BC, MBC மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம்மாணவர்களுக்கான விடுதிகள் கட்ட அரசு நிதி ஒதுக்கிசெய்தி வெளியீடு |
அரசு Cable TV மூலம் கல்வித்தொலைக்காட்சிஅலைவரிசையினை SSA மூலம் தொடக்க/நடுநிலை/உயர்/மேல்நிலை பள்ளிகளுக்கு வழங்க அரசாணை வெளியீடு |
கலை பண்பாட்டு ஆசிரியர் பதிவு மூப்பு
சென்னை கலை பண்பாட்டு இயக்கம் சார்பில் குரலிசை, தேவாரம், வயலின், நாதஸ்வரம், பரதநாட்டியம் மற்றும் தவில் பாடங்களுக்கு, ஆசிரியர் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
1.7.2012 அன்று 30 வயது முடிந்த, 58 வயது நிறைவடையாதவராக இருக்க வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 20.11.2012 வரை பதிவு செய்தவர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி, கோவை, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர், புதுக்கோட்டை மற்றும் கன்னியாகுமரி வரையுள்ள பதிவுதாரர்கள், பதிவை இன்று (நவம்பர் 27) நேரில் பதியலாம் என வேலைவாய்ப்பு அலுவலர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.
|
64 உடற்கல்வி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கநவ., 30 கடைசி
தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனம் மூலம் பயிற்றுவிக்கப்படும் 64 வகையான உடற்கல்வி படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எம்பிஏ பொது, எம்பிஏ ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட், எம்.எஸ்சி யோகா, யோகா தெரபி, சைக்காலஜி, யோகா நேச்சுரோபதி, டிப்ளமோ இன் யோகா, பிட்னஸ் அண்டு நியூட்ரிஷன் உள்ளிட்ட 64 வகையான எம்.பி.ஏ., எம்.எஸ்சி, பி.எஸ்சி., டிப்ளமோ மற்றும் சான்றிதழ் உடற்கல்வி படிப்புகள் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனம் மூலம் பயிற்றுவிக்கப்படுகின்றன.
இந்தப் படிப்புகளுக்கான காலம், தகுதி, கல்விக் கட்டணம், விண்ணப்ப படிவம் போன்ற விவரங்களை பெற www.tnpesu.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.
|
அரசு சிறார் காப்பகங்கள்: மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
அரசு சிறார் காப்பகங்களின் செயல்பாடுகளை, மாவட்ட கலெக்டர்கள் கண்காணிக்க வேண்டும்" என, மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, ராயபுரம், எஸ்.என். செட்டி தெருவில் உள்ள, அரசு சிறார் காப்பகத்தில் இருந்து, கடந்த, ஜூன் மாத இறுதியில், 34 சிறார்கள், நள்ளிரவில் தப்பினர். இச்சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு, மாநில மனித உரிமைகள் ஆணையம், சமூக நலத்துறை மற்றும் சமூக பாதுகாப்பு துறை செயலர்களுக்கு, "நோட்டீஸ்' அனுப்பியது. அதிகாரிகள் அளித்த அறிக்கைகளின் அடிப்படையில், அரசுக்கு, மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஜெயந்தி, பிறப்பித்துள்ள உத்தரவு:
அரசு சிறார் காப்பகங்களில் உள்ள பிள்ளைகளுக்கு, சுகாதாரமான குடிநீர், சத்தான உணவுகளை வழங்குவதுடன், மாதம் இருமுறை, அவர்களுக்கு, மனநல ஆலோசனை,யோகா மற்றும் தியானப் பயற்சி அளிக்க வேண்டும்.
கழிவுநீர் பாதையை சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட, காப்பக துப்புரவு பணிகளில், சிறார்களை ஈடுபடுத்தக் கூடாது. சிறார்கள், தங்கள் குறைகளை தெரிவிக்க, அனைத்து காப்பகங்களிலும், புகார் பெட்டி வைக்க வேண்டும்.
மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள், காப்பகங்களில், மாதம் ஒருமுறையாவது ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.மேலும், மாவட்ட கலெக்டர்கள், காப்பகங்களின் செயல்பாடுகளை, தனிப்பட்ட முறையில் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
நடைமுறைக்கு வராத அரசாணை :பார்வையற்ற பட்டதாரிகள் அவதி
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான, தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணை இன்னும் நடைமுறைக்கு வராத நிலை தொடர்கிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் கல்வி பயிலவும், பணியில் சேரவும், 1 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இதற்கான அரசாணை, 2006ல் வெளியிடப்பட்டது. இந்த அரசாணையின் படி, இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுவதில்லை. இதனால், மாணவர்கள் கல்லூரிகளில் படிக்க இடம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
குறிப்பாக,"நெட், ஸ்லெட்&' தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், பிஎச்.டி., பயில இடம் கிடைப்பதில்லை. இதே போல, ஆசிரியர் பணிக்கு காத்திருக்கும், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள், ஆசிரியராக பணியமர்த்தப்படுவதில்லை.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பும் போதும், 1 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப் படுவதில்லை. அரசு தேர்வில் வெற்றி பெற்றவர்களும், இதுவரை பணியமர்த்தப்படாமல் உள்ளனர்.
தமிழகத்தில் செயல்பட்டு வரும், பார்வையற்றோருக்கான சிறப்பு பள்ளிகளில், 42 சதவீதம் பார்வையற்ற மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட வேண்டும் என, 2002ல் வெளியிடப்பட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த உத்தரவும், அமலுக்கு வரவில்லை.
முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வு ஊதியமாக, 1,000 ரூபாய் வழங்கப்படுவது போல, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் உதவித் தொகையை, 450 ரூபாயிலிருந்து, 1,000 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும். பார்வையற்ற மாற்றுத் திறனாளியை திருமணம் செய்து கொள்ளும், பார்வையுள்ளவர்களின், கல்வி தகுதிக்கேற்ப, அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் படிக்கும், பார்வையற்ற மாணவர்களுக்கான, கல்வி உதவித் தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித் தொகையை, இருமடங்காக உயர்த்தி தர வேண்டும். பார்வையற்ற மாணவர்களின் பாட நூல்களையும், மின் நூல்களாக மாற்றி, பேசும் மென்பொருள் பொருத்தப்பட்ட மடிக்கணினியை இலவசமாக வழங்க வேண்டும் என, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, பார்வையற்ற பட்டதாரிகளுக்கான கலை, இலக்கிய சங்கத்தினர் கூறியதாவது பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி, முதல்வரின் தனிப்பிரிவு, சமூகநலத்துறை அமைச்சர் ஆகியோருக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்காக மூன்றாண்டுகளாக அரசுடன் போராடி வருகிறோம். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடத்த உள்ளோம்,இவ்வாறு அவர் கூறினார்.
|
கல்வித் துறையில் நிரப்பப்படாத 1,200 கருணைபணியிடங்கள்
கல்வித் துறையில், கருணை அடிப்படையிலான, 1200 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் 15 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. இயக்குனர், கூடுதல் இயக்குனர், சி.இ.ஓ., தொடக்க கல்வி அலுவலகங்களில் 15 ஆயிரம் பணியிடங்கள் உள்ளன. ஆண்டுதோறும் பணி நியமனங்களில், 25 சதவீத காலியிடங்களை கருணை அடிப்படையில் காத்திருப்போருக்கு ஒதுக்க வேண்டும் என்பது விதி. ஆனால், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் ஆண்டுதோறும் நிரப்பப்பட்ட போதும், 1997 முதல், கருணை அடிப்படையில் காத்திருப்பவர்களுக்கு பணி வழங்காததால் காலிப்பணியிடம் 1200 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில தலைவர் பால்ராஜ் கூறியதாவது: இத்துறையில் உள்ள 15 ஆயிரம் பணியிடங்களில், 8 ஆயிரம் இடங்கள் வரை காலியாக உள்ளன. 15 ஆண்டுகளாக இப்பணியிடங்களை நிரப்பவில்லை. அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் உள்ளதால், அதிக இழப்புகளும் இந்த துறையில்தான் ஏற்படுகிறது. இதனால், 25 சதவீதம் இடஒதுக்கீடு என்பதையும் அதிகரிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
|
முப்பருவ கல்வி: புத்தகங்களுக்கு ஒப்புதல் பெறடிசம்பர் 7 கடைசி
முப்பருவ கல்வி முறை திட்டத்தின் அடிப்படையில் தயார் செய்யப்பட்ட புத்தகங்களை, ஒப்புதல் பெற, வரும், டிசம்பர் 7ம் தேதி கடைசி நாளாகும். முப்பருவ முறை திட்டத்தின் கீழ், 2012-13ம் கல்வி ஆண்டில், 1 முதல் 8ம் வகுப்புகள் வரை, இறுதி செய்யப்பட்ட, மூன்றாம் பருவ பாடத்திட்டம் பெற்றோர், மாணவர், பள்ளிகள் மற்றும் பொது மக்கள் பார்வைக்காக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாநில பொதுப் பள்ளி கல்வி வாரியம் மற்றும் பள்ளி கல்வி இயக்குனர் தலைவர் வெளியிட்ட அறிக்கை: மாநில பொதுப் பள்ளி கல்வி வாரியத்தால் ஒப்புதல் வழங்கப்பட்ட, மூன்றாம் பருவ பாடத்திட்டத்தின் அடிப்படையில், 1 முதல் 8 வகுப்புகளுக்கு, தமிழ் பாடம் நீங்கலாக, இதர பாடப் புத்தகங்களை, முப்பருவ கல்வி முறை திட்டத்தின் அடிப்படையில், தயார் செய்யப்பட்ட புத்தகங்களுக்கு ஒப்புதல் பெற விரும்புவோர், பாடப் புத்தகங்களின், இரண்டு நகல்களை, "உறுப்பினர் - செயலர் மாநில பொதுப் பள்ளி கல்வி வாரியம் மற்றும் பள்ளி கல்வி இணை இயக்குனர் (இடைநிலைக் கல்வி), கல்லூரி சாலை, சென்னை-6&' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பாடப் புத்தகங்கள், மல்டி கலரிலும், ஏ4 அளவிலும், 80 ஜி.எஸ்.எம்., ஹைடெக் மப்லித்தோ பேப்பரிலும், சிடிபி பிரின்டிங்கிலும், 200 ஜி.எஸ்.எம்., வர்ஜின் கேட்டெட் போர்டு அட்டையும் இருக்க வேண்டும். ஒவ்வொரு பாடப் புத்தகத்தின் தோராய விலை குறிப்பிட வேண்டும்.
ஒன்று முதல் 8ம் வகுப்புகளுக்கு தமிழ் பாடம் நீங்கலாக இதர பாடப் புத்தகங்கள் அனுப்பி வைக்க வேண்டும். வரைவு பாடப்புத்தகங்களுக்கு ஒப்புதல் அளிப்பது மாநில கல்வி வாரியத்தின் இறுதி முடிவுக்குட்பட்டது.
7ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் அனுப்பப்பட வேண்டும். முப்பருவ முறை திட்டத்தின் கீழ், 2012-13ம் கல்வி ஆண்டில், 1 முதல் 8ம் வகுப்புகள் வரை, இறுதி செய்யப்பட்ட, மூன்றாம் பருவ பாடத்திட்டம் மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு பெற்றோர், மாணவர், பள்ளிகள் மற்றும் பொது மக்கள் பார்வைக்காக www.dse.th.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
|
RESOURCES
- HOME
- DRAW
- POD CAST
- FOR XII
- KIDS TV
- LIFE SKILLS
- COLORING PAGES
- TAMIL PROVERBS
- TET
- ENGLISH
- CCE
- E-LIBRARY
- ENGLISH for TAMIL
- MAPS
- WORKSHEETS
- FOR TENTH
- SCHOOL VISIT
- STORIES
- நவக்கிரகங்கள்
- தமிழ் இலக்கணம்
- அரசானைகள் GO'S
- ENGLISH EXERCISES
- AUDIO BOOK
- FUN
- ONLINE ENGLISH
- GRAMMAR
- RESOURCE BOOK
- EARTH PARTS
- RESOURCES
- LEARN TAMIL
- MUSIC FOR PPT
- தமிழ் எழுதி
- Kids activities
- E-content
- ORIGAMI
- PLANETORIUM
- WEBCAM EFFECTS
- சிறுகதைகள்
- சமையல்
- TET CENTRE
- மருத்துவம்
- கணினி
- புத்தகங்கள்
- CLASS POSTERS
- TRANSLATE
- MATHS KIT
- ENGLISH PRACTICE
- TAMIL SITES
- CERTIFICATES
- e-Grammar
- Scientists
- GAMES
- INTEL TOOLS
- E-ENGLISH CLASSROOM
- TEACHERS PAY
- BUSY TEACHER
- கல்வி விகடன்
- VECTOR ART
- How to draw
- Hello kids
- CEO VILLUPURAM
- TED SUGATAM
- MATHS GOODIES
- TEACHNOLOGY
- MATHS-IXL
- KIDS PHONICS
- PHONETICS
- VIDEOS
- FREE CLIPARTS
- TAMIL ACADEMY
- TAMIZH NOOLAGAM
- English-Tamil dictionary
- VILLUPURAM DISTRICT
- Gamified Grammar
Wednesday, November 28, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment