Monday, November 4, 2013

NEWS

தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு வட்டார வள மைய அளவில்"READING AND WRITING ARITHMETICS SKILLS" பயிற்சி

மாநில திட்ட இயக்குநர் (அகஇ) அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.745/அ 11/பயிற்சி/2013, நாள். 10.2013ன் படி தொடக்க / உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான வட்டார வள மைய பயிற்சி கீழ்கண்ட அட்டவணைப்படி நடைபெறவுள்ளது.
மாநில அளவிலான முதன்மைக் கருத்தாளர்களுக்கான பயிற்சி

தொடக்க நிலை-06.11.2013

உயர் தொடக்கநிலை-08.11.2013

மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி

தொடக்க நிலை-12.11.2013

உயர் தொடக்கநிலை-19.11.2013


வட்டார வள மைய அளவில் "READING AND WRITING ARITHMETICS SKILLS" பயிற்சி

தொடக்க நிலை-16.11.2013

உயர் தொடக்கநிலை-23.11.2013

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு : சான்றிதழ் சரிபார்ப்பு
முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு கூடுதலாக அழைக்கப்பட்ட 213 பேருக்கு நவம்பர் 5 மற்றும் 6 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,881 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு கடந்த ஜூலை 22ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது. தமிழ் பாடத் தேர்வு வினாத்தாளில் 40 க்கும் அதிகமான பிழைகள் இருந்ததாக சர்ச்சை எழுந்தது. இதனைத்தொடர்ந்து தமிழைத் தவிர பிற பாடங்களுக்கு மதிப்பெண் பட்டியல் www.trb.tn.nic.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.இதனைத் தொடர்ந்து, 2770 பேர் அழைக்கப்பட்டு, கடந்த 22 மற்றும் 23ஆம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. ஒரே இன சுழற்சியில் சமமான மதிப்பெண் பெற்ற மேலும் 213 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவதாககடந்த 24ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இதன் அடிப்படையில் வரும் 5 மற்றும் 6ம் தேதி நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில், தற்போது அழைப்புக் கடிதம் பெற்றவர்களுடன், ஏற்கெனவே பங்கேற்க தவறியவர்களும் பங்கேற்கலாம் என்று டிஆர்பி தெரிவித்துள்ளது.

பூமியை போன்ற புதிய கிரகம் ‘கெப்ளர் -78பி’ கண்டுபிடிப்பு

பூமியை போன்றதொரு புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் நாசா சார்பில் விண்வெளியில் உள்ள கிரகங்களை ஆய்வு செய்ய அனுப்பப் பட்ட விண்கலம் ‘கெப்ளர்'. அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த டெலஸ்கோப் புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.

அந்த வகையில், தற்போது புதிய கிரகம் ஒன்றைக் கண்டு பிடித்துள்ளது கெப்ளர் விண்கலம்.

மழைக்கால நோய்கள் வராமல் தடுக்க

தமிழகத்தில் பருவமழை தொடங்கி விட்டது. இந்தக் காலத்தில் பெரும்பாலான நோய்கள் நம்மை எளிதாக தாக்கக்கூடும்.

பொதுவாகவே நாம் அருந்தும் குடிநீர் மூலமாகத்தான் நோய்கள் அதிகமாக தாக்குகிறது. அதுமட்டுமில்லாது வீட்டை சுற்றி நீர் தேங்கி இருப்பின் அதில் கொசுக்கள் உருவாகின்றன.

* நாளடைவில் தேங்கி இருக்கும் நீர் சாக்கடை போல் மாறி விடுகின்றது. வேறு வழியின்றி வீட்டிற்கு வெளியில் அந்த சாக்கடை நீரில் நடந்து செல்கிறோம். இவ்வாறு இருக்கும் போது வைரஸ் கிருமிகள் எளிதில் பரவி நோய்களை ஏற்படுத்துகிறது.

* சுகாதாரம் இல்லாத குடிநீர் மூலம் காலரா, வாந்தி, ப்ளூ காய்ச்சல், மஞ்சள் காமாலை ஆகிய நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் தாக்கும்.

* மழை நீர் தேங்கிய பகுதியில் உருவாகும் கொசுக்கள்  மூலம் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, மூளைக்காய்ச்சல், யானைக்கால் ஆகிய நோய்கள் வரலாம். மழை காலத்தில் தான் வழக்கத்தைவிட அதிகம் பேர் நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

இதுபோன்ற நோய்கள் நம்மை தாக்காமல் இருக்க எளிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வரலாம்.

* காய்ச்சல், சலதோஷம், இருமல் ஏற்படும் போது மருத்துவரிடம் சென்று தகுந்த மருந்துகளை எடுத்து கொள்ளலாம்.

* சரியாகிவிடும் என்று வீட்டிலேயே ஏதேனும் மாத்திரை போட்டுக் கொள்வதை தவிர்க்கவும்.

* தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் காய்ச்சல் நீடிக்கும் பட்சத்தில் ரத்தப் பரிசோதனை செய்து என்ன கிருமி தாக்கியுள்ளது என்பதை தெரிந்து கொண்டு, அதற்கு தகுந்தபடி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

* குழந்தைகளுக்கு மழைக் காலத்தில் கதகதப்பான ஆடைகளை அணிவிக்க வேண்டும். மழைக் காலத்தில் குடிக்கும் தண்ணீரை, காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.

* கூடுமானவரை பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு செல்பவர்கள் வீட்டில் காய்ச்சிய தண்ணீரை கொண்டு சென்று குடித்தால் மழை கால நோயில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

* மழைக் காலத்தின் போது சுத்தமாக இருக்கும் கழிவறைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

* வீட்டைச் சுற்றி கொசுக்கள் உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* வெளியே சென்று வீடு திரும்பியதும் கை, கால்களை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

* செருப்பு, ஷூ ஆகியவற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

* உணவு சாப்பிடும் முன்பு கட்டாயம் கைகழுவி விட்டு சாப்பிடுவது நல்லது. 

* வீட்டை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். குழந்தைகள் அவர்களுக்கே அறியாமல் கீழே இருப்பதை வாயில் எடுத்து வைத்துக் கொள்வர், எனவே குழந்தைகள் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம்.





No comments:

Post a Comment