Sunday, November 11, 2012

DIWALI

இனிய தீப ஒளித் திருநாள்  நல்வாழ்த்துக்கள்!...

Happy Diwali clip art animation for Festival of Lights

பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் இந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ்2 வகுப்புகளுக்கு 1591 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும்: முதல்வர்


  தமிழகத்தில் பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புக்கு ரூ.152.73 கோடி ஒதுக்க முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டஅறிக்கையில்வருடந்தோறும மாணவமாணவியரின் நலன்களுக்கு தமிழக அரசு பலநடவடிக்கை எடுத்துள்ளதுகடந்த ஆண்டு 1590 முதுநிலைபட்டதாரி ஆசிரியபணியிடங்கள் உருவாக்கப்பட்டனஇந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ்வகுப்புகளுக்கு 1591முதுநிலைபட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும்இதனால் அரசுக்குஆண்டுதோறும் கூடுதலாக ரூ.63.94 கோடி செலவாகும்மேலும் 4937 ஆய்வகஉதவியாளர்கள், 2108 இளநிலை உதவியாளர்களை நியமிக்கவும் முதல்வர்உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இக்னோ ( IGNOU ) - TIME TABLE for TERM END EXAMINATION -

December 2012



நன்னெறி போதனை வழங்க - மாணவர்கள் தங்கள் நிறை/குறைகளை மற்றும் பிரச்சனைகளை தெரிவிக்க ஒவ்வொரு பள்ளியிலும் ஆலோசனை பெட்டி வைக்க - பள்ளிக்கல்வி இயக்ககம் உத்தரவு



BRC/ VEC கணக்காளர்களுக்கு நிரந்தர பயணப்படி(fixed travelling allowance) உயர்த்தி அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவு


குரூப்-1 காலி பணியிடம்: 2ம் கட்ட கலந்தாய்வு அறிவிப்பு

குரூப்-1 பணியிடங்களில், நிரம்பாமல் உள்ள, 664 காலி இடங்களை நிரப்ப, இம்மாதம், 10, 12 தேதிகளில், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது.

குரூப்-1 தேர்வில் அடங்கிய, 3,475 பதவிகளை நிரப்ப, அக்டோபர், 15 முதல், 20 வரை, பணி ஒதுக்கீடு உத்தரவு வழங்கும் கலந்தாய்வு நடந்தது. இதில், 2,811 தேர்வர் மட்டுமே, வெவ்வேறு பதவிகளுக்கு, பணி ஒதுக்கீடு உத்தரவுகளை பெற்றனர்.
மீதமுள்ள, 664 பதவிகளுக்கு, விண்ணப்பதாரர்கள் எவரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனால், அந்த காலி பணியிடங்களை நிரப்ப, இம்மாதம், 10,12 தேதிகளில், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், மீண்டும் கலந்தாய்வு நடக்கிறது.
இதற்கு, 1,267 விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பெயர் விவரங்கள் மற்றும் இவர்களுக்கான அழைப்பு கடிதங்கள், தேர்வாணையத்தின் www.tnpsc.gov.inஇணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.இவர்களில், 664 பேர் மட்டுமே, காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவர்.
அழைக்கப்படும் அனைவருக்கும், வேலை கேட்கும் உரிமை கிடையாது. இதில் பங்கேற்க தவறுபவர்கள், பதவி ஒதுக்கீட்டுக்கான முன்னுரிமையை இழப்பர். மேலும், மேலும் ஒரு கலந்தாய்வு வாய்ப்பு வழங்கப்படாது. இவ்வாறு தேர்வாணைய செயலர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment