Friday, November 16, 2012

D.TEd பட்டயம் +2 கல்வி தகுதிக்கு இணையானது.சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு .

D.TEd பட்டயம்  +2 கல்வி தகுதிக்கு இணையானது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது .10+D.Ted +degreee முறையில் B.Ed முடித்தவர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது .முழு தீர்ப்பின் நகல்

 

PRIMARY CRC MODULE - 17.11.2012

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான மூன்று நாள் (Non - Residential) பயிற்சி
 26.11.12 முதல் 12.12.12 வரை 2 கட்டங்களாக அந்தந்த 
குறு வள மைய அளவில் நடைபெறுகிறது

மடிக்கணிணி மாணவர்களுக்கு வழங்கும்வரை பாதுகாப்பாக 
வைத்தல் -பள்ளிகல்வி இயக்குனர் செயல்முறைகள்

காஞ்சீபுரம், திருவண்ணாமலை உள்பட 12 மாவட்டங்களில் புதிதாக 15 சார்நிலை 
கருவூலங்கள் அமைக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

புதிய சார்நிலை கருவூலங்கள்

தமிழகத்தில் கருவூலக கணக்குத்துறையின் கீழ் 32 மாவட்ட கருவூலங்கள் மற்றும் 206 சார் கருவூலங்கள் உள்ளன. மக்களை நாடி அரசு என்ற நோக்கத்தின் அடிப்படையில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகிலேயே அரசு அலுவலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அதிகரிக்கப்பட்ட அரசு அலுவலகங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு கருவூலங்களின் எண்ணிக்கை உயரவில்லை.இதைக் கருத்தில் கொண்டு ஒரு வருவாய் வட்டத்திற்கு ஒரு சார் கருவூலம் என்ற அடிப்படையில் கருவூல அமைப்பினை சீரமைத்து சார் கருவூலமில்லாத வருவாய் வட்டங்களில் புதிய சார் கருவூலங்களை ஏற்படுத்திட முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது.

14 இடங்களில் அமைக்கப்படும்

அதன் அடிப்படையில் 2012–13 ஆம் நிதி ஆண்டில் புதியதாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துரை, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆத்தூர், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சோழிங்கநல்லூர், கரூர் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராயபுரம், நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள குத்தாலம், பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டை, சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி, கெங்கவல்லி, நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர்,திருச்சி மாவட்டத்திலுள்ள மண்ணச்சநல்லூர், திருப்பூர் மாவட்டத்திலுள்ள மடத்துகுளம், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தண்டராம்பட்டு, விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டி, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலுப்பூர் ஆகிய 14 வருவாய் வட்டங்களில் புதியதாக சார் கருவூலம் அமைக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

புதிய பணி இடங்கள்

இந்தக் கருவூலங்களில் பணிபுரிய ஒவ்வொரு சார் கருவூல அலுவலகத்திற்கும் உதவி கருவூல அலுவலர் பணியிடம் 1, கூடுதல் சார்நிலைக் கருவூல அலுவலர் பணியிடம் 1, கணக்கர் பணியிடம் 2, இளநிலை உதவியாளர் பணியிடம் 1, அலுவலக உதவியாளர் பணியிடம் 1 என 6 பணி இடங்களை புதியதாக தோற்றுவிக்கவும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதனால், அரசுக்கு ஆண்டொன்றுக்கு தொடரும் செலவினமாக 3 கோடியே 33 லட்சம் ரூபாயும், தொடரா செலவினமாக 84 லட்சம் ரூபாயும் ஏற்படும்.

புதிய கட்டிடங்கள்

நீதி மற்றும் நீதிசாரா முத்திரைத் தாள்கள், பல துறைகளிலிருந்து பெறப்படும் சேம காப்பு பொருட்கள் ஆகியவற்றை வலுவறையில் வைத்து பாதுகாக்கும் பணி உள்பட பல்வேறு பொறுப்புமிக்க பணிகளை அனைத்து சார் கருவூலங்களும் செய்து வருவதால், இந்த கருவூலங்கள் சொந்தக் கட்டடங்களில் இயங்குவது மிகவும் இன்றியமையாததாகிறது. இதைக் கருத்தில் கொண்டு மொத்தமுள்ள 206 சார் கருவூலங்களில், வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் 54 கருவூலங்களில், முதற்கட்டமாக 14 கருவூலங்களுக்கு 7 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் சொந்தக் கட்டடங்கள் கட்ட முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த புதியக் கட்டடங்கள், மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் மற்றும் மேலூர், நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடி, நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு, பரமத்தி, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டை, ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பரமக்குடி, சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாமதுரை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம், உடுமலைப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஊத்துக்கோட்டை மற்றும் திருத்தணி, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரம், திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் ஆகிய 14 இடங்களிலுள்ள சார்நிலைக் கருவூலங்களுக்காக கட்டப்படும்.

