
சிறிநீர் வெளியேறுவதில் தடை ஏற்ப்படுவதாலும் சிறுநீர்கக் கல் உண்டாகலாம்.

அடிக்கடி சிறுநீர்ப்பாதையில் அழற்ச்சி ஏற்படும்போதும் சிறுநீரகக் கல் ஏற்பட வாய்ப்பு உண்டு.

பாராதைராய்டு சுரப்பியின் 'பாராத்தார்மோன்' அதிகச் சுரப்பு காரணாமாக இரத்தக் கால்ஷியத்தின் அளவு கூடி,

சிறுநீரகக் கல் (Renal Calculi) தோன்றும்

...............................................

அறிந்து வைத்துக் கொள்வோம்...

.........................................................
தொப்பையை கரைத்து இளமையை மீட்க உதவும் யோக முத்திரா : யோகப் பயிற்சி 11










                  ஆசனங்கள், தியானம், உடற்பயிற்சி என்று எதுவாக இருந்தாலும் வயிற்றில் கழிவுகள் இல்லாமல் சுத்தமாக இருப்பது அவசியம். அதற்கு யோக முத்திரா உதவுகிறது. யோக முத்திராவை தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு முதுகுதண்டில் உள்ள இறுக்கம் நீங்குகிறது. இளமை ஏற்படுகின்றது.

                    முதுகு தண்டுவடம் வழியாக செல்லும் உடலின் முக்கிய நரம்புகள் எல்லாம் பலம் பெறுகின்றன.  நல்ல ஆரோக்கியத்தை எட்டுகின்றன. நாள் முழுவதும் சுறுசுறுப்பு தொடர்கிறது. முகத்தில் பொலிவும், தேஜசும் ஏற்படுகிறது. முக்கியமாக இரண்டு குதிக்கால்களும், பெருங்குடலும் இந்த ஆசனத்தின் போது நன்றாக அழுந்துவதால் நீடித்த மலச்சிக்கலும் நீங்குகிறது.

குடலை கழுவினால் மட்டுமே உடலை வளர்க்க முடியும் என்பது தமிழ்வாக்கு. அதற்கேற்ப மலச்சிக்கலை நீங்கி மனச்சிக்கலையும் நீக்குவதால் யோக முத்திரா ஆசனங்களில் முத்திரை பதிக்கிறது. இந்த ஆசனம் எளிமையானது.

செய்முறை:

          பத்மாசனத்தில் அமரவும். இரண்டு உள்ளங்கைகளையும், இரண்டு குதிங்கால்களின் மேல் வைத்து கைவிரல்களை மூடிக் கொள்ளவும். நிமிர்ந்து நேரே உட்காரவும். நுரைஈரல் நிரம்பும் அளவு நன்றாக மூச்சை உள் இழுக்கவும். இப்போது மூச்சை விட்டுக் கொண்டே முன்பக்கம் தரையை மூக்கு தொடும் வரை குனியவும். இந்த நிலையில் 10 முதல் 15 நொடிகள் இருக்கவும். இப்படி இருக்கும் போது மூச்சை சௌகரியப்படி விடவும் வாங்கவும் செய்யவும். மூச்சை அடக்க வேண்டிய அவசியம் இல்லை. பிறகு மூச்சை இழுத்தவாறே நிமிர்ந்து சாதாரண நிலைக்கு வரவும். இந்த மாதிரி அவரவர்க்கு வேண்டியபடி மூன்று முதல் 7 தடவைகள் வரை செய்யலாம்.

               இந்த ஆசனம் பார்ப்பதற்கு சுலபமாக தோன்றினாலும் செய்வதற்கு அவ்வளவு எளிதாக வந்து விடாது. சிலருக்கு என்ன செய்தாலும் மிகவும் அடிப்படையான ஆசனமான பத்மாசனம் போடவே வராது. அவர்கள் பத்மாசனம் நன்றாக செய்ய வரும் வரை, சாதாரணமாக அமரும் முறையில் சுகாசனத்தில் உட்கார்ந்து, இரண்டு முழங்கால்களுக்கு மேல் இரண்டு உள்ளங்கைகளை வைத்து அழுத்திக் கொண்டு, முன்னுக்கு குனிந்து மூக்கு தரையை தொட முயற்சிக்க வேண்டும். இரண்டு கைகளையும் பின்னுக்கு கட்டிக் கொண்டு தொடவும் முயற்சி செய்யலாம்.

