Tuesday, November 12, 2013

செய்தி

10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு அரசு அறிவித்துள்ள மாற்றங்கள்


         தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகள்  முக்கியத்துவம் வாய்ந்தவை. இதில் பெறும் மதிப்பெண்களே அடுத்தடுத்த உயர்கல்விகளுக்கு வழிகாட்டுகிறது. வரும் மார்ச் முதல் நடக்க இருக்கும் பொதுத்தேர்வுகளில் தற்போது பல்வேறு மாற்றங்களை அரசு அறிவித்துள்ளது.
இதற்கு முன்பு தேர்வெழுதும் மாணவரிடம் மெயின் சீட் வழங்கப்பட்டுகூடுதலாக எழுதுவதற்கு அடிசனல் சீட்கள் அடுத்தடுத்து வழங்கப்படும். ஆனால் தற்போது 12ம் வகுப்பிற்கு 40 பக்கங்களும், 10ம் வகுப்பிற்கு 30 பக்கங்களும் கொண்ட மொத்தமாக பைன்ட் செய்த கோடிங் ஷீட் பண்டல் வழங்கப்படும். இதனால் கூடுதல் பேப்பருக்கு மாணவர் எழுந்து நிற்பதும்ஆசிரியர் கையெழுத்துப் பெற்று ஒவ்வொரு முறையும் பேப்பர் வழங்குவதும் இருக்காது. இதனால் மாணவர்ஆசிரியர் நேர விரயம் தடுக்கப்படுவதுடன்ஒரு மாணவரது அடிசனல் ஷீட்டை வாங்கி மறைத்து வைத்து மற்றொரு மாணவர் காப்பியடிப்பதும் தடுக்கப்படும்.

              இதேபோல் ஒரு தேர்வு மையத்திற்கு அதிகபட்சம் 400 மாணவர்கள் மட்டுமே தேர்வெழுத முடியும். அதற்கும் மேல் மாணவர்கள் இருந்தால் அருகாமை பள்ளி தேர்வு மையத்திற்கு மாற்றப்படுவர். அல்லது அதே பள்ளியில் கூடுதல் மாணவர்களுக்கென மற்றொரு தேர்வு மையம் ஏற்படுத்தப்படும். இதுதவிர, முன்பு தேர்வு மையத்திற்கு வரும் ஒவ்வொரு வினாத்தாள் கட்டிலும், குறைந்தது நூறு வினாத்தாள்கள் இருக்கும். தேர்வு மைய அதிகாரிகள் இதனைப் பிரித்து, ஒவ்வொரு அறையிலும் இருக்கும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப வழங்குவர். ஆனால் இனிமேல், ஒரு அறைக்கு 20 மாணவர்களுக்கு மட்டுமே தேர்வெழுத இடம் ஒதுக்கப்படும். ஒவ்வொரு வினாத்தாள் கட்டிலும் 20 வினாத்தாள்களே இருக்கும். இதனால் வெளியில் உடைக்கப்பட்டு, வினாத்தாள் அவுட் ஆகி விட்டது என்ற குற்றச்சாட்டுகள் வராது.

12th Latest Study Material

Physics Study Material
  1. Physics 1st Volume Full Notes - Tamil Medium
  2. Physics 2nd Volume Full Notes - Tamil Medium
Prepared By Mr. B.Elangovan, PGAsst, PachaiyappasHSS, Kanchipuram
தொடக்கக்கல்வி 2013-14 ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி , மாதிரி கால அட்டவணை மற்றும் தினசரி செயல்பாடுகளுக்கான கால அளவு வழிக்காட்டு அட்டவணையினை தொடக்கக்கல்வி இயக்ககம் வெளியீடு | Elementary Dept 2013 -14 calendar

மாணவர்களிடம் சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த அஞ்சலக சேமிப்பு சேர்க்க ஆசிரியர்கள் ஒத்துழைப்பு தர தொடக்கக்கல்வி இயக்ககம்உத்தரவு

TNPSC GROUP-2 APPLICATION STATUS

மொகரம் பண்டிகை 14.11.2013 அன்றுக்கு பதிலாக 15.11.2013 மாற்றியமைக்கு அரசாணை மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு வெளியீடு

ஆசிரியர் தகுதித் தேர்வு: உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு
சரியான விடைக்கு மதிப்பெண் அளிக்காததால் ஆசிரியர் பணி நியமனம் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை விசாரணைக்கு ஏற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கும்படி, உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.


பட்டதாரி ஆசிரியர் பணி காஞ்சிபுரம் மாவட்டம், முட்டவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த, எம்.யுவராஜ் என்பவர், தாக்கல் செய்த மனு:
நான் பி.எஸ்சி., பி.எட்., பட்டம் பெற்றுள்ளேன். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தேன். கடந்த, ஆகஸ்ட்டில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் கலந்து கொண்டேன். இம்மாதம் 5ம் தேதி தேர்வு முடிவு வெளியானது. எனக்கு 89 மதிப்பெண் கிடைத்தது. தகுதி தேர்வில், "கட்-ஆப்" மதிப்பெண் 90 என்பதால், நான் தேர்ச்சி பெறவில்லை. "கீ" விடைத்தாளை பார்க்கும் போது அதில், சில விடைகள் தவறாக இருந்தன.