தூத்துக்குடி மாவட்ட அலுவலகம்

இதேபோன்று, மொத்தமுள்ள 32 மாவட்ட கருவூலங்களில் 29 மாவட்டக் கருவூலங்கள் சொந்த கட்டடங்களில் இயங்கி வருகின்றன. மீதமுள்ள 3 மாவட்டக் கருவூலங்கள் வாடகைக் கட்டடங்களில் இயங்கி வருகின்றன. இவற்றில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டக் கருவூலத்திற்கு தூத்துக்குடி மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் 862 சதுர மீட்டர் பரப்பளவில் 1 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்ட முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தேர்வுத்துறையில் பள்ளி பொதுத் தேர்வு பணிகள் துவங்கின : 
30ம் தேதிக்குள், பட்டியலை இறுதி செய்ய முடிவு

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளை, தேர்வுத்துறை துவக்கியுள்ளது. பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் பெயர் உள்ளிட்ட முழு விவரங்கள் அடங்கிய பட்டியலை, இம்மாதம், 30ம் தேதிக்குள், தேர்வுத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


 பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், மார்ச் முதல் வாரம் துவங்கிவிடும். செய்முறைத் தேர்வுகள், பிப்ரவரி, முதல் வாரத்தில் துவங்கி, 20ம் தேதி வரை நடக்கும். பிப்ரவரியில் செய்முறைத் தேர்வை நடத்துவதற்கு வசதியாக, ஜனவரி, 15ம் தேதிக்குள், அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடிக்க வேண்டும். இதனால், தேர்வுக்கான ஏற்பாடுகளை, தேர்வுத்துறை முழுவீச்சில் செய்து வருகிறது. பொதுத்தேர்வை எழுதும் மாணவ, மாணவியரின் பெயர், பள்ளி, குரூப் விவரம், தேர்வெழுதும் பாடங்கள், கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அடங்கிய பட்டியல்கள் தயாரிக்கும் பணிகள், மாவட்ட வாரியாக, விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்தப் பணிகளை, இம்மாதம், 30ம் தேதிக்குள் முடித்து, பட்டியல்களை ஒப்படைக்க வேண்டும் என, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, தேர்வுத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: மாணவ, மாணவியர் பெயர் பட்டியல், விரைவில், மாவட்டங்களில் இருந்து வர ஆரம்பித்துவிடும். இம்மாத இறுதியில், எத்தனை பேர், பொதுத்தேர்வை எழுதுகிறார்கள் என்ற விவரம் தெரிந்துவிடும். பிளஸ் 2வை பொறுத்தவரை, முந்தைய தேர்வை, 7.56 லட்சம் பேர் எழுதினர். வரும் தேர்வில், கூடுதலாக, 30 ஆயிரம் பேர் முதல், 40 ஆயிரம் பேர் வரை எழுதுவர் என, எதிர்பார்க்கிறோம் இவ்வாறு, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

முந்தைய பிளஸ் 2 தேர்வுகள், 1,974 மையங்களில் நடந்தன. புதிய தேர்வு மையங்களுக்கு அனுமதி கோரி, பள்ளி நிர்வாகங்கள், தேர்வுத்துறையிடம் விண்ணப்பித்து வருகின்றன. 100 மையங்கள் வரை, புதிதாக அனுமதிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. பத்தாம் வகுப்பை பொறுத்தவரை, முந்தைய தேர்வை, 10.84 லட்சம் பேர் எழுதினர்; 3,033 மையங்களில், தேர்வுகள் நடந்தன. வரும் தேர்வில், 11.20 லட்சம் பேர் வரை, இத்தேர்வை எழுதுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டதால், மார்ச் இறுதி வாரத்தில் துவங்க வேண்டிய தேர்வு, ஏப்ரல் 4ம் தேதி, 23ம் தேதி வரை நடந்தது.
இந்த அட்டவணை, வரும் பொது தேர்வுக்கு பொருந்தாது எனவும், வழக்கம்போல், மார்ச், 20ம் தேதிக்குப் பின் துவங்கி, ஏப்ரல், 10 தேதிக்குள், தேர்வு முடிவடையும் வகையில், அட்டவணை இருக்கும் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
டி.என்.பி.எஸ்.சி., செயலராக விஜயகுமார், பொறுப்பேற்றார்.


தேர்வாணையத்தின் செயலராக இருந்த உதயசந்திரன், அக்., 22ம் தேதி, குன்னூர் தேயிலை தோட்டக்கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டார். 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் - செயலரான விஜயகுமார், தேர்வாணையத்தின் புதிய செயலராக அறிவிக்கப்பட்டிருந்தார்.அரசின் உத்தரவு வந்ததும், உடனடியாக செயலர் பதவியில் இருந்து, உதயசந்திரன் விலகவில்லை. தேர்வாணையத்தில், அவரை தக்க வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன.இது தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, இம்மாதம், 9ம் தேதி, செயலர் பதவியில் இருந்து, உதயசந்திரன் விலகினார். இதைத் தொடர்ந்து, தேர்வாணையத்தின் புதிய செயலராக, விஜயகுமார் இன்று பொறுப்பேற்றார்.
 

இந்த ஆண்டுக்குள் 59 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்-அமைச்சர் சிவபதி அறிவிப்பு

பள்ளிக்கல்வி துறை சார்பில் சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நேற்று நடந்தது. பள்ளி கல்வி இயக்குனர் தேவராஜன் வரவேற்றார். பள்ளிக்கல்வி துறை செயலர் சபிதா தலைமை தாங்கினார். 

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி அமைச்சர் சிவபதி பேசுகையில், தமிழகம் கல்வியில் சிறந்து விளங்க எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு  15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்குள் 59 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment