Saturday, November 10, 2012


animated gifsகுறைந்த செலவில் தரமான கல்வி எங்கே?


உலகத்தரமான கல்வியை, நியாயமான கட்டணத்தில் வழங்கும் ஒரு நாடாக ரஷ்யா திகழ்வதால், அதிக பணபலமில்லாத பல இந்திய மாணவர்களுக்கு, வெளிநாட்டு கல்விக்கான ஒரு சிறந்த மாற்றிடமாக ரஷ்யா திகழ்கிறது.

 உலகின் சிறந்த 100 பல்கலைகள் பட்டியலில், ரஷ்யாவின் மருத்துவப் பல்கலைகள், சுமார் 30 நிலைகளை ஆக்ரமித்துள்ளன.

புகழ்பெற்ற மருத்துவக் கல்வி நிறுவனங்கள்
உலக சுகாதார நிறுவனத்தின்(WHO), மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கான டைரக்டரியில், ரஷ்யாவின் 48 மருத்துவ பல்கலைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. ரஷ்யாவில் மருத்துவம் படிக்கும் இந்திய மாணவர்கள், MCI(Medical council of India) சார்பாக, தேசிய தேர்வு வாரியம்(NBE) நடத்தும் Screening தேர்வில் தேர்ச்சிப் பெற்று, இந்தியாவில் மருத்துவராக பணியாற்றலாம்.
தகுதிநிலை மற்றும் காலகட்டம்
ரஷ்யாவில் மருத்துவம் சேர, பள்ளி மேல்நிலைப் படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றைப் பாடங்களாகப் படித்திருக்க வேண்டும் மற்றும் கூட்டுத்தொகையாக 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஆங்கில வழியில் மருத்துவப் படிப்பை முடிக்க 6 ஆண்டுகளும், ரஷ்ய மொழி வழியில் நிறைவு செய்ய 7 ஆண்டுகளும் ஆகின்றன.
அதேசமயம், பொறியியல் படிப்பிற்கு பள்ளி மேல்நிலைப் படிப்பில் 40% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பொறியியல் படிப்புகளில், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், கெமிக்கல் மற்றும் கணிப்பொறி அறிவியல் ஆகிய சில துறைகள் மட்டுமே ஆங்கில வழியில் கற்பிக்கப்படுகின்றன.
முதுநிலைப் படிப்புகள்
ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில், இளநிலைப் படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். பல்கலை, அமைவிடம் மற்றும் படிப்பைப் பொறுத்து, கட்டணமானது 1500 டாலர் முதல் 2500 டாலர் வரையிலும்(Russian medium), 3000 டாலர் முதல் 8000 டாலர் வரையிலும்(English medium) வேறுபடும்.
அதிக தகவல்களைப் பெற...
அனைத்து கல்வி நிறுவனங்களும், ரஷ்ய அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படுகின்றன.www.ruseducation.in என்ற வலைத்தளத்தின் மூலமாக, அதிகாரப்பூர்வ தகவல்களை அறிந்துகொள்ளலாம். Rus Education என்ற அதிகாரப்பூர்வ அமைப்பானது, ரஷ்ய தூதரகத்தின் கலாச்சார மையத்துடன் இணைந்து பணியாற்றுகிறது மற்றும் பல ரஷ்ய பல்கலைகள், வெளிநாட்டு மாணவர்களுக்கான நேரடி சேர்க்கை, ஆவண செயல்பாடுகள், அழைப்பு கடிதத்திற்கு விண்ணப்பித்தல் மற்றும் விசா ஸ்டாம்பிங் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ள, இந்த அமைப்பிற்கு அதிகாரமளித்துள்ளன.
இவைத்தவிர, Rus Education அமைப்பானது, டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, திருவனந்தபுரம், போபால், அகமதாபாத், பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் அலுவலகங்களையும் பெற்றுள்ளன.
 