                  அல்லது சுகாசனத்தில் இரண்டு பெருவிரல்களை கைகளால் பிடித்துக் கொண்டு முன்னுக்கு குனியவும் செய்யலாம். இவைகள் எல்லாம் பத்மாசனம் வராதவர்களுக்கு தான். ஆனால் இடையிடையில் பத்மாசனமும் போட்டு பழக வேண்டும். பிறகு முன் சொன்னது போல் பத்மாசனத்திலிருந்தே குனிய முயற்சி செய்ய வேண்டும். கைகளை குதிகாலின் மீது வைத்துக் கொண்டும் குனியலாம். கைகளை குதிகாலின் மேல் வைத்துக் கொண்டு குனிவது கடினமாக இருந்தால், பின்னுக்கு கைகளை கட்டிக் கொண்டு குனியலாம். சில நாட்களுக்கு பின் கைகளை குதிக்கால்களின் மேல் வைத்துக் குனியலாம். பத்மாசனம் போட்ட படி குனிவதால், கால்கள் ஒன்றை ஒன்று அழுத்தி முதலில் வலிக்கும். நாளடைவில் பழக்கமானால் வலி இருக்காது. சிலருக்கு முன்னுக்கு குனிந்து மூக்கைத் தரையைத் தொட முயற்சி செய்யும் போது பிருஷ்ட பாகம் தூக்கிக் கொள்ளும். அப்படி நேராமல் அழுத்தமாய் தரையில் உட்கார்ந்து பழக வேண்டும்.

                சிலருக்கு தொடை பகுதி அதிக சதைகளுடன் மிகவும் பெரிதாக இருக்கும் போது அவர்கள் முன்குனிந்து தரையைத் தொட கடினமாக இருக்கும். சிலருக்கு வயிறு கொழுப்பு சேர்ந்து தொப்பை விழுந்து இருப்பதாலும் முன்குனிய முடியாது. அவர்கள் எல்லாரும் மற்ற ஆசனங்களுடன் யோக முத்திரவையும் முயற்சி செய்து வந்தால், நாளடைவில் வயிறு, இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் உள்ள சதை, நரம்புகள் இளக்கம் பெற்று யோக முத்திரா செய்வதற்கு எளிதாகும். இந்த ஆசனம் செய்ய செய்ய தொப்பை பெருமளவு கரைந்து விடும். வயிற்றை சுற்றி உள்ள கொழுப்பு தான் சர்க்கரை நோய்க்கான அடிப்படை காரணம் என்று தற்போது சொல்கிறார்கள்.

               இந்த வயிற்றை சுற்றிய கொழுப்பை யோக முத்திராவில் எளிதில் கரைத்து, தொப்பையை போக்கி மிகவும் இளமையுடன் காட்சியளிக்க முடியும். தொப்பை கரைவதால் மிகவும் சுறுசுறுப்பு வந்து சேரும். சிலர் ஒல்லியாய் இருப்பார்கள். இவர்களுக்கு தொப்பையும் இருக்காது. ஆனால் இவர்களுக்கும் யோக முத்திரா செய்ய சுலபமாக வராது. காரணம், இவர்களது முதுகுஎலும்பு கட்டை பாய்ந்து இருக்கும். அதாவது, குனிந்து நிமிரும் உடற்பயிற்சிகளே இல்லாத காரணத்தால் முதுகுஎலும்பு வளைய முடியாமல் கட்டை போன்று திடமாக காணப்படும். இவர்களும் தொடர்ந்து யோக முத்திராவை பயிற்சி செய்யும் போது நன்றாக வளைந்து தரையை தொட முடியும்.

                யோக முத்திராவால் முதலில் மூக்கை வைத்து தரையை தொடுவதும்,பின்னர் வாயால் தரையை தொடுவதும் என்று நன்றாக பழக்கமான பிறகு அதே நிலையில் 20 எண்ணும் வரை இருக்க வேண்டும். யோக முத்திரா முழுமையான நிலையில் சாதாரணமாக மூச்சை இழுக்கவும், விடவும் செய்யலாம்.

குறிப்பு;
                        யோக முத்திராவை வழக்கமாய் செய்யும் பெண்கள் கர்ப்பனமானால் இரண்டு மாதங்கள் வரை தான் செய்ய முடியும். அதன்பின் கைகளை வயிற்றின் குறுக்கே வைக்காமல் 1 மாத கால அளவிற்கு செய்யலாம். இந்த காலத்திற்கு மேல் கர்ப்பமான பெண்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது. மிகவும் முக்கியமாக கர்ப்ப காலத்தில் இந்த ஆசனத்தை பழகவே கூடாது. பத்மாசனத்தில் மட்டும் உட்காரலாம்.

ஒரு நபர்க் குழுவின் பரிந்துரை அடிப்படையில் டிப்ளமோ பட்டம் கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட பணியிடங்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.9300, தர ஊதியம் ரூ.4200 வழங்கப்பட்டுள்ளது என அரசு அறிவிப்பு



ALM- படைப்பாற்றல் கல்வி - பள்ளிகளின் தரத்தை ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்கு பதிலாக 3ம் தேதிக்குள் மாநில திட்ட இயக்ககத்திற்கு அனுப்ப உத்தரவு

SPD - ALM GRADE - SCHOOL GRADE TO BE SUBMIT WITHIN 3RD OF EVERY MONTH REG PROC CLICK HERE...



TNPSC - GROUP - IV - பொதுத் தமிழ் மற்றும் பொதுத் தேர்வு உத்தேசமான வினா - விடைகள் மற்றும் விளக்கங்கள்

TO DOWNLOAD TNPSC GROUP - IV GK PAPER CLICK HERE...

TO DOWNLOAD TNPSC GROUP - IV - TAMIL PAPER CLICK HERE...

TO DOWNLOAD TNPSC GROUP - IV TAMIL PAPER CLICK HERE...


அரசு பள்ளிகளில் 652 கணினி ஆசிரியர்களை இன்னும் 2 மாதங்களில் நியமனம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு



ஒரு நல்ல ரெஸ்யூமை தயாரிப்பதற்கான சிறந்த ஆலோசனைகள்

ஒரு நல்ல வேலை வாய்ப்பை பெறுதல் என்ற போர்க்களத்தில், ரெஸ்யூம் என்பது ஒருவரின் சிறந்த ஆயுதம் போன்றது. எனவே, அந்த ஆயுதத்தை எப்படி வடிவமைப்பது என்ற கலையை கற்றுக்கொள்பவர் வெற்றியடைவார்.

அது தொடர்பான விரிவான ஆலோசனைகளை இக்கட்டுரை அலசுகிறது.

எது முக்கியம்

ஒருவர், முதல் தடவை தனது ரெஸ்யூமை தயார் செய்ய தொடங்கும்போது, அவர் செய்த சில முக்கிய சாதனைகள், அவரின் சிறப்பான திறமைகள் மற்றும் ஆற்றல்கள் குறித்து குறிப்பிட மறந்துவிடுவார். மாறாக, வாங்கிய பட்டம் அல்லது டிப்ளமோ படிப்பிற்கான சான்றிதழ்களின் விபரங்கள், படித்து முடித்த வருடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகிய விஷயங்களை மட்டுமே பிரதானமாக குறிப்பிடுவார். இந்த தவறை பலரும் செய்கிறார்கள்.

மாறாக, ரெஸ்யூம் எழுதுபவர்கள், இரைச்சலும், தொந்தரவும் இல்லாத ஒரு தனியிடத்தில் அமர்ந்துகொள்ள வேண்டும். தாங்கள் எந்தப் பணிக்கு விண்ணப்பிக்க போகிறோமோ, அதுதொடர்பாக செய்த சில முக்கிய சாதனைகள், பெற்ற சிறப்பு பயிற்சிகள், தனக்கு இருக்கும் தனித் திறன்கள் ஆகியவற்றைப் பற்றி தெளிவாகவும், முக்கியத்துவம் கொடுத்தும் குறிப்பிட வேண்டும்.

உங்களின் ஆலோசனைகள்

நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், அந்த நிறுவனத்தைப் பற்றிய விபரங்களை தெளிவாக அறிந்துகொள்வது அவசியம். இணையதளத்தில் விபரங்களைத் தேடினால், குறிப்பிட்ட அளவு தகவல்களே கிடைக்கும். எனவே, அந்த குறிப்பிட்ட நிறுவத்தில் பணிபுரியும் யாரேனும் சில ஊழியர்களை சந்தித்துப் பேசி, தேவையான விபரங்களை தெரிந்துகொண்டு, அங்கே என்னவிதமான பிரச்சினைகள் இருக்கின்றன என்பதையும் தெரிய முயற்சிக்க வேண்டும்.

உங்களின் விண்ணப்பத்தில், பிரச்சினை என்னவென்று குறிப்பிடாமல், அதேசமயம், அதற்கான தீர்வுகளை உங்களின் ஆலோசனை வடிவில் எழுதியனுப்ப வேண்டும். உயர் நிர்வாக கமிட்டியில் இருப்பவர்கள், இதுபோன்ற ஆலோசனைகளால் கவரப்படுவார்கள். எனவே, உங்களுக்கான நேர்முகத் தேர்வு அழைப்புக் கடிதம் இதன்மூலம் உறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

படிப்பதற்கு எளிதாக...

உங்களின் ரெஸ்யூம் தெளிவாகவும், தரமாகவும் இருக்கும் அதே நேரத்தில், படிப்பவருக்கு எளிதாக இருப்பதும், மிக முக்கியமான அம்சம்.

ரெஸ்யூம் எத்தனை பக்கம்

ரெஸ்யூம் தயாரிப்பை பொறுத்தவரை, சில கட்டுப்பெட்டியான விதிகள் வலியுறுத்தி சொல்லப்படுகின்றன. அதாவது, ரெஸ்யூம், பொதுவாக, ஒரு பக்கம் மட்டுமே இருக்க வேண்டும் என்பது. ஆனால், இந்த விதி பெரும்பாலும் புதிதாக படிப்பை முடித்த பட்டதாரிகளுக்கு பொருந்தினாலும், அதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை. நிறைய முக்கிய விஷயங்கள் இருந்தால், 2 பக்க ரெஸ்யூம் தயார் செய்யலாம். ஆனால், எக்காரணம் கொண்டும், 2 பக்கங்களுக்கு மிகாமல் ரெஸ்யூம் தயார் செய்யப்பட வேண்டும்.

தகவல் பரிமாற்றம்

உங்களின் ரெஸ்யூமில், உங்களின் பலவித தொடர்புகொள்ளும் விபரங்களைத் தெரிவிப்பது மிக்க நன்று. உங்களின் வீட்டு விலாசம், மொபைல் எண், வீட்டு தொலைபேசி எண், ஈ-மெயில் முகவரி உள்ளிட்ட விஷயங்களை தெரிவிக்கவும். ஏனெனில், உங்களை எந்த நேரத்திலும் எளிதாக தொடர்பு கொள்ளும் வசதியை, வேலை வழங்குநருக்கு, இவற்றின் மூலமாக நீங்கள் வழங்க வேண்டும்.

இவற்றை தவிருங்கள்

நீங்கள் ரெஸ்யூம் தயாரிக்கும்போது, I, My, Me, Mine ஆகிய தனிப்பட்ட pronoun -களை தவிர்ப்பது நல்லது. உதாரணமாக,
I was incharge of the entire purchase function in the ---------- company என்று எழுதுவதற்கு பதில், Incharge of the entire purchase function of the ------- company என்று எழுதலாம்.

முன்அனுபவ விபரம்

உங்களின் முன்அனுபவ விபரங்களைப் பற்றி குறிப்பிடும்போது, சற்று கவனமாக செயல்படுவது நல்லது. உதாரணமாக, எந்த நிறுவனம், உங்களின் பணி நிலை, காலகட்ட விபரம், நிறுவனத்தின் பெயர் மற்றும் விலாசம் ஆகிய விபரங்களைத் தெளிவாக குறிப்பிட வேண்டும்.

மேலும், அவற்றின் காலவரிசையை சரியாக குறிப்பிட வேண்டும். உதாரணமாக, தற்போது பணிபுரிந்துகொண்டிருக்கும் நிறுவன விபரத்தை முதலிலும், இதற்கு முன்னர் இருந்ததை அடுத்ததாகவும், பின்னர் மற்றதை, அடுத்தடுத்த வரிசையிலும் குறிப்பிடலாம்.

தொழில்நுட்ப சவால்

பல நிறுவனங்களில், ரெஸ்யூம்களின் ஆரம்ப ஸ்கிரீனிங் பணியை, கணினிகளே மேற்கொள்கின்றன. நீங்கள், ரெஸ்யூமை பிரின்ட் வடிவில்(hard copy) அனுப்பினால், கீழ்கண்ட அம்சங்களை கவனத்தில் கொள்ளவும். அவை,

* பிரின்ட் எடுத்த அசல் ரெஸ்யூமை அனுப்ப வேண்டும். எக்காரணம் கொண்டும் அதன் நகலை(xerox) அனுப்பக்கூடாது. Times New Roman அல்லது Courier ஆகிய டைப் எழுத்துக்களைப் பயன்படுத்த வேண்டும். மேலும், எழுத்தின் அளவு 11 அல்லது 12 என்ற அளவில் இருக்க வேண்டும். அதேசமயம் bold facing -ஐ தவிர்க்க வேண்டும்.

* உங்கள் படிப்பு உள்ளிட்ட விபரங்களைத் தெரிவிக்கும் வகையில், அட்டவணை எதையும் பயன்படுத்த வேண்டாம்.

* ரெஸ்யூமின் மேல் பகுதியில் உங்களின் பெயரை குறிப்பிட வேண்டும்.

* அதேசமயம், உங்கள் ரெஸ்யூமை soft copy முறையில் வழங்கினால், குறிப்பிட்ட key word -களை ரெஸ்யூம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். ஏனெனில், விண்ணப்பிக்கப்படும்  பதவிக்காக, வேலை வழங்குநர்கள் அவற்றை எதிர்பார்க்கிறார்கள். அந்த key words, உங்கள் ஸ்பெஷலைசேஷன் துறையுடன் தொடர்புடையவை.

* கணினிகள் உங்கள் ரெஸ்யூமை ஸ்கிரீனிங் செய்கையில், அந்த வார்த்தைகளின் எண் அடிப்படையில், சம்பந்தப்பட்ட key words -களை தேடும். எனவே, அவை இல்லையெனில், உங்களின் ரெஸ்யூம் ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கப்பட்டுவிடும்.

சில நொடிகள்தான்...

பொதுவாக, உங்களின் ரெஸ்யூமை படிக்க, நேர்முகத் தேர்வாளர், அதிகபட்சமாக 10 முதல் 20 நிமிடங்களே எடுத்துக்கொள்வார். அந்த நேரத்திற்குள், அவரை ஈர்க்கும் விதமாக, நீங்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு பொருத்தமாக, உங்களிடம் இருக்கும் தகுதிகளை highlight செய்து குறிப்பிட வேண்டும்.

ஒரே மாதிரி ரெஸ்யூமை, வேறுபட்ட நிறுவனங்களில், வேறுபட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கையில் வழங்கக்கூடாது. பல விஷயங்கள் ஒரே மாதிரியே இருந்தாலும், objective statement என்பது மாறும். குறிப்பிட்ட பணிக்கு தேவையான தகுதி நிலைகள் அதற்குள்தான் தெரிவிக்கப்பட்டிருக்கும். எனவே, பல மாதிரிகளில் ரெஸ்யூம்களை வடிவமைத்து, அவற்றை pen drive மூலமாக சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.

தனித்தன்மை

வேலைதேடும் பல இளைஞர்கள், Microsoft Word -ன் ரெஸ்யூம் templates மற்றும் wizards பயன்படுத்துகிறார்கள். இது தவறில்லை என்றாலும், உங்களின் சொந்த வடிவமைப்பை(design) பயன்படுத்துவதே சிறந்தது. ஏனெனில், இதன்மூலம், நீங்கள் தனித்து அடையாளம் காணப்படுவீர்கள்.

அனுபவத்தை தெரிவித்தல் முறை

உங்களின் பழைய பணி அனுபவங்களை தெரிவிக்கையில்,

I was responsible for ----------
My duties included ---------------
I was incharge of ---------

போன்ற நடைகளில் குறிப்பிடாதீர்கள். மாறாக, My

contributions were -----------
My accomplishments were ---------
My interventions were -----------

போன்ற நடைகளில் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான், வேலை வாய்ப்பு சந்தையில் உங்களுக்கான மதிப்பு உயரும்.

நேர்மறை அம்சங்கள்

உங்கள் ரெஸ்யூமில், நேர்மறை அம்சங்கள் இடம்பெறுவது முக்கியம். ஆனால், சிலருக்கு, தனது நேர்மறை விஷயமாக எதை குறிப்பிடுவது அல்லது எது இருக்கிறது என்ற சந்தேகமும், குழப்பமும் தோன்றும். அந்த நிலையில், உங்களுடன் முன்பு பணியாற்றிய நபர்களிடம், நீங்கள் கண்டுணர்ந்த குறைகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள்.

அந்தக் குறைகள் உங்களிடம் இல்லையெனில்,

No comments:

Post a Comment