இது குறித்து 6ம் தேதி விரிவான மனுவை ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பினேன். மூன்று கேள்விகளுக்கு தவறான விடைகள் "கீ" விடைத்தாளில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மூன்று கேள்விகளுக்கும், எனக்கு மூன்று மதிப்பெண் அளித்திருந்தால் 92 மதிப்பெண் பெற்றிருப்பேன். ஆசிரியர் பணியும் கண்டிப்பாக கிடைக்கும். 

தேர்வு வாரியம் செய்த தவறுக்கு எங்களை தண்டிக்கக் கூடாது. எனவே, சான்றிதழ் சரிபார்ப்புக்கு என்னை அனுமதிக்க வேண்டும். அல்லது, பட்டதாரி கணித ஆசிரியர் பணியிடத்தில், ஒரு இடத்தை காலியாக வைத்திருக்க வேண்டும். மூன்று மதிப்பெண் அளித்து எனக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.

நிபுணர்கள் தயாரிப்பு
இம்மனு, நீதிபதி கிருபாகரன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எம்.ஆர்.ஜோதிமணியன் ஆஜரானார். ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி, "தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டு விட்டது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு இன்னும் யாரும் அழைக்கப்படவில்லை. நிபுணர்களை கொண்டு தான் விடைத்தாள் தயாரிக்கப்பட்டு உள்ளது," என்றார்.
இதையடுத்து, மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை இம்மாதம் 20ம் தேதிக்கு நீதிபதி கிருபாகரன் தள்ளிவைத்தார்.

"&'சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் போது, மனுதாரரையும் அனுமதிக்க வேண்டும்; மனு மீதான இறுதி உத்தரவைப் பொறுத்து அது அமையும்," என்றும், நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.
ஆசிரியர் தகுதித் தேர்வு: சர்ச்சைக்குரிய விடைகளை ஆய்வு செய்ய சிறப்பு நிபுணர் குழு

"ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) சர்ச்சைக்குரிய விடைகள் மற்றும் கேள்விகள் குறித்து ஆய்வு செய்ய அனுபவம் வாய்ந்த சிறப்பு நிபுணர் குழு அமைக்கப்படும்" என, டி.இ.டி., தேர்வர்களிடம் ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) தலைவர் விபு நய்யார் உறுதி அளித்தார்.

டி.இ.டி., தேர்வில் சரியான விடைகளுக்கு மதிப்பெண் வழங்காததால் ஒரு மதிப்பெண் மற்றும் இரு மதிப்பெண்களில் ஏராளமான தேர்வர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

இது குறித்து, தேர்வர்கள், டி.ஆர்.பி.,யிடம் முறையிட்டு வருகின்றனர். நேற்று 100க்கும் மேற்பட்ட தேர்வர்கள் சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஒரே நேரத்தில், அனைவரும் அலுவலகத்திற்குள் செல்ல முயற்சித்தனர். பின், தேர்வர்கள் சார்பில் இருவர் மட்டும் டி.ஆர்.பி., தலைவரை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.

அதன்படி, இரு தேர்வர், டி.ஆர்.பி., தலைவர் விபு நய்யாரை சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்து தேர்வர்கள் கூறியதாவது: தேர்வை நடத்துவதும், தேர்வு முடிவை வெளியிடுவதும் தான் டி.ஆர்.பி.,யின் வேலை. கேள்வித்தாளை வடிவமைப்பது, விடைகளை தயார் செய்வது, டி.ஆர்.பி., வேலை அல்ல. அனுபவம் வாய்ந்த பாட ஆசிரியர் குழு தான் இவற்றை செய்கிறது.

அப்படியிருந்தும், தேர்வில் பிரச்னை எனக் கூறி, இவ்வளவு பேர் வந்திருக்கிறீர்கள். எனவே, நீங்கள் குறிப்பிடும் கேள்விகள் மற்றும் விடைகள் குறித்து மீண்டும் ஆய்வு செய்ய குறிப்பிட்ட பாடங்களில் அனுபவம் வாய்ந்த சிறப்பு நிபுணர்களைக் கொண்டு சிறப்பு குழு அமைக்கப்படும். அக்குழு, என்ன முடிவு எடுக்கிறதோ அதன்படி, டி.ஆர்.பி. நடவடிக்கை எடுக்கும். மதிப்பெண்களில் மாற்றம் இருந்தால் இணையதளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, டி.ஆர்.பி., தலைவர் தெரிவித்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர்.

டி.ஆர்.பி., தலைவரின் கருத்தை அறிய முயன்றபோது, "சேர்மன், மீட்டிங்கில் இருக்கிறார்; இப்போது பேச முடியாது" என, அலுவலக ஊழியர்கள் தப்பித்தனர்.

No comments:

Post a Comment