animated gifsஐகோர்ட் உத்தரவுப்படி 200 தனியார் பள்ளிகளுக்கு புதிய 

கட்டணம்



சென்னை: ஐகோர்ட் உத்தரவுப்படி, கட்டண நிர்ணயக் குழு, மீதமுள்ள, 200 தனியார் பள்ளிகளுக்கு, புதிய கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. மாவட்ட வாரியாக, புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள பள்ளிகளின் பட்டியலும், கட்டண விவரங்களும், தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 400 தனியார் பள்ளிகள், புதிய கட்டணம் நிர்ணயிக்கக் கோரி, சென்னை, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.  இந்த வழக்கில், சம்பந்தபட்ட பள்ளிகளுக்கு, டிசம்பர் மாதத்திற்குள், புதிய கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என, சில மாதங்களுக்கு முன், ஐகோர்ட் உத்தரவிட்டது.
அதன்படி, 400 பள்ளி நிர்வாகிகளுக்கும், கட்டண நிர்ணயக் குழு அழைப்பு விடுத்து, புதிய கட்டணம் நிர்ணயம் செய்வது தொடர்பாக, அவர்களிடம் கருத்து கேட்டது. இதன்பின், முதல் கட்டமாக, நவம்பரில், 200 பள்ளிகளுக்கான புதிய கட்டணத்தை, குழு வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, மீதமுள்ள, 200 பள்ளிகளுக்கான கட்டணத்தை, நேற்று வெளியிட்டது.
மாவட்ட வாரியாக, புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள பள்ளிகளின் பட்டியலும், கட்டண விவரங்களும், தமிழக அரசின் இணையதளத்தில் (www.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு கல்வி ஆண்டுகளுக்கும், தனித்தனியே, வகுப்புகள் வாரியாக, கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
கட்டண பட்டியலில், 6, சி.பி.எஸ்.இ., பள்ளிகளும் இடம் பெற்றுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில், மூன்று பள்ளிகளுக்கும், தேனி, மதுரை, கரூர் ஆகிய மாவட்டங்களில், தலா ஒரு பள்ளிக்கும், புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

animated gifsமோசடி பள்ளிகளுக்கு கடும் அபராதம் - மசோதா தயார்



டெல்லி: நன்கொடை வசூலித்தல், தகுந்த காரணமின்றி சேர்க்கையை மறுத்தல், பொய்யான விளம்பர நடவடிக்கைகள் போன்ற முறையற்ற செயல்களில் ஈடுபடும் பள்ளிகளுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில், சட்ட மசோதா தயாராகியுள்ளது.

தனியார் பள்ளிகள் செய்யும் அட்டூழியங்களால், பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சட்ட மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா பற்றி கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய(CABE) கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
முன்னாள் மத்திய மனித வளத்துறை இணையமைச்சர் புரந்தேஸ்வரியின் தலைமையில் இயங்கிய CABE -ன் துணைக் கமிட்டி, இந்த மசோதாவை வடிவமைத்தது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு விட்டால், நன்கொடை வசூலிக்கும், தகுந்த காரணமின்றி ஒரு மாணவரை சேர்க்க மறுக்கும், சீருடை மற்றும் நோட்டுப் புத்தகங்களை ஒரு குறிப்பிட்ட கடையில்தான் வாங்க வேண்டும் என வற்புறுத்துகின்ற, போலியான விளம்பரம் தருகின்றன, குழந்தைகளுக்கு உடல் மற்றும் மனோரீதியில் கடும் துன்பம் தருகின்ற போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் பள்ளிகளுக்கு கடும் அபராதம் விதிக்க வழியேற்படும். அந்த அபராதம் ரூ.10 லட்சம் வரை இருக்கும்.
இந்த மசோதாவில், மாநில அரசுகள், இதுதொடர்பான குற்றங்களை விசாரிக்க, ஒரு குறைதீர்ப்பு மையத்தை அமைக்கும்படி, மாநில அரசுகளை கேட்டுக்கொள்ளும் அம்சம் இடம்பெற்றுள்ளது.

animated gifsதனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்விக் 

கட்டணம் ரத்து: சென்னை உயர்நீதிமன்றம்



தமிழகத்தில் 30 தனியார் பளளிகளுக்கு தமிழக அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை இன்று ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து 30 தனியார் பள்ளிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு,

 இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பானுமதி மற்றும் சசிதரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்சின் முன் விசாரணைக்கு வந்தது. குறிப்பிட்ட 30 பளளிகளுக்கும் தமிழக அரசினால் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை ரத்து செய்துவிட்டு, அந்தப் பள்ளிகளுக்கு வரும் மார்ச் 15-ம் தேதிக்குள் புதிய கல்விக் கட்டணத்தை மறுநிர்ணயம் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அந்தப் பள்ளிகள் இடைக்கால நிவாரணமாக மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க நீதிபதிகள் அனுமதி மறுத்துவிட்டனர்.

animated gifs

இக்னோ ( IGNOU ) - TIME TABLE for TERM END EXAMINATION -

December 2012


3 comments:


  1. Online cloud-based HRMS software helps organizations, providing cutting-edge tools for tackling HR admin. It free for a Online Cloud Based HRMS Software Company in Noida, Delhi Ncr.

    https://www.byndd.online, https://bynddit.com

    ReplyDelete
  2. Globally, students apply for the MBBS study in Ukraine. Ukraine offers excellent educational opportunities to medical students. Meritorious students can easily take benefit from the medical programs offered by the country. http://www.careerplus.org.in/

    ReplyDelete
  3. We are the Study MBBS Abroad Consultant has a huge network of institutes around the world for MBBS and beyond. We offer counseling to narrow down on the most appropriate 3-4 institutes depending on the dreams of our students. To study MBBS Abroad at low cost , contact us +91-9910415159 or visit - www.gsambbsabroad.com

    ReplyDelete